07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 15, 2007

திரட்டிகளில் காணக்கிடைக்காத பதிவுகள்

பலரும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் காணக்கிடைத்த சில வலைப்பதிவுகளை இங்கே தருகிறேன்.

1. உள்வெளி - கனடாவில் வாழும் பேராசிரியர். செல்வகுமாரின் வலைப்பதிவு. தமிழ் விக்கிபீடியா, கலைச்சொல்லாக்கக் குழுமங்களில் நன்கு அறியப்பட்டவர். கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ் சார் களங்களில் ஈடுபாடு உடையவராக அறியப்படுகிறார். இவரது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

2. விழிகளின் மொழிகளில் - பிரபாகரனின் ஒளிப்படக் காட்சிப் பதிவு. படங்களும் அதற்கான தலைப்பு, விவரிப்புகளும் அருமை. இவரது கவிதைப் பதிவு மெய்ப்பொருள் காண்பது அறிவு. இந்தப் பதிவில் உள்ள இவையெதுவும் என்ற கவிதை என்னை ஈர்த்தது.

3. Tid bits of my life - இளம் தாயான இவர் தன் குழந்தை பிறந்த முதல் 90 நாட்களை உருகி உருகி பதிவு செய்திருக்கிறார். இப்போது தமிழிலும் எழுதத் தொடங்கி இருக்கிறார்.

4. Kick off - நிறைய ஆங்கிலத்திலும் அவ்வப்போது தமிழிலும் எழுதுகிறார். புதுப்பதிவருக்கான எல்லா அங்க அடையாளங்களையும் இவர் பதிவில் பார்க்கலாம் :)

5. Snapjudge - பாஸ்டன் பாலா Blogspotல் எழுதும் SnapJudgment நிறைய பேருக்குத் தெரியும். இப்ப Wordpressல் கிடைக்கும் SnapJudgmentன் பரப்பும் பாணியும் நல்லா இருக்கு.

விட்டுப்போன நல்ல பதிவுகள் பெயர் உங்களுக்குத் தெரிந்தால் மறுமொழிகளில் தெரிவியுங்கள்.

நன்றி,
ரவி

13 comments:

  1. Tid bits of my life இன்றைக்குத்தான் பார்த்தேன். பல இனிய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து தந்தது. :)

    ReplyDelete
  2. //பலரும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் காணக்கிடைத்த சில வலைப்பதிவுகளை இங்கே தருகிறேன்.//

    திரு ரவிஷங்கர் அவர்களே!

    நீங்கள் சொல்வது பொத்தாம் பொதுவாக உள்ளது, உங்களை தவிர வேரு யாரும் திரட்டிகளுக்கு அப்பால் பார்ப்பது இல்லை என்பது போல் உள்ளது, நீங்கள் சிறப்பாக செயல்படுவதாக பட்டியலிடும் சில வலைப்பதிவுகளையும் நான் பார்த்துள்ளேன் மூன்றாம் தரமாகவேயுள்ளது அவை! உங்களுக்கு அறிமுகமான வட்டத்தில் இருந்து சிலப்பதிவுகளைப் சொல்லி இவை எல்லாம் சிறப்பானவை என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அது உங்கள் விருப்பம்.

    வலைப்பதிவுகளின் தர நிர்ணயம் செய்பவர் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்கலாம் :-))

    உ.ம்: உங்களது என் பார்வையில் டாப் 2 இரண்டு வலைப்பதிவர்கள்.

    உண்மையில் வலைப்பதிவு திரட்டிகளைப்பற்றி அறியாமல் வலைப்பதிவோர் எண்ணிக்கை மிக அதிகம் என்பதே எனது எண்ணம், அப்படி தமிழ்மணத்தில் வராத சில பதிவுகள் உள்ளது, உ.ம்:http://ennasitharalgal.blogspot.com/

    நான் மேற் சொன்னப்பதிவு தமிழ்மணத்தில் வரும் பலப்பதிவுகளையும் விட சிறப்பானதே, எல்லாப்பதிவும் உங்கள் கவனத்திற்கு வர வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்களாகவே ஒரு டிசைடிங் பொசிஷன் எடுத்துக்கொண்டுக் கொண்டு ஒரு கருத்தாக்கம் உருவாக்க முயல்வதாக எனக்குப்படுவதால் இதை சொல்கிறேன்.

    உங்கள் முயற்சி தொடரட்டும் ,ஏதேனும் நல்லவை அகஸ்துமஸ்தாக நடக்கவும் வாய்ப்புண்டு!

    மற்றபடி காழ்புணர்ச்சி ஏதும் இல்லா,

    உங்கள் அன்பன்
    வவ்வால்.

    ReplyDelete
  3. வவ்வால் - என் சிதறல்கள் - http://ennasitharalgal.blogspot.com/ குறித்துத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால், உடன்பாடில்லை. நன்றி.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இப்பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

    மேலே ஒருவர் சில அரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவருக்கு எனது வேண்டுகோள் - 'தில்' இருந்தால் உங்கள் வழக்கமான blogger idஐ வெளிப்படுத்தி உங்கள் உண்மை முகத்தை பதிவுலகிற்குத் தெரியப்படுத்தவும்.

    அதை வைத்துக் கொண்டு நானோ, வேறு எவருமோ எதையும் சாதித்து விட முடியாது, (அப்படி எந்தவொரு சாதனையை நிகழ்த்தும் எண்ணமும் எனக்கில்லை) இருந்தாலும், நீங்கள் தமிழ்ப் பதிவுலகில் ஒரு முன்னணி / பிரபல / நெடுநாளைய பதிவர் / வாசகராக இருக்கக்கூடிய சாத்தியமிருப்பதால், உங்களது கீழ்த்தரமான சிந்தனைகள் பற்றிய விழிப்புணர்வாவது எங்களுக்குக் கிடைக்கும். அதன் பிறகு உங்கள் பதிவுகள் / பின்னூட்டங்களில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகளை அந்தப் புரிதலின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதற்கு வசதியாயிருக்கும்.

    நண்பர் ரவிசங்கருக்கான இந்த ஆதரவுப் பின்னூட்டத்தை அவருக்குத் தெரிவிக்காமல் வெளியிடுவதற்கு அவரிடம் மன்னிப்பு கோருகிறேன். தனது சொந்தப் பெயரில் தனக்குத் தோன்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் எந்தத் தயக்குமுமில்லாமல் வெளியிடும் ரவிசங்கர் போன்றவர்களை ஒப்பிடும்போது, ஒரு சில வரிகளை வெளியிடுவதற்குக் கூட முக்காடு போட்டுக் கொள்ளும் மேலுள்ள கோழையைப் போன்றவர்கள் எனக்கு தூசுக்கு சமானமாகத்தான் தெரிகிறார்கள். இத்தகைய மனிதர்களெல்லாம் ஒரு credibilityயுடன் வளைய வருவதைப் போன்ற வெட்கக்கேடு வெறெதுவுமில்லை.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. ரமேஷ், உன்னைப் பற்றி எனது சென்ற பின்னூட்டத்திலேயே தெரிவித்துவிட்டேன். இன்னமும் உன் blogger idஐயை தெரிவிக்காதது நான் கூறுவதை நிருபிப்பதாகவே உள்ளது.

    ReplyDelete
  8. //ரமேஷ், உன்னைப் பற்றி எனது சென்ற பின்னூட்டத்திலேயே தெரிவித்துவிட்டேன். இன்னமும் உன் blogger idஐயை தெரிவிக்காதது நான் கூறுவதை நிருபிப்பதாகவே உள்ளது.

    //

    வாய்ஸ்,

    ஏன் பேரைச் சொன்னா என்ன ஜாதின்னு கண்டு பிடிக்கவா? இங்கே வாதம் ரவிசங்கர் நடுநிலையானவரா என்பதுதான்! அதை மட்டும் பேசு. ப்ளாக்கர் ஐடி வெச்சிருந்தா அவனெல்லாம் பெரிய ஆளா? நீகூடத்தான் உன் பேர் இல்லாம வலைப்பதிவு வெச்சிருக்கே! ஆனா நான் பேர் சொல்லி எழுதி இருக்கேன்.

    தெர்தா?

    ReplyDelete
  9. முன்பு ரமேஷ இட்ட பின்னூட்டம் கீழே. தள நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லாத தளப் பெயரை அவர் குறிப்பிட்டிருந்த படியால் அந்தப் பெயரை மட்டும் நீக்கி இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.

    --

    ரமேஷ் said...

    வாய்ஸ் ஆன் விங் என்பவரே,

    வாய்ஸ் ஆன் விங் என்பது உங்க அப்பாம்மா நீங்க பொறந்த பதினாறாம் நாள் வெச்ச பேரா? போடாங்கொ... வாயில நல்லா வருது.

    நல்ல வலைப்பதிவாளர்கள், சூப்பர் பதிவாளர்கள், டாப் வலைப்பதிவாளர்கள், சொந்த தளம் வைத்திருப்போர் என்று ரவிசங்கர் வரிசையாக எழுதும்போதே அதில் காழ்ப்புணர்ச்சி மின்னுவது உனக்கு தெரியவில்லையா?

    ******* என்ற தளத்தில் செக்ஸ் கதைகள் எழுதி வரும் ரவிசங்கர் உனக்கு நடுநிலையான வலைப்பதிவராக போய்விட்டாரா?

    ஹெஹெஹ்ஹ்ஹே சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

    நான் மேலே உள்ள அதே அனானி. இப்போ பேருடன். என் பெயர் வைத்து நான் எந்த பதிவர் என்று உன்னால் கண்டு பிடிக்க முடியாது. மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்.

    ReplyDelete
  10. voice on wings - உங்கள் கருத்துக்கைப் பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால், இதற்கு மேல் உங்கள் வாதத்தைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் உரையாடுவதற்கு எந்த ஒரு தகுதியும் கண்ணியமும் நேர்மையும் எதிர்த் தரப்பில் இருப்பதாகத் தெரியவில்லை.

    anonymous, ரமேஷ் - யார் யாரெல்லாம் காணாமல் போன பதிவர்கள், யார் யார் எல்லாம் சொந்தத் தளம் வைத்திருப்பவர்கள், யார் யாரெல்லாம் திரட்டியில் இணையாமல் காணக்கிடைப்பவர்கள் என்பது எல்லாம் facts. இதில் நான் திரித்தும் மறைத்தும் நடுநிலை தவறியும் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. விட்டுப்போன பதிவர்களின் பெயர்களும் தான் பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே. அவற்றையும், வலைச்சர வாரம் முடிவதற்குள் இடுகையில் சேர்த்து விடுகிறேன்.

    "என் பார்வையில்" சிறந்த இரு பதிவர்கள் யார் என்று தான் எனக்கு வாய்ப்பு தரப்பட்ட இடத்தில் கூறினேன். உங்கள் பார்வையில் யார் சிறந்த பதிவர்கள் என்று உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் இடத்தில் தாராளமாக எழுதலாமே? வலைச்சர முதல் வாரத்திலேயே என் தெரிவுகள் அனைத்தும் வாசிப்புப் பரப்புக்கு உட்பட்டவை என்று தெளிவாக disclaimer போட்டிருக்கிறேன்.

    //உங்களுக்கு எப்படி உடன்பாடு வரும் ரவிசங்கர்? இணையத்தில் தமிழில் காமம் பற்றி எழுதும் தளத்தை என்று எழுதியவர்தானே நீங்கள்! நீங்கள் அங்கே உறுப்பினர் என்பதும் அம்மாவை, அக்காவை, தங்கையை உடலுறவு கொள்வது போல் கதை எழுதி காமலோக அட்மினிடம் பதவி உயர்வு பெற்றவர் என்பதும் எங்களுக்கு தெரிந்த கதைதான்.//

    இணையக் கலாச்சாரம் குறித்த எனது ஆர்வதுக்கு உட்பட்ட இந்தத் தளத்தின் community dynamics குறித்து எழுதி இருந்தேனே தவிர, இந்தத் தளத்தைப் பரிந்துரைக்கவோ பெயரைக் கூடவோ வெளியிடவோ இல்லை. அத்தளத்தில் உறுப்பினராக இல்லாமல் இக்கட்டுரையை எழுதி இருக்க முடியாது என்பது உண்மை. ஆனால், கதை எழுதினேன், பதவி உயர்வு பெற்றேன் என்று நீங்கள் சொல்வது உண்மை இல்லை.

    //நீங்கள் ஜட்டி துவைத்து காயப்பட்டதாக எழுதிய பதிவே அந்தக் காமத் தளத்தை துத்தானே இருந்தது நண்பரே?//

    இந்த ஜட்டி காயப் போடும் பதிவைப் படித்தவர்களுக்கு நீங்கள் சொல்வது எந்த அளவு அபத்தம், எந்த அளவு காழ்ப்புடணர்வுடன் நீங்கள் கருத்துக்கைப் பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

    இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அந்தக் காமத் தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை edit செய்து திரும்பப் போடுகிறேன்.

    ReplyDelete
  11. முன்பு anonymous இட்ட பின்னூட்டம் கீழே. தள நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லாத தளப் பெயரை அவர் குறிப்பிட்டிருந்த படியால் அந்தப் பெயரை மட்டும் நீக்கி இப்பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.
    --
    anonymous said

    //உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால், உடன்பாடில்லை. நன்றி.
    //

    உங்களுக்கு எப்படி உடன்பாடு வரும் ரவிசங்கர்? இணையத்தில் தமிழில் காமம் பற்றி எழுதும் தளத்தை சிறந்த தளம் என்று எழுதியவர்தானே நீங்கள்! நீங்கள் அங்கே உறுப்பினர் என்பதும் அம்மாவை, அக்காவை, தங்கையை உடலுறவு கொள்வது போல் கதை எழுதி அந்தத் தளத்தில் பதவி உயர்வு பெற்றவர் என்பதும் எங்களுக்கு தெரிந்த கதைதான்.

    நீங்கள் ஜட்டி துவைத்து காயப்பட்டதாக எழுதிய பதிவே அந்தக் காமத் தளத்தை ஒத்துத்தானே இருந்தது நண்பரே?

    நீங்கள் சொல்லித்தான் உங்களை நடுநிலை என்று நம்பவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது