07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 5, 2015

தில்லி ஸ்பெஷல்! -1


சரம் – மூன்று! மலர் – எட்டு!


அன்பின் பதிவுலக நட்புகளே!

சென்ற வாரம் தாங்கள் எல்லோரும் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களின் அன்பை ஒரு வாரத்தோடு முடித்துக் கொள்ள என்னால் முடியவில்லை….:)) ”உங்களை விட்டேனா பார்” என்று ஒரு வழி பண்ண மீண்டும் கிளம்பி விட்டேன். போன வாரம் ஜெய்ப்பூர் போனோமா? இந்த வாரம் அப்படியே ஒரு எட்டு தில்லிக்கு அழைச்சுட்டு போகப் போறேன்….:)) காசில்லாமல் சுற்றுலா போக எல்லோரும் தயாரா இருங்க….:) சரியா!


சினிமாவில் தில்லி என்றதும் திரையில் காண்பிக்கும் ராஷ்ட்ரபதி பவனையும், இந்தியா கேட்டையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த நான் தில்லிக்கு போவேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை….:) திருமணமாகி தில்லிக்கு சென்ற உடன், ஒரு சில வருடங்களே கூட ஒன்றும் புரியவில்லை. பின்பு தான் மெல்ல மெல்ல ரசிக்கத் துவங்கினேன்.....:)


இந்தியாவின் தலைநகரமான தில்லிக்கு பலமுகங்கள் உண்டு. பல்வேறு மாநிலத்தவர்கள் ஒன்று கூடி இருப்பதால் விதவிதமான கலாச்சாரங்கள் இங்கே பின்பற்றப்படுகின்றன. பத்து வருடங்கள் தில்லியில் வாசம் செய்துள்ளதால் எனக்குத் தெரிந்த, இங்கே நான் ரசித்த இடங்கள், உணவுகள், மனிதர்கள், பண்டிகைகள், தட்பவெப்பங்கள் என்று பலதரப்பட்ட விஷயங்களை இந்த வாரம் முழுவதும் சுருக்கமாக பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இன்று சாம்பிளுக்கு தில்லியின் பாதாம் பால்:-

பட உதவி -இணையம்

தில்லியில் நான் சுவைத்த பாதாம் பாலைப் போல் இதுவரை வேறு எங்கும் சுவைத்ததில்லை. தில்லி சென்ற புதிதில், சாலையோரக் கடையில் விற்பதால் ”இவள் இங்கெல்லாம் சாப்பிடுவாளோ???” என்று என்னவர் நினைத்திருந்தாரோ என்னவோ அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை....:)) என்னவரின் நண்பர் தான்  அறிமுகப்படுத்தி வைத்தார். அன்று முதல் அங்கிருந்தவரை எங்களால் முடிந்த அளவு சாப்பிட்டிருக்கிறோம்.

பட உதவி -இணையம்

கண்ணாடி தம்ளர் ஒன்றில் பாதி அளவு குழம்பு போல், சுண்டக்காய்ச்சிய பாலில் இடப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவைகள். இதற்கு மேல் இருவிதமான ஐஸ்க்ரீம்கள் இடப்பட்டு மேலேயும் உலர்பழங்கள் அலங்கரிக்கப்பட்டு ஸ்பூன் போட்டு தரப்படும். ஆஹா! என்னே சுவை! அப்போ அதன் விலை பத்து ரூபாய் மட்டுமே. ஒருவரால் ஒரு தம்ளருக்கு மேல் சாப்பிட முடியாது...:) நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தில்லியின் பாதாம் பாலை தவறாமல் ருசித்துப் பாருங்கள்....:)

இன்று முதல் அடுத்த வாரம் துவங்குவதால், என்னுடைய பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு… எப்படியெல்லாம் விளம்பரம்!!!


இதெல்லாவற்றையும் இன்றே படித்து, வீட்டு பாடத்தை முடித்து விடுங்கள். இது கடும் பனிக்காலம். இரவு நேரத்தில் இரண்டு டிகிரியாம். நாளை தில்லியின் கடுங்குளிரில் எல்லோரும் சுற்றப் போகிறோம் என்பதால் ஸ்வெட்டர், ஜெர்கின், சாக்ஸ், குல்லாய் முதலியவைகளை அணிந்து கொண்டு தயாராய் இருங்கள்.

பட உதவி -இணையம்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


25 comments:

 1. தில்லி பாதாம்பால் கவர்கிறதே...!

  தொடர்வதற்கு(ம்) வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் ருசியானது.
   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   Delete
 2. மீண்டும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 3. இந்த வாரமும் வலைச்சர ஆசிரியப் பணியை தொடர் இருப்பதற்கு வாழ்த்துக்கள்! நானும் புது தில்லியில் நான்கு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். தங்களின் பதிவின் மூலம் திரும்பவும் அங்கு ‘செல்ல’ வாய்ப்பு தர இருப்பதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி சார்.

   Delete
 4. Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 5. இந்த வாரமும் சுற்றலா வாரம் தானா சூப்பர்.
  சுமார் 27 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் 10நாட்கள் இருந்திருக்கிறேன்.
  தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.

   Delete
 6. பாதாம் பாலுடன் டெல்லிக்கு இந்த வாரம் அழைத்துச் செல்ல இருப்பதைக்கேட்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் தொடர்ந்து [நான்காம் முறையாக :) ] வலைச்சர ஆசிரியராக ..... பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.

   Delete
 7. Wel come
  ஆஹா டெல்லியா ? சந்தோஷம் நான் போனதே இல்லை.....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   Delete
 8. அன்பின் ஆதி வெங்கட்

  இவ்வாரமும் ஆசிரியப் பொறுப்பினை ஏற்று பதிவுகள் எழுதத் துவங்கியது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. சிரமம் பாராது என் மடல் கண்டவுடன் பணியினைச் சிரமேற்கொண்டு பதிவுகள் இடத் துவங்கியதற்கு மிக்க நன்றி.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

   Delete
 9. வாழ்த்துக்கள் சகோதரி...
  தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.

   Delete
 10. இந்தவாரமும் உங்கள் பயணக்கட்டுரையையும் பதிவர்கள் அறிமுகமும் படித்து ரசிக்க ரெடியாக உள்ளோம்! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

   Delete
 11. புதுதில்லியில் தாங்கள் அழைத்துச்சென்றுள்ள இடங்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் சென்றுவந்தேன். உங்களது பதிவு மறுபடியும் அங்கே அழைத்துச்சென்றது. அப்போது ருசிக்காத பாதாம் பாலை இப்போது ருசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. payanam செய்ய முடியாதவர்களும் ரசிக்கும் டில்லி यात्रा.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சேதுராமன் ஐயா.

   Delete
 13. vanakam. Naan puthiyavan intha blog ku ungal pathivu thaan muthalil padikeran. ithu varai delhi ponathu ilai ungaludan naanum painekeran. nandri.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது