07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 19, 2007

இன்னிசை மட்டும் இல்லையென்றால்...

"எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்" என்ற அலைபாயுதே படப்பாடலில் ஒரு வரி வரும் "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" என்று.உண்மையா இசையென்று ஒன்று இல்லையென்றால் எப்பிடியிருக்கும்? யோசிச்சுக்கொண்டிருங்கோ நான் வலைச்சரத்தில எனக்குத்தெரிந்து பாடல்வரிகளையும் பாடல்பற்றியும் எழுதும் சில பதிவர்களையும் மற்றும் நான் பார்த்த சில youtube பாடல்களையும் தொடுத்திட்டு வாறன்.

விஸ்ணு அண்ணாவின் மனதில் நின்றவை

பல நல்ல பழையபாடல்களையும் இடைக்காலப்பாடல்களையும் எனக்கறிமுகம் செய்து வைச்சது விஸ்ணு அண்ணாதான்.நான் என்ன பாட்டுக்கேட்டாலும் தன்ர mp3 data base ல இருந்து அனுப்பி வைச்சிடுவார்.அதால மனதில் நின்றவைல இருக்கிற அருமையான பொக்கிஸங்கள் யாருக்கும் தேவையென்றால் விஸ்ணு அண்ணாட்ட கேட்டு வாங்குங்கோ.இல்லையென்றால் இருக்கவே இருக்கிறார் பிரபாண்ணா.

பிரபாண்ணாவின் றேடியோஸ்பதி
றேடியோஸ்பதியைப்பற்றி நான் சொல்லப்புதுசா ஒன்றுமில்லை.நீங்கள் கேட்டவை எல்லாம் டக் டக்கென்று வருது நான் கேட்ட பாடல்களைத் தவிர :-)

கோவைரவீயின் பாடும் நிலா பாலு!
நல்ல பாடல்களோடு பாடல்வரிகளையும் சேர்த்து தருவார் ரவீ.

சந்திரவதனாவின் திரைப்படப் பாடல்கள்
சினிமாப்பாடல்களுக்கொரு வீட, ஈழத்துக்கானங்களுக்கு உரு வீடு , தாயகக்கீதங்களுக்கொரு வீடு என்று எண்ணிலடங்கா வீடுகளைக்கட்டி எல்லாத்தையும் நல்லா வைச்சிருக்கிறா.அநேகமான பாடல்களில் என் ரசனையோடு ஒத்துப்போகிறது இவருடைய பாடல் தெரிவுகள்.

கண்ணன் பாட்டு
ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்கள் இணைந்து கண்ணன் பாடல்களைத் தருகிறார்கள்.ஊரில "ஆலய மணியின் ஓசை காதில் கேட்கவில்லையா " என்று பாடிக்கொண்டு வல்லிபுரக்கோயிலுக்கு நடந்துபோன ஞாபகத்தை வரவழைக்கும் இவர்களுடைய பக்தி :-)


தமிழமுதம்
இசையமுதம் தவிர ஒளியமுதம் எனப்பல பல அமுதங்களிருக்கி்ன்றன இங்கே.உலகின் எல்லாப்பாகங்களிலிந்தும் வெளியிடப்படும் தமிழ் இசைத்தட்டுகளின் இருப்பிடம்.இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட் சில நாளைக்குள்ளே எப்பிடியோ தமிழமுதத்துக்கு வந்து சேர்ந்துவிடும் :-) என்ன மாயமோ!

உங்களுக்குத்தெரிந்த தளங்களையும் சொன்னால் சேரத்துக்கொள்ளலாம்!

இவை நான் youtube ல் பார்த்த பாடல்கள்.உங்களுக்காக!

கதையல்ல நிஜம்
வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல்.(இதுபற்றிய என் பதிவு)

Krishan - காதல் கடிதம்
நீ சொல்வதோ இல்லை நானே புரிவதோ...
Krishan - நினைவுகளே


நிருவின் இசையில் பெண்ணே போகாதே
மூங்கில் நிலா என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற இந்தப்பாடல் பற்றி ஏற்கனவே உங்களில் பலர் கேட்டிருக்கக்கூடும்.பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப்பாருங்கள்.

வசந்தின் இசையில் கடவுள
இளமை இனிமை புதுமை என்ற அல்பத்திலிடம்பெற்ற இந்தப்பாட்டில் தோன்றுவபர்கள்:ரவி ,சுரேஷ் மற்றும் வசந்த்

தேவதையே தேவையிங்கு நீ
இது எந்த குறூப் என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ராப்புலவர்களின் சமாதனம் வேண்டும்

மீண்டும் நாளை ஈழத்துப்பாடல்களுடன் வருகிறேன்.குட்நைட்!

7 comments:

  1. உங்கள் பட்டியலில் இந்தச் சிறியோனின் பதிவையும் போட்டமைக்கு என் கயமை கலந்த நன்றிகள்.

    உள்குத்து போட்டு என்னைத் தாக்கியதை நான் வாசிக்கேல்லை ;-)

    -கடைசி வாங்கான்-

    ReplyDelete
  2. வலைச்சரம் இசையரசி எண்ட பட்டத்துகேத்த மாதிரி இசையாகவே போக போகுதோ?... :)

    ReplyDelete
  3. ஹலோ கடைசிவாங்கண்ணாச்சி..கயமை என்றால் என்ன?

    ReplyDelete
  4. நல்ல பட்டியல்... :)

    "இசையே (கலையே) என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
    நீயில்லையேல் நான் இல்லையே..."

    டி.சலபதி ராவின் இனிமையான இசையில் தேமதுரத்தமிழில் பி.சுசீலா பாடியிருப்பார் பாருங்கள்...'மீண்ட சொர்க்கம்' படத்தில் வரும் அந்தப் பாடலுக்கு இணையுண்டோ...? சந்திரவதானா இதை இணையத்தில் வெளியிட்டபோது பெரு மகிழ்ச்சியடைந்தேன். கானா பிரபா, பாடும்நிலாபாலு ஆற்றி வரும் சேவையும் அளப்பரியது.

    குடும்பத்தைப் பிரிந்து, கடல் கடந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் என் போன்ற இலட்சக்கணக்கானவர்களுக்கு பிரதான லட்சியம் என்பது குடும்பநலனாகத்தான் இருக்கும். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்க எங்களுக்கு ஆறுதலாக இருப்பது இசை மட்டுமே. விட்டுப்போன சொந்தங்களையும், விலகிப்போன நினைவுகளையும், தொலைவில்போன பால்யகாலத்தையும் நினைவூட்டும் இசை, புண்பட்ட மனதிற்கு இதமானது; ஆறுதல் தருவது.

    ReplyDelete
  5. சினேகிதிக்கு!
    பணிவோடு கூறவிழைவது; தமிழ்த் திரையிசைப் பாடலுக்குமப்பால் நல்லிசை சீருடன் வாழ்கிறது.
    அதை அனுபவிக்க பொறுமையும்; நம் தொல்லிசையும் நல்லிசையே எனும் மனநிலையும் தான்;நம்மவர்க்கு
    இன்று தேவையானது.
    நேரமிருப்பின் youtube சென்று carnatic பகுதியில் rangapuravihara ranjani & gayathri இதைத் தேடிக் கேட்டுப்பார்க்கவும்.

    ReplyDelete
  6. Bharathiya Modern Prince,யோகன் பாரிஸ் இருவருடைய கருத்துக்கும் நன்றிகள்!

    கர்நாடக இசைப்பாடல்களும் எனக்குப்பிடித்தவைதான்.நீங்கள் சொன்ன பாடல்களைத் தேடிக்கேக்கிறேன்.இந்த இணைப்பிலுள்ள முதலாவது பாடலைக் கேட்டுப்பாருங்கள்.http://www.raaga.com/channels/hindi/movie/H000765.html

    ReplyDelete
  7. சினேகிதி!
    இந்த ஊத்துக்காட்டாரின் தோடி ஈழத்தில் வெகுபிரபலம்.(மொழி புரிவதால்) இது இன்னுமொரு பரிமாணம். டிரம் வாத்தியத்துடன்.சுதா ரகுநாதன் .
    இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பிடிக்கும்.
    இதை ஜேசுதாஸ், மகாராஜபுரம் சந்தானம்.
    கடம்,கஞ்சிரா,மோர்சிங்..என அட்டகாசமான கூட்டில் பாடிய இசைத்தட்டுக்கள் கேட்டேன்.
    உங்கள் பாணியில் சொன்னால் சுப்பரோ சுப்பர்.
    நிற்க ....சபனா அஸ்மி ..இதில் நடிக்கிறார். சரியாக நடிக்கவில்லை.
    (youtube ல் தான் பார்த்தேன்)
    இதன் உச்சத்தில் பாடகர்கள் எவருமே
    கண்திறந்திருப்பதில்லை. மெய்மறந்து
    கண்கிறங்கிவிடுவதைப் பலதடவை நேரில்
    பார்த்துள்ளேன்.
    இவ்வளவு ஹாயாக பாடும் பாடலல்ல இது.
    பாட்டு நல்லா இருக்கு! நடிப்பு பெரிய முட்டை.
    மன்னிக்கவும்.
    நான் குறிப்பிட்ட ரஞ்சினி, காயத்திரியைப் பாருங்கள்.
    பாடகராக நடிப்பவர்கள், மைக்கை மாத்திரம் பிடித்தால் போதாது.
    இப்படி மெய்மறப்பது போல் நடிக்க வாவது வேண்டும்.
    மன்னிக்கவும் சபனாவுக்கு,மற்றப் பிள்ளைக்கும் தமிழ் தெரியாதல்லோ!
    http://www.youtube.com/watch?v=uI9TnJiZGWA

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது