07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 19, 2011

வலைச்சரம் - காரக்குழம்பு...!

தொடர் வேலைப் பளுவினால் இன்று காலை வெளியிட வேண்டிய பதிவு, தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

இன்று நம் இணைய உலக அதிரடி அரசியல் பதிவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு அறிமுகம்! நம்ம தமிழ் மக்கள்ட்டயே ஒரு பழக்கம் உண்டு. எந்த அளவிற்கு அரசியலைப் பற்றி திட்டிப் பேசுகின்றார்களோ, அதே அளவிற்கு அரசியல்வாதிகளைப் பற்றியும், அரசியல் செய்திகளையும் விழுந்து விழுந்து படித்துத் தெரிந்து கொள்வார்கள்.

அதனால நம்ம வலையுலக அரசியல் அருவா பார்ட்டிங்களப் பத்தி இன்னிக்கி பார்க்கலாம்.

அரசியல்னு ஆகிப்போச்சு,  நம்ம தமிழ் நாட்டுல மதிப்பு இருக்கோ இல்லியோ, வாக்கு வங்கி இருக்கோ இல்லியோ..! புரோட்டோகால் நிமித்தம் தேசிய கட்சியான காங்கிரஸை முதல்ல பார்த்துடுவோம்.

நம்ம பதிவுலகத்துல எனக்குத் தெரிஞ்சி காங்கிரஸ் கட்சி சார்புடையவர் என்பதை விட, தீவிர காங்கிரஸ் ஆதரவு பதிவர் என்றால் அது நம்ம சஞ்சய் காந்தி தான். சாதாரணமா நம்ம ஊர்ல கருணாநிதின்னு பேரு இருக்கும், அவர் சரியான அதிமுக காரரா இருப்பார். ராமச்சந்திரன்னு பேர வச்சிக்கிட்டு பக்கா திமுக வா இருப்பார். ஆனா நம்ம பதிவர், தனக்கு வச்ச பேர காப்பாத்துற மாதிரி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா தீவிர இணையப் பணி செய்வதற்கும் மேலாக, தன்னோட பேருக்கு ஏத்த மாதிரி, (டிபிகல் காங்கிரஸ் காரங்களாட்டமா இல்லாம), சும்மா கில்லி மாதிரி எதிரிங்கள சொல்லி அடிப்பாரு. ஆனா என்னான்னே தெரியமாட்டேங்குது, அவர்ட்ட மாத்திரம் எந்த எதிர்க்கட்சியினரும் ரொம்ம வாக்குவாதம்லாம் பண்ணாம போயிடுறாங்க!!!

பதிவுகள்ல அதிகமா அரசியல் எழுதுவதில்லை என்றாலும் கூகுள் பஸ்ஸில் இவரை அடிச்சிக்க ஆளே இல்லை. 

அடுத்ததா, தமிழ்நாட்டுல இன்னிக்கி ஆளும் கட்சியா இருக்குற அதிமுக பதிவர்கள் என்று சொல்ல வேண்டுமானால்..., அப்படி வெளிப்படையா சொல்லிக்கிட்டு யாரும் எழுதறா மாதிரி தெரியல. அப்படி ஆதரவா எழுதுறவங்க எல்லாருமே, திமுக எதிர்ப்பு நிலை என்ற முகமூடியோடு தான் களத்திற்கு வருகின்றார்கள். சிலர் தமிழுணர்வாளர்கள் போர்வையில் வருகின்றார்கள். எது எப்படி இருந்தாலும் இன்று வரையில் அதிமுகவுக்கும் அதன் தலைமைக்கும் ஆதரவா எழுதிக்கிட்டு இருக்கற பதிவர் பட்டியலை கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த பட்டியல்ல முதல் இடம்னா அது நம்ம கோவியார் என்று செல்லமாக அழைக்கப்படும் கோவி.கண்ணனுக்குத் தான். தீவிர திமுக எதிர்ப்பாளர். அதனால் அதிமுக வை ஆதரிப்பதாகச் சொல்லும் இவரது பதிவுகள்.

அடுத்ததா இந்த பட்டியல்ல இடம் பிடிக்கிறது யாருன்னா அது நம்ம குழலி தான். அதி தீவிர திமுக எதிர்ப்பாளர். இவருடைய பத்து (அரசியல்)பதிவுகளை தொடர்ந்து படித்தால் போதும், கருணாநிதி எதிரில் வந்தால் கத்தியால் குத்திவிடும் அளவிற்கு கோபம் எகிறும்!! அவ்வளவு காரசாரமாக கருணாநிதியைப் பற்றி எழுதுவார்.

அடுத்ததா அத்திவெட்டி ஜோதிபாரதி. இவர் அதிகமாக பதிவு எழுதி திமுக வை எதிர்ப்பதைக் காட்டிலும் கூகுள் பஸ், ட்விட்டர் இத்தியாதிகளில் கலக்கி எடுப்பார். திமுகவை அல்லது கருணாநிதியை எதிர்த்து ஒரு நாளைக்கு சராசரியாக பத்து பஸ் வரையிலும் விட்டு நாட்டுக்கு தன் கடமையை ஆற்றுவார்!

இதற்கு மேல் திமுக ஆதரவு அல்லது ஒரிஜினல் திமுக பதிவர் பட்டியலையும் பார்த்து விடலாம். 

லக்கிலுக் இந்த பட்டியலில் முக்கியமானவர் என்றாலும் இவரைப்பற்றி ஏற்கனவே வேறு வகையறாவில் அறிமுகப்படுத்தி விட்டதால் மற்றவர்களைப் பார்த்து விடலாம்.

முதலாமவர் மிக முக்கியமானவர். இவர் திமுக ஆதரவு என்பதை விட, சாதாரண திமுக உறுப்பினர் என்பதை விடவும், இவர் ஒரு திமுக பொதுக்குழு உறுப்பினர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை திமுகவின் தலைவரை தேர்ந்த்டுக்க வேண்டிய தகுதியில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.  கலைஞருக்குப் பிறகு யார் திமுக வை தலைமையேற்று வழி நடத்துவது என்ற கேள்வி வரும் பொழுது, இவரைப் போன்ற சில நூறு பேர் கைகளில் தான் அந்த விடை இருக்கின்றது!!

இவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும், தன் கட்சியின் கொள்கைகளையும், தலைமையையும் எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல், மிகத் திறமையாக மாற்றுக் கட்சியினருடன்..., பழைய காலத்து புள்ளிவிவரங்களுடன், ஆதாரப் பூர்வமாக அருமையாக வாதிட்டாலும்...., எதிர்க் கட்சியினரும் போற்றி மதிக்கும் ஒரு பண்பாளர் இவர் என்றால் யாரும் மறுத்துக் கூறமாட்டார்கள்.

புரிந்திருக்கும், நான் யாரை சொல்லப் போகிறேன் என்று..! அவரே தான். புதுகை அப்துல்லா தான் அந்த பதிவர். அவரது மூன்று பதிவுகளை நான் நிச்சயம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். திராவிடமும், கம்யுனிசமும் பாகம் 1,    பாகம்  2,

வேறொரு நபரின் பதிவுக்கு இவர் எழுதிய கருத்துரையை தான் இரண்டுபாகமாக பதிவேற்றியிருக்கின்றார். திராவிடத்திற்கும், கம்யூனிசத்திற்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளையும், இதில் எந்த விதத்தில் திராவிடம் மக்களுக்குச் சிறந்த சேவை அளிக்கிறது என்பதையே ஒப்புமையுடன் மிக அழக்காக அரசியல் பற்றி அனா, ஆவன்னா தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும்படியாக எழுதியிருப்பார்.

இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் கிழக்கில் புத்தகமாக வெளியிடும் அளவிற்கு வந்திருக்கும். அடுத்த பதிவு அயோத்தி விவகாரம் பற்றிய தீர்ப்பு வந்த பொழுது, சக இஸ்லாமிய தோழனின் உணர்வுகளை உதாரணமாக வைத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் இந்திய இஸ்லாமிய மக்களின் உணர்வுகளையும், நியாயங்களையும் கயிற்றின் மேல் நடப்பது போன்ற உத்தியோடு யாருக்கும் எந்த சேதாரமும் இன்றி அரிதி இட்டு முடித்திருப்பார். அயோத் 'தீ' என்ற இந்த பதிவை படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

அடுத்ததாக உடன்பிறப்பு. அடிமட்ட திமுக தொண்டன் அளவிற்கு ஊறிப்போன திமுக ஆதரவாளர். ஆனால் அமெரிக்கா வாசி! திமுக, கலைஞர் இதிலெல்லாம எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. இவரிடம் மாற்றுக் கருத்து சொல்வது கூட வேஸ்ட் என்று எதிர்க்கட்சியினர் ஒதுங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு திமுக அபிமானி.

அடுத்ததாக அபிஅப்பா. இவர் ஒரு அரசியல் பதிவு போட்டாலே மாற்றுக் கட்சியினர் வந்து கும்மு கும்மு என்று கும்மும் அளவிற்கு காரசாரமாக இருக்கும். எத்தனை கும்மல்கள் வந்தாலும் திருப்பிக் கும்முவார். இவரைப் பற்றி இதற்கு மேல் நான் எழுதினால் அது சரியாக இருக்காது.

அதனால் அடுத்ததாக மிக மிக முக்கியமான ஒரு திமுக பதிவரை நான் இங்கு அறிமுகம் செய்கின்றேன். ஃபிப்ரவரி வரை தனது வலைப்பூவை அப்டேட் செய்து வைத்திருக்கின்றார். தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, அகில உலகப் புகழ் அல்லது பிரபலம் ஆனவர். இவரால் திமுகவுக்கு லாபமா, சேதாரமா என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

என்ன? ஒன்றும் புரியவில்லையா? தற்பொழுது திஹார் சிறையில் இருக்கும் "ராஜா" தான் அந்த பதிவர். தமிழ் வலைப்பதிவர் என்ற வகையில் இவருடைய தளத்தை இங்கு அறிமுகம் செய்கின்றேன். இது ஒரு வலைச்சர வாசகர்கள் அதிகம் அறிந்திராத ஒரு புதிய அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

அடுத்த அறிமுகமாக அருள். இவர் ஒரு பாமக ஆதரவாளர். சமீபத்திய இவரது "சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து" என்ற இந்தப் பதிவைப் படித்தாலே இவரது பன்முக அறிவு நன்கு விளங்கும்.

அடுத்ததாக கம்யூனிசத்திற்கு ஆதரவாக எழுதக் கூடிய தளம் வினவு தளம். இவர்களைப் பற்றியும் ஏற்கனவே வேறு வகையறாவில் அறிமுகப்படுத்தியிருப்பதால் புதிதாக எதுவும் தேவையில்லை என நினைக்கின்றேன்.

நண்பர்களே. சில தவிர்க்க இயலாத சொந்த வேலையின் காரணமாக அதிக பதிவுகள் எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.

3 comments:

 1. //நண்பர்களே. சில தவிர்க்க இயலாத சொந்த வேலையின் காரணமாக அதிக பதிவுகள் எழுத இயலவில்லை. மன்னிக்கவும். //

  தமிழ்ல எனக்கு(ம்) பிடிக்காத வார்த்தை மன்னிப்பு..
  வேணுமின்னா 'சாரி'னு ஆங்கிலத்துல சொல்லுங்க..
  ---- சும்மா..

  என்ன சார்.. உங்கள் இஷ்டப் படி நீங்க அறிமுகம் செய்யறீங்க.. அதுக்கெதுக்கு மன்னிப்புலாம் ....

  ReplyDelete
 2. நான் அதிமுக ஆதரவுன்னு சொல்லி தைரியமா ஜெயக்குமார் ன்னு ஒருத்தர் UK ல இருந்து 2006 தேர்தலின் போது எழுதிட்டு இருந்தார்.ம் பழைய ப்ளாக் நினைவுகள் ;)

  ReplyDelete
 3. வாழ்த்துகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது