07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 18, 2015

வந்துவிட்டேன்! வந்துவிட்டேன் !!

அனைவருக்கும் வணக்கம் !


என்னடா இவன ரெண்டு நாளா ஆளக் காணோம் என்று ஒருவேளை யாராவது என்னைத் தேடி இருந்தாளோ , யோசித்திருந்தாளோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இன்றைய பணியை இனிமையுடன் ஆரம்பிக்கிறேன் . இரு நாட்களாக  சளித்தொல்லையில் சிக்குண்ட நான் , கோட்டோ சீனிவாசராவிற்கு டப்பிங் குரல் கொடுப்பவரின் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே விடுமுறைக்கு காரணம் .  காலம் திரும்ப வராது ; ஆனால் இவ்விரு நாட்களுக்குண்டான பதிவுகளையும் எழுதி போஸ்ட் போடாமல் விடுவதாக இல்லை என்று தமிழ்வாசி அண்ணனுக்கு ஒரு சபதம் கொடுத்திருக்கிறேன் . பார்க்கலாம் ! முடிந்தால் இன்னும் இரு பதிவுகள் கூடுதல் இணைப்பாக கொடுக்கும் உத்தேசமும் உள்ளது .


சரி , ஒரு குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கலாம். ஒரு சீடன் , தன்னுடைய குருவுடன் ஒரு காட்டில் பயணித்துக் கொண்டிருந்தானாம் . அந்நேரம் பலவிதமான தாவரங்கள் அசைந்து ஆடினவாம் . அவை அசைந்தாடுவதைக் கண்ட சீடன் , குருவிடன் கீழ்க்கண்டவாறு வினவினானாம் .

‘குருவே ! இம்மரங்களின் கிளைகள் ஆடுவதால் காற்று வருகிறதா ? அல்லது காற்று வருவதால் கிளைகள் ஆடுகின்றனவா ?’

அதற்கு குரு சிரித்துக் கொண்டே சொன்னாராம் ,

‘ கிளைகளும் ஆடவில்லை ! காற்றும் வரவில்லை . உன் மனம் மற்றும் மூளை தான் ஆடுகின்றது . அவையிரண்டும் என்ன கூறுகின்றதோ , அதுதான் உன் கேள்விக்கான முடிவு ’

அதாவது , நாம் பார்ப்பவைகளை வைத்தே எல்லாவற்றையும் முடிவெடுக்கிறோம் . ஆனால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது ; அவரவர் பார்வைக்கேற்ப மற்றவர்களும் நமக்குத் தெரிவார்கள் என்பதே இக்கதையின் விளக்கம் .

குருநாதர்

வலையுலகில் என்னைப் பிரவேசிக்க வைத்த சிவகாசிக்காரரையும் , இவ்வுலகின் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிக்கொடுத்த சைனிங் ஸ்டாரைப் பற்றியும் முந்தையக் கட்டுரைகளில் பார்த்தோம் . இப்போது வலையுலகில் மிகமுக்கியமானவரும் , என் குருநாதர்க்கெல்லாம் குருநாதருமான ஒரு பிரபல பதிவரைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகின்றோம்  . உ.வே.சாவிற்கு எப்படி மீனாட்சி சுந்தரனாரோ அப்படி எனக்கு இவர் . நான் உ.வே.சா கிடையாது ; ஆனால் அவர் மீனாட்சி சுந்தரனார் தான் . பதிவுலகில் நுழைந்தபோது சீனு அண்ணனுக்கு முன்பே எனக்கு பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும் என்ற என்னுடைய கட்டுரையின் கமெண்ட் பாக்ஸ் மூலம் அறிமுகமானவர் அவர் .  அப்பதிவில் பாதாள பைரவியுடன் ஒப்பிட்டு சிலபல ஆங்கிலப் படங்களை ஓட்டியிருந்தேன் .  அப்போது அவரை எனக்கு சரிவரத் தெரியாது . யாரோ நம்முடைய பதிவை ரசித்துப் படித்த முதுகலை ஆசிரியர் என்று நினைத்தேன் . அதன்பின் முகநூலில் சீனு அண்ணனின் பரிந்துரையின் பேரில் அவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பினேன் . அதன்பின் அவரை சககாலத்திய இளம்பதிவர்களெல்லாம் தூக்கிவைத்துக் கொண்டாடுவதைப் பார்த்து அதிசயித்தேன் . என்னடா இது ? நாம அஸ்ஸால்டா நினைச்ச ஆள எல்லாரும் தூக்கிவச்சி கொண்டாடுராங்க என்றபடியே அவரைத் தள்ளி நின்று பார்க்க ஆரம்பித்தேன் . மிகவும் சாதாரணமானவராக தெரிந்தார் ; பார்த்தாலும் எழுத்தாளர் லுக் இல்லையே ! ஆனால் எல்லோரும் கொண்டாடுகிறார்களே ! அப்படி என்ன எழுதிவிட்டிருக்கப்போகிறார் இந்த முதியவர் ? அவரது பதிவுகளை வாசித்தேன் . இணையத்தில் ஒரே நாளில் , ஒருவரின் பதிவுகளின் பெரும்பகுதியை நான் வாசித்த நாள் அதுதான் . நேரம்போவதே தெரியவில்லை . மதிய உணவை மறந்துவிட்டு வாசித்தேன் . அப்படி என்ன எழுதியிருந்தார் ? ஜாலி ! ஹாஸ்யம் ! நகைச்சுவை ! காமெடி ! ஹுயுமர் ! சொல்லாடல் என எழுதியிருந்தார் . இப்படிப்பட்டவரின் ஹுயுமர் சென்ஸை இன்னும் பத்திரிக்கைகள் பயன்படுத்தாமல் இருக்கிறதே என்று அதிசயித்து முகநூலிற்கு சென்றேன் . ஹாரி அண்ணனின் ஹார்லிக்ஸ் வித் ஹாரி எனும் வலைப்பதிவு நிகழ்ச்சியில் அவர் பேட்டி கொடுத்திருந்தார் . ஹாரி அண்ணனின் கேள்விகளையும் , அதற்கான அவரின் பதிவுகளையும் பார்த்து ரசித்தேன் . புகழ்ச்சியை விரும்பாத திறமைக்காரர் அவர் . வயதில் மூத்தவர் ! ஆனால் குணத்திலும் சுறுசுறுப்பிலும் என்னைவிட இளையவர் . இப்படிப்பட்டவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்குமா என தவித்தபோது தான் ஒருமுறை சென்னைப் பயணத்தில் சீனு அண்ணன் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது . இன்றளவும் நான் எழுதவந்து எனக்குக் கிடைத்த அங்கிகாரங்களில் மிகப்பெரிதாக நான் நினைப்பது , இவரின் மாணவர் நான் என்று கூறிக்கொள்வதைத்தான் .

வெல் ! இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்; நான் யாரை இவ்வளவு நேரம் குறிப்பிடுகிறேன் என்று . ஆவி , சிவகாசிக்காரர் , அரசர் , சீனு , ஸ்கூல்பையர் , ஹாரி முதலிய எங்களுக்கெல்லாம் குருநாதர் , வலையுலகின் வாத்தியார் திரு. பாலகணேஷ் அவர்கள் தான் அது. பதிவுகளின் காலவரிசைப்படி மூன்றாமாவதாக அறிமுகப்படுத்தியிருந்தாலும்  எப்போதும் எங்களுக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும் , கலங்கரை விளக்கமாகவும் இருந்துவருபவர்  எங்களின் குருநாதர் வாத்தியார் . அவரைப்பற்றிய அறிமுகம் வலைச்சரத்திற்கு தேவையில்லை எனினும் என் குருநாதர் வரிசையில் இருப்பதாலும் , மேலும் புதிதாக வலையுலகிற்கு வந்தவர்களுக்கும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற இங்கு அவரைக் குறிப்பிடுகிறேன் .

வாத்தியாரின் பதிவுகள் அனைத்துமே எனக்குப் பிடிக்குமென்பதால் அவரின் வலைத்தள முகவரியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் . அவரி அனைத்துப் பதிவுகளும் உங்களை திருப்தி படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை .வரலாறு

இலக்கியச்சாரல் எனும் தலைப்பில் வலையுலகில் எழுதிவரும் ஞானசம்பந்தன் ஐயா , தமிழ் இலக்கியம் , எழுத்துகள் மட்டுமின்றி உலக இலக்கியங்களும் அதன் சார்ந்த பிண்ணனிகளும் , அதிலிருந்து இன்றைய நவீன யுகத்தில் உபயோகப்படுத்திவரும் விஷயங்களையும் தெளிவாக அருமையாக எடுத்துரைக்கிறார் .இவரின் சில பதிவுகள் ,பல்சுவை

கரிசக்காடு எனும் வலைத்தளத்தில் எழுதி வரும் உதய்சங்கர் அண்ணா , எட்டு சிறுகதைத்தொகுதிகள் , ஒரு குறுநாவல் , குழந்தைப் பாடல்கள் , கவிதை , குழந்தை இலக்கியம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதிவருகிறார் . மேலும் வரலாறு சார்ந்த விஷயங்களையும் அவ்வப்போது ஆதாரத்துடன் எழுதி வரும் இவரின் பதிவுகளில் சில ,
தமிழ் + தமிழர் இலக்கியம்

தமிழ்மொழி குறித்தும் , சங்க கால தமிழ் இலக்கியங்கள் மற்றும் மக்களின் வீரம் , பண்பாடு போன்றவற்றை பற்றியும் முனைவர் ரா. குணசீலன் அவர்கள் மிக அருமையாக எழுதிவருகிறார் . மேலும் சங்க காலத்திலய மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சி.ஜி புகைப்படங்களும் இடம்பெறுவது இவர் தளத்தின் சிறப்பு . இவரின்தளம் ,இலக்கியம்

எண்ணிய முடிதல்வேண்டும் எனும் தளத்தில் சிறப்பாக எழுதி வரும் ஷைலஜா அக்கா , சிறுகதை எழுதுவதில் மட்டும் வல்லவர் அல்ல ! பலவிதமான கட்டுரைகள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர் . சமதர்மம் , சகோதரத்தை வலியுறுத்தும் இவரது பதிவுகளில் ஆழ்வார்களின் வரலாறும் , அவர்கள் தமிழன்னைக்குச் செய்தியம்பிய நாலாயிரந் திவ்விய பரபந்தத்தின் சிறந்த கருத்துகளையும் , ஆங்காங்கே குட்டிக் கதைகளையும் எழுதிவருகிறார் என்பது கூடுதல் சிறப்பு . இவரின் சில பதிவுகள் ,இதில் நாலாயிரத்தை மீட்ட நாத முனிகள் எனும் கட்டுரை கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு அட்டகாசமான கட்டுரை .

வலைச்சரத்திற்கான இக்கட்டுரையை எழுதி முடிக்கும்போது 15 பக்கத்தைக் கடந்துவிட்டது . ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் , அவர்களின் பதிவுகளைப் பற்றியும் மிகவிரிவாக எழுதியிருந்தேன் . ஆனால் படிப்பவருக்கு என்றும் அலுப்பைத் தரக் கூடாது என்ற வாத்தியாரின் அறிவுரை திடீரென மனத்தின்கண் வர ஆரம்பித்ததால் , வாத்தியார் குருநாதராக இருக்கும் இப்பதிவின் நீளத்தையாவது குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தணிக்கை செய்யவேண்டியதாகி விட்டது .

நன்றியுடன் ,
மெக்னேஷ் திருமுருகன் .

13 comments:

 1. வாத்தியார் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. வாத்யார்....... வலையுலகில் நிறைய பேருக்கு. அவரது தளம் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

  இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வணக்கம், இன்றைக்கு அநிமுகமாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
  நன்றி.

  ReplyDelete
 4. பத்திரிகை உலக அனுபவம் கற்றுத் தந்த பாடங்களினால் படிப்பவர் சலித்துக் கொள்ளாத அளவுக்கான சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எழுதுகிறேன் என்பதைத் தவிர நான் சாதாரணன்தான் மெக்னேஷ். என் தகுதிக்கும் அதிகமான உயரத்திற்கு என்னைக் கொண்டு சென்று விட்டாயோ என்று மெலிதான கூச்சத்தையே தந்துவீட்டது உன் எழுத்து. மன நெகிழ்வுடன் பலகோடி நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட தளங்களுக்கு இப்போது செல்லவே மனமில்லாத மகிழ்வில் இருக்கிறேன். பின்னர் நிச்சயம் அனைத்தையும் படித்து விடுகிறேன்.

  ReplyDelete
 5. மேக்னேஷ் சகோ! இப்போ உடல் நிலை பரவாயில்லையா?

  இன்று உங்க வாத்தியார் என் அன்பு அண்ணன் பாலா அவர்களுக்கு நீங்க கொடுத்திருக்கிற இன்ட்ரோவுக்காக உங்களுக்கு ஒரு போக்கே பார்சல்!! உண்மையில் அவர்போல ஹ்யூமரஸ் ஆட்கள் ரொம்ப ரொம்ப கம்மி!! அவரிடம் நம்மை போன்ற (என்னை போல னு சொல்லணுமோ) தொடக்கநிலைப் பதிவர்கள் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது சகோ:) மிக்க நன்றி!

  ReplyDelete
 6. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வாத்தியார் பாலகணேஷ் அவர்களின் பதிவுகள் அனைத்துமே ரசிக்க வைக்கும்! அவரோடு இன்று அடையாளப்படுத்தப்பட்ட அனைவரின் பதிவுகளையும் வாசித்தவன் என்பதில் மகிழ்ச்சி! தொடருங்கள் உடல்நலம் கவனித்துக் கொள்ளுங்கள்! நன்றி!

  ReplyDelete
 8. பாலகணேஷ் அண்ணா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அனைத்துப் பதிவர்களைப் பற்றியும் சுவையான அறிமுகங்கள்...
  பதிவு, நறுக்கென்று இருக்கின்றது - சிறப்பு!

  ReplyDelete
 10. அட நம்ம வாத்தியார்! வாத்தியாருடன் அணி கோர்த்திருக்கும் அனைத்து பதிவர் அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவர்க்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குருநாதர் பற்றி இன்று தான் முழுமையாக அறிந்தேன். மிக்க நன்றி !

  ReplyDelete
 12. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது