07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 16, 2015

சினிமாவும் தமிழர் வாழ்க்கையும்


பாட்டும் கூத்தும்தான் பழந்தமிழர்களின் பொழுதுபோக்கு. உழைத்துக் களைத்தவர்களின் ஒரே கொண்டாட்டம் கோயில் திருவிழாக்களும் அது தொடர்பான கூத்தும்தான். அதன் பரிணாம வளர்ச்சிதான் நாடகமும் சினிமாவும். நாளடைவில் சினிமா கட்சி அதன் கொள்கைகள் என பிரசாரசார பீரங்கியாக மாறி சினிமா தொடர்புடையவர்களே ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு மாறிப்போனது.

நிஜ வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து கொஞ்ச நேரமேனும் வேறு ஒரு கற்பனா உலகத்துக்கு செல்வதையே ஒவ்வொரு மனிதனின் மனமும் விரும்புகிறது. நம்மால் முடியாததை சினிமா கதாநாயகன் சாதிக்கும்போது தானே சாதித்ததைப் போல கற்பனை செய்து கொண்டான். மறைந்த எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றி இதை உறுதிப்படுத்தியது.

சினிமாவால் எதையும் சாதிக்க முடியம் என்கிற நப்பாசை மற்றவர்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆக சினிமா ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு ஊடகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நல்ல சினிமா எது? கெட்ட சினிமா எது? இதை எப்படி யார் வரையறுக்க முடியும்? சினிமாவின் வணிக வெற்றி மட்டுமே இதை தீர்மாணிக்க முடியுமா? அதே போல மக்களின் நிஜ வாழ்க்கையை சினிமா பிரதிபலிக்கிறதா? போன்ற கேள்விகளெல்லாம் விவாதிக்கப்படக் கூடியவை.


சினிமா பற்றி அவதானிப்பும் அவை பற்றி அறிந்து கொள்ள விழையும் மனங்களும் அதிகம். சினிமா பற்றி நாள் கிழமை பொழுது என்று பேசிக்கொண்டே இருக்கும் சமூகம் நம்முடையது. ஒரு பொழுதும் சுவாரசியம் குறையாதது... என்ற முன்னுரையோடு அருவி என்கிற தளத்தில் தியோடர் பாஸ்கரன் அவர்களின் எது நல்ல சினிமா? என்கிற உரை பதிவாக வெளிவந்திருக்கிறது. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

மொழியும் நிலமும் தளத்தின் ஜமாலன் அவர்களின் சினிமா பற்றிய மூன்றாம் வடிவம் எனும் திரைத்தனம் நோக்கி சலனிக்கும் மலையாள சினிமா மற்றும் திரைச்சலனங்களின் பிம்ப மொழியாக மலையாள சினிமா ஆகிய பதிவுகளில்  சினிமா கலையா? கேளிக்கையா? என்கிற உரையாடல் சினிமா தோன்றிய காலந்தொட்டு நடைபெற்றுவரும் ஒன்று. சினிமா என்பது கலையோ, கேளிக்கையோ அல்ல. சினிமா எப்பொழுதும், எல்லாவகையிலும் சினிமாதான். அது ஒரு புதிய வடிவம். மக்களின் பழகிய சிந்தனைக்குள் அல்லது ஒரு வகைமைக்குள் உட்படுத்திவிட முனையும் வகைப்பாட்டியல் சார்ந்த ஒரு விருப்பமே அது கலையா? கேளிக்கையா? என்கிற கேள்விக்கான அடிப்படை... என்று தொடங்கும் சினிமா பற்றிய முக்கியமாய் மலையாள சினிமா பற்றிய அலசல் கட்டுரைகள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.

சினிமாவைப்பற்றி மட்டுமல்லாமல் சினிமா நடிக நடிகையர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதிலும் நம்மவர்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடியவர்கள். எத்தனையோ பழமையான திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா சம்பவங்கள் என சினிமாவைப் பற்றி ஒரு சினிமா கலைக்களஞ்சியம் போல தனது வலைத்தளத்தை உருவாக்கி நகைச்சுவையாய் எழுதி வருகிறார் ஆர்.பி.ராஜநாயஹம் தனது தளத்தில். உதாரணத்திற்கு எங்க எம்.ஜி.ஆரா இருந்திருந்தா என்ற பதிவைப் படித்துப்பாருங்கள்.

அப்பா... எவ்வளவு விஷயங்கள், எத்தனை பெரிய பதிவு. அசத்தி விட்டீர்கள் காரிகன். எனக்கு மெதுவாக அசைபோட்டு, ரசித்துப் படிக்கவே அரை நாளானது. இதற்காக நீங்கள் எத்தனை நாள் மெனக்கெட்டீர்களோ? எப்படி அத்தனையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.  என்று நான் ஒரு தளத்திற்குப் போய் பின்னூட்டமிட்டிருந்தேன். எழுபதில் வளர்ந்தவர்களுக்கு இவரின் பதிவுகள் ஏகந்தமாய் இனிக்கும். மறக்க முடியாத நினைவுகளில் உங்கள் மனம் லயித்துப்போகும். அந்த தளம் காரிகனின் வார்த்தை விருப்பம்

தின வாழ்க்கையில் திரை இசைப்பாடல்களைக் கேட்காதவர்களும் உண்டா என்ன? அதுவும் பழைய பாடல்களை... இசை விரும்பிகள் XX-எழுபதுகளின் வாடாத வசந்தம் மற்றும் இசை விரும்பிகள் XXI-அலங்காரம் கலையாத அழகு என்ற காரிகனின் பெரிய பதிவுகளைப் படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்த தளத்தைப்போலவே திரையிசைப் பாடல்களைப் பற்றி அலசும் மற்றோரு தளம் இனியொரு... டி. சௌந்தர் என்பவர் தமிழ்த் திரை இசையில் ராகங்கள் என்ற தொடரை எழுதி வருகிறார். இசை விரும்பிகளுக்கு ஏற்ற தளம் இது.

நாளை மீண்டும் சில அறிமுகங்களோடு வருகிறேன்.

அன்புடன்,
கவிப்ரியன்.


14 comments:

 1. சினிமாவைப்பற்றி விளக்கங்களுடன் நல்ல தகவல்களையும் கொடுத்தது சிறப்பு இன்றைய அறிமுகங்களுக்கு எமடு வாழ்த்துகளும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக...

  தமிழ் மண இணைப்பும், வாக்கு ஒன்றும்.

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
 2. நன்றி கில்லர்ஜி அவர்களே.

  ReplyDelete
 3. தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டு விட்ட சினிமாவைப் பற்றிய மலரும் நினைவுகளுடன் - இனிய தொகுப்பு!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜ் அவர்களே.

   Delete
 4. சினிமா சம்மந்தமான பதிவர்கள் அறிமுகம் அழகு..

  வாழ்த்துக்கள் தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே.

   Delete
 5. சினிமா பற்றிய அறிமுகப்பதிவுகள் அருமை சகோ.
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  தம 4

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி அவர்களே.

   Delete
 6. விளக்கம் அருமை...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

   Delete
 7. திரைப்படங்கள் பற்றிய தொகுப்பாக நல்ல பகிர்வு. பயனுள்ள செய்திகள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே.

   Delete
 8. தமிழரும் சினிமாவும் பிரிக்க முடியாத கர்ணகவசம் போலத்தான். அத்தனையும் புதிய தளங்கள் எங்களுக்கு. மிக்க நன்றி!அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன் அவர்களே.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது