07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 27, 2013

புதனின் நட்சத்திரப் பதிவர்கள் இவர்கள்...!

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், வலையுலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் சிபி செந்தில்குமார்"தான், ஈரோடு சென்னிமலை'காரர், சினிமா விமர்சனத்தில் இவரைப் பார்த்து நடுங்குகிற டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவு, தமிழ் திரைப்படங்களில் இப்போதெல்லாம் இணையதளங்களுக்கு நன்றி என்று டைட்டில் போடக் காரணமானவராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

டுவிட்டரில் கலக்கி வருகிறார், இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் வலைசரத்தில் புதியதாக வருபவர்களுக்காக அறிமுகப்படுத்துகிறேன், என் நண்பன், ஒருமையில்தான் இவரை நான் அழைப்பது உண்டு அதற்கு எனக்கு முழு உரிமையும் கொடுத்தவர், இவரின் ஜோக் எழுத்துகள் நம்மையும் சிரிக்க சிந்திக்க வைக்கும், பிரபல பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் இருந்தார் இவர்...!

எப்போது நான் மும்பையில் இருந்து ஈரோடு வழியாக ரயிலில் வந்தாலும் அன்பாக என்னை சந்திக்க ரயில்நிலையம் வந்துவிடும் பாசமுள்ள அண்ணன்...!

http://www.adrasaka.com/2013/02/blog-post_8648.html விஸ்பரூபம் சினிமா விமர்சனம்.
-------------------------------------------------------

விக்கியின் அகடவிகடங்கள் விக்கி அண்ணன், கோபக்காரன், பாசக்காரன், சிறுகுழந்தை மனசுக்காரன், உள்குத்து ராஜா எளிதில் உணர்சி வசப்பட்டாலும் உடனே அமைதியாகி  ரோசிக்க தொடங்குவார்...!

இவர் பதிவுகளில் சிரிப்பும், கோபமும், ஏக்கங்களும் மனதின் வலிகளும், வியட்நாம் சரித்திரங்களும், தரித்திரங்களும், அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் காட்டுவதாக இருக்கும், என்னைப்போல நாடோடி வாழ்க்கை வாழும் நண்பன், வாழ்கையில் பல வலிகளை கண்டவனும் கொண்டவனும், ஆதலால் இவரின் எழுத்துகளில் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்...!
மனதோடு மட்டும்" கவுசல்யா, விஜயன் நடுவில் நம்ம விக்கி, ஆபீசர் சங்கரலிங்கம். நெல்லையில் எங்களை விக்கி பார்க்க வந்தபோது எடுத்த படம்.
http://vikkiulagaam.blogspot.com/2011/09/blog-post_23.html
-------------------------------------------------------
கே ஆர் விஜயன், நினைவில் நின்றவை என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், இவர் எழுத்துகள் எங்கள் கன்னியாகுமரி ஆட்களுக்கே உண்டான கேலிகள் கலந்து வாசிக்க இன்பமாக இருக்கும்.

நிறைய எழுதுவதில்லை, எப்பவாவது மனம் வந்தால் உடனே ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பதிவிடுவார், பேஸ்புக்கில் மற்றும் கூகுள் பிளஸ்சிலும் கலக்கி வருகிறார், என் இனிய நண்பர், எப்போ ஊர்போனாலும் இவரைப் பார்க்காமல், இவருடன் சற்றே ஊர் சுற்றாமல் வந்ததில்லை, கன்னியாகுமரி மாவட்டத்துகாரனாக நான் இருந்தாலும், எனக்கு திற்பரப்பு அருவியையும், பத்பனாபபுரம் அரண்மனையையும் சுற்ற வைத்து போட்டோ எடுத்த நண்பர்...!
திக்குவாய் பற்றி அருமையான ஒரு பதிவு மற்றும் கூகுள் பிளஸ்ஸில் அருமையான படங்கள் போட்டு வருகிறார்.
தி..க்...கு வாய்............
https://plus.google.com/102253910059165944426/posts
--------------------------------------------------------
பன்னிகுட்டி ராமசாமி, பதிவுலகின் முடிசூ[டிய]டா மன்னன், ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இவரைத்தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது, இவர் பதிவை படித்தவர்கள் சிரித்து உன்மத்தம் பிடித்து திரும்ப வேண்டும் என்பது பதிவுலகின் ஆச்சரியம்...!

அதைவிட இவர் பதிவில் வரும் கமெண்ட்ஸ்களை வாசித்தே வயிறு பஞ்சர் ஆகிவிடும் அளவுக்கு செமையா கலகலன்னு இருக்கும்....ம்ம்ம்ம் இவரும் பதிவுகள் எழுதுவதை அதிகபட்சமாக தவிர்த்து வருகிறார்...மறுபடியும் வந்து எங்களை சிரிக்க வைக்கவேண்டும் என்பது எங்கள் ஆவா....!
தமிழ்சினிமாவின் டாப் நடிகர்கள்-2012
--------------------------------------------------------

மின்னல்வரிகள் அண்ணன் பால கணேஷ், இவர் எழுத்துப்பக்கம் போனால் சிறுகதைகள், மற்றும் தொடர் கதைகள் என்று வலம் வருகிறார், சென்னையின் எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்து பழகி இருப்பார் என்றே நினைக்கிறேன், நம்ம சுஜாதாவை நினைவில் கொண்டு வரும் பிரபல எழுத்தாளர் இவர்...! [[படத்தில் நடுவில் இருப்பவர்]]
சினிமா - சில பய(ங்கர) டேட்டா!
-------------------------------------------------------
கூடல்பாலா, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, மரணத்தை நெரு[க்]ங்கிவிட்டு வந்தவர், இப்போதும் அதனால் உடல் பாதிப்பில் இருந்து மருந்து சாப்பிடுகிறார்....இவர் எழுத்துக்கள் சுற்று சூழல் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பு பற்றியுமே அதிகமாக இருக்கும், இப்போதும் அணுஉலைக்கு எதிராக போராடி வருகிறார்.

என் இனிய நண்பர், இரண்டுமுறை நேரில் சந்தித்து அளவளாவி இருக்கோம்...!
வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.
--------------------------------------------------------
வந்தேமாதரம் சசிகுமார், பதிவுலகில் பதிவுகளை எப்படி உபயோகிக்க வேண்டும், அதனை எப்படி அலங்காரப்படுத்தி வாசகர்களை கவரவேண்டும் என்பதோடு...பதிவர்களுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் அழகாக தன் பதிவில் சொல்லி வருகிறார்.

பதிவர்கள் அநேகம்பேர் இவர் பதிவை படித்துதான் தன் வலைத்தளங்களை அழகு படுத்து வைத்து உள்ளார்கள்....! இவரோடு நான் போனில் பேசியதுண்டு, அண்ணே கண்டிப்பா சென்னை வாங்க அண்ணே என்று அன்பாக அழைப்பார்...!
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மா...
--------------------------------------------------------
மனதோடு மட்டும் கவுசல்யா, பசுமை புரட்சி நடத்தும் பசுமை புரட்சி பெண், இவர்கள் எழுத்துகளும் பசுமை உலகம் பற்றியே இருக்கும், நாட்டின் மக்கள் மீது அதிக பாசமுள்ளவர், அநியாயம் கண்டு பொங்கும் பெண் சிங்கம்....!

எப்போது நான் நெல்லை போனாலும் எங்களைப் பார்க்க குழந்தையைப்போல பாசமாக குடும்பமாக ஓடோடி வருவார், அவர் கணவர் ஜோதிராஜிம் என் நெருங்கிய நண்பர்கள் லிஸ்டில் இருக்கிறார்...இவர்கள் அன்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்...!
http://www.kousalyaraj.com/2013/02/blog-post_6.html
---------------------------------------------------------
"செல்ல நாய்க்குட்டி" தலைப்பில் பதிவிடும் சகோதரி ரூபினோ, என்னங்க நாய்குட்டின்னு பேர் வச்சிருக்கீங்கன்னு கேட்டால் லேசாக சிரித்துவிட்டு சொல்வார், நாய்க்குட்டிகள் நன்றி உள்ளதும் பாசமாக நம்மை சுற்றியும் வருகிறதல்லவா அதான் அந்தப் பெயர் என்பார்.

திடீரென கவிதைகள் எழுதுவார், விமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற என்று எழுதி வருகிறார், இவரையும் நான் நெல்லை போகும் போது பார்க்காமல் திரும்பியதில்லை...!

விக்கி நெல்லை வந்தபோதும் இவர்களும் கவுசல்யாவும்  வந்து மினி பதிவர் சந்திப்பு நடத்தினோம்...!

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும்[[கருப்பாக இருப்பது அவரின் லிங்க்'தான்]]
-----------------------------------------------------------
வெங்கட் நாகராஜ், தலைநகர் டெல்லி போகாதவர்கள் இவர் பதிவை, பயணத்தொடரை வாசித்தாலே போதும், நாமே நேரில் போய் வந்த திருப்தி இருக்கும்....இவரின் பயணத்தொடர்களை விடாமல் நான் வாசித்தது உண்டு...!

நேரம் கிடைக்குமெனில், ஆபீசரையும் விஜயனையும் கையில் பிடித்து கொண்டு வெங்கட் தலைமையில் டெல்லியை ஒரு கலக்கு கலக்கும் எண்ணமும் எனக்கு உண்டு...!
தலை நகரிலிருந்து... பகுதி 2
-----------------------------------------------------------
மனசாட்சி கோவை முத்தரசு, செம காமடி பேர்வழி, பதிவுலகில் என்ன ஆனாலும் உடனே எனக்கு போன் பண்ணி என்ன மக்கா இப்பிடியெல்லாம் நடக்குது என்று கேட்டு...போனிலேயே நாங்க அரட்டை அடிப்பது உண்டு, இவர் பதிவுகள் சிரிப்பாகவும், சிலவேளை சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்...! பேஸ்புக்லையும் கலக்குகிறார்...! பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்னும் கேள்வியோடு வருகிறார் பாருங்கள்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டோ? - சில யோசனைகள்


பயணம் தொடரும்......

41 comments:

 1. sila sonthangal puthithu ....


  sila uravukal
  naan thodarvathu..!

  payanaththai thodarungal...

  ReplyDelete
 2. கலக்கல் மனோ தொடர்கிறேன்...

  ReplyDelete
 3. அனைவரும் ரசிக்க வைக்கும் பதிவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அனைவருமே அறிந்த பதிவர்கள்.... நன்றி...

  ReplyDelete
 5. ///நேரம் கிடைக்குமெனில், ஆபீசரையும் விஜயனையும் கையில் பிடித்து கொண்டு வெங்கட் தலைமையில் டெல்லியை ஒரு கலக்கு கலக்கும் எண்ணமும் எனக்கு உண்டு...!////

  ஏன் 2 பேரும் தொலைஞ்ச்சு போவாங்களா அல்லது நீங்கள் தொலைஞ்சு போவீங்களான்னு பயம்மா?

  ReplyDelete
 6. சீனியர் பதிவர்களைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள முடிந்தது./

  ReplyDelete
 7. அருமையான அறிமுகங்கள் பலரும் தெரிந்தவர்கள் தான் அதுவும் விக்கி மாம்ஸ்க்கு அறிமுகம் சூப்பர் உள்குத்து என்றால் அது மாம்ஸ்தான் எவனும் அடிச்சிக்கமுடியாது மாம்ஸ் மன்னிச்சூ..........

  ReplyDelete
 8. மனதோடு மட்டும் கெளசலயா நான் வியக்கும் பதிவர்களில் ஒருவர். உங்கள் இன்றைய அறிமுகங்களில் நாயக்‌க்குட்டி ரூபினோ மட்டும் நான் இதுவரை படித்ததில்லை. உடன் பார்க்கிறேன். எனக்கும் இங்கு ஓரிடம் கிடைத்ததில் வியப்பும் அளவற்ற மகிழ்ச்சியும். அதை வழங்கிய உங்களுக்கு நிறைய நிறைய நன்றியும்!

  ப.கு.ராமசாமி அவர்கள் மீண்டும் நிறைய எழுத வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன். அவர் பதிவுகளில் கமெண்ட்டுகளைப் படிப்பதற்காகவே ஓடியவர்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete
 9. // சினிமா விமர்சனத்தில் இவரைப் பார்த்து நடுங்குகிற டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவு//
  நடுங்குகிறவர்கள் மிகவும் குறைவு-இப்படிக்கூட சிபியை கலாய்ப்பீங்களோ!

  ReplyDelete
 10. //இவர் பதிவுகளில் சிரிப்பும், கோபமும், ஏக்கங்களும் மனதின் வலிகளும், வியட்நாம் சரித்திரங்களும், தரித்திரங்களும், அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் காட்டுவதாக இருக்கும், //
  முக்கியமா அந்த ”யுத்தபூமி”யில்,நம் நாட்டுக்காக ரத்தம் சிந்தியதை சொல்லவிட்டுட்டீங்களே!

  ReplyDelete
 11. //எனக்கு திற்பரப்பு அருவியையும், பத்பனாபபுரம் அரண்மனையையும் சுற்ற வைத்து போட்டோ எடுத்த நண்பர்...!//
  இவ்ளோதானா!

  ReplyDelete
 12. அருமையாக படைத்துள்ள விதம் உங்கள் உழைப்பின் உன்னதம் காட்டுகிறது மனோ.

  ReplyDelete
 13. பல பிரபலங்களோடு என்னையும் இங்கே அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி மனோ!

  எப்போது வேண்டுமானாலும் தில்லி வரலாம்! தலைநகர் தில்லி சிவப்புக் கம்பளம் போட்டு காத்திருக்கிறது!

  ReplyDelete
 14. பதிவர் கௌஸல்யா அவர்கள் வலைக்குச் சென்று வியந்து போனேன்.
  அன்பும் அறனும் இணைந்த வலை.
  அனைவருக்கும்
  ஆம். நம் அனைவருக்குமே
  வழிகாட்டும் வலை.

  சுப்பு தாத்தா

  ReplyDelete
 15. Tomorrow posta naan padichchitten. Yov, settinga maaththum

  ReplyDelete
 16. இரண்டு புதிய தளங்களை அறிந்தேன் நன்றி

  ReplyDelete
 17. உங்க நண்பர்களைச் சொன்னீர்கள். உங்களை அறிந்துகொண்டோம்.

  ReplyDelete
 18. ஆயிரம் பின்னூட்டங்களா! வாவ். தமிழ்ப் பதிவுலகில் இதற்கு பாதித் தொலைவில் யாராவது வந்திருக்கிறார்களா?!

  ReplyDelete
  Replies
  1. Yennoda oru postukku 400kku pakkam vandha maadhiri ngabagam#vilambaram

   Delete
 19. போட்டோவுல விக்கி ஓவராத்தான் வெக்கப்படறாரு!!

  ReplyDelete
 20. பதிவுலக சக்கரவர்த்தி மனோ வாழ்க.....எழுத்துலகில் தனியிடம் பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. தெரிந்தவர்களும், தெரியாதவர்களுமாக புதன் நட்சத்திர வலைச்சரம் நல்லதொரு தொகுப்பு.
  தெரியாதவர்களைப் போய் பார்க்கிறேன். வலைச்சரம் மூலம் உங்கள் வழியே அவர்களை அறிந்ததற்கு சந்தோஷப் படுகிறேன்.

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. அனைத்து பிரபல அறிமுகங்களிற்கும், தங்களிற்கும் இனிய வாழ்த்து.
  பலர் தெரிந்தவர் சிலர் தெரியாதவர்கள் நேரமிருப்பின் சென்று பார்ப்பேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 23. நன்றி அண்ணாச்சி!

  ReplyDelete
 24. வெளங்காதவன்™ said...
  Tomorrow posta naan padichchitten. Yov, settinga maaththum//

  கொஞ்சமா எழுதி டைப் பண்ணி சேவ் பண்ணுறதுக்கு பதிலா அவசரத்துல பப்ளிஷ் பண்ணிட்டேன், இன்னும் நிறைய பேரை சேர்த்து இப்பதான் ரெடி பண்ணி வச்சேன், ஸோ அதை சீனா அய்யாகிட்டே சொல்லிட்டு அப்பவே டிலிட் பண்ணிட்டேன் ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 25. பதிவுலகின் முடிசூடா மன்னர்கள் அறிமுகம் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 26. பிரபல பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. @மனோ

  எல்லோரையும் அருமையா அறிமுக படுத்தி அசத்திட்டிங்க...என்னை பெருமைபடுத்தினது போல உணருகிறேன்...மதிக்கிறேன்...உங்கள் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.

  நீங்க குறிப்பிட்ட அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் என்பதில் எனக்கு ஒரு பெருமிதம்.

  சுவாரசிய எழுத்து நடை, வார்த்தை கோர்வைகள் வழக்கம் போல நாஞ்சில் நாட்டை நினைவுபடுத்துகிறது.

  என் மனமார்ந்த நன்றிகள் மனோ !!

  ReplyDelete
 28. @பால கணேஷ்...

  நன்றிகள் கணேஷ்.  @sury Siva...

  மனதோடு மட்டும் தளத்திலும் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்...

  உங்களுக்கு நன்றிகள் + வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. யோவ் நான் என்ன வேணும்னா எழுத மாட்டேன்னு சொல்றேன்..... ஆபீஸ்ல இப்பல்லாம் வேல பார்க்க வேற சொல்றாங்க மக்கா..... அதான் ஹி....ஹி....!

  ReplyDelete
 30. ///ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி/////

  யோவ், ரெண்டு வாட்டி சொல்லுய்யா, அது ரெண்டாயிரம்.....!

  ReplyDelete
 31. ////பால கணேஷ் said...
  மனதோடு மட்டும் கெளசலயா நான் வியக்கும் பதிவர்களில் ஒருவர். உங்கள் இன்றைய அறிமுகங்களில் நாயக்‌க்குட்டி ரூபினோ மட்டும் நான் இதுவரை படித்ததில்லை. உடன் பார்க்கிறேன். எனக்கும் இங்கு ஓரிடம் கிடைத்ததில் வியப்பும் அளவற்ற மகிழ்ச்சியும். அதை வழங்கிய உங்களுக்கு நிறைய நிறைய நன்றியும்!

  ப.கு.ராமசாமி அவர்கள் மீண்டும் நிறைய எழுத வேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன். அவர் பதிவுகளில் கமெண்ட்டுகளைப் படிப்பதற்காகவே ஓடியவர்களில் நானும் ஒருவன்.///////

  சார் நிச்சயமா விரைவில் திரும்ப வருவேன்னு நம்பிக்கையோடதான் இருக்கேன், ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 32. எல்லா நட்சத்திர பதிவர்களும் நம்ம நண்பர்கள்தான். எல்லாரையும் வாழ்த்திக்கிறேன்.....

  ReplyDelete
 33. தொடருங்கள் அண்ணாச்சி!

  ReplyDelete
 34. இனிய வணக்கம் நண்பர் மனோ...

  வலைச்சரத்தில் இன்றோர் அழகிய பூமாலை...

  மாலையில் இணைந்திருக்கும் அத்தனை

  மணமிக்க பதிவர்களுக்கும்

  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 35. நட்சத்திரப் பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. //ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி,//

  வாவ் !!!! இது ஒரே ஒரு இடுகைக்கா????

  வாவ் வாவ் !!!!!

  ReplyDelete
 37. :) ஐய்..நம்ம விக்கி சார்...பத்தி எழுதியிருக்கீங்க...குட் குட்.! ஐய என்ன இது கல்யாணப் பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுக் கொண்டு காமிராவுக்கு முகத்தை மறைச்சுக் கொண்டு..என்னாதிது... இங்கயுமா முகத்தை காட்டக் கூடாது...மனோ சார் இது நல்லா இல்லை..ஆங்காங்..!! :/

  ReplyDelete
 38. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது