07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கொக்கரக்கோ. Show all posts
Showing posts with label கொக்கரக்கோ. Show all posts

Sunday, June 19, 2011

வலைச்சரம் - காரக்குழம்பு...!

தொடர் வேலைப் பளுவினால் இன்று காலை வெளியிட வேண்டிய பதிவு, தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

இன்று நம் இணைய உலக அதிரடி அரசியல் பதிவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு அறிமுகம்! நம்ம தமிழ் மக்கள்ட்டயே ஒரு பழக்கம் உண்டு. எந்த அளவிற்கு அரசியலைப் பற்றி திட்டிப் பேசுகின்றார்களோ, அதே அளவிற்கு அரசியல்வாதிகளைப் பற்றியும், அரசியல் செய்திகளையும் விழுந்து விழுந்து படித்துத் தெரிந்து கொள்வார்கள்.

அதனால நம்ம வலையுலக அரசியல் அருவா பார்ட்டிங்களப் பத்தி இன்னிக்கி பார்க்கலாம்.

அரசியல்னு ஆகிப்போச்சு,  நம்ம தமிழ் நாட்டுல மதிப்பு இருக்கோ இல்லியோ, வாக்கு வங்கி இருக்கோ இல்லியோ..! புரோட்டோகால் நிமித்தம் தேசிய கட்சியான காங்கிரஸை முதல்ல பார்த்துடுவோம்.

நம்ம பதிவுலகத்துல எனக்குத் தெரிஞ்சி காங்கிரஸ் கட்சி சார்புடையவர் என்பதை விட, தீவிர காங்கிரஸ் ஆதரவு பதிவர் என்றால் அது நம்ம சஞ்சய் காந்தி தான். சாதாரணமா நம்ம ஊர்ல கருணாநிதின்னு பேரு இருக்கும், அவர் சரியான அதிமுக காரரா இருப்பார். ராமச்சந்திரன்னு பேர வச்சிக்கிட்டு பக்கா திமுக வா இருப்பார். ஆனா நம்ம பதிவர், தனக்கு வச்ச பேர காப்பாத்துற மாதிரி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா தீவிர இணையப் பணி செய்வதற்கும் மேலாக, தன்னோட பேருக்கு ஏத்த மாதிரி, (டிபிகல் காங்கிரஸ் காரங்களாட்டமா இல்லாம), சும்மா கில்லி மாதிரி எதிரிங்கள சொல்லி அடிப்பாரு. ஆனா என்னான்னே தெரியமாட்டேங்குது, அவர்ட்ட மாத்திரம் எந்த எதிர்க்கட்சியினரும் ரொம்ம வாக்குவாதம்லாம் பண்ணாம போயிடுறாங்க!!!

பதிவுகள்ல அதிகமா அரசியல் எழுதுவதில்லை என்றாலும் கூகுள் பஸ்ஸில் இவரை அடிச்சிக்க ஆளே இல்லை. 

அடுத்ததா, தமிழ்நாட்டுல இன்னிக்கி ஆளும் கட்சியா இருக்குற அதிமுக பதிவர்கள் என்று சொல்ல வேண்டுமானால்..., அப்படி வெளிப்படையா சொல்லிக்கிட்டு யாரும் எழுதறா மாதிரி தெரியல. அப்படி ஆதரவா எழுதுறவங்க எல்லாருமே, திமுக எதிர்ப்பு நிலை என்ற முகமூடியோடு தான் களத்திற்கு வருகின்றார்கள். சிலர் தமிழுணர்வாளர்கள் போர்வையில் வருகின்றார்கள். எது எப்படி இருந்தாலும் இன்று வரையில் அதிமுகவுக்கும் அதன் தலைமைக்கும் ஆதரவா எழுதிக்கிட்டு இருக்கற பதிவர் பட்டியலை கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த பட்டியல்ல முதல் இடம்னா அது நம்ம கோவியார் என்று செல்லமாக அழைக்கப்படும் கோவி.கண்ணனுக்குத் தான். தீவிர திமுக எதிர்ப்பாளர். அதனால் அதிமுக வை ஆதரிப்பதாகச் சொல்லும் இவரது பதிவுகள்.

அடுத்ததா இந்த பட்டியல்ல இடம் பிடிக்கிறது யாருன்னா அது நம்ம குழலி தான். அதி தீவிர திமுக எதிர்ப்பாளர். இவருடைய பத்து (அரசியல்)பதிவுகளை தொடர்ந்து படித்தால் போதும், கருணாநிதி எதிரில் வந்தால் கத்தியால் குத்திவிடும் அளவிற்கு கோபம் எகிறும்!! அவ்வளவு காரசாரமாக கருணாநிதியைப் பற்றி எழுதுவார்.

அடுத்ததா அத்திவெட்டி ஜோதிபாரதி. இவர் அதிகமாக பதிவு எழுதி திமுக வை எதிர்ப்பதைக் காட்டிலும் கூகுள் பஸ், ட்விட்டர் இத்தியாதிகளில் கலக்கி எடுப்பார். திமுகவை அல்லது கருணாநிதியை எதிர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக பத்து பஸ் வரையிலும் விட்டு நாட்டுக்கு தன் கடமையை ஆற்றுவார்!

இதற்கு மேல் திமுக ஆதரவு அல்லது ஒரிஜினல் திமுக பதிவர் பட்டியலையும் பார்த்து விடலாம். 

லக்கிலுக் இந்த பட்டியலில் முக்கியமானவர் என்றாலும் இவரைப்பற்றி ஏற்கனவே வேறு வகையறாவில் அறிமுகப்படுத்தி விட்டதால் மற்றவர்களைப் பார்த்து விடலாம்.

முதலாமவர் மிக முக்கியமானவர். இவர் திமுக ஆதரவு என்பதை விட, சாதாரண திமுக உறுப்பினர் என்பதை விடவும், இவர் ஒரு திமுக பொதுக்குழு உறுப்பினர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை திமுகவின் தலைவரை தேர்ந்த்டுக்க வேண்டிய தகுதியில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.  கலைஞருக்குப் பிறகு யார் திமுக வை தலைமையேற்று வழி நடத்துவது என்ற கேள்வி வரும் பொழுது, இவரைப் போன்ற சில நூறு பேர் கைகளில் தான் அந்த விடை இருக்கின்றது!!

இவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும், தன் கட்சியின் கொள்கைகளையும், தலைமையையும் எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல், மிகத் திறமையாக மாற்றுக் கட்சியினருடன்..., பழைய காலத்து புள்ளிவிவரங்களுடன், ஆதாரப் பூர்வமாக அருமையாக வாதிட்டாலும்...., எதிர்க் கட்சியினரும் போற்றி மதிக்கும் ஒரு பண்பாளர் இவர் என்றால் யாரும் மறுத்துக் கூறமாட்டார்கள்.

புரிந்திருக்கும், நான் யாரை சொல்லப் போகிறேன் என்று..! அவரே தான். புதுகை அப்துல்லா தான் அந்த பதிவர். அவரது மூன்று பதிவுகளை நான் நிச்சயம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். திராவிடமும், கம்யுனிசமும் பாகம் 1,    பாகம்  2,

வேறொரு நபரின் பதிவுக்கு இவர் எழுதிய கருத்துரையை தான் இரண்டுபாகமாக பதிவேற்றியிருக்கின்றார். திராவிடத்திற்கும், கம்யூனிசத்திற்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளையும், இதில் எந்த விதத்தில் திராவிடம் மக்களுக்குச் சிறந்த சேவை அளிக்கிறது என்பதையே ஒப்புமையுடன் மிக அழக்காக அரசியல் பற்றி அனா, ஆவன்னா தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படியாக எழுதியிருப்பார்.

இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் கிழக்கில் புத்தகமாக வெளியிடும் அளவிற்கு வந்திருக்கும். அடுத்த பதிவு அயோத்தி விவகாரம் பற்றிய தீர்ப்பு வந்த பொழுது, சக இஸ்லாமிய தோழனின் உணர்வுகளை உதாரணமாக வைத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் இந்திய இஸ்லாமிய மக்களின் உணர்வுகளையும், நியாயங்களையும் கயிற்றின் மேல் நடப்பது போன்ற உத்தியோடு யாருக்கும் எந்த சேதாரமும் இன்றி அரிதி இட்டு முடித்திருப்பார். அயோத் 'தீ' என்ற இந்த பதிவை படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

அடுத்ததாக உடன்பிறப்பு. அடிமட்ட திமுக தொண்டன் அளவிற்கு ஊறிப்போன திமுக ஆதரவாளர். ஆனால் அமெரிக்கா வாசி! திமுக, கலைஞர் இதிலெல்லாம எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. இவரிடம் மாற்றுக் கருத்து சொல்வது கூட வேஸ்ட் என்று எதிர்க்கட்சியினர் ஒதுங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு திமுக அபிமானி.

அடுத்ததாக அபிஅப்பா. இவர் ஒரு அரசியல் பதிவு போட்டாலே மாற்றுக் கட்சியினர் வந்து கும்மு கும்மு என்று கும்மும் அளவிற்கு காரசாரமாக இருக்கும். எத்தனை கும்மல்கள் வந்தாலும் திருப்பிக் கும்முவார். இவரைப் பற்றி இதற்கு மேல் நான் எழுதினால் அது சரியாக இருக்காது.

அதனால் அடுத்ததாக மிக மிக முக்கியமான ஒரு திமுக பதிவரை நான் இங்கு அறிமுகம் செய்கின்றேன். ஃபிப்ரவரி வரை தனது வலைப்பூவை அப்டேட் செய்து வைத்திருக்கின்றார். தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, அகில உலகப் புகழ் அல்லது பிரபலம் ஆனவர். இவரால் திமுகவுக்கு லாபமா, சேதாரமா என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

என்ன? ஒன்றும் புரியவில்லையா? தற்பொழுது திஹார் சிறையில் இருக்கும் "ராஜா" தான் அந்த பதிவர். தமிழ் வலைப்பதிவர் என்ற வகையில் இவருடைய தளத்தை இங்கு அறிமுகம் செய்கின்றேன். இது ஒரு வலைச்சர வாசகர்கள் அதிகம் அறிந்திராத ஒரு புதிய அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

அடுத்த அறிமுகமாக அருள். இவர் ஒரு பாமக ஆதரவாளர். சமீபத்திய இவரது "சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து" என்ற இந்தப் பதிவைப் படித்தாலே இவரது பன்முக அறிவு நன்கு விளங்கும்.

அடுத்ததாக கம்யூனிசத்திற்கு ஆதரவாக எழுதக் கூடிய தளம் வினவு தளம். இவர்களைப் பற்றியும் ஏற்கனவே வேறு வகையறாவில் அறிமுகப்படுத்தியிருப்பதால் புதிதாக எதுவும் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நண்பர்களே. சில தவிர்க்க இயலாத சொந்த வேலையின் காரணமாக அதிக பதிவுகள் எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.
மேலும் வாசிக்க...

Friday, June 17, 2011

வலைச்சரம் - மி(சி)னி மீல்ஸ்!!

நேத்தே சொன்ன மாதிரி இன்னக்கி, அப்படியே சினிமா கொட்டா பக்கமா போயி கொஞ்சம் சினிமாவும், நிறைய கடலையும் போடலாம்.

"கீத்துக் கொட்டாய்"  ன்னு ஒரு தியேட்டர வச்சிக்கிட்டு நம்ம பழைய வவாச ல  இருந்த இராம், தேவ், கப்பி, வெட்டிப்பயல் எல்லாருமா பார்ட்னர்ஷிப்ல "ரீல் மச்சி ரீல்" னு பல மொழிப் படங்கள ஓட்டிட்டு இருக்காங்க.

இங்க போனா பல மொழிப்படங்கள அவங்க ஸ்டைல்ல பிரிச்சி அக்குவேற ஆணி வேறயா கலாய்க்கிறாங்க. பல ஹாலிவுட் படங்கள், ஹிந்திப் படங்கள் எல்லாம் கூட அருமையா விமர்சனம் பண்ணியிருக்காங்க.

இங்க போய் கொஞ்சமா மேய்ஞ்சு வச்சிக்கிட்டம்னா, சில அப்பாடக்கர் பார்ட்டிகள்ட்ட பீட்டர் வுடுறதுக்கு ரொம்ப வசதியா இருக்கும்!!

சினிமா, விமர்சனம்னு தமிழ் இணையத்துல நின்னுகிட்டு பேசினோம்னாலே நம்ம கேபிளாரப் பத்தி பேசாம இருக்க முடியாது. இவரோட சினிமா விமர்சனங்களைப் பற்றி சொல்லனும்னா, ஒரு படத்தோட விமர்சனத்த படிச்சிட்டு படம் பார்க்க போகறவங்கள விட படமே (சினிமா படம் தாங்க!) எடுக்கறவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

யாராவது சினிமா டைரக்ட் பண்ணனும்னாலும் சரி, இல்லன்னா தயாரிக்கனும்னாலும் சரி, சமீபத்தில் இவர் எழுதிய 50 படங்களோட விமர்சனத்த படிச்சாலே போதும், எது செய்யணும்கறத விட எதெதெல்லாம் செய்யக்கூடாது, என்பது தெளிவாகப் புரிந்து விடும். அந்த அளவிற்கு டெக்னிகல் குறைகளையும், கமர்ஷியலா ஹிட் ஆவறதுக்கு விடுபட்டதையும் மறுக்க முடியாத அளவிற்கு எழுதியிருப்பார்.

அதே சமயம் ஆரம்ப காலங்களில் ஒரு படம் பார்க்கப் போக வேண்டும் என்றால் இவர் விமர்சனங்களைப் படித்தாலே போதும். முடிவெடுத்து விடலாம். இவரோட கொத்து பரோட்டா, சாப்பாட்டுக் கடைக்கெல்லாம் நான் ரெகுலர் கஸ்டமர்.

அடுத்ததா வலையுலக 'முடி'சூடா மன்னன், ஜாக்கியாரைப் பற்றி (தலைவரே.. 'முடி' யப்பத்தி பேசுனதுல ஏதும் உள்குத்து இருக்கறதா யாராவது போட்டு குடுத்தாங்கன்னா நம்பிடாதீங்க!) சொல்லலன்னா இந்தப் பதிவ படிக்கறவங்களுக்கு தொண்டை நனையும் அளவிற்கு தண்ணீர் குடித்த திருப்தி ஏற்படாது!!

இவர் பதிவுகளோட அழகே அந்த "எழுத்துப் பிழையில்" தான் இருக்கு! ஆனா யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, இப்பல்லாம் அந்த அழகு அடிக்கடி எட்டிப்பார்க்க மாட்டேங்குது.

தமிழ் வலையுலகத்தில் மிகப்பெரிய வாசகர் கூட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர், தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் எந்த நேரத்திலும் கொண்டதாகத் தெரியவில்லை. "நான் இப்படித்தான்" என்று பட்டவர்த்தனமாக, முகத்திலடித்தார் போல சொல்லும் அந்த தைரியம்..... "உண்மையாய் இருப்பதில் தான் வெற்றியே இருக்கிறது" என்பதை உணர வைக்கின்றது.

இவ்வளவு பெரிய வாசகர் கூட்டம் இருந்தாலும், இவருடைய பல காண்ட்ரவர்ஷியல் பதிவுகள், பலத்த எதிர்ப்பையும், தனிநபர் விமர்சனங்களையும் இவரை பல சமயங்களில் எதிர்கொள்ள வைத்திருக்கின்றன. (ஒரு தடவயாவது இவரை கன்னா பின்னான்னு திட்டி ஒரு பதிவு போட்டா, எனக்கும் கொஞ்சம் வாசகர் கூட்டம் ஏறும்னு நினைக்கிறேன்!)

ஜாக்கியைப் பற்றி சொல்லி விட்டு அவரது சினிமா விமர்சனத்தப் பத்தி சொல்லலேன்னு நினைக்கிறீங்களா? அது மேட்டரே இல்லீங்க. எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். ஆனா அவரோட "சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்" இருக்கே.....!

ச்சே... அத நான் மிஸ் பண்ணவே மாட்டேன். அதுல ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்காது, அதாங்க அந்த "பலான" ஜோக்! அதமட்டும் நான் படிச்சதே இல்ல!!

நண்பர்களே, திடீர் என்று வந்த ஒரு அவசர அழைப்பின் காரணமாக இன்று (வெள்ளி) வெளியூர் செல்வதால், சுறுக்கமாக முடித்துக் கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்! ("தப்பிச்சோம்னு" நீங்க சொல்றது என் காதுல விழவே இல்லையே!) இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து அடுத்தடுத்த பதிவுகளில் நிறைய அறிமுகங்களோடு சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...

Thursday, June 16, 2011

வலைச்சரம் - தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்...!

வலைச்சர வாசக நண்பர்களே, மூன்று நாட்களாக சிறிதும், பெரிதுமாய் உணவகங்கள், பழமுதிர் சோலைகள் எல்லாம் சென்று ருசித்துக் கொண்டிருந்த நம் பயணம், க்ளைமேட் நன்றாக இருப்பதால், அப்படியே பொடிநடையா ஒரு எட்டு பீச்சாங்கரைக்குப் போய் காத்து வாங்கிவரலாம்னு திட்டம். என்ன தயாராயிட்டீங்களா? வாங்க போலாம்!

பீச்சுக்கு வந்தவுடனேயே ஒரு கையில டின்னும், இன்னொரு கையில பேசினுடனும் வரும் நபர்களைப் பார்த்து எச்சில் விடக்கூடாது. இந்தப் பக்கமா கொஞ்சம் காதை திருப்புங்க. அங்க ஒருத்தர் உட்கார்ந்து பாடிட்டிருக்கார் பாருங்க. என்னது...? சிவக்குமாரா?... ம்ம் ஜேசுதாஸா...? ஹலோ பீச்சு, பாட்டுன்னா இவங்களத் தவிர வேற யாரும் நியாபகத்துக்கு வர மாட்டாங்களா? அவங்கள்லாம் பாறை மேல ஒக்காந்துகிட்டு, மனுசப்பயலுங்க அண்ட முடியாத அலைகளைப் பார்த்து தான் பாடுவாங்க!

இவரு பாடுறத கொஞ்சம் நல்லா கேளுங்கப்பா, நம்மோட ஃபீலிங்ஸ என்னமா நமக்கு பதிலா, நாம பாடற மாதிரியே பாடுறாங்கன்னு!   "பலவிதமா பள்ளிக்கூடம் இருக்குது...!" ன்னு இந்த பாட்டப் போய் கொஞ்சம் படிச்சிட்டு வந்து அவரோட சேர்ந்து பாடுனா என்னமா இருக்கும் தெரியுமா?

இவரு யாரா..? பேரு "மோகனன்""தமிழ் கானா பாடல்கள்" னுட்டு ஒரு வலைதளம் தனியா வச்சிக்கிட்டு, என்னமா புதுசு புதுசா கானா பாட்டெல்லாம் எழுதி தள்ளிக்கிட்டிருக்காரு தெரியுமா? சிச்சுவேஷனுக்கு ஏத்தா மாதிரி அந்த பட்டியல்லேருந்து ஒரு பாட்ட தேர்ந்தெடுத்துகிட்டு, யூசுவல் ட்யூன்ல நாமே பாடிக்கலாம். அவ்ளோ பாட்டு குமிச்சி வச்சிருக்கார். இதோ இந்த கடலைப் பற்றியே  "கடலுக்குள்ள போய் வருவோம்...!"  னு ஒரு பாட்டு போட்டுருக்கார் பாருங்களேன். அத்தனை ரசமும் கொட்டிக் கிடக்குது!

அப்படியே நம்ம பசங்களப் பத்தி  "பிரௌசிங்கு சென்டருல பிட்டு படம் பாக்குறான்...!"   ன்னு கும்மாங்குத்து பாட்டு ஒன்ன கேட்டுட்டு, கொஞ்சம் ரூட்ட மாத்திகிட்டு மரியாதையா இங்க வாங்க. ஏன்னா நாம அடுத்ததா பார்க்கப் போற இவரு கொஞ்சம் டீசண்ட் பார்ட்டி, அதான் சொல்லிட்டேன் பார்த்து சூதானமா நடந்துக்கணும் புரியுதா?!

சார், ரொம்ப நிதானமானவங்க. பிரபல தமிழ் பத்திரிகைகளில் எழுதியிருப்பதோடு, கிழக்கில் நூல்களும் எழுதியுள்ளார். பெங்களூர்ல தான் வாசம்னாலும், அவருடைய எழுத்தையெல்லாம் பார்க்கும் பொழுது, சதாசர்வ காலமும் தமிழ், தமிழ் நாடு, தற்கால இலக்கியங்களின் வளர்ச்சி, அதற்கு தமிழக அரசும், முதல்வர்களும் மற்ற மாநில முதல்வர்கள் போல முழு வீச்சில் செயல்படலயேன்னு ஒரு ஆதங்கம்... னு இதே சிந்தனையாத்தான் இருப்பார்னு தோனுது. ஏன்னா? இவருடைய பெரும்பாலான பதிவுகள் இந்த விஷயங்களைப் பற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

"அமுதவன் பக்கங்கள்" ங்கற பேர்ல வலைதளத்துல எழுதிக்கிட்டிருக்காங்க. இவரோட பதிவுகளை படித்தவுடனேயே, "நியாயம்தான?" அப்டீன்னு உடனே சொல்லத்தோனும். சாரோட அனைத்து பதிவுகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல இரண்டை மட்டும் இங்க உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இரண்டுமே நிகழ்கால தமிழ் இலக்கிய படைப்புகள், படைப்பாளிகள் புறக்கணிக்கப்படறத பற்றிய ஆதங்கத்தை கொட்றது தான். எனக்கும் சேம் ப்ளட் என்பதால், உங்களுக்குள்ளும் அது தொற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அறிமுகம் செய்கின்றேன்.

1. தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை!       2. தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்ன இடம்?

அடுத்ததா நாம போகப்போறது ஒரு முக்கியமான இடம். கைய கட்டிக்கிட்டு, வாயெல்லாம் பொத்திக்கிட்டு வரணும் (என்னாது..? கைய கட்டிக்கிட்டா வாய யார் பொத்துறதா..?... பிச்ச்சிபுடுவேன் பிச்சி..! சின்னப்புள்ள தனமால்ல இருக்கு? அவர பாத்துட்டு வந்து ஒங்கள எல்லாம் வச்சிக்கிறேன்.. வச்சி!!)

இவங்கதான் நம்ம "சுதேசமித்திரன்" அவர்கள். ரொம்ப பிரபலம். அதிகமா எதுவும் இவரைப் பற்றி சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கின்றேன். இவரோட எழுத்து எனக்கு ரொம்ம்ப பிடிக்கும். பெரிய எழுத்தாளர்னு எல்லோரையும் சும்மா சொல்லிட முடியாது. ஒரு தலைப்பை கொடுத்தா, அது தொடர்பான விவரங்கள் அனைத்தையுமே திரட்ட வேண்டும். பின்பு அதை அழகாக கோர்க்க வேண்டும். அவருடைய இந்தப் பதிவை படித்து விட்டுச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று. இதோ அந்தச் சுட்டி:  "பசுமை நிறைந்த அறுபதுகள்". 

அவரோட இன்னுமொரு பதிவுக்கான சுட்டியையும் தருகின்றேன். இதில் சாதாரணமான ஒரு நிகழ்வில் இருக்கும் நம் அனைவருக்கும் தெரிந்த அல்லது தெரியாத ஒரு அரசியலை அல்லது அறியாமையைப் பற்றி, எவ்வளவு இலகுவாகவும், வெளிப்படையாகவும் சொல்லியிருப்பார். இதுவும் எனக்குப் பிடித்த அவரது அனைத்து பதிவுகளிலும் ஒரு சாம்ப்பிள் அவ்வளவே.! இதோ அதன் சுட்டி:   "விளக்கணைச்ச நேரத்திலே..."

ரொம்ம சீரியாஸாயிட்டிங்கன்னு நினைக்கிறேன். வாங்க கொஞ்சமா உங்களை அமைதியாக்கி வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். சமுத்திரத்திற்கு வந்து அலைகளையும் பார்த்து மனம் அமைதியா போனாத்தான நல்ல உறக்கம் வரும். அங்க பாருங்க, அழகா ஒரு குடில் மாதிரி போட்டுக்கிட்டு, ஒருத்தர் "நேர்மறையான எண்ணங்கள்" தான் வாழக்கையில் வெற்றியடைவதற்கான வழி என்று உபதேசம் செஞ்சி, அதுக்கு பயிற்சியும் கொடுத்துக்கிட்டு இருக்கார். அதுல கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கிட்டு அப்பாலிக்கா வூட்டுக்கு போலாம்! (ச்சே.. ஏதாவது மாற்றம் கொண்டுவரனும்னு நாம நெனச்சா, இந்த சென்னை நம்மளையே மாத்திடுது!!)

"வாரியர்" ன்னு ஒரு வலைத்தளத்தை வச்சிக்கிட்டு, சும்மா வாளை கையில்பிடிச்சு என்னமா சுழட்டறாறு?! அந்த தளத்துக்குள்ளாற போனா அள்ள அள்ளக் குறையாக பொக்கிஷங்கள் நமக்கு இருக்கு. ஆனாலும் "நேர்மறை எண்ணங்களின் வலிமை" பற்றிய அவசியத்தை விவரித்து கற்பிக்கும் இந்த சுட்டிய மட்டும் இப்ப தற்றேன். மத்தத நீங்க "வாரியர்" உள்ளாற போயி பார்த்துக்குங்க சரியா?

இன்னிக்கு டைம் ஆயிடிச்சி, எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. நாளைக்கு அப்பிடியே சினிமாவுக்கெல்லாம் போயி கடல போட்டுட்டு வராலாம்...!!
மேலும் வாசிக்க...

Wednesday, June 15, 2011

வலைச்சரம் - ஃப்ரூட் மிக்ஸர்


நான் ஏற்கனவே சொல்லியிருந்த படி ஒவ்வொரு நாள் அறிமுகமும் எந்த வரைமுறைக்கும் உட்படாத வெவ்வேறு துறைகள், கோணங்கள் மற்றும் விதவிதமான சுவைகளின் கலவையாகத் தான் இருக்கும். இன்னொன்றையும் இங்கு சொல்லியாக வேண்டும், வலைச்சரத்தில் வலைத்தளங்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றவுடன், யாருக்கும் அறிமுகமில்லாத, அல்லது மறந்து போயிருக்கும் பதிவர்களையும், பதிவுகளையும் மட்டுமே இங்கு பகிரவேண்டும் என்ற எந்த நியதிகளும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அதனால் வலையுலகில் நன்கு பிரபலமான, அதிலும் என்னைக் கவர்ந்த சில பதிவர்களை, இன்றிலிருந்து மற்ற சிறப்பு வலைதளங்களோடு சேர்த்து அறிமுகம் செய்கிறேன் என்பதை விட பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். அந்த வகையில் இன்றைய பகிர்தலில் இரண்டு பேர். ஒருவர் மிகப் பிரபலம், இன்னொருவர் மிகப் பிரபலமாக மாற உழைத்துக் கொண்டிருப்பவர்.

முதலாமவர் தமிழ் வலைப்பதிவர் உலகம் எப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறதோ, அப்படியே அதோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர். 2007 இல் வலையுலக வாசகனாக நான் உள்ளே நுழைந்தபோது இவருடைய பதிவு இன்று வந்துள்ளதா என்று தான் என்னுடைய கண்கள் முதலில் தேடும். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு எழுத்து நடை. 

பலபேருடைய எழுத்துக்கு ரசிகனாக மட்டுமல்லாமல் அடிமையாகக் கூட இருந்திருக்கின்றேன். ஆனாலும் இந்தப் பதிவருடைய எழுத்தைப் படிக்கப் படிக்கதான் நாமும் எழுதினால் என்ன? என்ற எண்ணம் என்னுள் எழ ஆரம்பித்தது. (இதுக்காக அவர் மேல் நீங்க கோபப்படறது கொஞ்சம்கூட நியாமில்ல, சொல்லிட்டேன்! எதுவா இருந்தாலும் பின்னாடி பேசி தீத்துக்கலாம், அவர்ட்ட வச்சிக்கப்படாது புரியுதா? குட்!)

யாருடைய சாயலும் சட்டென்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு எழுத்து நடை. ஒரு தனிப்பட்ட துறையில் மட்டுமே ஜாம்பவான் என்றெல்லாம் இல்லாமல் பல துறைகளுக்கும், கோணங்களுக்கும் அவருடைய பதிவுகள் சென்று வரும். எவ்வளவு சீரியஸான கட்டுரை என்றாலும் ஒரு இழை போன்ற நையாண்டி நடுவில் ஓடிக்கொண்டிருக்கும். கணிக்கமுடியாத பாதைகளில் பதிவு சென்று கொண்டிருக்கும். முடியும் வரையிலும் படிப்பவர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும். (இதுக்கு மேலயும் அவர் யாருன்னு சொல்லலன்னா எழுந்து போயிடுவிங்கன்னு தெரியுது - தோ.. இப்ப வர்றேன்!)

நம்ம "லக்கி லுக்" எனப்படும் "யுவ கிருஷ்ணா" தாங்க அந்த பதிவர்! "ஊரறஞ்ச அந்தணருக்கு பூணூல் எதுக்கு" ன்னு நீங்க கேட்க வர்றதுக்கு முன்னாடி முதல் இரண்டு பாராவையும் திரும்ப ஒரு தபா படிச்சிட்டு வந்துடுங்க! கடந்த ஒன்றரை வருடங்களில் பதிவுலகுக்கு வந்திருக்கும் பதிவர்களுக்கு இவருடைய சமகால கட்டுரைகள் அதுவும் பத்திரிகைகளில் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டு எழுதப்பட்டது மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலங்களில் தன் சொந்த தளங்களில் காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்த இவர் எழுத்துக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாமல் போயிருக்கலாம். மேலும் சமீப காலமாக தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் பகிரப்படாததால் சில புது பதிவர்கள் இவரது பதிவுகளை தவறவிட்டுக் கொண்டிருக்கலாம் அதனாலும், இவருடைய எழுத்து வசீகரத்தாலும் இன்றைய வலைச்சரத்தில் இந்த பிரபலத்தை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகின்றேன்.

இவருடைய மிகச் சிறந்த பதிவுகள், கட்டுரைகள் நிறைய இருந்தாலும், மிகச் சாதாரணமான விஷயங்களைப் பற்றி இவர் எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் ." நண்பேண்டா!" என்ற இந்தப் பதிவில் சேர்ந்து முன்னேற விழைந்த மூன்று நண்பர்களின் சமகால நிலை வரை ஒருவித எதிர்பார்ப்போடும், த்ரில்லோடும் சொல்லியிருப்பார். பதிவுலகில் புதிதாக எழுத வந்திருப்பவர்கள் இந்த எழுத்து நடையையும், எங்கு ஆரம்பித்து எந்த இடத்தில் முடிக்கப்படுகிறது என்பதையும் அவதானித்தால் உபயோகமாக இருக்கும்.

அடுத்ததாக  "வாங்க 3க்கு போலாம்!". சன் டீவி உச்சாணிக் கொம்பில் இருந்த பொழுது எழுதப்பட்டது. அதன் சரிவை அத்தனை துல்லியமாக 'முன் நுகர்ந்து', சாமான்யர்களுக்கும் எளிதாகப் புரியும்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும். எங்குமே நேரடிச் சாடல் இருக்காது. அது முக்கியம்.

"சரோஜா தேவி!"..., தவறாக நினைக்க வேண்டாம். அவசியம் இந்தப் பதிவை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ஆரம்பத்திலேயே தீர்மானித்து விட்டேன். இந்த விஷயத்தை இப்படிக் கூட எழுதலாமா? பலான விஷயம் என்று நினைப்பதை ஆபாசமின்றி எழுதலாமா? என்றால் முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். எழுத்துத் துறையில் பிரபலமாகி உயர வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவுலகிற்கு வந்துள்ள இளைஞர்கள், இந்த எழுத்து நடையை அவசியம் கற்றுணர வேண்டும். மிகவும் சீரியஸாக எழுதியிருப்பார். இதற்கு சிரிப்பதா? அல்லது சீரியஸாகவே இருக்க வேண்டுமா? என்று படிப்பவர்களுக்கு ஒரு குழப்பமே வந்துவிடும்! சமீபத்திய இவரது பதிவுகளில் நான் மிகவும் வியந்த ஒன்று இது. (மீண்டும் சொல்கிறேன் அதன் கண்டெண்ட்டுக்காக அல்ல, அதன் எழுத்து நடைக்காக)
அடுத்த பதிவர் ஒரு துறுதுறுப்பான இளைஞர் தான். இன்னும் கொஞ்சம் தன்னை செதுக்கிக் கொண்டால் வருங்கால "லக்கி" என்று கூட இவரைச் சொல்லலாம். எழுத்துத் திறமை இயற்கையாகவே இவரிடம் அமையப் பெற்றிருக்கிறது. ஆனாலும் மிக அதிகமாக சினிமா விமர்சனங்களே கண்ணுக்குத் தெரிவதால், முன்னுக்கு வர அந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு வெளியேற வேண்டும். ஏனெனில் யாரையும் பார்த்துத் தான் எழுத்து நடையை சீரமைக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல், மிக மிக அநாயாசமான எழுத்துத் திறமை இவரிடம் கொட்டிக் கிடக்கின்றது.

இவரைப் போன்றவர்கள் நிச்சயம் பத்திரிக்கைத் துறையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ, சிறந்த எழுத்தாளராக பரிமளிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவருடைய திறமைக்கு சான்றாக  "தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!" என்ற இந்தப் பதிவை சொல்லலாம். லக்கியைப் போன்றே தன் மனதிற்கு பட்டதையும், மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் சில உண்மைகளையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து தன்னுடைய எழுத்து நடையால் படிப்பவர்களைக் கவர்ந்து விடுவார்...

ஹலோ..யெச்சூச்மீ..., யாருன்னு பேர சொல்லாமயே பதிவுக்கு லிங்க் எல்லாம் கொடுத்துட்டேன், ஒரு வார்த்தை கேட்கப்படாது? யார் அந்தப் பதிவர்னு ( போடா.. வெண்று! பதிவோடு லிங்க்க கொடுத்துட்டு பதிவர் பேர சஸ்பென்ஸா வச்சிருக்கறதா இன்னும் நெனப்பா..?! - இதுல கேள்வி வேற...!!)....(பொது வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்..!! உட்றா.. உட்றா... சுனா பானா!)

நானே சொல்லிடறேன். நம்ம தத்துபித்துவங்கள் "ஃபிலாசஃபி பிரபாகரன்" (ரொம்ப காத்து வாங்குது, எத்தன ஃ) தான் அந்த பதிவர். அவரோட "பிரபா ஒயின் ஷாப்" புக்கு ரெகுலர் கஸ்டமர் நான். அப்பப்ப கடைய மூடிடுறாரு.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பார்த்து கொஞ்சம் ரெகுலர் பண்ணுங்க தம்பி.

(ச்சே... அரசியல்ல பெரிய ரௌடின்னு ஃபார்ம் ஆயிருந்த என்ன, இந்த ரெண்டு பேரும் அந்த வண்டிலேருந்து கீழ இறக்கி விட்டுடுவாங்க போலிருக்கே?! கொஞ்சமா நம்ம இமேஜ பூஸ்ட்-அப் பண்ணிக்கிட்டாதான் பொழப்ப ஓட்ட முடியும்!)

நண்பர்களே இத்தோடு உங்கள விட்டுடுறதா இல்ல. நல்ல முக்கியமான துறை சார்ந்த லிங்க் ரெண்டு தர்றேன். இதையும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள இதை விட அதிக கலக்கலான அறிமுகங்களுடன் மீண்டும் சந்திக்கலாம்.

நம் தமிழ் வலை தளங்களில் பிரபலமான பதிவர் "ஓசை செல்லா" அவர்கள் 'ஓசையே இல்லாமல்' ஒரு மிகச் சிறந்த நல்ல காரியம் ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறார். "விவசாயத்திற்கு" என்றே தமிழில் முதன் முதலாக ஒரு தளத்தை உருவாக்கி, அதை மிகவும் நன்றாகப் பராமரித்து, பயிர் செய்து, செழிப்பான விளைச்சலைத் தந்து கொண்டிருக்கின்றார். இணையத்தில் எழுத வந்து என்ன சாதித்தோம்? என்று தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டிருப்பவர்களும், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர்களும், தங்களுடைய ஒரு கையை மட்டுமல்ல அட்லீஸ்ட் ஒரு விரலையாவது அந்தப் பணியில் இணைத்துக் கொண்டால் மன திருப்திக்கு கேரண்டி நிச்சயம்!!

அந்த லிங்க் இது தான்:   "வேளாண்மை.காம்"  தமிழகத்தின் முதல் வேளாண்மை இணைய தளம்...ஆடி 18, 2009 முதல் தமிழக விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. என்ற அடை மொழியோடு இருக்கும் இந்த தளத்திற்குள் நுழைந்தால் அள்ள அள்ள குறையாத மகசூல் கிடைக்கும் விவசாயத்தைப் பற்றி.

இன்றைய நிறைவாக சுற்றுலா (இணைய)தளம் ஒன்றை இங்கு அறிமுகம் செய்கின்றேன். இதை ஒரு மாணவர் எழுதுவதாகத் தான் ப்ரொஃபைல் சொல்கிறது. தமிழக சுற்றுலா துறையும் இணைந்து செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் நன்றாக இருக்கின்றது. இன்பச் சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா இரண்டுக்குமே முக்கியத்துவம் அளித்து விரிவாகவும், படங்களுடனும், தெள்ளத் தெளிவாக புள்ளி விவரங்களுடன் தொகுத்திருக்கின்றார்கள். பல கோவில்களையும் அழகான படங்களுடன் சுற்றுலா முறையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

அதன் லிங்க் இது தான்:   "தமிழக சுற்றுலா".  இதப் படிச்சிட்டு ஒரு சுத்து சுத்திட்டு வந்தீங்கன்னா அடுத்த அருமையான கலக்கலுடன் காத்திருப்பேன்.
மேலும் வாசிக்க...

Tuesday, June 14, 2011

வலைச்சரம் - குழும பதிவுகளின் தாக்கமும், கதம்ப பக்கோடாவும்!

நம்ம கூகுலாண்டவர் கொடுத்துள்ள வரங்களில் மிகச் சிறப்பான ஒன்று "Groups" எனப்படும் குழுமங்கள். இந்த வரத்துக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு அந்தஸ்த்து? என நீங்கள் கேட்பது புரிகிறது!. இருக்கிறதே! இணையத்தில் உலவுகின்றவர்களெல்லாம் யார்?

ஒரு விஷயத்தை முப்பரிமாணத்தோடு மேலிருந்து நோக்குகின்றவர்கள். அனைவருக்கும் ஒருவித மேட்டிமைத்தனமும், அறிவுஜீவித் தன்மையும் இருப்பது இயல்பானதே. சுறுக்கமாகச் சொல்லவேண்டுமானால் எந்தவொரு விஷயம் அல்லது பிரச்சினைக்குமே, ஒரு கொள்கையை வரையறுத்துக் கொண்டோ அல்லது இதுதான் தீர்வு என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதிலேயே உறுதியுடன் உறைந்து நிற்பார்கள். கிட்டத்தட்ட "சுட்டமண்" நிலையிலிருப்பார்கள். சுட்டமண் ஒட்டாதல்லவா? அதைப்போன்று.

அப்படிப்பட்ட நிலையிலிருப்பவர்களையும் ஒட்டவைத்து ஒரு குழுவாக இயங்கவைத்து,  அக்குழுவில் இருக்கின்ற பல்வேறு குணாதிசயம், கருத்துக்கள் அல்லது கொள்கைகள் கொண்டவர்ளோடு, இசைந்து கொடுத்து "ஒத்தக் கருத்தோடு" ஒரு கட்டுரை சமைத்து அதை பதிவிடுவது என்பது சாதனை அல்லவா? அதை சாத்தியப் படுத்தியிருக்கின்ற  கூகுளாண்டவரின் இந்த "வரம்" சிறப்பான ஒன்று தானே? (அப்பாடி ஒருவழியா..... வேணாம் எதாவது கெட்ட வார்த்தைல திட்டுவீங்க!)

இணையத்தில் நூற்றுக்கணக்கான குழுமங்கள், அதில் நிறைய கருத்து விவாதங்கள் என்று நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அவற்றில் வெகு சிலதே பதிவுகளை எழுதி அதை தங்களுக்கான வலைதளத்தில் பதிவிடுகின்றார்கள். அப்படிப்பட்ட குழுமம் அல்லது குழுவாக இயங்கி பதிவு எழுதி வெளியிடும், எனக்கு நன்கு பரிச்சயமான மூன்று குழுமங்களையும் அவற்றில் என்னைக் கவர்ந்த சில பதிவுகளையும் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:

வவாச என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சங்கத்தில் "கைப்புள்ள" என்ற தலைவரின் கீழ் எழெட்டு சிங்கங்கள் உலாவந்து கொண்டிருந்தன. இந்த சிங்கங்களும், தலைவரும் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்கிற அளவிற்கு, அந்த வலைதளத்தில் நுழைந்தாலே மனம்விட்டு சிரிக்க கேரண்டி நிச்சயம். நம் வலைச்சரத்தில் வாரம் ஒரு ஆசிரியரை பொறுப்பேற்க அழைப்பது போல், வவாச விலும் சங்கத்தில் "அட்லஸ் வாலிபர்" என்ற பட்டத்தோடு ஒரு மாதகாலம் எழுதுவதற்கு அழைத்து எழுதச் சொல்வார்கள்.

இன்று வலையுலகில் மிகப் பிரபலமாக இருக்கும் பல பதிவர்கள் வவாச வின் அட்லஸ் வாலிபராக இருந்து பல அற்புதமான நகைச்சுவை பதிவுகளை எழுதியிருக்கின்றார்கள். அவற்றில் எனக்குப் பிடித்த ஒரு சிலதை இங்கு தருகிறேன்.

"டெவில் ஷோ - நகரத்தில் ஆன்மீகப் பதிவர்கள்"  KRS எனப்படும் திரு. கண்னபிரான் ரவிசங்கர் அவர்கள் சங்கத்தின் அட்லஸ் வாலிபராக இருந்த பொழுது எழுதிய இந்த தொடர்.... படிச்சிட்டு சொல்லுங்க.

வெட்டி கலக்கும் விவாஜி The Farmer - சங்கத்தின் சின்ன பாஸ் போர்வாள் தேவ் எழுதியிருக்கும் இதப் படிச்சிட்டு சிரிக்காட்டி..... சிரிக்கலன்னா அப்புறமா நான் எதாவது சொல்ல நீங்க கோவக்காரரா ஆயிடுவிங்க சொல்லிட்டேன்!

சங்கத்து சிங்கம் நாகை சிவா, விஜய் டீவில ஒரு நிகழ்ச்சியில் நடந்த சிம்பு - பப்லு சண்டையை வைத்து எழுதிய இந்தப் பதிவை படித்துவிட்டு... மக்களே கொஞ்சம் சீரியஸா முகத்த வச்சிகிட்டு வாங்க, ஏன்னா அடுத்த குழுமம் அப்பிடி. கொஞ்சம் கேர்லெஸா இருந்தாலும் டேமேஜ் தான்!

வினவு

தற்பொழுது நம் தமிழ் இணைய பக்கங்களில் பிரபலமாகவும், தொடர்ந்து விழிப்புணர்வு கட்டுரைகளை தந்து கொண்டிருக்கும் தளமாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பது இந்த "வினவு" தளம். இங்கு யார் யார் உறுப்பினர்கள் என்பது முக்கியமில்லை. (அவ்வளவாக தெரியவும் தெரியாது) ஆனால் எந்த கட்டுரையானாலும் அது வினவு என்ற ஒற்றை அடையாளத்துடன் தான் வரும். ஆட்சியாளர்களின் அட்டூழியங்களையும், அரசின் அவலங்களையும் (எந்த ஆட்சியானாலும்) அஞ்சாமல் புட்டுப் புட்டு வைப்பதும், அடித்தட்டு மக்களுக்கு எதிரான சுரண்டல்களை தோலுரித்துக் காட்டுவதும் அவர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கவசமாக விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதி பதிவிடுவதும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இணைய வளர்ச்சியை தங்களது கொள்கைகளுக்காக மிகச் சரியாகவும், மற்ற இயக்கங்களை விட அதிக அளவிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு குழுமம் இது என்று சொன்னால் அது மிகையில்லை. இணையத்தில் இருப்பவர்களில் பலர் இந்த தளங்களுக்கு வந்து படித்தாலே பிரச்சினை ஆகிவிடுமோ? என்று எண்ணுவது போல் தெரிகின்றது.

அப்படியில்லை, நம் வீட்டைவிட்டு வீதியில் இறங்கி திரும்பவும் வீட்டிற்குள் நுழையும் வரையிலும் உள்ள இடைப்பட்ட நிலையில் நமக்கு வரக்கூடிய அனைத்து இடைஞ்சல்களுக்கும் எதிரான குரல் தான் வினவின் குரல் என்பதைப் புரிந்து கொண்டால், அவர்களும் தோழர்களாகத் தான் நமக்குத் தெரிவார்கள்.

வினவில் எந்தவொரு பதிவுமே உப்புக்குச் சப்பாணியாக இருக்காது. அனைத்துமே அதிரடி தான். எல்லாவற்றையும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் அதில் எனக்குப் பிடித்தவற்றை உங்களுக்கும் அறிமுகம செய்கின்றேன்.

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம்

மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்.


இப்படி நிறைய லிங்க் கொடுத்துக் கொண்டே செல்லலாம். ஆனால் தனக்கு சரியென்று பட்ட ஒரு கொள்கைக்காக எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தொடர்ந்து சேவையாற்றும் இதைப் போன்ற தளங்களுக்கு ஒரு சல்யூட். தளத்தை அழகாக வடிவமைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் சென்று பிடித்த தலைப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். நிறைய இன்ஃபர்மேஷன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கழுகு

நிச்சயமாக இந்த குழுமத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். வலதும் இல்லாமல், இடதும் இல்லாமல் ஒருவித யதார்த்தத்தோடு கட்டுரைகளை உருவாக்கி தந்து கொண்டிருக்கும் இளமையான முதிர்ச்சியுடன் உயரே உலாவரும் ஒரு குழுமம்.

இடது பக்கம் நின்று ஓங்கி ஒலிப்பதற்கு வினைப் போல் பல தளங்களும் இயக்கங்களும் இருந்தாலும், கீழேயும் இல்லாமல் மேலேயும் இல்லாமல் இங்கே இணையத்தில் உலவுகின்ற அனைவரின் வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ள நெருக்கடிகளை, தனிநபர் பிரச்சினைகளை, அரசு செய்ய வேண்டிய கடமைகளை... இப்படியாக பகுத்துப் பகுத்து அந்தந்த நிலையிலிருந்து தொகுத்து விவாதித்து கட்டுரைகளாக ஒத்தக் கருத்துடன் ஆக்கித் தருகிறது இந்தக் குழுமம்.

படிப்படியாக பிரபலமாகிக் கொண்டுவரும் இந்த குழுமத்தில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதில் பெருமையே! வினவைப் போலவே இக் குழுமமும் இதுவரை வெளியிட்டிருக்கும் பதிவுகளில் எதுவுமே உப்புக்குச் சப்பாணி ரகம் இருந்ததில்லை. அனைத்துமே தனிநபர் ஒழுக்கம், சமூக சீரமைப்பு, நடுத்தரவர்க்கத்தினருக்கான அரசியல் எதிர்பார்ப்புகள்... இப்படியாகத் தான் அமைந்திருக்கின்றன. இணைய உலகை திரும்பிப் பார்க்க வைக்கின்ற அளவிற்கு இன்னும் பல நுணுக்கமான கட்டுரைகளும், பிரபலங்களின் அல்லது துறை சார்ந்தவர்களின் நேர்முகங்களும் வரவிருக்கின்றன.

கழுகில் வெளிவந்த என்னைக் கவர்ந்த ஒரு சில பதிவுகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

மாணவர்களும் மன அழுத்தமும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

இணையம் என்னும் வசியக்காரன்... ஒரு பகீர் ரிப்போர்ட்!  

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை என்ற மிகவும் உபயோகமான தொடர்

விவசாயம் - ஒரு ஆழமான பார்வை

மேய்ப்பனில்லா ஆடுகள்.... மாணவ சமுதாயம் பற்றிய ஒரு கழுகு பார்வை.

ஜூன் 6 இல் மேட்டூர் அணை திறப்பு - சாதனையா? வேதனையா?

இன்னும் நிறைய சுட்டிகளைத் தந்து கொண்டே இருக்கலாம். அத்தனையும் உபயோகமானவை தான். சந்தேகமில்லை.

தோழமைகளே.., எனக்குத் தெரிந்தவரையில் இதுவரையிலும் குழுமங்களை பெரிய அளவில் அறிமுகப்படுத்தியதாக நினைவில்லை. அதனால் தான் "வலைச்சரம்" வாசகர்களுக்கு தமிழ் இணைய உலகில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் குழுமங்களையும் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துள்ளேன். அனைத்து குழுமங்களையும் பற்றிச் சொல்லவேண்டுமானால் ஒரு வாரமும் போதாது. குழுமங்களை அறிமுகம் செய்ததை ஒரு சேவையாகத்தான் கருதுகிறேன். ஏனெனில் அங்கு எழுதுபவர்கள் யாருமே தங்களை முன்னிலைப் படுத்தாமல் ஒரு நோக்கத்திற்காக, ஒரு குறிக்கோளுக்காக, ஒரு கொள்கைக்காக... சுறுக்கமாகச் சொன்னால் மற்றவர்களுக்காக எழுதுகிறார்கள், எந்த எதிர்பார்ர்புமின்றி!

ஆகையால் இன்றைய வலைச்சரத்தில் குழுமங்களையும் அதன் சில பதிவுகளையும் அறிமுகம் செய்ததில் ஒரு சேவை (இடியாப்ப சேவை இல்லை மக்களே!) செய்த திருப்தியோடு விடைபெறுகிறேன். மீண்டும் சில உற்சாகமான பதிவுகளுடன் வந்து உங்களையெல்லாம் சந்திக்கின்றேன். வணக்கம்.

மேலும் வாசிக்க...

Monday, June 13, 2011

"வலைச்சரம்" - வலைப்பதிவனாகிய வாசகன்!!!

அன்பின் வலைச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த மூன்றரை ஆண்டுகாலமாய், தமிழ் இணைய பூங்காவில் ஒரு வாசகனாய் மட்டுமே வலம் வந்து கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டும், பூக்களை நுகர்ந்து கொண்டும், தென்றலை அனுபவித்துக் கொண்டும் இருந்த நான், கடந்த ஜனவரி முதல் சொந்தமாக ஒரு தளத்தை உரியதாக்கிக் கொண்டு, அதில் பூக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றேன்.

தமிழ் இணையத்தில் உள்ள தோழமைகளைப் பற்றி, ஒரு வாசகனாக மூன்று வருட அறிமுகம் இருந்தாலும், உங்கள் அனைவரின் சக தோழனாக உலாவருவது கடந்த ஐந்தரை மாதங்களாக மட்டுமே. இந்த குறுகிய கால அனுபவத்திலேயே என்னை நம்பிக்கையுடன் அழைத்து "வலைச்சரத்தின்" ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பை வழங்கியிருக்கும் பொறுப்பாசிரியர், திரு. சீனா சார் அவர்களுக்கும், வலைச்சரக்குழுவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும், கயல்விழி முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா மற்றும் தமிழ் பிரியன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொண்டு, இந்த முதல் இடுகையை தொடர்கிறேன்.

இதற்கு முன் ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகம் செய்வது வழக்கில் இருந்தது. ஆனால் சிலருக்கு சில துறைகளில் (தலைப்புகளில்) பெரிய ஆர்வம் இல்லாமல் இருக்கக் கூடும், அப்படிப்பட்டவர்கள் அந்த நாட்களில் வலைச்சரம் பக்கம் வராமல் கூட போவதற்கு வாய்ப்பிருக்கின்ற காரணத்தால், இந்த வார வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும் கதம்பமாக பல்வேறு மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை தான்!

ஆகவே நண்பர்களே, அனைவரும் தினம் தினம் வருக. அவரவர்க்கு பிடித்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை எடுத்து அணிந்து இன்புறுக!!

இன்று முதல் நாள், இது முதல் இடுகை. இதில் ஆசிரியரின் (அட! நான் தாங்க!!) சுயசொறிதல்... மன்னிக்கவும் சுயபுராணம் (தான்) எழுதணும்னு சொல்லியிருக்காங்க. வேற வழியே இல்ல, கொஞ்சம் பொருத்துகிட்டு எப்படியாவது இன்றைய பொழுத இதப்படிச்சி வீட்டு சாப்பாட்டோட ஓட்டிடுங்க. நாளைலேருந்து விதவிதமான உணவகங்களில் உண்டு மகிழலாம்!! 

"கொக்கரக்கோ" என்ற பெயரில் எனது வலை தளத்தை ஜனவரி 2011 இல் துவங்கி, இது வரையிலும் 35 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கின்றேன். கழுகு குழுமத்திற்காக 6 பதிவுகள் வரையிலும் எழுதியிருக்கின்றேன். இதுவரையிலும் நான் எழுதியிருப்பதில் பெரும்பாலானவை. அரசியல் சார்ந்த பதிவுகளே.

எனக்கு ஆன்மீகம், அரசியல், சினிமா, இசை, தொழில்துறை ஆகிய துறைகளில் ஒன்றுக்கொன்று குறையாத அளவிற்கு ஈடுபாடும், விருப்பமும் அதிகம் என்றாலும், நான் எழுத ஆரம்பித்த நேரத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் அரசியல் பற்றிய இடுகைகளே அதிகம் எழுதுவதற்கு சந்தர்ப்பம் இயல்பாகவே அமைந்து விட்டது. அதனாலேயே அரசியல் பதிவர் என்ற முத்திரை என் மேல் விழுந்து, ஆன்மீகம், அனுபவம், பொதுவுடைமை பற்றி ஏதாவது ஓரிரு இடுகைகள் எழுதினாலும், ... ஒரு நமுட்டுச் சிரிப்புடன் வாசகர்கள் அவற்றைக் கடந்து செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

"உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்?!" னு கேட்கற மாதிரியே இருக்கு!! ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அரசியல் பதிவுகளுக்கு வாசகர்களின் அமோக ஆதரவைப் பார்க்கும் பொழுது ஒருவித போதையே தலைக்கேறுகிறது!

ஆனால் என்னுடைய மற்ற பன்முகத்(!) திறமைகளை எல்லாம் (கூல் டவுன்... கூல் டவுன்..! ஒரு வாரத்துக்கு பேயாம வாய மூடிட்டு இதெல்லாம் பொருத்துகிட்டு தான் இருக்கணும்!! புரியுதா?) வெளிப்படுத்த ஒரு சிறந்த வடிகாலாக இருப்பது "கழுகு" குழுமம் தான்.

சுயதொழில் செய்வது சம்பந்தமாக ஒரு தொடர் பதிவை அதில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இதுவரையிலும் நான்கு பாகங்கள் வந்துள்ளது. அதை "இங்கு" சென்று படித்துவிட்டு ஒரு வாரம் கழித்து தொழில்முனைவோராவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். ஏன்னா? நீங்க பாட்டுக்கு உடனே தொழில் தொடங்க போயிட்டீங்கன்னா, ஒரு வாரத்துக்கு இங்க கடை காத்து வாங்கிட கூடாதுல்ல? அதான்!! 

அடுத்ததா, நான் எழுதினதுலயே எனக்கு பிடிச்சதுன்னு சொல்லமாட்டேன், ஆனா எனக்காகவே அல்லது என்னைப் போன்ற நடுத்தர/மேல்நடுத்தர வர்கத்தினர்களுக்காகவே ஒரு விழிப்புணர்வு வரமாதிரி எழுதியதுன்னு சொல்வேன். கொஞ்சம் காண்ட்ரவர்ஷியலாக கூட இருக்கும். சில சமயங்களில் ஒருவருடைய நீதி, இன்னொருவருடைய அநீதியாக ஆகிவிடுவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. அந்தப் பதிவு இது தான் "நடுத்தெரு வர்க்கமாகும் நடுத்தர வர்க்கம்".

இப்போ சமீபத்துல நான் எழுதின "பட்டணத்தி வீட்டு மீன் குழம்பு" என்ற சொந்த அனுபவமும், கற்பனையும் சரிபாதி கலந்து எழுதிய 'சிறுகதை' மாதிரியான பதிவு, ம்... இது நல்லா வந்துருக்கே, தீண்டாமை பற்றியெல்லாம் மெசேஜ் சொல்லிருக்கியேடா சௌமியா(!) என்று என் தோளை நானே தட்டிக் கொண்ட பதிவு.

அரசியல் பதிவராவே ஃபார்ம் ஆயிடுவோம் போலருக்கே, கொஞ்சம் ரூட்ட மாத்துன்னு சொல்லிக்கிட்டெ ஒரு ஆன்மீக பயணம் பற்றிய ஆன்மீகப் பதிவுதான் இந்த "ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக..!" பதிவு. பெருசா போணி ஆகாததுனால, பேக் டு பெவிலியன்னு, அரசியல் பக்கமே திரும்பிட்டேன்!

எனக்குத் தெரிந்தவரையிலும் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்குமே ஒன்றிரண்டு சுயசொறிதல் பதிவு இருக்கத்தான் செய்கிறது. விதியை மீறக்கூடாதுன்னு (ம்க்கூம்.. ஃபாலோ பண்ண வேண்டிய விதிய எல்லாம் காத்துல பறக்க விட்டுங்க... ன்னு யாரோ என்னமோ சொல்றீங்க - ஆனா அது என் காதுல விழல!!) எழுத்துச் சித்தர் ரேஞ்சுக்கு உயர பறந்துகிட்டே "இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் கொக்கரக்கோ?" என்ற இந்தப் பதிவை எழுதினேன். ப்ளீஸ் படிச்சிடுங்களேன்!!

இலவச திட்டங்கள் பற்றி மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர/மேல் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு விழிப்புணர்வு தெளிவான பாதையில் வர வேண்டும் என்ற அவாவில், நிறைய புள்ளி விவரங்களோடு மூன்று பாகங்கள் கொண்ட இந்த தொடரை எழுதியிருக்கின்றேன். பலர் "இந்தப்" பதிவை படித்திருக்கலாம். படிக்காதவர்கள் அவசியம் ஒரு முறை படிக்க வேண்டுகிறேன்.

அரசியல் என்பது எத்தனை யதார்த்தமான, நடைமுறை நகைச்சுவையோடு கலந்து இருக்கின்றது என்பதற்கு இந்த இரண்டு பதிவுகளும் படித்தால் புரியவரும். 1. கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும், 2. என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே...? இப்படிக்கு ராமதாஸ்

முடியல... வேணாம்.... வலிக்குது...... அழுதுடுவேன்.....!!! ஹலோ ஹலோ யார்ப்பா அது? அவ்ளோ தான் அவ்ளோ தான்! இதுக்கெல்லாமா அழுவாங்க? சின்னப்புள்ள தனமா இருக்கு?! எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் இந்த வீரபாகுங்குற மாதிரி ஸ்டடியா நிக்கணும்! புரியுதா? நாளைலேருந்து புதுசு புதுசா.. இடத்துக்கு எல்லாம் அண்ணன் அழைச்சிட்டு போறேன்.. சரியா? எங்க பை சொல்லுங்க பார்ப்போம்!!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது