07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 1, 2013

பதிவுலக ஜாம்பவான்கள்இந்தப் பதிவின் மூலம் நான் குறிப்பிடுபவர்கள் அனைவருமே கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உற்சாகமாக இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களுக்கும், இவர்களின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிதனி வாசகர் வட்டம் உண்டு. இவர்களைப் பற்றி அறிந்ததில் இருந்து தொடர்ந்து வாசித்து வரும் தளங்கள், இன்றைய வலைச்சரத்தில் பதிவுலக ஜாம்பவான்களாக...     

பிலாசபி பிரபாகரன் 

வர் எழுத்துக்கும் இவரது பிரபா ஒயின்சாப்பிற்கும் வாடிக்கையளர்கள் அதிகம். சிலர் இவரிடம் வாக்குவாதம் செய்ய பயப்படுவார்கள் என்று கேள்விபட்டுள்ளேன், சில பதிவுகளில் பார்த்தும் உள்ளேன். தான்  நினைப்பதை சற்றும் தயங்கமால் கூறுவார். உலக தமிழ் சினிமாவை விரும்பிப் பார்ப்பவர்(!). 

அஞ்சா சிங்கம் 

முதலில் பதிவர்களின் வாசகன் ஆகி பின்பு பதிவர் ஆனவர். மிகக் குறைவாகவே பதிவுகள் எழுதி வருகிறார். இவருடன் பேச ஆரம்பித்தால் பல வரலாற்று நூல்களையும் புதினங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதுவரை யாரும் அறிந்திரா மதங்கள் பற்றி எழுதப்போவதாக தொடர் ஒன்று ஆரம்பித்தார், பின்பு தொடராமலேயே விட்டுவிட்டார். 

மதம் (பாகம் ஒன்று )

ஆரூர் மூனா செந்தில் 

நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதிலேயே இவரை தெரியும், நேரில் பார்த்தது பதிவர் சந்திப்பிற்கு முன்னான  சந்திப்புகளில் வைத்து தான். இவரது சினிமா விமர்சனங்களுக்கு என்று தனி வாசகர் வட்டம் உண்டு.         


வெங்கட் நாகராஜ்

டெல்லி வாழ் தமிழ்ப் பதிவர். இவரது மனைவி மற்றும் குழந்தை கூட பதிவர்கள் தான். அந்த அளவிற்கு பதிவுலகம் மீது காதல் கொண்ட குடும்பம். இவரது வலைபூ தவிர்த்து வல்லமையிலும் எழுதி வருகிறார். வாடா இந்திய சுற்றுப் பயணங்கள் சார்ந்த பயணக் கட்டுரைகள் புதிய தகவல்களைத் தரக் கூடியது.   


கையளவு மண்     

வரும் டெல்லி வாழ் தமிழ்ப் பதிவர். வெங்கட் நாகராஜ் அவர்களின் நண்பன், அவர் மூலம் தான் இவரது அறிமுகம் கிடைத்தது. அரசியல் அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த பலவிதமான பதிவுகளையும் எழுதி வருகிறார்.


அவர்கள் உண்மைகள் 

மெரிக்கவாழ் பதிவர். பதிவெழுதுவதை விட பதிவிற்கான படகலவையில் மிகவும் சிரத்தை எடுப்பவர். பரபரப்பான தலைப்புகளை வைத்து படிப்பவர்களுக்கு பல்பு கொடுப்பவர். 


மோகன் குமார் 

ற்போது வெரைட்டி ரைட்டராக மாறியிருப்பவர். சமீபகாலமாக பல பதிவர்களின் எழுத்துக்களுக்கு தன் தளத்தில் வாய்ப்பு வழங்கி வருகிறார். இவர் எழுதி வரும் வானவில் பகுதிக்கு என்று தனியொரு வாசகர் வட்டம் உண்டு. வல்லமை இணைய இதழில் சட்ட ஆலோசனை வழங்குகிறார். பின் அதை வீடு திரும்பலிலும் பகிர்கிறார். சட்டம் சம்பந்தமான ஆலோசனை தேவைப்படின் இவரை அணுகலாம். ஆலோசனைகள் வழங்குவார்.


மூன்றாம் சுழி 

"த்திரிக்கையில எழுதுறவங்கள விட மூன்றாம் சுழி அப்பாதுரை நல்ல எழுதுவாரு" சமீபத்தில் வாத்தியார் பால கணேஷ் என்னிடம் கூறியது. எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாரும் இவருடைய வாசகர் என்பதை அறிவேன். நான்கு வருடங்களுக்கும் மேல் பதிவுலகில் எழுதி வருகிறார். 

35 comments:

 1. நன்றி சீனு. என்னை எங்கேப்பா இதற்கு முன்னாடி கண்டுகொண்டாய்.

  ReplyDelete
 2. வணக்கம் னா. என்னுடைய அறிமுகம் பகுதியில் கூறியுள்ளேன், வலையுலகம் வருவதற்கு முன் நானும் பலரது பதிவுகளைப் படிப்பவன் என்று. கூகுள் ஆண்டவர் தேடிக் கொடுத்த பதிவர் நீங்கள்...

  நான் பதிவெழுதவந்த ஆரம்பக் காலத்தில், உங்கள் பதிவில் என்னைத் தேடித் பாருங்கள்... ஹா ஹா ஹா

  ReplyDelete
 3. அனைவரையும் பலரும் அறிவர்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அருமை, இங்கு சொன்ன அனைவருக்கும் நான் வாசகன், சிரிக்க, சிந்திக்க செய்பவர்கள் இவர்கள். பொதுசனப் பத்திரிக்கைகளை விட இவர்கள் எழுத்து தரமானது, இன்னம் உழைத்தால் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 5. கிட்டத்தட்ட அனைவரையும் படித்துள்ளேன். அனைவருமே அருமையான பதிவர்கள்.

  ReplyDelete
 6. ஒவ்வொருவரும் தன்னளவில் தனித்துவம் மிக்க, ரசிக்கத் தக்கவர்கள் சீனு. அனைவரும் என் வாசிக்கும் லிஸ்டில் உள்ளவர்கள் என்பதில் கூடுதல் சந்தோஷம். அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. எல்லோருமே ஜாம்ப்ஸ் தான் சீனு...

  ReplyDelete
 8. அருமையான பதிவர்களின் அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. நான் தவறாது தொடரும் ஜாம்பவான்களை
  அருமையாக அறிமுகம் செய்தமைக்குமனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இச்சிறியவனையும் நினைவில் கொண்டு இன்றைய பதிவில் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி சீனு!

  வட இந்தியா - நிஜமாகவே வாடா இந்தியா தான்! :)

  ReplyDelete
 11. எனது தில்லி நண்பர் சீனுவின் பதிவினையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சீனு!

  ReplyDelete
 12. அருமையான பகிர்வு... இதில் கூறப்பட்ட அனைத்து தளங்களையும் நான் ரெகுலராக பார்வையிட்டு வருகிறேன்....

  ReplyDelete
 13. சீனு ஒரு தடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா என் பதிவை நானே தொட மாட்டேன். ஆனா நீங்க என் பதிவை படிச்சதுமில்லாமல் மற்றவர்களுக்கும் நீங்க அறிமுகப்படுத்துறீங்கன்னா உங்களுக்கு துணிச்சல் மிகவும் அதிகம்....


  நன்றி சீனு.....வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. ஜாம்பவான்கள் என்றால் ஜாம்பவான்கள்தான்!

  ReplyDelete
 15. ஜாம்பவான்கள் என்றால் ஜாம்பவான்கள்தான்!

  ReplyDelete
 16. இன்றைய வலைச்சரத்தில் தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)

  ReplyDelete
 17. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. நல்ல அறிமுகங்கள்.. பிரபலமானவர்களின் பிரபல பதிவுகளை எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள்...இவற்றில் பல பதிவு நான் இன்று தான் பார்கிறேன்.. அதற்கு நன்றி!!
  நீங்களும் சீக்கிரம் ஜாம்பவான் ஆகா வாழ்த்துக்கள் சீனு!!

  ReplyDelete
 19. நல்ல அறிமுகங்கள் (அப்படின்னு சொன்னா எனக்கு அடி விழும்தானே?!) :) :) :)

  ReplyDelete
 20. பிரபலமான அறிமுகங்கள் . வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 21. இன்றைய அறிமுகங்கள் அருமை. பதிவுலக ஜாம்பவான்களில் என்னவரின் அறிமுகமும் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 22. அறிமுகங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 23. வலைச்சர வாழ்த்துகள்! தொடருங்கள்!

  ReplyDelete
 24. நல்ல அறிமுகங்கள் நண்பரே!

  ReplyDelete
 25. பிரபலங்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 26. பிரபலங்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 27. அறிமுகத்திற்கு நன்றிகள் சீனு,

  ம்ம்... ஆனால், ஜாம்பவான்களின் பட்டியலில் என் வலைப்பூவையும் இணைத்துள்ளீர்களே!

  வேறு வழியில்லை, இனிமேலாவது ஒழுங்காக எழுத வேண்டும்....

  ReplyDelete
 28. ஜாம்பாவான்களுக்கு வந்தனம்! அருமையான பதிவர்களின் தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 29. நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவரும் அருமையான பதிவர்கள். இவர்கள் எழுதுவதை பார்த்துதான் எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. பிள்ளையார் சுழி போட்டுள்ளேன். அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி சீனு.

  ReplyDelete
 30. இன்றைய ஜாம்பவான்கள் அனைவரின் ஃபாலோவர் ஆக உள்ளேன்.தவறாது படித்து விடுவேன்.

  ReplyDelete
 31. சீனுவால் குறிப்பிடப்பட்ட அனைத்து பதிவர்களும் பாசதம்பிக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க கேட்டு கொள்கிறேன் :)

  ReplyDelete
 32. அருமையான பதிவர்கள். அனைவருக்குமு் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. மிகவும் நன்றி சீனு அவர்களே!
  தொடர்ந்த பயணம் தொட்டு இணைய வசதி சுலபமாக கிடைக்காததால் உடனடியாக எதையும் படிக்க முடிவதில்லை.
  வாழ்த்துக்கள். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 34. மூன்றாம் சுழி குறித்த விமர்சனம் முற்றிலும் உண்மை. பொருத்தமானதும் கூட. நானே பலமுறை வியந்து போயுள்ளேன்.

  மற்றபடி உங்க பங்காளிங்க அத்தனை பேர்களையும் நன்றாகவே தெரியும்.

  ReplyDelete
 35. நன்றி ஜோதிஜி.. மிக நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது