07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 25, 2013

முத்தான அறிமுகப்பதிவுகள் பகிரும் இரண்டாம் நாள்


முத்தான அறிமுகப்பதிவுகள் பகிரும் இரண்டாம் நாள்  

வணக்கம் அன்பு பதிவர்களே..      தேடலின் முடிவு எப்படி இருக்கும்??!! எனது இன்றைய தேடலின் முடிவு வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

புதிவுலகில் எழுதி வரும் பலரை பலரும் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும்.. நல்ல, வளமான எழுத்துகள் எங்கு இருந்தாலும் ஊக்குவிப்பது நம் கடமை தானே..

அவ்வகையில் நான் கண்டறிந்த முத்தான எழுத்தாளர்களின் வண்ணமயமான எழுத்துகளை இனி வரும் நாட்களைத் தொடுத்துக் கொடுத்து ஆரம்பிக்கிறேன்...

 யவனிகா: 


வயிறு குறைக்க
தெருவெல்லாம் ஓட்டம்
வயிறு நிறைக்க
வாழ்வெல்லாம் ஓட்டம்
.

%%%%%%%%%%%%%%%

நிறுத்த முடியாமல்
நீளும் என் பயணம்...
கவிதைக் காட்டினுள்...

எழுத்து இலைகள்
வார்த்தைப்பூக்கள்
வரியாய் மழை
நீலவானத் தாள்
நட்சத்திரப் புள்ளி

நானோர் சிறுமி
காடாய்க்... கவிதை!!!  

&&&&&&&&&&&&&&&&&

                                 

 யவனிகா என்ற பெயரில் எழுதி வரும் இவர், தமது கவிதைகளாலும் கதைகளாலும் மனத்தைக் கொள்ளையடிப்பவர். இவரின் எழுத்துகள் பல முத்துகள்.

சரி நண்பர்களே..

     இன்று தனது படைப்புகளாலும் எண்ணங்களாலும் நம் வலைதரத்துக்கு வருகை தரும் அறிமுகங்கள் இதோ..

1. ஒரு பெண்ணின் பயணம்

      உலகெங்கும் சுற்றுகிற எட்டயபுரத்துக்காரி என்ற அறிமுகத்தோடு இவர் 2010 -ஆம் ஆண்டில் இருந்து பதிவிடுகிறார். இவரின் படைப்புகள் நினைவலைகள், பல்சுவை, குறிப்பேடு மற்றும் இன்னும் பலவாக பிரித்துப் பரிமாறுகிறார். குறிப்பாக இராமாயணத்தின் மீது தனது எண்ணங்களை அக்கினிப் பிரவேசம்  மூலம் காட்டியிருக்கிறார். மேலும் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய இவரின் பதிவுகள் ஒரு தொடர் பதிவாக சீத்தாம்மாவின் குறிப்பேடு என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.

2. அழியா சுவடுகள் 


     இத்தளம் தமிழ் எழுத்தாளர்களின் ஒரு பெட்டகமாக விளங்குகிறது. தமிழில் எழுதி வரும் பல முன்னணி எழுத்தாளர்கள் எஸ்.ரா, ஜெயகாந்தன் மற்றும் பலர் போல் எல்லாருடைய பதிவுகளையும் கட்டுரைகளாகவும், அவர்கள் பெயரிலேயே தொகுப்புகளாகவும் இங்கு சேகரித்து வருகிறது. இதில் பலரின் சிறுகதைகளும் பெட்டகமாகக் காணக் கிடைக்கின்றன.

3. அமிர்தம் சூர்யா


     எதார்த்த வாழ்க்கையை எழுத்து வாழ்க்கையால் நிரப்பி யுகந்தோறும் வாழ்வோம் வா என்ற அறிமுகத் தலைப்பிலேயே அசத்துகிறார். 2010 முதல் பதிவுலகில் எழுதிவருகிறார். வலி பற்றிய இவரின் பிரசவக் கவிதைகள் பல ஆழங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றால், இவரின் அம்மா என்ற கவிதை  சொல்லி நிற்கும் கருத்து அற்புதம்.


4. சௌந்தர சுகன்


     இத்தளம் 25  ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு இலக்கிய இதழ். கவிதைகள், கதைகள் பல தாங்கி நிற்கிறது. குறிப்பாக, அனலேந்தி எழுதிய இருள் குருதி என்ற கவிதை சுளீர் என்று ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறது. என்னவென்று யூகிக்க முடிகிறதல்லவா??!!

5. விஜய் மகேந்திரன்
 

இவர் பதிவுலகில் 2009 முதல் எழுதிவருகிறார். இவரின் படைப்புகள் தவிர பலரின் படைப்புகளும் இங்கு இடம்பெறுகிறது. இவரின் கவிதைகளில் குறிப்பாக, 34 வயது பெண்ணின் வலது கை என்ற கவிதை எதார்த்தத்தைக் கொண்டு நிற்கிறது. இவரின் மற்றொரு கவிதையான இரவுக்காக காத்திருப்பவன், வேதனையில் உழலும் ஒரு மனிதனின் பகல் பற்றிய பயத்தை அப்பட்டமாக விளக்குகிறது.

பதிவுலகில் இத்தனை அள்ள அள்ளக் குறையாத முத்துகள் இருக்கின்றனவா என்று வியக்க வைத்து விட்டது இன்றைய நாள்.. உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.. 

நாளை புதியவர்களோடு களம் இறங்குகிறேன்..

நன்றிகள்.

அன்புடன்,
பூமகள்.

16 comments:

 1. ரொம்ப நாள் கழிச்சு வர்றேன். வாழ்த்துகள் :-) தொடர்ந்து எழுதுங்க.

  ReplyDelete
 2. நேத்து போஸ்ட் படிச்சுதான் தெரிஞ்சது.. நீங்கள்லாம் எங்க சீனியர்ஸுங்க. இது தெரியாம இருந்துட்டேனே இவ்ளோ நாளா.....

  ReplyDelete
 3. நான்காவது தளம் எனக்கு புதிது... அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அருமையான அறிமுகங்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அழியாசூவடு கள் தவிர அனைவரும் எனக்கு அறியாதவர்கள் அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியருக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியருக்கும் இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 9. பதிலிட்டு ஊக்கமளிக்கும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. :)

  ReplyDelete
 10. இதுவரை இவைகள் எனக்கு அறியப்படாத தளங்கள் அருமை !
  வாழ்த்துக்கள் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் .இன்றைய அறிமுகங்கள்
  அனைவருக்கும் கூட என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .

  ReplyDelete
 11. வணக்கம்

  இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவுகள் தொடருகிறேன் பதிவுகளை அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 12. கவிதைக்காட்டுக்குள் சிறுமியாய் அலைந்து ரசிக்கும் யவனிகாவின் கவிதை அற்புதம். அத்துடன் இன்றைய அறிமுகமாய் அமைந்த வலைத்தளங்கள் அனைத்தும் அற்புதம். அழகாய்த் தொகுத்தளிக்கும் பாங்குக்குப் பாராட்டுகள் பூமகள்.

  ReplyDelete
 13. அன்பின் பூமகள் - அறுமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

 14. வணக்கம்!

  பூத்து மணக்கும் புதுமை வலைகளைக்
  கோர்த்துக் கொடுத்தீா் குளிர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 15. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. நன்றி நண்பரே...எனது வலை தளத்தை அறிமுக படுத்தி எழுதி இருக்கும் தோழி பூமகள் அவர்களக்கு நெஞ்சார்ந்த நன்றி......

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது