வலைச்சரத்தில் மூன்றாம் நாள்...
➦➠ by:
அண்ணன் வணங்காமுடி
வணக்கம் நண்பர்களே...
குட்டி கதை
ஒரு பள்ளியில் ஆசிரியர் அவரது வகுப்பு மாணவ செல்வங்களை உருளை கிழங்குகளை எடுத்து வருமாறு சொன்னார். ஒவ்வொரு கிழங்குக்கும் அந்த குழந்தைகளுக்கு பிடிக்காதவர் களின் பெயரை வைக்க சொன்னார். அதே மாதிரி எத்தன பேர பிடிக்காதோ அத்தன கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதற்கு அவர்களின் பெயரை வைக்க சொன்னார்.
அவர் சொன்னார் போல் அடுத்த நாள் எல்லாக்குழந்தைகளும் கிழங்கை எடுத்துவந்தனர். ஒரு சில குழந்தைகள் ஒன்று, சிலர் இரண்டு, சிலர் மூன்று, சிலர் ஐந்து என பல எண்ணிக்கையில் எடுத்து வந்தனர். ஆசிரியர் அனைவரிடமும் ஒருவாரத்திற்கு அந்த கிழங்குகளை நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் எடுத்து செல்லுமாறு கூறினார். அதே போல் அனைவரும் பின்பற்றினர்.
அந்த குழந்தைகள் ஒவ்வொருவராக புகார் பல தெரிவித்தனர். அதாவது அந்த கிழங்குகளை எடுத்து செல்வதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், அதிகமாக எடை உள்ளதால் அதை சுமப்பதற்கு சற்று சிரமமாக இருப்பதாகவும், கிழங்குகளில் இருந்து ஒரு விதமான நாற்றம் அடிப்பதாகவும் சொன்னார்கள்.
அந்த ஒரு வாரம் முடிந்தது. அடுத்தவாரத்தில் ஆசிரியர் அந்த குழந்தைகளிடம் இதை பற்றி விசாரித்தார். அப்போது அந்த குழந்தைகள் பட்ட கஷ்ட்டங்களை சொன்னார்கள். அதற்க்கு அந்த ஆசிரியர் உங்கள் மனதில் எந்த மாதிரியான எண்ணத்தை கொண்டுள்ளீர்களோ அது மாதிரியே உங்கள் சூழ்நிலையும் வாழ்க்கையும் அமையும் இந்த நிகழ்வு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஒரு வாரத்தில் நீங்கள் சுமந்து சென்ற இந்த கெட்ட கிழங்கின் வாடையும் அதன் எடை இவற்றை தாங்க முடிய வில்லயோ அதே போல் உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களை சுமந்து சென்றால் என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.
அதனால் உங்கள் மனதில் வாழ்நாள் முழுவதும் எப்போதும் நல்ல எண்ணங்களை சுமந்து செல்லுங்கள் அது உங்களை நல்ல வழியில் நடத்திச்செல்லும்.
டிஸ்கி: உங்கள் இதயம் என்பது ஒரு தோட்டம் போன்றது அதை தினந்தோறும் சுத்தம் செய்து தேவையில்லாத களைகளை அகற்றி விடவேண்டும். மறப்போம் மன்னிப்போம் என்ற என்னத்தை வளத்துக்கொல்லுங்கள். கெட்ட எண்ணங்களை மறந்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் அறிமுகம்:
நட்புடன் ஜமால் கற்போம் வாருங்கள் ஒரு நாள் இவர் எழுதிய கவிதை அனைவரும் வியக்கும் அளவிற்கு மிக பிரபலம் அந்த கவிதை இதுவரை யாரும் எழுதியதில்லை இனிமேலும் யாரும் எழுதப்போவதில்லை. எனக்கு தெரிந்து அந்த கவிதை பதிவு முதல் முறையாக அதிக பின்னுட்டங்களை பெற்றது. அந்த கவிதையில் இலக்கானப் பிழை இல்லை. எழுத்துப் பிழை இல்லை. யாராலும் குற்றம் கண்கொண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஒரு கவிதை.
ஆதிமூலகிருஷ்ணன் புலம்பல்கள்.! இவர் குறும் படம் எடுப்பதில் மிகவும் கெட்டிக்காரர். இவர் எடுத்த ஆயுதம் குறும்படம் மக்கள் ஆதரவை பெற்றது இல்லை பேராதரவை பெற்றது. தற்போது குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கட்டிவரும் இவர் வருங்கலத்தில் பெரிய இயக்குனராய் வருவார் என்பதில் ஆச்சர்யம் இல்லை
உங்களில் ஒருவன் - தமிழ் உதயம்
சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய, ஜனரஞ்சகம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவர்
சந்திப்போம், சிந்திப்போம்...
|
|
//அதனால் உங்கள் மனதில் வாழ்நாள் முழுவதும் எப்போதும் நல்ல எண்ணங்களை சுமந்து செல்லுங்கள் அது உங்களை நல்ல வழியில் நடத்திச்செல்லும்.
ReplyDelete//
நல்ல கருத்து!!
தமிழ் உதயம் - நல்ல அறிமுகம். நன்றி.
அன்பின் வணகங்காமுடி
ReplyDeleteகதையும் அருமை அறிமுகங்களும் அருமை
நல்வாழ்த்துகள்
மறப்போம் மன்னிப்போம் என்ற என்ன(?)த்தை வள(?) த்துக்கொல்லுங்கள்.
ReplyDeleteநல்ல கருத்துக்களை சுமந்த வந்த உங்கள் படைப்பின் அறிமுகம். சற்று கவனமாக பார்த்து ஏற்றி இருக்கலாம்.
தவறு இல்லை. நல்லவற்றையே எடுத்துக்கொள்வோம்.
வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteகதை ரொம்ப நல்ல கருத்துடன் இருக்குங்க. மிக்க நன்றி.
ReplyDeleteஜமால் - நட்பின் அடையாளம்.
ஆதி - சூப்பர் மேன்
உதயம் - கதைச்சொல்லி...
ங்ணா..புதுசா ப்ளாக் எழுதுறவங்களையும் கொஞ்சம் போட்டுகுடுங்கண்ணா..அப்போதான் அங்கயும் கும்மலாம்.. ஓல்டு பீஸ்ஸா இருக்கே உங்க இண்ட்ரோ ப்ளாக் எல்லாம்..
ReplyDeleteபுது ரத்தம் பாச்சுங்கண்ணா..!!
அக்காங்..!!
உங்கள் இதயம் என்பது ஒரு தோட்டம் போன்றது அதை தினந்தோறும் சுத்தம் செய்து தேவையில்லாத களைகளை அகற்றி விடவேண்டும். மறப்போம் மன்னிப்போம் என்ற என்னத்தை வளத்துக்கொல்லுங்கள். கெட்ட எண்ணங்களை மறந்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.//
ReplyDeleteநல்லச் செய்தி. நன்றி
வாழ்த்துக்கள் எங்கள் ஜமால் பதிவை அறிமுகப்படுத்தியதில் பெருமையும் நன்றியும் ...
ReplyDeleteசூப்பர் கதை!
ReplyDeleteஆதியின் அடுத்த குறும்படத்தில் நீங்கள் தான் ஹீரோவாம்!
ReplyDeleteஜமால் அண்ணனின் வரலாற்று சிறப்புமிக்க கவிதை பதிவில் நானும் இடம் பெற்றிருக்கிறேன் என பெருமைப்படுகிறேன்!
ReplyDeleteஅருமையான கருத்துள்ள கதை..
ReplyDeleteவாழ்த்துக்கள் வணங்காமுடி..
ம்ம்.. நல்ல அறிமுகங்கள்..
அறிமுகங்களுக்கு நன்றி..
//
கற்போம் வாருங்கள் ஒரு நாள் இவர் எழுதிய கவிதை..........
//
ஆமா.. பல ஆயிரக்கணக்கான அர்த்தம் சொல்லும் அற்புத கவிதையது..
//
புலம்பல்கள்.! இவர் எடுத்த ஆயுதம் குறும்படம்....
//
ஆஹா.. அது கலக்கல் குறும்படமாச்சே..
ஐந்தாம் நாள் வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜமாலின் வரலாற்று சிறப்புமிக்க அந்த இடுகையில் நானும் பங்கேற்று இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமைப் படுகிறேன்!
ReplyDeleteகதை நன்றாக இருந்தது. தெரிவித்த விதமும் அருமை!!
ReplyDeleteஆதி இயக்குனராக ஆகிவிட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. இரண்டு படம் இயக்கி விட்டார். அப்புறம் என்ன சந்தேகம் :)
ReplyDeleteஎதுக்கும் உங்களுக்கும் ஒரு அப்ளிகேசன் போட்டு வைக்கலாம். நடிக்க வாய்ப்பு கொடுப்பார் :)
ஐடியா திலகம் வால்பையன் வாழ்க வாழ்க!!
அறிமுகங்கள் அனைத்தும் தெரிந்த முகங்களாக இருந்த போதிலும் மறுபடியும் வலைச்சரத்தில் ஒளிரக் கண்டேன். மகிழ்ச்சியையும் அடைந்தேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வணங்காமுடி!!
நன்றி நண்பரே
ReplyDeleteஎன் வலைக்கும் சுட்டி கொடுத்திருக்கின்றீர்கள்
இங்கு என் பதிவையும் இரசித்து இருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்.