07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 20, 2009

க‌விதைக‌ளைப் பெய்யும் ம‌ழை..!


அரச மரத்தடி குளிர்ந்த நிழலைப் போல,சுட்டெரிக்கும் வெயிலையும் சிலாகிக்க ஆரம்பித்து விட்டீர்களா ? தனிமையின் நிசப்தத்தை விட, ஜன நெரிசலும் வாகனங்களின் பேரிரைச்சலும் உங்களுக்கு மன அமைதியை தருகிறதா ? பாறைகளுக்கிடையில் உறங்கிக் கொண்டிருக்கும் தேரையுடன் பேசத் துடிக்கிறீர்களா ? புத்தகங்களும் இசையும் அலுத்து விட்டதா ? காதலும் மழையும் போதும் என்கிறீர்களா ? ஏதேதோ காரணங்களுக்காக இந்த பூமி போதவில்லை என்கிறீர்களா ? அடிக்கடி கோபம் வருகிறதா ?? இல்லை கோபமே வருவதில்லையா ??

நீங்க‌ளும் க‌விஞராகி விட்டீர்க‌ள்...!!!******

"சொற்களோடு புணரும் சாத்தியமற்ற
நிசி நுனி வளர் பொழுதில் .
மேல்தட்டு மண்ணகழ்ந்தோடிய புழுவின்
வழித்தடமாய் வெடிப்புகளால்
நிரம்புகிறது .
வீட்டுள் வீடுகட்டும்
மஞ்சள் குளவியின் பிருஷ்ட
கொடுக்கு விஷம் தின்ற
புழுவென நிறம் மாறுகிறது
இதயம் .
வன்முயக்க குரூர திருப்தி
ஊடற் பெருநிறையையுன் மேல்
கவிழ்த்ததன் .
வன்மம் தொலைந்த பின்னொரு நொடியில்
அழத்தொடங்குகிறேன் யார்க்கும்
கேட்டிராவண்ணம்...."


மரண ரசனை கொண்ட கவிஞன்!! பாலா என்கிற பாலமுருகன்.

வாழ்நாளின் பெரும்பகுதி நடுக்கடலில் கழிக்கும் இக்கவிஞனின் தனிமை அடர்த்தியான‌ வரிகளை உமிழ்கிறது.சொற்சிக்கனத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் மொழி நடையை படிமங்களாக்கி, முற்றிலும் புதிய வாசிப்பானுபவத்தை தோற்றுவிக்கிறான்.

****

ஒருவேளை
இன்று பார்க்கலாம்
அக்காவும் நீங்களும்..

"உலகத்தில் இல்லாத தொம்பியை"
(இப்படித்தான் உச்சரிப்பாள், இறுதியில் அக்கா!)

-------

நீ இல்லாமல் போய்ட்டியே
அப்படி ஒரு மழைடா"
மூவாயிரம் மைலை
நனைக்கிறது
மொபைல்.

தட்டச்சு மொட்டில்
தவிக்கிறது விரல்.
திரையில் அவள்


ஓரிரு வார்த்தைகளில் மனதை கலங்கடிக்கச்செய்யும் வல்லமை படைத்த கவிஞன் பா.ராஜாராம் "பா.ரா" என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்க‌ப்ப‌டுகிறார். மனித உறவுக‌ளினூடே புதைந்திருக்கும் மென் உணர்வுகளையும் இறுக்கங்களையும் பேச்சு வ‌ழ‌க்கில் போகிற‌ போக்கில்,க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லின் ஈர‌த்தைப் பிழிகிறார் தன் க‌ருவேல‌ நிழ‌ல் ப‌க்க‌ங்க‌ளில்.

*****

"உரிந்து கிடக்கும் பாம்புச்சட்டையில்
துளி விஷமும் இல்லை மெக்சிகோ சீக்கு
வந்து புதைக்கும் ஜில்லாவின்
முதல் பிரேதத்தை விட

தீரக்குடித்தாயிற்று ஆகாய நீலத்தை
மேகம் முளைக்கும் வரை
தான் பணப்பை பதுக்கும் இடத்தில்
அடை வைத்துக் கொள்வதாய் சொன்ன தேவதைக்கு
இரண்டு பெயர்

காயங்கள் ஆற்றும் செவிலிப் பெண்
மாதவம் செய்து கொண்டிருக்கிறாள்
தெய்வங்கள் புகைப்படமாகிவிட்ட உலகில்.."வழக்கமாக கவிஞர்கள் பயன்படுத்தும் யுத்திகளை முற்றிலுமாக‌ நிராகரித்து விடுகிறார் நேசமித்ரன். புதிய வார்த்தைப் பிரயோகம், பன்முகத்தன்மை, செறிவான வாக்கிய கட்டமைப்பு என்று முழுக்க முழுக்க புதிய தளத்தில், தமிழ்க்கவிதைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியில் பெருமுனைப்போடு ஈடுபடுகிறார்.

"கவிதை உருவானவுடன் படைப்பாளி இறந்து போகிறான் .வாசிக்கும் அனைவருக்கும் அது சொந்தமாகி விடுகிறது. "

கவிதைகளைப் பற்றிய தன் கருத்துகளை சமரசமின்றி "நான் பயிலும் நரகத்தின் மொழி" எனும் இப்பதிவில் நிறுவுகிறார்.

****

"நாகூராச்சி வீட்டில்
செம்பருத்தி பூ
பாமா அக்காவுடன்
சேர்ந்து மல்லிகைக்குவியல்
கோதை பாட்டி
எப்போதும் கனகாம்பரக்காரி
சுவர் நீண்ட
பால்கனியில் வளர்ந்து
உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்
பவானி வீட்டில் தோட்டம் இல்லை
அவள் பார்வையை
மாத்திரம்
பறித்து வருவேன்.
என்றாலும்
ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை
பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.."


இப்படி மனம் வருடும் கவிதைகளையும் சில நேரங்களில், தற்கொலை,தீக்குளித்தல் என்று வன்மமும் கழிவிரக்கமும் நிறைந்த கவிதைகளையும் எழுதும் கவிஞர்
"சென்ஷி" வளைகுடா இலக்கியவாதி. "அந்தரவெளிகள்" என்னும் மின்குழுமத்தை நடத்தி வருகிறார்.முழுக்க முழுக்க தலை சிறந்த கவிஞர்களை உறுப்பினர்களாக கொண்ட அந்த‌
கவிதைக் குழுமத்திலிருந்து வரும் மின்மடல்கள் வெகு சுவாரஸியம்.

****

மேலும் சில‌ க‌விதைப் ப‌க்க‌ங்க‌ள்

1.சத்ரியனின் "மனவிழி"'

2.பிரவின்ஸ்காவின் பக்கங்கள்

3.சி. கருணாகரசுவின் "வெள்ளை மனமும் சிவப்பு சிந்தனையும்... "

4.விஜ‌ய் க‌விதைக‌ள்

5.வேல்க‌ண்ண‌னின் ப‌க்க‌ங்க‌ள்

****

28 comments:

 1. கவி மழையா

  படிச்சிட்டு வாறேன்

  ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அட அம்பூட்டு எளிதா கவிஞராவது

  அருமையான முன்னுரையா இருக்கு செய்யது.

  ReplyDelete
 3. அண்ணே

  இடை இடையில ப்ளூ கலரா இருக்கே அதெல்லாம் என்னா லாங்குவேஜு!?

  ReplyDelete
 4. மூவாயிரம் மைலை
  நனைக்கிறது
  மொபைல்.

  ------------

  நனைந்தோம் நனைந்தோம்
  பதிவு வழி நாங்களும் ...

  ReplyDelete
 5. //அண்ணே

  இடை இடையில ப்ளூ கலரா இருக்கே அதெல்லாம் என்னா லாங்குவேஜு!?//

  வால் அண்ணே !!! ந‌ல்லா பாருங்க‌ !!! அது ச்செவ‌ப்பு க‌ல‌ரு !!!

  ReplyDelete
 6. எனக்கு டார்க் ப்ளூவா தான் தெரியுது!

  ஒருவேளை எனக்கு கண்ணு கூவிகிச்சோ!?

  ReplyDelete
 7. சப்ஜெக்ட் வாரியா பிளான் பண்ணி அடிக்கிறே தம்பி.! சிறப்பான பணி.!

  ReplyDelete
 8. இன்றும் அறிமுக உரை அசத்தல் வாழ்த்துக்கள் அப்புறம் வரேன்..

  ReplyDelete
 9. அருமை சார். வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. என்னையும் ஒரு கவிஞனாய் அறிமுகப்படுதியதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி எனது தம்பிக்கு

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 11. அருமையான படையல் கவித்தேர்வுகள் செய்யது.
  நேசன்,பா.ரா அண்ணா.சிலசமயம் கவிதையாலயே மூளையைக் குடைந்துவிடுவார்கள்.

  ReplyDelete
 12. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!

  அறிமுகப் படுத்திய விதம் அழகா இருக்கு!

  ReplyDelete
 13. உள்ளேன் அய்யா , இங்க நான் ஏதும் சொன்ன அது தப்பா போய்டும் . சோ ஒன்னும் சொல்லாமா போறதுதான் எனக்கு நல்லது

  ReplyDelete
 14. அன்பின் செய்யது

  பணி சிறப்பாக நடைபெறுகிறது - கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தியது நன்று

  நல்ல பணி - வாழ்க

  நல்வாழ்த்துகள் செய்யது

  ReplyDelete
 15. வித்தியாசமான அறிமுகங்கள்..

  கவிஞனாவதற்கு காரணம் இவ்வளவுதானா இல்லே இன்னும் (?) இருக்கா

  தொடருங்க‌

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. //பாலா said...
  உள்ளேன் அய்யா , இங்க நான் ஏதும் சொன்ன அது தப்பா போய்டும் . சோ ஒன்னும் சொல்லாமா போறதுதான் எனக்கு நல்லது
  //

  ஏன் பாலா ??

  சம்பந்தமே இல்லாம இப்படி ஒரு ******* பின்னூட்டம்..?? இன்னும் வாய்ல என்னனமோ வந்துது..சபை நாகரிகம் கருதி சொல்லாமல் விடுகிறேன்.

  ReplyDelete
 17. //பாலா said...
  உள்ளேன் அய்யா , இங்க நான் ஏதும் சொன்ன அது தப்பா போய்டும் . சோ ஒன்னும் சொல்லாமா போறதுதான் எனக்கு நல்லது
  //

  உங்களைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் சொல்லி விடுங்கள். அந்த பகுதியை
  மட்டும் நீக்கி விடுகிறேன்.

  காரணம் இந்த பின்னூட்டம் என்னை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்குகிறது.

  ReplyDelete
 18. அருமை செய்யது.

  உங்கள் முன்னுரை மிக மிக அருமை.

  //பாலா said...
  உள்ளேன் அய்யா , இங்க நான் ஏதும் சொன்ன அது தப்பா போய்டும் . சோ ஒன்னும் சொல்லாமா போறதுதான் எனக்கு நல்லது
  //

  பெரியவங்க மத்தியில உங்க பேரும் இருக்கேன்னு ரொம்ப தன்னடக்கத்தில் சொல்றீங்களோ. நீங்களும் பெரிய ரௌடிதான். எங்களுக்குத் தெரியும் பாலா.

  ReplyDelete
 19. மிகுந்த அன்பும் நன்றியும் செய்யது.

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. ரொம்ப நன்றி நண்பா
  உங்க அன்புக்கும் பிரியத்துக்கும்

  5 ஆம் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 21. நீங்கெல்லாம் என் வலைதளம் வருவது மிக பெருமையாக இருக்கிறது.
  என் தளத்தையும் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 22. செல்.....ரைSat Nov 21, 05:31:00 PM

  //பாலா said...
  உள்ளேன் அய்யா , இங்க நான் ஏதும் சொன்ன அது தப்பா போய்டும் . சோ ஒன்னும் சொல்லாமா போறதுதான் எனக்கு நல்லது//

  **********

  இவரும் என்னிய போல கோவக்காரரு போல...

  ReplyDelete
 23. அடக்கடவுளே . அட என்னை அறிமுகப்படுதியதற்கு நன்றின்னு ஒத்தை வார்த்தை சொல்லீட்டு போகலாம் . அது எப்போதும் போல் நன்றி கார்டு போட்டா மாதிரி ஆயிடும் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு எழுதுனேன் செய்யது. ரொம்ப கோவப்படாதீங்க மாப்ள
  (நான் நெனச்சத சரியாய் கொண்டு சேர்க்காம விட்டுட்டேன் அதுதான் இதுல பெரியதப்பு avvvvvvvvvvvvvvvvv

  ReplyDelete
 24. தங்கள் அன்பிற்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி செய்யது...

  மகிழ்வாய் உணர்கிறேன்!

  ReplyDelete
 25. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
  you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது