07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 30, 2013

அறிமுகப் பதிவர்கள் அறிமுகம் செய்யும் ஆறாம் நாள்அறிமுகப் பதிவர்கள் அறிமுகம் செய்யும் ஆறாம் நாள்வலைச்சர மக்களுக்கு இனிய வணக்கம்..

இன்றைய நாளை ஒரூ கவிதையாய் ஆரம்பிப்போமா??!!
இன்று நம் வலைச்சரத்துக்கு அறிமுகம் ஆகும் வலைப்பூ உலகிற்கு வெளியில் இருக்கும் பதிவர் இளசு.

இவர் பெயரளவில் மட்டுமே இளசு. எழுத்துகளில் பல மூத்த எழுத்தாளர்களை விஞ்சி நிற்பார். நறுக்குத் தெறித்தார் போன்ற இவர் சுருக்கி எழுதி விரிவாக சிந்திக்க வைப்பதில் வல்லவர். இவருக்கு அறிமுகம் சொல்லுமளவு நான் வளரவில்லை என்றே நம்புகிறேன். ஆகவே, அவர் கவிதை ஒன்றை இங்கு கொடுத்து மகிழ்கிறேன்.

முடிவதை மட்டும் நினை


1993

ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர

பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது

2003

வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
"
என்னாச்சு டெர்மாட்?"
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்

எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே

சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

"
எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
"
உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

Think What You Can Do-
Not What You Can't Do "


முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை                          --இளசு.

சரி. இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா??!!

1.       பயணம் – கோவை ஆனந்த ராஜா விஜயராகவன்

இவர் வலைப்பூ முழுக்கத் திரை விமர்சனங்களாலும், கவிதைகளாலும் நிரம்பியிருக்கின்றன. தலைநகரம் என்றொரு கவிதையில் சமுதாயத்தின் இருண்ட பக்கத்தை வேகுவாகச் சாடுகிறார். பெண், ஆணுக்கு சரிநிகரல்ல..! என்றொரு கவிதையில் பெண்களின் மாட்சிமையை திறம்பட விளக்குகிறார்.

2.       கரையோரக் கனவுகள் – ஸ்ரீமதி

இவர், தன் பெருமை தானரியாதவள் என்ற சுய அறிமுகத்தோடு எழுதிவருகிறார். இவரது வலைப்பூவில் பல கவிதைகள் நம்மைக் கவர்கின்றன. குறிப்பாக, முடிவிலி என்ற கவிதையில் காதல் பேசி சின்னச் சின்னதாய் சிலிர்க்க வைக்கிறார் தம் கவிதைகளால்..! வண்ணங்கள் குழைத்த வானவில் என்ற கவிதையில் மூர்க்கமான கோபத்தை வண்ணக் கலவையாக எண்ணி வடித்திருக்கிறார். அருமையான, தகுந்த படங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.

3.       வானம் உன் வசப்படும் – புதியவன்

தினம் தினம் புதுப்பிக்கப்படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால் என்ற அறிமுகத்தோடு எழுதத் துவங்கிய இவர், காதல் கவிதைகளால் வலைப்பூவை அலங்கரிக்கிறார். எனக்கானதொரு தேவதை என்ற கவிதை, நம்மை உலகம் தாண்டி பால்வெளியில் பறக்கச் செய்கிறது. ஒரு மழைத்துளியின் போராட்டம் என்ற கவிதையோ, மழையோடு துளித் துளியாய் நாமும் பெய்த அனுபவத்தைக் கொடுக்கிறது.


பிரியமானவன் என்று தன்னை அறிமுகப்படுத்தும் இவர், 2008 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். கவிதை, கட்டுரை, உரைநடை, சுயபுராணம் என பல பிரிவுகளாக எழுதியிருக்கிறார். இவறின் கவிதையில், மன்மத மாதம் 5 மற்றும் மன்மத மாதம் 6 ஆகிய கவிதைகள் காதல் ரசம் கொட்டுகிறது. மெகு..மெகு..லகி..மகி..மா என்ற இவரின் கவிதை எதைப்பற்றிச் சொல்கிறதென்று புரிகிறதல்லவா??!!

5.       தமிழும், நானும் – சலீகா  
     “விருப்பத்துடனே விவரங்கள் தவிர்க்கிறேன். தொட்டிலுக்குள் தலைமறைக்கும் குழந்தை... இலைகளுக்குள் இதழ் மறைக்கும் பூக்கள்... மேகத்தில் தனை மறைக்கும் பிறை ... முக்காட்டில் முகம் மறைக்கும் பெண்... இவை வழி நானும் எழுத்தின் பின் எனை மறைக்கிறேன்.” என்ற சுய விவரத்துடன் எழுதி வரும் இவர் வலைப்பூவில் பரண் பொழுதுகள் என்ற கவிதை, நம் வீட்டு பரண் பற்றி யோசிக்க வைத்துவிட்டது. ஆகுதீ என்ற கவிதையோ, அவதியில் பணிக்குச் செல்லும் பெண்கள் பற்றி நன்கு எடுத்தியம்புகிறது. இவர் கதைகளிலும் தன் அற்புதமான எழுத்தால் கவர்கிறார். குறிப்பாக, செண்பகமரம் சிறுகதை கவிதையாய் மனதில் வாசம் செய்தால், கதை கதையாம் காரணமாம் என்ற சிறுகதையோ, எதார்த்தமான நடையில் நகைச்சுவை ததும்ப மகிழ வைக்கிறது.

இன்றைய அறிமுகங்களின் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறேன். மிண்டும் நாளை என் இறுதிப் பதிவுடன் சிந்திப்போம்.


நட்புடன்,
பூமகள்.

11 comments:

 1. அறியாத சில தளங்கள்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 2. தினசரி தேடித்தேடி புதியவர்களை அறிமுகம் செய்து வரீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அறிமுகத்துக்கு நன்றி..

  ReplyDelete
 4. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .உங்களுக்கு
  என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

  ReplyDelete
 5. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 6. அறிமுகங்கள் அனைவருக்கும் உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 7. அனைவரும் எனக்கு புதியவர்கள்! சென்று பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. அப்பா எவ்வளவு அறிமுகங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமே அனனவரையும் படித்து நேரமும் வேண்டுமே எனக்காக.......... தெரிந்து கொள்கிறேன் அனைத்திருக்கும் நன்றிகள்

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது