07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 27, 2007

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க..

வலைச் சர ஆசிரியராக இருக்க முடியுமா எனக் கேட்டபோது அதற்கென்ன செய்தால்ப் போச்சு எனத் தலையை ஆட்டி விட்டு ஏற்கனவே பதிவுகளை எழுதி வைத்துப் பதிவு செய்ய முடியுமா என கேள்வி வேறு கேட்டிருந்தேன். ஆனால் வழமைபோலவே சோம்பேறித் தனமாக இருந்தாயிற்று. தவிர போன வாரம் நட்சத்திரப் பதிவுகளோடும் நேரம் போனதால் கொஞ்சம் கால இடைவெளியில் இந்தப் பொறுப்பைக் கேட்டிருக்கலாம் தான். திங்கள் வரை அழைப்பிதழும் வராத படியால் ஆகா தப்பியாச்சு என இருந்த வேளை செவ்வாய் காலை கிடைக்கப் பெற்ற அழைப்பிதழினால் அவசர அவசரமாக இந்த வாரத்தை ஒப்பேற்ற வேண்டிய நிலை. எல்லாரும் என்னை மன்னிக்கணும்.

இப்போதெல்லாம் வலைப்பதிவர் சந்திப்புக்கள் நடைபெறுவதும் அது குறித்து கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் அறிக்கை எழுதுவதும் வழமையானவை. ஆரம்பத்தில் வலைப் பதிவர் சந்திப்புக்கள் சிங்கப்பூரில்த் தான் பெருமளவில் அல்லது வழமையாக நடப்பதுண்டு. 2005 மார்ச் இவ்வாறான ஒரு வலைப்பதிவு மாநாடு அவுஸ்ரேலியாவில் நடந்தது. இப்போ வரும் மாநாட்டு அறிக்கைகளுக்கு முன்னுதாரணம் எனச் சொல்லக் கூடிய ஒரு அறிக்கையொன்றை வசந்தன் எழுதியிருந்தார்.

அதாவது எப்போ போனேன்.. யாரெல்லாம் வந்திருந்தார்கள் யார் கைகொடுத்து வரவேற்றது எந்த வீதியால் போனேன் என்னவெல்லாம் சாப்பிட்டோம் என்பது போன்ற இன்னோரன்ன விசயங்கள் இந்த வலைப்பதிவு அறிக்கையில் உண்டு. இதிலே இன்னொரு சிறப்பம்சம் அறிக்கையில் சொல்லப் பட்டவாறான ஒரு மாநாடு நடைபெறாமலேயே அறிக்கை எழுதப்பட்டது தான்.(அந்த உண்மையை இப்போது தான் வெளிவிடுகிறேன்)

அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு.

இனிவருவதும் ஒரு வலைப்பதிவர் மாநாட்டு அறிக்கைதான். அண்மையில் சின்னக்குட்டி இந்தப் பதிவினை எழுதியிருந்தார். இதுவும் ஒரு கற்பனைப் பதிவு தான். ஆனால் சகல பதிவர்களினதும் குணாதிசயங்கள் ஓரளவு அவதானிக்கப் பட்டு அங்கு எழுதப்பட்டுள்ளது தான் பதிவின் சிறப்பம்சமே..

லண்டனில் நடந்த பிரமாண்டமான வலை பதிவர்கள் சந்திப்பு

வரும் வலைப்பதிவர் சந்திப்பு அறிக்கைகளுக்கிடையில் இவ்வாறான கற்பனை அறிக்கைகள் வேறேதாவது வந்திருக்கிறதா.. அல்லது சந்திப்பு குறித்து நகைச்சுவையுடன் எழுதப் பட்டுள்ளதா..?

14 comments:

  1. வசந்தனும் சயந்தனும் ஓரே ஆள் தான் என்று பலரும் அநுமானித்து கொண்டிருக்கும் காலத்தில் உந்த சந்திப்பு பதிவு வநதமையால் அந்த நேரத்தில் பெரிய சர்ச்சையாய் வந்திருக்கும்.

    எங்கையோ யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ பார்த்த ஞாபகம்.. வசநதனும் சயந்தனும் என்று ஒருதருமில்லை .... இரண்டு பேருடைய பெயரிலும் சந்திரவதனா தான் எழுதிறா என்று-:)))))

    ReplyDelete
  2. ஆஆஆஆஆஆ உண்மையாவா...அன்ரி சொல்லவே இல்லையே!

    ReplyDelete
  3. //எங்கையோ யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ பார்த்த ஞாபகம்.. வசநதனும் சயந்தனும் என்று ஒருதருமில்லை .... இரண்டு பேருடைய பெயரிலும் சந்திரவதனா தான் எழுதிறா என்று-//

    அப்ப அது உண்மையில்லையா?

    ஒரே குழப்பமாயிருக்கு ;)

    ReplyDelete
  4. எனக்குத் தெரிந்து பிரகாஷரு ஒரு பதிவு போட்டிருந்தாரு.

    ஒரு பதிவெழுதியிருந்ததாகவும், பின்னூட்டங்கள் அழிந்து போய்விட்டதாகவும். வந்த பின்னூட்டங்கள் இவை தானென்றும் ஒரு பதிவெழுதியிருந்தார்

    சூப்பராயிருக்கும் அந்தப் பதிவு

    ReplyDelete
  5. http://icarus1972us.blogspot.com/2005/06/blog-post_26.html

    ReplyDelete
  6. சின்னக்குட்டி said...



    எங்கையோ யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ பார்த்த ஞாபகம்.. வசநதனும் சயந்தனும் என்று ஒருதருமில்லை .... இரண்டு பேருடைய பெயரிலும் சந்திரவதனா தான் எழுதிறா என்று-

    போச்சுடா. குரல்...? குரல் பதிவெல்லாம் விடுகினம். அப்ப அது பிள்ளையள் எண்டுவியள் போல கிடக்கு. சின்னக்குட்டியர் உங்களைத்தான். பாவம். சந்திரவதனாக்கா.

    ReplyDelete
  7. //எல்லாரும் என்னை மன்னிக்கணும்//

    சரி சரி இனிமேல் பிழை செய்யாம இருக்கப் பழகும்.

    ReplyDelete
  8. சந்திப்பு நடக்காமலேயே அறிக்கை வெளியிட்டதை இப்பதான் முதன்முதல் வெளியிடுறன் எண்டு பொய் சொல்லுறீர்.
    தைப்பொங்கலுக்காக நானும் நீரும் செய்த கலந்துரையாடல் ஒலிப்பதிவில இதை அதிகாரபூர்வமா வெளியிட்டனாங்கள்.

    வலைப்பதிவர் சந்திப்புக்களுக்கு 'மாநாடு' எண்ட பேர் கொடுத்ததும் அந்த அறிக்கையிலதான். அது தொடர்ந்துவாறது மகிழ்ச்சிதான்.
    எல்லா வலைப்பதிவு சந்திப்பு அறிக்கைகளும் ஒரே ரெம்பிளேட்தான். பேருகளையும் இடத்தையும் நேரத்தையும் மாத்திமாத்திப் போட்டாச்சரி.

    'பூச்சிமருந்தும் பொலிடோலும்' ஓரிடத்தில சொல்லியிருந்தார், "வலைப்பதிவர்கள் இருவர் எதிரெதில் வீதிவிளக்குகளில் நிக்கேக்க கையக்காட்டினாலும் அடுத்தநாள் வலைப்பதிவர் சந்திப்பெண்டு அறிக்கை வரும்" எண்டு. ஆனால் சந்திக்காமலேயே அறிக்கை வெளியிட்டது - அதுவும் ரெண்டு வருசத்துக்கு முந்தி எண்டது - அவருக்குத் தெரியாது போல.

    ReplyDelete
  9. சினேகிதி,
    எந்த அன்ரி, என்னத்தைச் சொல்லேல?

    ReplyDelete
  10. சின்னக்குட்டி,
    அதையேன் கேக்கிறியள்?
    பத்தாததுக்கு ஒரு படமும் போட்டுக்காட்டினோம்.
    அந்த நேரம் என்ன நடந்ததெண்டு 'மாநாடு' பற்றி இடுகையின்ரயும், அதுக்கு அடுத்ததா படம் வெளியிட்ட இடுகையின்ரயும் பின்னூட்டங்களைப் பார்த்தால் தெரியும்.

    நானறிய எங்கயுமே நீங்கள் சொல்லிறமாதிரி சந்திரவதனா அக்காவைச் சந்தேகப்பட்டு யாரும் எழுதினதா ஞாபமில்லை. நீங்கள் உங்களுக்கிருக்கிற சந்தேகத்தை வேற ஆக்களின்ர பேரில வெளியிடுறியள் போல கிடக்கு.

    ReplyDelete
  11. ..// குரல் பதிவெல்லாம் விடுகினம். அப்ப அது பிள்ளையள் எண்டுவியள் போல கிடக்கு//

    இந்த உண்மையை போட்டு கொடுத்த நளாயினிக்கு மிக்க நன்றிகள். சந்திரவதனா என்னோடு இதுக்காக கோபிக்க கூடாது ..நளாயினி தான் இப்படி சொல்றா-:)

    ReplyDelete
  12. எங்கையோ யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ பார்த்த ஞாபகம்.. வசநதனும் சயந்தனும் என்று ஒருதருமில்லை .... இரண்டு பேருடைய பெயரிலும் சந்திரவதனா தான் எழுதிறா என்று

    http://manaosai.blogspot.com/2007/06/blog-post_29.html

    ReplyDelete
  13. சின்னக்குட்டி said...
    ..// குரல் பதிவெல்லாம் விடுகினம். அப்ப அது பிள்ளையள் எண்டுவியள் போல கிடக்கு//

    இந்த உண்மையை போட்டு கொடுத்த நளாயினிக்கு மிக்க நன்றிகள். சந்திரவதனா என்னோடு இதுக்காக கோபிக்க கூடாது ..நளாயினி தான்

    "ச்ச்சின்னக்குட்டி அண்ண்ண்ணோணோய்.

    ReplyDelete
  14. //"ச்ச்சின்னக்குட்டி அண்ண்ண்ணோணோய்//

    கூப்பிட்டணீங்களோ-:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது