07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 24, 2013

தமிழ் இளங்கோ நாஞ்சில் மனோவிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - தி தமிழ் இளங்கோ தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். 

என்னைப்பற்றி, கவிதைகளுக்கு வரவேற்பு, வாழ்க்கை என்றால் என்ன, கூகிளூக்கு நன்றி, கருத்துரைகள், வலைப்பதிவு ஒரு கலை, நாள் என்ன செய்யும் என பல்வேறு தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டு நூறு பதிவர்களையும் அவர்களது நூற்றிப் பதினெட்டு  பதிவுகளையும் அறிமுகப் படுத்தி ஏறத்தாழ முன்னூற்று ஐம்பத்தெட்டு  மறுமொழிகள் பெற்றிருக்கிறார். 

அறிமுகங்கள் அத்தனையும் அருமை - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். 

தி தமிழ் இளங்கோவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நாஞ்சில் மனோ அன்புடன் இசைந்துள்ளார். 


இவரது  பூர்வீகம் விருதுநகர் மாவட்டம், முன்னோர்கள் முற்காலத்தில் வந்து குடியேறியது கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் என்னும் ஊரில், அம்மா திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தைச் கூடங்குளம் அருகில் சேர்ந்தவர்,  மனைவி அதே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் அலங்காரப்பேரியை சேர்ந்தவர்.

இவர் செட்டில் ஆகியிருப்பது மும்பையில், வேலை செய்வது வளைகுடா நாட்டில் ஒன்றான பஹ்ரைனில், இவருக்கு  இரண்டு குழந்தைச் செல்வங்கள் உண்டு.

அன்பு, பாசம், நேசம், அழுகை, வருத்தம், ஏமாற்றங்கள், கோபங்கள், வெறுப்புகள், காதல்[கள்...!] அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு, நட்புகள்........ சிரிப்புகள் இவைகள் யாவும் இவர் அனுபவித்ததும், இவரைச் சுற்றி நடந்தவைகளையும்தான் இவர் அதிகமாக இவரது  வலைத்தளங்களில் எழுதி வருகிறார்..

நாஞ்சில் மனோவினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் தமிழ் இளங்கோ

நல்வாழ்த்துகள் நாஞ்சில் மனோ 

நட்புடன் சீனா 

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. தமிழ் இளங்கோவிற்கு என் வாழ்த்துகள். நாஞ்சில் மனோவிற்கு என் பூங்கொத்து

  ReplyDelete
 3. // இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற –
  தி தமிழ் இளங்கோ தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். //

  அன்பின் சீனா அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வரும் நாஞ்சில் மனோ ( http://nanjilmano.blogspot.in ) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!

  ReplyDelete
 4. மனோ பற்றிய அறிமுகத்தில் 2 விஷயங்கள் மிஸ்ஸிங்க் 1. அருவாள் 2. லேப்டாப்

  ReplyDelete
 5. வாழ்த்துகள் நாஞ்சில் மனோவிற்கு...

  ReplyDelete
 6. தமிழ் இளங்கோவிற்கு பாராட்டுக்கள் .நாஞ்சில் மனோ அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் வாருங்கள் வளமானதாய் தாருங்கள்

  ReplyDelete
 7. தமிழ் இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  கலக்கல் நாஞ்சில் மனோ அவர்களை வரவேற்கிறேன்...

  ReplyDelete
 8. திரு தி. தமிழ் இளங்கோ அவர்களின்
  ஏழு நாள் படைப்புகளும் வானவில்லின் ஏழு நிறங்களைப் போன்று
  வண்ணமயமாய் சிறந்து விளங்கின

  அவரது வலைக்கு இனி அடிக்கடி செல்லவேண்டும் அவரது கருத்துக்களைப் படிக்கவேண்டும் என தூண்டவும் செய்தன

  அவரை வாழ்த்துவோம்.
  சுப்பு தாத்தா

  ReplyDelete
 9. இட்டபணியைச் செவ்வனேநிறைவேற்றிய தமிழ் இளங்கோவிற்கு பாராட்டுக்கள். நாஞ்சில் மனோவுக்கு வாழ்த்துக்கள்
  அன்புடன்
  வர்மா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது