07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 28, 2011

ஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று

communication


நறுக் - 1- ஹலோ யார் பேசறது

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான்தான்"

"நாந்தான்னா யாரு?"

"நான்தான் ரேவதி"

"ரேவதி அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா இல்லையா?"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்லு.."

"யாரு?"

"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"

"ரா எப்படி எழுதறது "

"சரிதான் பாப்பா வீட்ல வேற யாரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்."

"சரி சேகரைக் கூப்பிடு..."

"சேகர் இந்தா.."

இதுல என்னவா? கடைசியில பாருங்க....

*****************
திருமதி இராஜராஜேஸ்வரிக்கு பிறகு வலைச்சர அறிமுகம் எழுதுவது தலைகீழாக அந்தரத்தில் நடப்பதற்கு சமானம். அவரது கடந்த ஏழு நாள் பதிவை யாரேனும் மொத்தமாக திரட்டி வைத்திருந்தால் அதுதான் ஒரு நிகழ்காலத் தமிழ்ப் பதிவர்கள் கையேடு.

என்னால் முடிந்த அளவிற்கு தொடுக்கப்பட்ட அறிமுகங்கள் கீழே..

பார்த்தது கேட்டது படித்தது என்று ஒரு வலைப்பூ. பழைய சென்னையைப் படம் பிடித்து நிறைய இடங்களில் பிரேம் போட்டு மாட்டியிருக்கிறார்கள். பழைய தமிழகத்தை அதாவது, தஞ்சையை, மதுரையை யாரோ படம் பிடித்ததை எடுத்து பொக்கிஷமாக அந்தக் கால தமிழகம் என்று ஒரு பதிவாக போட்டிருக்கிறார் பிகேபி. வருடத்திற்கு வருடம் தஞ்சையின் பரிணாம வளர்ச்சி தெரிகிறது. திருச்சி அப்போதே தஞ்சையை விட பிக் சிட்டி என்று புரிகிறது. மலைக்கோட்டை மேலிருந்து பார்த்தால் காவிரி கரைபுரண்டு ஓடுவது தெரிகிறது. அற்புதம். அற்புதம். நிறைய டெக்னாலஜி கூட எழுதுகிறார். சுவாரஸ்யமான வலைப்பூ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று ஒரு எழுத்தாளர். விகடன் பிரசூரம் இவர் எழுதிய இரண்டு புக் போட்டிருக்கிறார்கள். பெரிய ஆள். எழுத்திலும், ஏற்றத்திலும். போன வருடம் ஜூலையில் கல்கி பத்திரிகை செல்லும் இடமெல்லாம் ஒரே மசால் வடை வாசனை. என்னடான்னு எல்லோரும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதில் செவ்வடையான மசால்வடையே! அப்டின்னு ஒரு செம்மொழிக்கட்டுரை. மனுஷர் கலக்கிட்டார்.


ராமச்சந்திரன் உஷா ஒரு எழுத்தாளர். நுனிப்புல் என்று வலைத்தளத்திற்கு பெயர் வைத்து விட்டு வாசிக்க வருகிறவர்களுக்கு முழு விருந்து வைக்கிறார். சமீபத்தில் இவர் எழுதிய இரவுக் கட்டுரை மதுமிதா அவர்கள் தொகுத்த "இரவு" புத்தகத்தில் இடப்பெற்றது. அது இங்கே.  இமை மூட மறுக்கும் இரவுகள்

காதலிப்பது பற்றி ஒரு பொறுப்பான அக்கா என்னவெல்லாம் எண்ணுவாள். முப்பது வரியில் வரிக்கு ஓரிருவரி எழுதி ஒரு கவிதையில் அசத்துகிறார் ஜகன். காதலிப்பது பற்றி இவர் எழுதிய ஒரு கவிதை அப்படியே அடித்துப்போடுகிறது. இரண்டிரண்டு வரிகளில் வீட்டிற்கு மூத்தவளின் கடமைகளை பட்டியலிட்டுள்ளார்.

நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அவர்களது வலைப்பூ வாரணம். வலை முகப்பில் மூன்று சுழி ணவோடு சேர்த்து ஒரு யானையைக் கட்டி வைத்திருக்கிறார். ஆடிக்கும் அமாவாசைக்கும் எழுதினாலும் நிறைய அமாவாசை பல ஆடிக்கள் தாங்கும் பதிவாக வெயிட்டாக எழுதுகிறார். சாம்பிளுக்கு ரெண்டு.
1. எழுத்து எங்கிருந்து வருகிறது?
 2. தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்

இன்றைய வரிசையில் பிகேபியை தவிர மீதமிருப்போர் அபூர்வமாகத்தான் எழுதுகிறார்கள். ஆனால் எழுத்து அபூர்வமாக இருக்கிறது.
**********
என்னவா? சேகருக்கு 1 வயசு.
இது வாத்தியார் எழுதியது.

பின் குறிப்பு: முடிந்த வரையில் புதுப்புது அறிமுகமாக தருவதற்கு முயற்சிக்கிறேன்.  தினமும் இந்தப் பதிவில் ஆரம்பித்தது போல சில நறுக் கதைகள்/டயலாக்  பதியலாம் என்று எண்ணம்.

படக் குறிப்பு: நாம ஒன்னு கேட்டா அவங்க ஒன்னு செஞ்சுத் தரும் அனைத்து தொழில்நுட்ப விற்பன்னர்களுக்கும் மேற்கண்ட படம் சமர்ப்பணம். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி எல்லா ஈமெயில் இன்பாக்ஸ்சையும் சகட்டுமேனிக்கு நிரப்பிய படம்.

-

30 comments:

 1. ராம் அண்ட் பிகேபி மட்டும்தான் தெரியும். மத்தவங்களைப் பார்க்கிறேன்

  ReplyDelete
 2. காற்று வெளியும், தமிழ் வயலும் புதிய பக்கங்கள்...நல்ல அறிமுகங்கள்.இந்த மாதிரி அறிமுகங்கள் அவர்களை இன்னும் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கட்டும். ராஜேஸ்வரி மேடம் பற்றி நீங்கள் சொல்லியுள்ளது உண்மைதான். கலக்கி விட்டு சென்றுள்ளார்கள். எல் ஏ ராம்...பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 3. @எல் கே
  பார்த்துட்டு சொல்லுங்க எல்.கே. ;-))

  ReplyDelete
 4. @ஸ்ரீராம்.
  நன்றி... எல். ஏ. ராம்... அட்டகாசமா இருக்கும்.. ;-))

  ReplyDelete
 5. புதிய அறிமுகங்கள் ஸ்வாரஸ்யமாய் இருக்கின்றன. மெனக்கெட்டிருக்கிறீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 6. பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்குங்க

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. கலக்ல என அலுப்புத்தட்டாத நடையில் அருமையான அறிமுகங்கள்.

  வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்.

  ReplyDelete
 9. அப்பாதுரை சொன்ன நாகேஷ் போன் ஜோக் கிடைத்தவுடன் ... போன் உரையாடல வச்சு அமர்க்கள படுத்திட்டிங்க .முதல் வலைச்சர பதிவு அசத்தல் தல ...கண கச்சிதமான அறிமுகங்கள் ... ஆவலோடு இரண்டாம் பகுதிக்கு ....

  ReplyDelete
 10. வாசிக்க வாசிக்க இனிமை

  ReplyDelete
 11. நல்ல அறி முகங்கள். அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. PKP மட்டும் படித்திருக்கிறேன். மற்றவர்கள் எனக்கு புதிய அறிமுகம். நன்றி மைனரே.. புதியவர்களாக அறிமுகம் செய்ய வேண்டும் என மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது உங்கள் பகிர்வில். தொடருங்கள்....

  ReplyDelete
 13. @மோகன்ஜி
  அண்ணா! நன்றி. ;-))

  ReplyDelete
 14. @குணசேகரன்...
  பேஷாய் ஒரு நன்றிங்க.. ;-))

  ReplyDelete
 15. @இராஜராஜேஸ்வரி
  நன்றிங்க மேடம்! ;-)

  ReplyDelete
 16. @பத்மநாபன்
  அடுத்ததுல இன்னொன்னு வச்சுருக்கேன் பத்துஜி! பாராட்டுக்கு நன்றி.. ;-))

  ReplyDelete
 17. @கவி அழகன்
  நீங்கள் நேசிக்க நேசிக்க எனக்கு பெருமை.. நன்றி.. ;-)

  ReplyDelete
 18. @Lakshmi
  நன்றி மேடம்! ;-)

  ReplyDelete
 19. @வெங்கட் நாகராஜ்
  நன்றி நேற்றைக்கு பிறந்தநாள் கண்ட இந்நாட்டின் தலைநகரத் தென்றலே! ;-)))

  ReplyDelete
 20. அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 21. செவ்வடையான மஸால்வடையை ஏற்கனவே கல்கியில் படித்து விட்டு, வாய் விட்டுச்சிரித்து மகிழ்ந்துள்ளேன்.

  மீண்டும் நினைவூட்டி அறிமுகம் செய்திருப்பதற்கு மிக்க நன்றி.

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @சே.குமார்
  நன்றி குமார்! ;-)

  ReplyDelete
 23. @வை.கோபாலகிருஷ்ணன்
  நன்றி வைகோ சார்! ;-)))

  ReplyDelete
 24. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. @கோவை2தில்லி
  நன்றி சகோ! ;-))

  ReplyDelete
 26. என் நண்பனின்
  தனித்தன்மையில்
  ராஜபாட்டை .................
  ரசிக்கிறேன் நண்பா
  கூடவே வருகிறது
  பெருமையும்.................

  ReplyDelete
 27. @A.R.ராஜகோபாலன்
  நன்றி கோப்லி! ;-))

  ReplyDelete
 28. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

  சிறப்பான அறிமுகங்கள்.. தொடரட்டும்.

  ReplyDelete
 29. @அமைதிச்சாரல்
  நன்றி சாரல்... ;-))

  ReplyDelete
 30. புதிய அறிமுகங்களை அழகாய் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

  அறிமுகங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது