07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 28, 2008

மகிழ்வும் - மனநிறைவும்

 
இடைப்பட்ட நாட்களில் சிறிது தடைபட்டாலும், என்னென்ன, எப்படி எழுத வேண்டுமென்று நினைத்தேனோ என்பது நிறைவேறாவிட்டாலும், நண்பர்களின் எதிர்பார்ப்பை சிறிதளவேனும் பூர்த்தி செய்திருப்பேன் என்ற மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.

புதிய பதிவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அறிமுகமான பழம்பெரும் பதிவர்களின் சுட்டிகளை நிறைய இடத்தில் கொடுத்திருக்கிறேன்.
காசியண்ணன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, 

நாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது!)

நானும் நினைத்து என் மனதை தேற்றிக் கொள்கிறேன் :-) .

நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன்.  கண்டுபிடிக்கவே முடியாத, இதுவரை எங்கேயுமே அறிமுகமில்லாத ஒரு பதிவரின் பதிவை படித்து விட்டு, பின்னூட்டப்பெட்டிக்கு போனால் 98 சதவீதம் துளசி டீச்சரின் பின்னூட்டம் இருக்கும்.  இல்லையேல் முத்துலட்சுமி கயல்விழி, இப்போது நண்பர் காக்டெய்ல் கார்க்கி.  நிறைய படிக்கிறார்கள்.  வாழ்த்துக்கள்!!!!


முடிக்கவே முடியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கின்றன
முற்றும்.

என்ற கவிஞர் மகுடேசுவரனின் கவிதையுடனும், அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களோடும், நன்றி கூறி விடைபெறுகிறேன்.

 
அன்புடன் - வெயிலான்.
http://veyilaan.wordpress.com

18 comments:

 1. வலைச்சரத்தில் நீங்கள் கொடுத்த பல பதிவுகளிற்கு நான் புதியவனாகத்தான் செல்கின்றேன். மிக்க நன்றி வெயிலான். ரமேஷ்.

  மகுடேசுவரனின் கவிதை அழகு...

  ReplyDelete
 2. //நாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது!)//

  மிகச்சரியான வார்த்தைகள்.. :-))

  ReplyDelete
 3. புதியவர்களை ஊக்குவிக்கும் துளசி டீச்சர், முத்துக்கா மற்றும் கார்க்கிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..

  ReplyDelete
 4. உங்கள் அறிமுகங்களும், அதை அழகான லே அவுட்டில் தந்த நேர்த்தியும் பாராட்டுக்குரியது.

  டாட்டா காட்டும் பையனை உங்களைப் போலவே புஷ்டியாகக் காண்பித்துவிட்டீர்கள். அழகு!

  ReplyDelete
 5. :)எப்படி எல்லாம் கவனிக்கிறீங்க..

  ReplyDelete
 6. Good job. Thanks a lot. Pics are so cute in all ur posts in valaicharam.

  ReplyDelete
 7. //நாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது!)//
  சரியாச்சொன்னீங்க....பல பேருடைய வண்டிகளும் இப்படித்தான் ஓடுகிறது, என் வண்டியும் சேத்துத்தான்!!!!

  ReplyDelete
 8. உங்களுக்கு வருட இறுதியில் எவ்வளவோ பணிச்சுமைகள் இருந்திருக்கும். இருந்தும் கிடைத்ஹ்சொற்ப நேரத்தில் பல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துவைத்து கிடைத்த நல்வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு வாழ்த்துக்கள் வெயிலான்.

  //எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! //

  நண்பர் பழமைபேசியின் வலைப்பூ http://maniyinpakkam.blogspot.com இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

  மீண்டும் வாழ்த்துக்கள் வெயிலான். நிஜமாகவே, இந்த வலைச்சர பதிவுகளுக்குப் பிறகு உங்களின் ஆழ்ந்த வாசிப்பனுபவமும், இன்னொரு பரிமாணமும் அறியப் பெற்றேன்.

  ReplyDelete
 9. சென்ஷியோட மூணு பின்னூட்டங்களுக்கும் ரிப்பீட்டு...:))

  வேலையை குறைச்ச சென்ஷிக்கு நன்றிகள்...

  ReplyDelete
 10. நன்றி பரிசல்!

  // டாட்டா காட்டும் பையனை உங்களைப் போலவே புஷ்டியாகக் காண்பித்துவிட்டீர்கள். அழகு! //

  இமேஜை டேமேஜ் பண்ற வேலை தான வேண்டாங்கிறது :)

  ReplyDelete
 11. //:)எப்படி எல்லாம் கவனிக்கிறீங்க..//

  இதையெல்லாம் கவனிச்சு தானே உங்களையும் வலைச்சரக்குழுவிலே சேர்த்திருக்காங்க :)

  ReplyDelete
 12. // Pics are so cute in all ur posts in valaicharam //

  நன்றி கபீஷ்! எல்லாப் படங்களும் கூகிள்லருந்து எடுத்தது தான்.

  ReplyDelete
 13. உங்களுடைய பதிவு மலையிலிருந்து ஒரே ஒரு பதிவை மட்டுமே எடுத்து சுட்டியிருந்தேன். ஏன் தெரியுமா? அதில் 'வெயில்' இருந்தது ;)

  நன்றி நனானி!

  ReplyDelete
 14. பல பதிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு உங்களது ஊக்கமும் ஒரு காரணம். நன்றி மகேஷ்!

  ReplyDelete
 15. நன்றி தமிழன் கறுப்பி

  ReplyDelete
 16. மிக்க நன்றி வெயிலான்..புதிதாக பதிவுகளை அறிமுகப் படுத்தி நிறைவாக பதிவைத் தொகுத்ததற்கு!!

  ReplyDelete
 17. உங்கள் ஊக்கத்துக்கும், அன்புக்கும் நன்றி சந்தனமுல்லை!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது