07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 15, 2015

முத்தான மூன்றாம் நாள்!!!


அனைவருக்கும் வணக்கம் ,

வலைச்சரத்தில் எழுத ஆறுமாதங்களுக்கு முன் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் என்னைத் தொடர்பு கொண்ட போது மனதினுள் பெரும் பயம்;  கூடவே சிறு உவகை. பயத்தின் காரணம்நான் என்ன செய்துவிட்டேன் இதுவரை? வலைச்சரம் எப்படிப்பட்டதொரு புகழ்பெற்ற தளம்! அதில் இருந்து வாய்ப்பு வருகிறதே! அதில் எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதாவது அமெச்சூர்டாக எழுதி, நம் பெயரையும் கெடுத்து நம்மால் வலைச்சரத்தின் பெயரையும் கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்பதே பயத்தின் காரணம். பொதுவாக நம் பணம் என்றால் போனால் போகட்டுமென்று, வள்ளுவரின் வாக்கினைப்போல் குன்றின்மேல் ஏறி மற்போர் காண்பது போன்றதென்பதால், தாராளமாக நினைத்ததைச் செய்யலாம். ஆனால் அடுத்தவர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றால் , வடிவேலுவைப்போல் நைட் 12 மணிக்கு சுடுகாட்டிற்குச்செல்ல வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதே உளவியல் முறைதான் மேலே குறிப்பிட்ட என்னுடைய பயத்திற்கு காரணம். உவகைக்கு காரணம், நம்மையும் பதிவராக அங்கிகரித்ததாலே தான் அவ்வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதுவும் வலைச்சரத்தில் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் சாதாரண விஷயமா ? என்ற அற்ப மகிழ்ச்சியே !

அப்போது நான் அவரிடம், அண்ணே!  தகுதி  வந்ததும் நான் வந்து வாய்ப்பு கேட்கிறேன். தகுதியற்றவனுக்குத் தரும் வாய்ப்பு, பல நேரங்களில் கெடுதலை நோக்கியே பயணிக்கும்’ என்பதுதான். பிரகாஷ் அண்ணனும் , ‘ சரி மெக்னேஷ் ! கண்டிப்பா வரனும் எழுதஎன்று கூறிவிட்டார். அதன்பின் அதைப்பற்றி நானும் அவரும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. எனக்கோ மனதினுள் சிறு குற்ற உணர்ச்சி.  ‘என்னடா! நமக்கு வாய்ப்பளிக்க வந்தவரிடம் மறுத்தனுப்பி விட்டோமே! அவர் மனதினுள் ஏதேனும் நினைத்திருப்பாரோஎன்று தவித்துக்கொண்டிருந்தேன். சனி இரவன்று தமிழ்வாசி அண்ணன் வாட்ஸப்பில் ஒரு கட்டளை இட்டார் .

தம்பி ! இந்த வாரம் நீ வலைச்சரத்துல எழுதற . ’ 

அவர் என்னிடம் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்கும் அவசியமும் அவருக்கு இல்லை. எதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? ஒரு அண்ணன் தம்பியிடம் விண்ணப்பிக்கவேண்டுமா? தேவையில்லை. என் சகோதரர் ஒரு உரிமையுடன் என்னிடம் கேட்கும்போது, அதை மறுப்பது என்பது எனக்கு நானே அவமரியாதை செய்வதை போன்றது.  யோசிக்காமல் அடுத்த வார்த்தையைக் கூறினேன் .

சரி  அண்ணே . எப்போலர்ந்து எழுதனும் ?’

அவரும் அதைப்பற்றிய விவரங்களையெல்லாம் தெரிவித்தார். உண்மையில் என்னுடைய ப்ளாக்கிலேயே எழுத முடியாத சூழ்நிலையில் தான் நான் இப்போது இருக்கிறேன். காரணம்  என்னுடைய மடிக்கணினி கீழே விழுந்து, தன்னுடைய முகத்திரையைக் கிழித்துக் கொண்டது. அதன் காரணமாக நான் ரசித்துப் படிக்கும் பதிவர்களின், பதிவுகளில் கூட என்னால் சரிவர மறுமொழியிடமுடியவில்லை. நான் மறுமொழியிடாத காரணத்தால், என் நட்பு வட்டத்தில் இருக்கும் பல பதிவர்கள் , என்னைப்  புகழ்ச்சியின் பிடியில் சிக்கியவனாக நோக்கியிருக்கலாம். பரவாயில்லை! அதனால் எனக்கு வருத்தமும் இல்லை. நான் வாசிப்பை அதனால் தவறவிடப்போவதில்லை. என் தளத்திற்கு மறுமொழியிடவில்லை என்ற காரணத்திற்காக, நான் நேசித்துப்படிக்கும்  பதிவர்களின் எழுத்தை நான் ரசிக்க மறுப்பது முட்டாள்தனம். அதனால் எனக்குத் தான் இழப்பே, தவிர அவர்களுக்கில்லை. சரி, மெய்ன் மேட்டரை விட்டுவிட்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறேன். முகத்திரை கிழிந்த கணிணியின் காரணமாக முன்போல் பல பதிவர்களையும், பதிவுகளையும் படிக்கமுடியாமல் போய்விட்டது . கடந்த இரு மாதங்களில் , நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவுகளைத் தாண்டி புதிய பதிவுகளை படிக்க இயலா சூழ்நிலையில் இருக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் , எப்படி என்னால் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த முடியும்? ஏற்கனவே இருந்த பதிவர்களின் தொடர்பும், பதிவுலகின்  தொடர்பும்  இரு மாதங்களாக அறுபட்டுப் போய்விட்டன . இந்நிலையில் வலைச்சரத்தில் எழுதினால் , நமக்கான மதிப்பு கிட்டுமா ?  நம் பதிவுகளை வலைச்சரத்தில் இருக்கும் பதிவர்கள் படிப்பார்களா? எதையும் யோசிக்காமல் சரி சொல்லிவிட்டேன். ஆனால்  வலைச்சரத்தில் முதல்நாள் எழுதிய போது கிடைத்த வரவேற்பும், வாழ்த்தும் என் மனதில் இருந்த அச்சங்களையும், தாழ்வு மனப்பான்மையையும் சுக்குநூறாக்கி விட்டது. உன்னால் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்குள்ளே மிக தைரியமாக, உறுதியாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் என்றுகூட சொல்லலாம் . அநேகமாக வலைச்சரத்தில் பதிவுகள் எழுதி முடிக்கும்போது , புதியொதொரு பதிவராக மெக்னேஷைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் . இதற்கெல்லாம் காரணம் வலைச்சரத்தில் கருத்துரையிட்டவர்களும் , முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் ஊக்கம் கொடுத்தவர்களும் தான். அவர்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகளைத் தெரிவித்து விட்டு, இன்றைய நாளைத் துவங்குகிறேன . துவங்கும் முன் ஒரு குட்டி ஜென் கதை .

ஒரு அமைதியான, அழகான, பனிப்பொழியும் இரவுஒரு சீடன் அழுது கொண்டிருந்தானாம்அவனுடைய குரு அப்போது அங்கே வருகை புரிந்தாராம்அவருக்கு சீடன் ஏன் அழுகின்றான் என புரியவில்லை .

என்னாயிற்றப்பா?’ என்று அவர் கேட்க, அவன் மறுமொழி கூறாமல் அழுது கொண்டிருந்தானாம் .

ஏதாவது துர்சொப்பனமா ?’ என்று அவர் வினவ ,

இல்லைஎன்றானாம் .

பின் எதற்காக அழுகிறாய் ? ’ என்று அவர் கேட்கஅவன்

அருமையான , இனிமையானதொரு சொப்பனம்என்றானாம் .

இனிமையான சொப்பனம் எனில் ஏன் அழுகிறாய் ?’ என்று அவர் கேட்க ,

அந்த சொப்பனம் நிஜத்தில் நடக்காதல்லவா? அதை நினைத்து தான் அழுகிறேன்என்றானாம் .

குருநாதர்

நேற்று என்னை எழுதத்தூண்டிய சிவகாசிக்காரரைப்பற்றி என் குருநாதர் வரிசையில் இடம்பெறச் செய்திருந்தேன். இன்று என்னுடைய அடுத்த குருநாதரும் பதிவர்களில் மிகமுக்கியமானவரும், எழுத்துலகில் எஸ்.ரா எப்படி பயணக்கட்டுரைகளாக எழுதி வருகிராரோஇணையாக பதிவுலகில் பயணக்கட்டுரைகளை எழுதிவருபவரும், அனைவராலும் ஷைனிங்ஸ்டார் என்று அழைக்கப்படும்  மேதகு. திரு.சீனிவாசன் அவர்களைப் பற்றிப் பார்ப்போம். உங்களுக்கு அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு மிகப்பிரபலாமான பதிவர் இவர் என்றால் அதில் துளிசந்தேகமுமில்லை . நான் எழுத ஆரம்பித்தபின் வேலையில்லா பட்டதாரி சினிமாவிமர்சனத்தில் எனக்கு அறிமுகமானவர . இல்லையில்ல; நான் அவருக்கு அறிமுகமானேன் .  என்னிடம் எதைக் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை  சட்டென்று முகநூலில் ஒரு தனி ஸ்டேடஸ் போட்டு மற்ற மூத்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டார். அவர் மட்டும் அன்று அந்த அறிமுகத்தைக் கொடுக்கவில்லையெனில் இன்று எனக்கு பதிவுலகில் இவ்வளவு நண்பர்கள் கிட்டியிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அதுமட்டுமின்றி என்னுடைய பதிவுகளில் வரும் பிழைகளை அவ்வப்போது சுட்டிகாட்டி, நான் உன் ப்ளாக்கிற்கு வந்துகொண்டுதான் இருக்கிறேன் தம்பி! அதனால் தப்புத்தப்பாக எழுதாமல் சரியாக எழுதப்பழகு என்று சொல்லாமல் சொல்லி எனக்குள் ஒருவித பயத்தினை உண்டுசெய்து, என் பதிவுகளின் தரத்தைக் கூடுதலாக்கியவர் என் அண்ணன் ஷைனிங்ஸ்டார் சீனிவாசன். ‘காதல் போயின் காதல்குறும்படம்  , மற்றைய பதிவர்களின் குறும்பட ஆசையை தூண்டிவிட்டது என்றால் அது மிகையில்லை. படம் ரிலிசான அன்று எங்கெங்கு நோக்கினும் ஷைனிங் புயல் இணையத்தை தாக்கிவிட்டது போன்ற பல்வேறு ஸ்டேடஸ்களை நீங்கள் பார்த்திருக்கலாம் .  2 ஆண்டுகளுக்கு முன் நாடோடி எக்ஸ்பிரஸ் எழுதிக்கொண்டிருந்த சாதாரண சீனிவாசனாக இருந்தவர், குறும்படத்திற்குப் பின் ஷைனிங்ஸ்டாராகி , இப்போது வேற லெவலில் இருக்கிறார். அவருக்கு கோவம் வராது ; வந்தால் சுற்றி இருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள். இன்றைய நிலையில் இவர் தும்மினால் கூட பல கிசுகிசுக்கள் பரவும் ; இணையம் ஆர்ப்பரிக்கும். இப்போதெல்லாம் ரசிகைகளின் அரவணைப்பில் சிக்கிப்போய் ஷைனிங் புயல் நம்மையெல்லாம் கண்டுகொள்ளவில்லையெனினும் அவ்வப்போது பதிவுகளில் நம் மனதைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்இவரிடம் பிடித்தது  இயல்பினை , இயல்பாகக் காட்டும் இவரது சீரிய எழுத்து. எளிய இலக்கியத்தில் அனைவருக்கும் புரியும்படி எழுதும் ஷைனிங்ஸ்டார் கூடிய விரைவில் ஒரு நாவல் எழுதப்பபோவதாக எமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருமுறை பதிவுலகின் வாத்தியார் , எங்களுக்கெல்லாம் குருவான திரு. பாலகணேஷ் அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் .

அண்ணேஉங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்என்று . அதற்கு அவருடைய பதில்

நான் வாசிக்கும் ஒரே இலக்கியவாதி சீனு தான்என்பதே .

இதே போல் என் சினிமாவிமர்சனத்தின் குருவான பதிவர் செங்கோவி அண்ணன், முகநூலில் நடைபெற்றஉங்களுக்குப் பிடித்த பதிவர் யார்?’ என்ற போட்டியில் ஷைனிங்ஸ்டாரையே முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே ஷைனிங்ஸ்டாரின் பெருமையை நீங்கள் அறியலாம்ஷைனிங்கின் பதிவைப் படிக்க  ஆழ்ந்த பொறுமை தேவை. பொறுமை இருப்பின், ஒரு அதிமுக்கியமான எளிய இலக்கிவாதியின் எழுத்துகள் கண்டிப்பாக உங்களை வசியப்படுத்தும். இவரின் சிறுகதைகளில் பெஸ்ட் என்று நான் நினைப்பது


எனும் சிறுகதை தான். இதுவரை .வே.சு விலிருந்து வா. வரையிலான  தமிழின் சிறந்த 1000 சிறுகதைகளில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன் . முழுநேர எழுத்தில் இறங்கினால், ஷைனிங்ஸ்டார் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவும் எதிர்கால தமிழிலக்கியத்தின் மிகமுக்கியமானதொரு கோடாகவும் வலம்வருவார் என்பதில் துளிசந்தேகமுமில்லை. அவர் அப்படிப்பட்ட நிலைக்குவர ஆவலுடன் காத்திருக்கிறேன் . இவரின் சில பதிவுகள் ,
அழிக்க முடியா நாயகன்
கற்றது கணிப்பொறியியல் - அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீா்


அறிவியல் 

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் எனும் தளத்தின் வழியாக எழுதிவரும் மஹாலக்ஷ்மி அக்காவினைப் பற்றி இங்கு பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். நாம் சாதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களின் பின்னால் உள்ள மெக்கானிசம் பற்றியும், நம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் சாதனங்களின் பின்னாலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் எளிமையாகவும் விரிவாகவும் எழுதி வருகிறார். எனக்கு அறிவியலின் மீது தீராக்காதல் உள்ளதுஆனால் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்படும் மொக்கையான  தூக்கம் வரும் அந்தகால அறிவியலும் , அதைச்சார்ந்து புரியாத மாதிரியான பாடங்களையும் படிக்கும் போது படுபயங்கர கடுப்பு தான் வரும். தமிழ்நாடு பாடபுத்தகங்களில் வரும் பாடங்களை, அந்த ஆசிரியர்குழுவினைக் காட்டிலும் திறமையாக எழுதுவதற்கு பல பதிவர்களால் முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இவரின் பதிவுகள். சரி, திறமை என்பது இங்கே கல்வியைப் பொறுத்துதானே மதிப்பிடப்படுகிறது. இவரின் சில கட்டுரைகள்,
மைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பாா்வை
 மின் அதிா்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்
அரசியல்
இதில் அறிமுகப்படுத்தபடுவது மாற்று இணையதளம். எழுத்தாளர்களின் சிறந்த கட்டுரைகள் இடம்பெறும் ஒரு முக்கியமான தளம் என்றே கூறலாம். பொதுவாக அரசியல் பற்றிய கட்டுரைகள் ஒருமைசார்ந்ததாகவும், தனிநபர் தாக்குதலாகவும் இருக்கும் . ஆனால் மாற்று தளத்தில் அப்படிப்பட்ட கட்டுரைகள் அரிது . கட்டுரைகள் எல்லாம் உண்மையான நோக்கில் உலக அரசியலை,  வரலாற்றுடன் எடுத்தியம்புகிறது. நம்மில் பலருக்கு அரசியல் ஞானம் என்பது அறவே இல்லை அல்லது ஒதுக்கி வைத்துவிடுகிறோம். உண்மையான அரசியலை உணர்ந்துகொள்வதற்கோ ,அறிந்து கொள்வதற்கோ நமக்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். நம் பள்ளிப் பாட புத்தகத்தில் கூட இந்திய சுதந்திர போராட்டம், நம் அடிப்படைச் சட்டம் போன்றவற்றை விளக்குகிறார்களே தவிர, அரசியலின் உண்மையான வரலாற்றைப் பற்றி சிறிதளவும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்ம . அரசியல் என்பது வரலாறு சார்ந்த ஒரு விஷயம். அரசியலின் அடிப்படைவரலாற்றுநிகழ்வுகள் தான். அதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது மாற்று தளம். தளத்தில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் .
கருப்பு முகமூடிப் போராட்டம் 
கட்டைப் பஞ்சாயத்தும் பக்குவப்பட்ட ஜனநாயகமும்

சமூகம்

இந்த டாபிக்கில் நான் குறிப்பிடப்போகும் பதிவரை தமிழ்இணைய, எழுத்து உலகில் அனைவரும் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். அவர்கள் தாம் திருமதி. தேனம்மை லக்ஷ்மணன். பல்வேறு வணிக, சிறு பத்திரிக்கைகளுக்கு எழுதிவரும் இவரின் பதிவுகள் மெச்சூர்டாகவும், பல முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்பொதுவாக காதல் பற்றிய என்னுடைய அபிப்பராயம் இரண்டே இரண்டு வகைதான், காதல்; கள்ளக்காதல். ஆனால் காதலுக்கென்று ஒரு அகராதியை உருவாக்கி, அதன் சாரம்சங்களை விவரித்து , அதிலுள்ள பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த
எனும் பதிவு எனக்கு மிகமிக படித்த ஒரு பதிவாகும் . உளவியல் மேதையான  சிக்மன்ட் ஃப்ரூய்ட் கூட காதலைப் பற்றி இவ்வாரெல்லாம் தெளிவாக அலசிப்பிரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் மேலும் சில பதிவுகள் ,
புரவியாய் ஒரு ஆளுமை
 உறக்கத்தின் வோ்
வேளாண்மை

எனக்கு ஒரு பெரிய ஆசை உள்ளது . எனக்கு மட்டுமல்ல; என் தாயாருக்கும் தான் . கடைசி காலத்தில் நல்ல நீரூரும் மருதநில கேணியைச் சுற்றி, 1 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து, என் அன்றாட உணவுக்கான விவசாயப்பொருட்களை நானே விவசாயம் செய்ய வேண்டும் என்பதே! எதேச்சையாக இன்று எஸ்.ராவின் உணவு யுத்தத்தை படிக்க நேரிடும்போது நாம் எவ்வளவு அபாயகரமான விஷப்பொருட்களை உணவாக இன்றைய தினம் உண்டு வருகிறோம் என்றறிந்ததும், என் ஆசையானது பேராசையாக மாறியது என்றால் மிகையில்லை. இன்றைய நிலையில் நாம் காய்கறிகளென்று நினைத்து உண்பதில்கூட எவ்வளவு நச்சுப்பொருட்களுள்ளன என்பதனையும்வாழைப்பழம் சார்ந்து இலத்தின் அமெரிக்க நாடுகள், கரிபியன் பகுதிகளில் நிகழ்ந்த மறைமுக யுத்தங்கள் போன்றவற்றை படிக்கும்போது  ஒருநிமிடம் நம் மனம் துக்கத்தில் விக்கும். இப்போது பெரும் சர்ச்சைக்குள்ளான நூடுல்ஸில் கலக்கப்பட்டு வரும் மோனோசோடியம் குளோமேட் பற்றி அன்றே எஸ். ரா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . கண்டிப்பாக நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் உணவு யுத்தம். அது சரி, சொல்ல வந்ததை மறந்துவிட்டேனே ! இந்த தலைப்பின் கீழ் நாம் பார்க்க இருப்பவர் ஒரு பழம்பெரும் பதிவர் . என் சிவ புராணம் , கீதம் ! சங்கீதம் , இந்தியக்கனவு 2020, பாடும் நிலா பாலு , என் கூட்டில் இருந்து என்ற இவரது வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றையாவது கட்டாயம் வாசித்திருப்பிர்கள். இவர் 2006 – லிருந்து தோட்டம் எனும் வலைத்தளத்தில், வீட்டிலேயே ஒரு சிறு தோட்டம் அமைத்து, அதில் பல்வேறு வகையான காய்கறிகள், பூக்கள், பழங்கள் போன்றவற்றை சுயமாக வளர்த்து , அதன் வளர்ப்புமுறைகளைப் பற்றியும், தேவையான விதைகள் கிடைக்குமிடங்கள் பற்றியும் , வேளாண் கண்காட்சிகள் பற்றியும் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்தியும்புகிறார் . மேலும் நம் வீட்டில் தோட்டம் அமைப்பது குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளித்தும் வருகிறார் . கண்டிப்பாக இவரது பணி பாராட்டத்ததக்கதாகும் . இவருடைய சில பதிவுகள் , 

(மேலே குறிப்பிட்ட ஜென் கதை, A BITTER SWEET OF LIFE எனும் தென்கொரிய திரைப்படத்தில் இருந்து எடுத்தாழப்பட்டது . அப்படத்தில் வரும் மற்றொரு ஜென்  கதையை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன். )

நன்றியுடன் ,

மெக்னேஷ் திருமுருகன் .

20 comments:

 1. Replies
  1. முதலாமாய் வந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றி அண்ணே

   Delete
 2. // அதனால் எனக்குத் தான் இழப்பே, தவிர அவர்களுக்கில்லை... //

  தம்பி எங்கேயோ போயிட்டீங்க...! பாராட்டுகள்...

  அனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்... அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. வணக்கம்,
  அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்,
  நன்றி. தொடரட்டும் உம் தொடர்,,,,,,

  ReplyDelete
 4. சூப்பர் போஸ்ட். வாழ்த்துகள்

  ReplyDelete
 5. வாழ்த்துகள்! இயல்பா சொல்லிட்டுவரீங்க....அனைத்தும் அருமை!

  ReplyDelete
 6. அனைத்தும் சிறப்பான தளங்கள்! வாழ்த்துக்கள்! இணைப்புக்கு சென்று படிக்கிறேன்!

  ReplyDelete
 7. தம்பி......
  கட்டளையை பொறுப்புணர்ந்து நிறைவேற்றி வர்ற.... செம அறிமுகங்கள்...

  அனைவர்க்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. தலைப்பு வாரியாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் சிறு முன்னுரை தரும் விதம் எழுதும் பாணியில் அழகாகக் காணப்படுகிறது. வாழ்த்துக்கள். புதிய பதிவர்களைக் கண்டேன். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
 9. இலக்கியவாதி என்று சொன்னால் சீனு கூச்சப்படுகிறான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் சிறந்த இலக்கியவாதிதான். அறிமுகங்கள் அனைத்தும் அருமை. நல்வாழ்த்துகள். அதுசரி.. கொரியப் படங்கள்ல ஜென் கதைல்லாம் கூட சொல்றாங்களா என்ன...? ஒண்டர்...ஒண்டர்..

  ReplyDelete

 10. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதிவர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 13. என் தளத்திற்கு மறுமொழியிடவில்லை என்ற காரணத்திற்காக, நான் நேசித்துப்படிக்கும் பதிவர்களின் எழுத்தை நான் ரசிக்க மறுப்பது முட்டாள்தனம். // இது இதுதான் அருமை...நாங்களும் அப்படித்தான்...யாரு வராங்க போறாங்கன்றது எல்லாம் கிடையாது...அதேபோல இந்த வலைத்தளங்கள்தான் அப்படினு எல்லாம் இல்லை பிடித்திருந்தால வாசிப்பு, கருத்து...இப்படித்தான்...னோ பயாஸ்ட் வியூ...கை கொடுங்க்ள் இந்த அரிய கருத்தை இங்கு முன் வைத்தமைக்கு...

  ஷைனிங்க் ஸ்டார் இலக்கியத்திலும் ஷைனிங்க்தான்.....

  வாழ்த்துகள் அனைவருக்கும்!

  ReplyDelete
 14. சீனு நல்ல எழுத்து நடை உடையவர். நீங்கள் சொன்னவை அவருக்கு முற்றிலும் பொருந்தும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது