07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 28, 2013

நலமான அறிமுகப் பதிவுகள் பகிரும் - நான்காம் நாள்


அன்பு வலைச்சர நண்பர்களே.... 
நலமாக இருக்கீங்களா? பூவும் நலம்.இன்று கொஞ்சம் காதல் பற்றி பேசுவோமா?!
காதல் கவிதைகள் என்றால் உங்கள் நினைவுக்கு வருவன எவை.. நிலா.. காற்று.. புறா.. தபால் காரர் என பல.. இதோ இவருக்கோ என்ன நினைவுக்கு வருகிறது பாருங்கள்..

இன்று நாம் பார்க்கும் பதிவுலகுக்கு வெளியில் இருக்கும் பதிவர் ஆதி.

இவரின் காதல் கவிதைகளின் பரிமாணங்கள் இதுவரை பரிச்சயமாகாதவை..

இதோ அவைகளிலிருந்து சில துளிகள் உங்களுக்காக..

அறிமுகமாகும் பதிவர்: ஆதி

நட்சத்திரம் மின்னும்
என் கருஞ்சாம்பல் குளத்தில்
வரைந்தேன் உன் முகம்
மஞ்சலொளி பாரித்து
சிறு பாற்கடலாய் பரிணமித்தது குளம்

 
***

துரித உரையாடலொன்றின் இறுதியில்
ஒரு தூசு புன்னகையை உதறி சென்றாய்
அதன் நுண்தொடுகையின் கூச்சத்தில்
சிலிர்த்தென் நிச்சலன குளம்
கலங்கி மேல்ழுந்த அடிமண்ணின்
பரப்பெங்கும் படர்ந்திருக்கிறது
உன் புன்னகையின் குளிர்ச்சி


***

நீ வந்து நீந்த துவங்கிய
கணத்தின் முதல்நொடியில்
அது மாறி போனது
ஒரு தேவதை குளமாய்

***


சினப்பேச்சுக்களின் ஊடே
ஒரு பாலையின் தனிமையை
மனதின் கரங்களில் திணிக்கும்
உன் வெளிறிய முறுவல்களை குளிர்த்தி
இக்குளத்தின் அடியில் பாதுக்காத்து வைத்திருக்கிறேன்
ஒரு பனிகாலத்தின் குளுமையுடன்
உனக்கு திருப்பி தர.

$$$$$$$$$$$$$$$$$$$$$

காதல் கவிதைகள் உங்களை தனது குளத்துக்குள் அழுத்திவிட்டதல்லவா...??!! இனி அதனிலிருந்தும் மெல்ல வெளியேறி இன்றைய அறிமுகங்களைச் சந்திப்போமா?!!

11.       உயிரோடை

பல கவிதைகளையும் கட்டுரை, கதை என பல பதிவுகள் இட்டிருக்கும் இவர் 2008 ஆம் ஆண்டில் பதிவுலகுக்கு வந்திருக்கிறார். வெயில் துரத்தும் பயணம், மீன் மொழியும் நிலவும் மற்றும் நத்தையின் கூட்டுக்குள் ஒளிந்தவள் போன்ற கவிதைகள் மனம் கவர்கின்றன. இவரின் பெயரில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. தரமான தமிழ் தளத்தில் காணக்கிடைக்கின்றன. 

இருளில் மிதக்கும் வெயிலில் துகள்களை என்ற கவிதை சிந்தையை எங்கோ கொண்டு செல்கிறது.  

இலக்கியத்தில் இவரின் படைப்புகள் என்னைப் போன்ற புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக, ஏன் அணங்குற்றனை? என்ற பதிவு, அதன் பொருளை மிக அருமையாக புரிய வைக்கிறது. பொருளோடு புது சொல் ஒன்றைக் கற்றேன்.

22.       மூன்றாம் சுழி – அப்பாதுரை
  இவர் இலக்கியம், சிறுகதை, விபரிதக்கதை, கட்டுரை என பல பதிவுகளோடு வலம் வருகிறார். இவரின் நாற்சந்தி அடிமைகள் என்ற சிறுகதை கொஞ்ச நாட்கள் முன்பு வந்த அங்காடித் தெரு படத்தினை நினைவூட்டியது. இலக்கியம் சார்ந்த பகுதியில் காஸ்யபவன் கவிஞரின் கருகமணி என்ற சிறுகதைத் தொகுப்பை ‘கருகமணி’ என்ற பதிவில் நல்முறையில் விமர்சித்திருக்கிறார்.      இலையிலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதைத் தெரிந்து கொள்ள.. என்ற தன்னை முகப்பிலேயே அடையாளப்படுத்தும் இவர் கவிதைகள் பல என் சிற்றறிவுக்குப் புரிபடாத நிலையில் இருக்கின்றன. தடாக உளி என்ற இவரின் கவிதை என்ன சொல்ல வருகிறது என் புரிகிறதா உங்களுக்கு?

44.       கை காட்டி மரம் – ஜெனோவா
இவர் 2009 முதல் பதிவுலகில் எழுதி வருகிறார். இவரின் எழுத்துகள் கவிதை வடிவில் நம்மைக் கவர்கின்றன. நாடகம்! என்ற கவிதை மனதினைக் கவர்கிறது. சிலந்தி வரைந்த சித்திரம்! என்ற கவிதையும் அசத்தலாக உள்ளது. வெள்ளி உருவிய தடம்! என்ற கவிதையில் மறக்கவியலாத சிலரை நமக்கும் நினைவுபடுத்துகிறார். இவர் வலைப்பூ 2011 வரையிலான பதிவுகளையே பெற்றிருந்தாலும் நிறைவைத் தருகிறது.

55.       சுயம் தேடும் பறவை – கமலேஷ்

இவரின் கவிதைகள் பல சொல்லவியலாத தூரத்துக்கு நம்மை கொண்டு செல்கின்றன. தனது கவிதை எப்படியெல்லாம் இல்லைஎன்றும் இருக்கிறதென்றும் சொல்லும் சித்தார்த்தன் கனவு இவரின் எழுத்துக்கு நல்ல ஒரு உதாரணம். தாவர உண்ணி என்ற கவிதையோ அன்றாடம் நாம் செய்யும் இயற்கைகெதிரான கொலைகளைப் பட்டியலிடுகிறது. ஏறக்குறைய 25 பதிவுகளே கொடுத்திருந்தாலும் நிறைவான பதிவுகளாகவே தெரிகின்றன.


  இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் உங்கள் மனதுக்கு பிடித்தமானதாக இருந்திருக்குமென நம்புகிறேன். மீண்டும் நாளை புதிய அறிமுகப் பதிவர்களோடு சந்திக்கிறேன்.

என்றும் நட்புடன், 
பூமகள்.


              


15 comments:

 1. இன்றைய நலமான அறிமுகங்கள் அனைத்துக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. வாசிப்பிற்கும் அறிமுகத்துக்கும் மிகவும் நன்றி பூமகள்.

  ReplyDelete
 3. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள்தான். போயிபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. அன்பின் பூமகள் - அருமையான அறிமுகம் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. வித்தியாசமான அறிமுகங்கள்தான்... நன்றி!

  ReplyDelete
 6. அறிமுகங்கள் அனனத்தும் மணம்வீசும் சிறந்த பூக்கள் நன்றி

  ReplyDelete
 7. சிறப்பான தளங்கள்... ஆனால் சில தளங்கள் பகிர்வுகளை தொடர்வதில்லை...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. காதலான அறிமுகப் பதிவர்களிற்கு
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. மிக்க நன்றி பூமகள்

  ReplyDelete
 10. நல்ல தளங்கள் அறிமுகத்திற்கு நன்றி! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வணக்கம்
  இன்றுவலைச்சரத்தில் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. இந்த பசங்களுக்கு தேர்வு என்றால் நாம் தான் விழுந்து விழுந்து படிக்க வேண்டி இருக்கு மன்னிக்கவும் தாமத வருகைக்கு அறிமுகங்கள் சிறப்பு. வாழ்த்துக்கள் தோழி.

  காதல் குளத்தில் விழுந்தே விட்டேன் (காதல் கவிதை வரிகளில்).

  ReplyDelete
 13. என்னால் அதிக நேரம் செலவழிக்க இயலவில்லை இணையத்தில். இயன்றவரை பதிவிடுகிறேன். தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நேரமின்மையால் ஒரே பதிலில் சொல்கிறேன். மிக்க நன்றிகள் நண்பர்களே. :)

  ReplyDelete
 14. முதலில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் -அவர்களுக்கு பின் பூமகள் மற்றும் வலைச்சரத்திற்கு. தொடர்ந்து தொடுக்கப்படும் இந்த பூமாலையில் அவ்வப்போது எனது பூக்களும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.
  கவிதை எழுதி நாளாயிற்று. அதுவும் அதற்கு விளக்கம் கொடுத்து நெடு நாள் ஆகிவிட்டது. எனது 'தடாக உளி'க்கு என்னால் முடிந்த வரை விளக்கம் கொடுக்க முயல்கிறேன்.
  //இந்த குளத்தில் எறிகிறேன் // ஆக நான் குளத்திற்கு முன்னால் நிற்கிறேன்/உட்கார்ந்து இருக்கிறேன் என்று வைத்து கொள்வோம். எதனை எறிகிறேன் என்றால் , ரயிலடி, அங்காடித்தெரு,பேருந்து நிறுத்தம், கடற்கரை மாலை மற்றும்பனி இரவுகள். அதுவும் எப்படி ஒழுங்கற்றவைகளாக(அப்படியே பிடிக்க என்னால் முடியவில்லை) குளத்தில் கல்லை எறிந்தால் என்னவாகும் பூமகள்? வட்டமும் சலனமும்ஏற்படும் தானே?
  இங்கே கூடவே எண்கோணம், கனசெவ்வகம். சிலவேளைகளில் வாழ்வு கண்ணுக்கு தெரியாத சூத்திரங்களால்
  ஆனது என்பதாய்படும். நெடும் பயணங்கள், ஆழ வாசிப்புகளில் இது புரியும். அப்படியான ஒரு ஆழத்தில் இருந்த/இருக்கிற உளி ஒன்று(பனியால் செய்யப்படும் போது அது வலிமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது) நான் எறிந்த எல்லாவறையும் சிறு கற்களாக மாற்றி விடுகின்றன(இந்த .
  இடத்தில் அப்பாத்துரை க்கு நன்றி சொல்லி ஆகவேண்டும்- மிகச்சரியாக எனது
  எண்ணத்தை கவிதையை உள் வாங்கி உள்ளார்) மாறிய அந்த கற்கள்(நினைவுகள்) மிதக்கின்றன. நான் அப்படியே என் நினைவுகளால் இலகுவாகி மிதக்கிறேன்.

  ReplyDelete
 15. இதற்கு பிறகும் புரியவில்லை என்றால், விடுங்கள் 'கழுதை(?)' கிடக்கட்டும். நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது