07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 30, 2015

வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
தமிழின் பேச்சுவழக்கில் அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின் பாதையில் இருக்கக் கூடிய  மொழிப் பட்டியலில் நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.

என்ன ஆச்சரியம்!  என் மனத்துயரை அப்படியே படம் பிடித்தாற் போல் வெளிப்படுத்துகிறது எனது மனவெளியில் வேதாவின் வலையில் இடம் பெற்றுள்ள நூலறுந்த பட்டமென ஆகுமோ? என்ற கவிதை. அதிலிருந்து சில வரிகள்:- 

“நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்
பட்டுத் தமிழ் அழியுமோவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மனவுளைச்சல்”

பாமரர்களின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக உள்ளது.  எங்கும் எதிலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது.

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     

பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 

“வண்டிக்காரன் கேட்டான், லெப்டா ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?” (காசி ஆனந்தன்)

ஒரு மொழியின் ஆயுள் இலக்கியவாதிகளாலேயோ, மெத்தப் படித்தவர் களாலேயோ  தீர்மானிக்கப் படுவதில்லை; பாமரர்களால் பேசப்படும் போது தான், அதன் ஜீவன் நிலைக்கும்.

பேச்சு மொழி வழக்கிழந்ததால், ஏராளமான இலக்கிய வளம் இருந்தும்  லத்தீனும், சம்ஸ்கிருதமும் அழிந்துவிட்டனவே!

இக்காலத்தில் இருபது சதவீத பெயர்கள் மட்டுமே தமிழில் உள்ளன.
உலகில் மக்களனைவரும் அவரவர் மொழியில் பெயர் வைத்திருக்கும் போது, தமிழன் மட்டும் வடமொழியாய், அரபியாய், பாரசீகமாய்ப் பெயர் வைத்து அடையாளம் இழப்பதைச் சுட்டிக்காட்டி வருந்துகிறார் தமிழகம் மா.தமிழ்ப்பரிதி:-  

தமிழகத்தில்
பெயரளவில் தமிழ்
எனக் கொதிக்கின்றேன்!
அடடா!
தமிழரின் பெயரிலும்
தமிழ் இல்லை! 
இவரது தமிழகம் வலைப்பக்கத்தில் ஏராளமான தமிழ்ப் பெயர்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.

 

தமிழன் என்று சொல்லடா! தமிழில் பேசடா!" என்னை மிகவும் கவர்ந்த  பதிவு.  ஊடகங்கள் அனைத்தும் தமிழைச் சகட்டு மேனிக்குத் துவம்சம் செய்கின்றன.  சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம்; தமிழைத் தமிழாகப் பேசினாலே போதும்; தமிழ் தானாக வளர்ந்துவிடும் என்கிறது சாமானியனின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ.
கொன்ச்சம், கொன்ச்சம் டமிள்,’ பேசும் நடிகைகளை வைத்துத் தமிழ்ச்சேவை(?) செய்யும் தொலைக்காட்சியைக் காட்டமாக தாக்கி யிருக்கிறார் இப்பதிவில்.

ஆங்கிலக் கலப்பு செய்து வருங்கால தலைமுறையினரிடம் தமிழை அழிப்பது நியாயமா?  பொறுப்பை உணர்ந்து தமிழைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கிரி.

அந்நிய மொழிகளின் ஊடுருவல், அந்நிய நாகரிக வளர்ச்சி மோகம், மொழி இன ரீதியான ஒடுக்கு முறை ஆகியவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள்.  இந்தக் காரணிகளைத் தமிழ்மொழியும் பெற்றுவிட்டது.  அந்நியமொழிகளின் ஆக்ரமிப்பு ஆழமாக ஊடுருவி தமிழை அழித்துக் கொண்டிருக்கின்றது.  அழிவை நோக்கிய பாதையில் தமிழ் பயணிக்கிறது என்று கவலை தெரிவிக்கிறார் ஆலிவ்.


நாம் எங்கே போகிறோம்?,’ என்ற பதிவில், உலகின் அழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழை இணைக்கப் போகிறோமா?” நாமே நம் தாய் மொழியைப் புதைகுழியில் தள்ளப் போகிறோமா?  என்ற நியாயமான கோபத்துடன், கேள்விக்கணை தொடுக்கிறார் தமிழுடன் வலைப்பூவின் தமிழன்.  


கன்னித் தமிழமுதை நான் மறந்தால்
என்னில் தரித்திடுமோ   உயிர்?. என்றும்

அன்னை மொழியே எனதுயிராம் !அது தழைக்க
 நன்மை செய்வேன் நாளும் !  என்றும் தமிழின்றி வாழ்வேது? என்ற கவிதையில் சொல்லி வேருக்கு நீர் ஊற்றுகிறார் அம்பாளடியாள்.  


அன்னையிட்ட தீயென அடிவயிற்றுள் மூண்டெழவே
உன்னைநினைக் கின்றேன் உயர்தமிழே! – முன்னைப்
பிறந்தவளே! என்னுள் நிறைந்தவளே! யாப்பில்
சிறந்தவளே! காப்பாய் செழித்து!
என்று அழகு தமிழில் பாமாலை சூட்டுகிறார் இளைய நிலா அன்னையிட்ட தீ என்ற கவிதையில். 

மரபு தமிழில் கவிதைகள் பாடி அசத்தும் தென்றல் சசிகலாவின் 'வரவேற்போம் புத்தாண்டை என்ற கவிதையிலிருந்து சில வரிகளைச் சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்:
"அன்பை நாளும் விதைத்திடுவோம்
அகத்தே தூய்மை அடைந்திடுவோம்
அன்னைத் தமிழை அரவணைத்து
அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்"

இறுதியாக என்னைப் பாதித்த தமிழ் இனி என்ற குறும்படம்.  அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.


நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி46 comments:

 1. அருமை! நாளைக்கு மீட் பண்ணலாம், ஓக்கேயா?

  ReplyDelete
  Replies
  1. முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி துளசி! ஆனால் கட்டுரையைப் படித்து விட்டு மீட் பண்ணலாம், ஓ.கே யா என்று கேட்கலாமா? நாளைக்குச் சந்திப்போம் என்று சொல்லலாம் தானே?

   Delete
 2. Eniya vaalththukal.
  Vetha.Langathilakm.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி வேதா!

   Delete

 3. வலைச்சரம் ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தேர்வான அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.
  வலைப் பூ வினை சூடித் தந்த சுந்தரப் புருஷர்
  நண்பர் சாமானியன் தேர்வு இரட்டிப்பு மகிழ்ச்சி!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்!

   Delete
 4. சிறக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்!

   Delete
 5. என்னுடைய கட்டுரை பற்றி தாங்கள் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரி! தங்களது தமிழ் ஆர்வத்துக்கும் தொண்டுக்கும் தலை வணங்குகிறேன்! உங்கள் பணியைத் தொடருங்கள்! வருகைக்கு மிக்க நன்றி கிரி!

   Delete
 6. நாம் தாய்மொழியிலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனைப் பெருமையாகக் கூட நினைக்கிறோம். நமது சந்ததியினர் இன்னும் விலகிச் செல்கின்றனர். அனைவரும் படிக்கவேண்டிய, இக்காலத்திற்குத் தேவையான நல்ல பதிவு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். நாளைய பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் சார்! வாழ்த்துக்கு மிகவும் நன்றி!

   Delete
 7. வேருக்கு நீர் ஊற்றுவோம்!.. - கவித்துவமான தலைப்பு!..
  கன்னித் தமிழைக் காப்பது கற்றவரின் பொறுப்பு!..

  ஒற்றுமை நீங்கினால் மட்டும் தாழ்வில்லை!..
  நற்றமிழை மறந்தாலும் நமக்குத் தாழ்வே!..

  தற்காலத்துக்கு ஏற்ற பதிவு.. இனிய அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. நற்றமிழை மறந்தாலும் நமக்குத் தாழ்வே என்று சரியாகச் சொன்னீர்கள். வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி துரை சார்!

   Delete
 8. இன்று பேசும் தமிழ் - :(

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட் சார்!

   Delete
 9. நம் தாய்மொழியாம் தமிழினை காப்பாற்ற வேண்டும் என்ற தங்களின் எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது.

  ஏற்கனவே இதைத் தாங்கள், என் சிறுகதைக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதி, பரிசுபெற்ற ”காதலாவது கத்திரிக்காயாவது” என்ற கதைக்கான விமர்சனத்திலேயே கடைசி பத்தியில் வலியுறுத்திச் சொல்லியிருந்தது என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது.

  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நான் எழுதியிருந்ததை நினைவில் வைத்து அதற்கு இணைப்பும் கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார்!

   Delete
 10. //“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர்போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸுல வைச்சிட்டேன். ஆட்டோக்காரன்டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான், சன்னுக்கு எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான். அப்புறம் ஹஸ்பண்ட் பைக்லகூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு.

  அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தாஸ்டாட்டிங் டிரபிள். ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோபிடிச்சேன். ரெண்டு சிக்னல்ல வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக். ஒன் அவர் லேட்டாயிடுச்சி.. அதுக்கப்புறம்தேர்டு புளோர்ல இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணிசெட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி. லைஃபேரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”

  பார்த்தீர்களா? இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்! நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. //

  தாங்கள் கொடுத்துள்ள மேற்படி உதாரணங்கள் மிக மிக அருமை. இதைவிட எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும் ?

  சபாஷ் மேடம் ! :)

  இருப்பினும் இதையெல்லாம் இனி நம்மால் மாற்றிவிட முடியுமா எனவும் நினைக்கத்தோன்றுகிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் என்ற பாராட்டுக்கு நன்றி சார்! நம்மால் மாற்ற முடியுமா என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை சார்! நம்மால் முடிந்த வரை தமிழைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்வோம். முதலாவது நாம் பேசும் போது ஆங்கிலச் சொற்களைக் கூடுமானவரை தவிர்க்க முயலுவோம். நம் பிள்ளைகளிடம் பேரக்குழந்தைகளிடம் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வோம். முடிந்த போதெல்லாம் ஆங்கிலக் கலப்புக்கு எதிராக எழுதி நம் குரலைப் பதிவு செய்வோம்! பலனைப் பற்றிக் கவலைப்படாமல் நம் கடமையை நாம் செய்து கொண்டே இருப்போம்!

   Delete
 11. //ஒரு மொழியின் ஆயுள் இலக்கியவாதிகளாலேயோ, மெத்தப் படித்தவர் களாலேயோ தீர்மானிக்கப் படுவதில்லை; பாமரர்களால் பேசப்படும் போது தான், அதன் ஜீவன் நிலைக்கும்.//

  அருமை. மிக அருமை. உண்மையே ! மிகவும் உண்மையே !!

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அருமை எனப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி சார்!

   Delete
 12. //இறுதியாக என்னைப் பாதித்த தமிழ் இனி என்ற குறும்படம். அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.//

  இதைப்பொறுமையாகப் கண்டு களிக்கும் அனைவரையும் நிச்சயமாக இது பாதிக்கத்தான் செய்யும். காணொளி அருமை. அதை காண வைத்த தங்களுக்கு என் கூடுதல் நன்றிகள்.

  இந்தக்காணொளியைப் பார்த்து முடித்ததும் என் http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-01-03-first-prize-winners.html இந்தப்பதிவினில் காட்டியுள்ள, வெளிநாட்டில் வாழ்ந்தும் வீட்டிலேயே தமிழ் கற்றுவரும் நம் ஜீவி ஐயா அவர்களின் பேரன்தான் என் நினைவுக்கு வந்தான்.

  இந்த என் பதிவினில் தங்கள் விமர்சனம் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது என்பதில் மேலும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. காணொளியைப் பார்த்து கருத்தும் சொன்னதற்கு மிகவும் நன்றி சார்! வெளி நாட்டில் வாந்தாலும் தமிழைக் கற்றுக் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் காணொளியில் தளம் அமெரிக்கா. ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்று வீட்டில் இதே நிலை தான். என் விமர்சனம் தங்களது விமர்சனப் போட்டியில் முதல் வெற்றி பெற்றது குறித்து எனக்கும் மகிழ்ச்சி தான். தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!

   Delete
 13. தலைப்பே பாராட்டுக்குரியது பா. தென்றலின் அறிமுகமும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிப்பா. சக உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். தென்றலில் வந்து வாழ்த்திய யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது கவித்திறன் என்னை மிகவும் கவர்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா!

   Delete
 14. இன்றைய அறிமுகங்களை மிகவும் சிரமப்பட்டுத் தேடித்தேடி மிகச்சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள்.

  அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள் + நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கோபு சார்!

   Delete
 15. குறும்படம் சிந்திக்க வைக்கும் அனைவரையும். வாழ்த்துக்கள் பா.

  ReplyDelete
  Replies
  1. குறும்படத்தைப் பார்த்துக் கருத்து சொன்னதற்கு நன்றி சசி!

   Delete
 16. தமிழ் குறித்த அருமையான பதிவு. எனது ஆதங்கமும் அதுவே. தமிழ் இனி... குறும்படத்தைப் பார்த்து எனது மகள்களையும் பார்க்கச்செய்தேன். வரும் தலைமுறையினருக்கு இந்த ஆபத்தை புரிய வைப்பது நமது கடமை. த.ம.+

  ReplyDelete
  Replies
  1. மிகவும் மகிழ்ச்சி. தாங்கள் பார்த்ததோடு மகள்களையும் பார்க்க வைத்தது மிகவும் நல்ல செயல். நம் பிள்ளைகளுக்கு இந்த ஆபத்தைப் புரிய வைப்பது நம் கடமை என்று மிகச் சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி கவிப்பிரியன்!

   Delete
 17. இன்றைய அறிமுகங்களுக்கும் நண்பர் திரு. சாமானியன் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

  தமிழ் மணம் – 5
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் த.ம வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி சார்!

   Delete
 18. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி குமார்!

   Delete
 19. தமிழர் பலரே வேருக்கு வெந்நீர் ஊற்றும் நிலையில் நீங்கள் அதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டி, வேருக்கு நல்ல நீர் ஊற்றிவருவோரை ஊக்கப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பெயர்ப்பொருத்தத்திற்கும் வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!

   Delete
 20. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 21. தமிழின் இன்றையநிலை குறித்த ஆதங்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அத்தனைப் பதிவுகளும் மனம் தொட்டன. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். குறும்படம் எங்களைப் போன்று அயல்நாடுகளில் வாழ்பவர்களின் வருங்கால சந்ததியின் நிலையெண்ணிக் கலங்கவைத்தது. சிந்திக்கத்தூண்டும் பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிகவும் நன்றி கீதா!

   Delete
 22. இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! //
  அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

  குறும்படம் மிக அருமை அனைவரும் காணவேண்டிய படம்.
  அறிமுகபடுத்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. காணொலியை கண்டுவிட்டுக் கருத்து சொன்னமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி!

   Delete
 23. வேலைப்பளு காரணமாய் சில நாட்களாய் வலைதளம் வர இயலவில்லை ! இன்றுதான் எனது வலைப்பூவில் தங்களின் செய்தி கண்டேன்...

  அதிகம் எழுதியிராத என்னையும் நினைவில் வைத்து, என் வலைப்பூவினை சரத்தில் அறிமுகம் செய்து பெருமைபடுத்தியதற்கு நன்றிகள் பல.

  உங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  தொடருவோம் !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்க் கொலை செய்யும் ஊடகங்கள் குறித்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் சேவையைத் தொடருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாமானியன்!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது