07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 18, 2007

எல்லாருக்கும் என்னோட ஒரு சேட்டை

பொன்ஸ்க்கு என்னோட நக்கல் கூடிப்போச்சு அதான் இந்த தன்னிலை விளக்கம் போடவேண்டியதாயிற்று."இசையரசி" என்று போட்டு என் குரலினிமையை இப்பிடி பப்பிளிஸிற்றி பண்றா..இந்தக்கொடுமையக் கேப்பாரில்லையா :-(

எனக்குப்பிடித்த என் பதிவுகளுக்கு முதல் என்னைப்பற்றியும் நான் வலைப்பதிய வந்த கதையையும் சொல்றன்.எனக்கு அம்மா அப்பா வச்ச பெயர் ஜலஜா.தமிழ்ப்பெயர் இல்லையென்று தமிழார்வலர்கள் நக்கலடிக்கிறமாதிரி சலசா என்று கூப்பிடுவீங்கள் என்ற பயத்தில சினேகிதி என்ற பெயரில் எழுதத்த தொடங்கினன் இப்ப என்னடா என்டால் சினேகிதியும் தமிழ்ப் பெயரில்லை என்கிறார்கள் சிலர். தற்போது மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு உளவியல் படித்துக்கொண்டிருக்கிறேன்.வேற என்னத்த சொல்ல என்னைப்ற்றி??

ஊரை விட்டு வந்து 10 வருடங்களாகிறது.நாட்டை விட்டு வந்து 7 வருடங்கள்.தமிழ் என்றால் எனக்குயிர் அப்பிடியென்றெல்லாம் டயலாக்கடிக்க மாட்டன்.பொழுதுபோக்கா கதை எழுதினன்.நேரம் கிடைக்கிற நேரம் இணையத்தில் தமிழ்ப்பக்கங்களைத் தேடி வாசிப்பேன்.அப்பிடி முதன் முதலாக வாசித்தது நிலவுநண்பனின் வலைப்பதிவைத்தான்.பிறகு நிலவுநண்பன்தான் எனக்கு ப்ளாக் பற்றியும் தமிழ்மணம் பற்றியும் சொல்லி நிறைய உதவிகளும் செய்தார்.பிறகு பிறகு நிறையப்பேரின் உதவியோடு அப்பிடியே நானும் ஒன்றுக்கு இரண்டு வீட்டைக்கட்டி குடியேறிட்டன் :-)

சுயபுராணம் காணும் எனக்குப் பிடித்த என் பதிவுகள் இதோ.

நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். இது தத்தக்க பித்தக்கவில தவளத்தொடங்கி ஒருவருடமானதும் எழுதியது.போன வைகாசி 27 ஓட தத்தக்க பித்தக்கவுக்கு 2வயதாகி எழும்பி நடக்கத்தொடங்கியாச்சு.
I now pronounce you man and wife

உஷா எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான் வலைப்பதிவில அடிக்கடி காணாமல் போறதால சில முகக்குறிகள் சங்கேதங்கள் எனக்கு டக்கெண்டு புரிவதில்லை.அப்பிடித்தான் உஷா அம்மணி போட்ட பின்னோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு நான் போட்ட பதிவு.அவாவே தூக்க வேண்டாமெண்டு சொன்னதால இன்னும் என் வலைப்பதிவிலயே இருக்கு.வாசிக்கிற நேரமெல்லாம் சிரிப்பு வரவழைக்கும் பதிவிது.

நட்சத்திரங்கள் என் சொந்தம்
இது எனக்கு மிகவும் பிடித்த பதிவு.இறந்த ஒருவரின் ஞாபகத்துடன் எழுதிய பதிவு.வெள்ளி பார்க்கிற குணம் நிறையப்பேருக்கு இருக்கென நினைக்கிறன்.இப்பெல்லாம் அதுக்கெங்க நேரமிருக்கு.

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்... இதில இன்னும் நிறையக் குழப்படிகளை நான் சொல்லாமல் விட்டாலும் நிறையக் குழப்படிகளை மீட்டிப்பார்க்க வழிகோலிய பதிவிது.

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும் . இது ஒருநாள் சோசியல் சைக்கோலஜி லெக்ஸர் கேட்டுக்கொண்டிருக்கும்போது இதைப்பற்றி எழுதவேண்டுமென்று நினைத்து வீட்ட வந்த உடன எழுதியது.

ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும்
மலைநாடான்ர மருதநிழலுக்குப்போய் பாலைப் பழம் சாப்பிட்ட களைப்பில எழுதித்தள்ளினது:-)

என்று தணியும்.... .

அலாதியானது அவர்களுடைய மொழி . மொழி படம் பார்த்தவுடன் எழுதியது.கோபியைக் காணும்போது அவனை வாசிக்க வைக்கவேண்டும்.

இந்தக்காதல் இருக்கே... . இதைப்பற்றி நான் என்ன சொல்ல :-)



தாயகப்பறவைகளுக்காக நான் எழுதிய நலம்நாடிக் கட்டுரைகள்.முழுவதும் வலைப்பதிவிலில்லை.தொடர்ந்து வாசிக்க நீங்கள் பறவைகள் சரணாலயத்துக்குத்தான் வரவேண்டும்.

பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst)

Genital Wart

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!

ஆட்டிசம்

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?



உண்மைச்சம்பவங்களை வைத்து எழுதியவை.
கனவாகிப் போனவர்கள்.

இது என்ர மாமாவை நினைச்சு எழுதிய உண்மைக்கதை.மாமா எப்பிடியிருப்பாரெண்டு கூடத்தெரியாது.சிலருடைய அடையாளங்கள் விரும்பியோ விரும்பாமலோ அழிக்ப்பட்டுவிடும்.அவரைப்போல இருக்கிற யாரையும் பார்க்கும்போது மாமா இப்பிடி தாடி வைச்சிருப்பார் இப்பிடியான சேர்ட் விருப்பம் என்றுஅம்மா சொல்றதை வைச்சு நானா ஒரு கற்பனை பண்ணி வைச்சிருக்கிற ஒருவர்.

இல்வாழ்வு தந்த இயலாமை
ஒலிவடிவில்.இதுவும் ஒரு உண்மைக்கதைதான்.இப்ப எங்க இப்பிடியெல்லாம் நடக்குதென்று கேக்காதயுங்கோ.எங்கயோ நடந்துகொண்டுதானிருக்குது.
பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? . இது பயந்து பயந்துதான் எழுதினான்.சம்பந்தப்பட்டவர்கள் வாசித்தான் குறைப்பட்டுக்கொள்வார்களோ என்று.அப்பிடியே வாசி்த்தாலும் அவர்களுக்கு உண்மை உறைக்க வேண்டும்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட... .வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோருக்கான குறிப்புகளைப்படிக்கப்போய்.இதில் நான் சொன்ன அந்த காக்கைவன்னியன் இன்று கம்பிகளுக்குப்பின்னால். (ஒரு குரூர சந்தோசம்)

தன்வினை தன்னைச் சுடும்... . ஊரில இருந்துகொண்டு வெளிநாட்டில இருக்கிறவையெல்லாம் பணம்காய்க்கிற மரம் வளர்க்கிறார்கள் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு.


இவ்வளத்தையும் நீங்கள் வாசிக்கோணும் என்று சொல்லேல்ல நான்.ஆனால் வாசியுங்கோ என்ன.

6 comments:

  1. //மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு உளவியல் படித்துக்கொண்டிருக்கிறேன்//

    எட.. நீங்கள் மக் மாஸ்டரின்டை பள்ளிக் குடத்திலயே படிக்கிறியள்..? அது சரி. அது என்ன அவியல்..? உளவியலோ.. எண்டால் உன்ன உளவு பார்க்கிறதோ..? அதுக்கும் படிப்பு இருக்கோ..

    ReplyDelete
  2. கொழுவி வேணாம்...உண்மையா Psychology என்பதற்கு உளவியல் என்ற பதம் பொருத்தமில்லை.வேற ஏதும் சொல்லிருக்கா?

    ReplyDelete
  3. //மூன்றாமாண்டு உளவியல் படித்துக்கொண்டிருக்கிறேன்.//

    சிக்மன் பிராய்ட்டின் மோள் என்ன சொல்றா இப்ப -:)

    ReplyDelete
  4. \\சிக்மன் பிராய்ட்டின் மோள் என்ன சொல்றா இப்ப -:)\\

    ஹா ..அவான்ர லண்டன் வீட்டுக்கு ஒருக்கா சின்னக்குட்டியை விசிட் அடிக்கச்சொல்லிச் சொல்றா :-)

    ReplyDelete
  5. //ஹா ..அவான்ர லண்டன் வீட்டுக்கு ஒருக்கா சின்னக்குட்டியை விசிட் அடிக்கச்சொல்லிச் சொல்றா :-)//

    அப்படியா.. சந்தோசம... அவவுக்கு ஏறக்குறைய என்ன வயது இருக்கும்.. ஒரு பொது அறிவுக்கு தான் கேட்டனனான். தப்பா நினைக்க வேண்டாம்-;)

    ReplyDelete
  6. என்ன ஒரு 80 வயதிருக்குமா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது