07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 11, 2007

பதிவர் வாரம்

வணக்கம். வலைச்சரத்தில் ஒரு வாரத்துக்கு எனக்குப் பிடித்த பதிவுகள், பதிவர்கள் குறித்து எழுத இருக்கிறேன். இடுகைகள், பதிவுகள், திரட்டிகள் என்பதைத் தாண்டி அதற்குப் பின்னால் இயங்கும் பதிவர்கள் என் பார்வையில் முக்கியமானவர்களாகப் படுகிறார்கள். எனவே, வலைச்சர வழக்கத்துக்கு மாறாக, இடுகைகளுக்கு அல்லாமல் பதிவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து என் இடுகைகளை எழுதலாம் என்றிருக்கிறேன். எங்கும், என்றும் மனிதர்கள் தானே முக்கியம் :) ?

முதலில் சில தெளிவுபடுத்தல்கள் / disclaimerகள்:

1. கடந்த ஒரு வாரத்திலோ மிக அண்மையிலோ எழுதப்பட்ட இடுகைகளுக்கான சுட்டிகள் தருவது மிகக் கடினம். அண்மைக் காலமாக வலைப்பதிவுகளை வாசிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

2. சில இடுகைகள் மிகச் சிறியனாவாய் இருக்கலாம். இடுகைக்கான மறுமொழிகள் மூலம் இடுகைப் பொருளை இன்னும் மெருகேற்றலாம் என்று நினைக்கிறேன்.

3. நான் குறிப்பிடுபவை அனைத்தும் என் பார்வை, வாசிப்பு, ரசனைக்கு உட்பட்டவையே. எனவே, விடுபட்ட பதிவர்கள், பதிவுகள் பொறுத்துக் கொள்ளவும்.

4. நான் குறிப்பிடக்கூடிய பல விசயங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதாக இருக்கலாம். ஆனால், இன்று தான் தமிழ் வலைப்பதிவுலகுக்கு அறிமுகமாகி இருக்கும் ஒரு வாசகருக்கு உதவும் வகையில் இவை பயனுள்ளவையே என்று நினைக்கிறேன்.

அடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று வலைச்சர வழிகாட்டி பிரிவு 1.52ல் :) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே..

சந்தோஷ்குருவின்
பதிவைப் படித்த ஆர்வத்திலும் அவர் தூண்டி விட்டதன் பேரிலும் 2005 ஜனவரியில் முதன் முதலில் என் வலைப்பதிவில் எழுதினேன். (ஆனா, இதற்குப் பிறகு வலைப்பதிய வந்த பலர் மூத்த பதிவர்கள் ஆகிட்டாங்க ;)) 2006 பிற்பகுதியில் இருந்து தொடர்ந்து பதிந்து வருகிறேன்.

வரும் வாரத்தில் என்னிடமிருந்து வரக்கூடிய இடுகைகள் விவரம்:

1. காணாமல் போன பதிவர்கள்.
2. நுட்பம் பேசும் பதிவர்கள்.
3. என் பார்வையில், Top 2 தமிழ் பதிவர்கள்.
4. திரட்டிகளில் காணக்கிடைக்காத பதிவுகள்.
5. தனித்தளத்தில் இயங்கும் பதிவர்கள்.
6. ஒக்கே ஒக்க வலைப்பதிவு.
7. புது வலைப்பதிவு முயற்சிகளுக்கான ஆலோசனைகள்.

அடுத்தடுத்த இடுகைகளில் தொடர்ந்து பேசுவோம்..

அன்புடன்,
ரவி

6 comments:

  1. காத்திருக்கின்றோம், தொடருங்கள்

    ReplyDelete
  2. எப்பா!! சிவாஜி படத்தின் முன்னோட்டம் மாதிரி 'அதிருது'!

    ---தமிழ் வலைப்பதிவுலகுக்கு அறிமுகமாகி இருக்கும் ஒரு வாசகருக்கு உதவும் வகையில் ---

    எல்லாவற்றையும் சொல்கிறோம் என்று பலரையும் அடுக்கி அலுப்புத்தட்ட வைக்காத முதல் பதிவே சான்று :)

    ReplyDelete
  3. பாலா சொன்ன மாதிரி டிரைலரே அதிருது .. புல் பிட்சரையும் ஆவலோடு எதிர் நோக்கி ...

    ReplyDelete
  4. அஜெண்டா எல்லாம் போட்டுக் கச்சிதமா ஆரம்பிச்சு இருக்கீங்க!

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. கானா பிரபா, பாலா, துளசி கோபால், விக்கி - நன்றி. "அதிருது-கிதுருது"ன்னு over hype பண்ணி tension ஏத்துறீங்களே :)

    ReplyDelete
  6. உங்கள் வலைச்சரத் தொகுப்பு வித்தியாசமானதாக இருக்கப் போகின்றதா? வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது