07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 4, 2011

பிச்சைதட்டு தங்கங்கள்.!!

ஒற்றை வார்த்தை சித்தரிக்கா
என் ஒரு வார உழைப்புதனை..
காரணம் கேட்டீரோ.!!?
காரணம்-நான் உழைக்கவில்லை..

இறுதி நாள் இன்பமாகுமா.?
பிச்சை தட்டு கொண்டிருக்கேன்
பலதரம் அதிலே கொட்டிருக்கு.!!
அத்தனையும் பிச்சைதட்டு தங்கங்கள்..

அக்ஷ்சயபாத்திரம் கொண்டுள்ளார்
மணிமேகலா பதிவரவர்
முதிர்கொண்ட வாழ்க்கையென்னும்
வாழ்க்கை ஓட்டம் சித்தரிக்கும்
நரையின் வழியோடி கொண்டுள்ளார்.!!

அடுத்து வந்த வள்ளலிங்கே அபி.. அபி..
கமல் சொல்லும் அபிராமி அற்ற அபி 
திண்ண திண்ண கேக்குதுங்க
எங்க ஊரு புரோட்டா
அபி போட்டு கடுப்பேத்தும்
கொடநாடு புரோட்டா இங்கே ருசிக்குதே.! 
என்னை அழைக்குதே.!!

உயிர்தமிழில் தமிழ்நிலா என்றொருவருண்டு
விவரிக்கிறார் அனைத்தும்
மதன் கார்க்கி பற்றி தொகுப்பாக
பாட்டோடு லயிக்க வைக்கும் 
பண்கொணர் தொகுப்பிது.!!

காற்றோடு தேடுகையிலே
சுரன் என்ற பதிவர் கண்முன்னே!!
தமிழகமே தலைவணங்கும்
ஒற்றை ஸ்டைல் மன்னனை 
சாடி பேசி என் நெஞ்சடைப்பை தீர்த்திட்டார்.!!

விசித்திர பேர் கொண்ட பதிவர் இவர்
என்ன பெயரெண்டு போய் காணும்..
தேசிய விருது பற்றிய பதிவொன்று
அதில், 
அவரது பட்டியல் சிலவுண்டு.!!

ஊரானாக ஒரு பதிவர்
கோப கனலாக அங்கொன்று கண்டேன்
இதை மனதில் கொள்வீரா.?
அற்று மறுத்து பேசுவீரா.?

வேறுபாடு பதிவொன்று
அதை எழுதியவரோ 'இடைவெளிகள்'
அக்காலந்தொட்டு இக்காலவரை 
நிதர்சனம் ஒன்றை கையிலேந்தி
நால்வரியில் நச்சென்று.!!

சகமனிதனாக இங்கொருவர்
ஏத்துகிறார் வேலுமணியை
கேட்டழிந்த கேள்வியொன்று 
15 வருட புத்தகத்தில்.!!
இன்றோ பதிலாக முட்டியதே
மட்டற்ற சிறப்பு சொல்லும் 
தமிழகத்தின் புதிய ஆட்சி.!!

பிச்சை பாத்திரம் தீர்ந்திடிட்டு
தேடி போகிறேன் அடுத்த தெரு.!!
கிடைத்த பின்னே சேர்ந்திடுவோம்
கூடி உண்ண அனைவருமே.!!

''நண்பர்கள் அற்றது சோகம் தான். ஆனால், பகைவர்கள் அற்றது அதைவிட பெரிய சோகம்''-சே குவேரா

10 comments:

 1. அருமையான பிச்சை தட்டுகள்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வித்தியாசமா இருக்கு.வாழ்த்துகள் !

  ReplyDelete
 3. கவிதை நடையில் அறிமுகம் அருமை மச்சி

  ReplyDelete
 4. கலக்கிறீங்க தலீவா ...)

  ReplyDelete
 5. வலைப்பூக்களால் கோர்க்கப்பட்ட வலைச்சரம் அழகாய்த்தான் மிளிர்கிறது.
  தம்பிக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. Kurmatheyan . . Kalakurenka ponka. . .

  ReplyDelete
 8. கவிதை நடையிலே அறிமுகங்கள் அருமை சகோ....வாழ்த்துக்கள் கவிதைக்கும், கவிதை விதையில் வந்திட்ட பதிவர்களுக்கும்

  ReplyDelete
 9. என்ன ஒரு அழகான தலைப்பு!

  பிச்சைத் தட்டு!!

  பலவிதமான உணவுகளை, வித விதமான ருசிகளை,வகை வகையான தன்மைகளைக் கொண்டிருக்கும்.

  அதே நேரம்,தட்டு மட்டுமே என்னுடயதாக....

  உணவை உண்ணும் ரசிகனாக....

  மிக அழகான - பொருத்தமான - கச்சிதமான தலைப்பு!

  பாராட்டுக்கள் மதி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது