இந்த வாரம் நிறைய தேடல்.நிறைய புதிய தளங்களின் அறிமுகம் எனக்கும் கிடைத்தது.இன்னும் நிறைய பேரை அறிமுகம் செய்ய நினைத்தேன்.ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் எழுதலாமா எனவும் நினைத்தேன்.ஆனால் எனது சூழல் ஒத்துழைக்கவில்லை.சொல்லப்போனால் முதலிரண்டு பதிவுகள் வெளியே உலவு மையம் (browsing center)போய்தான் பதிவிட்டேன்.நான் அறிமுகப்படுத்த விரும்பும் சிலபதிவுகளுடன் மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.
என் மேல் நம்பிக்கை வைத்து வலைச்சரத்தில் எழுத அழைத்து அங்கீகாரமளித்த சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவளித்துவந்த நண்பர்களுக்கும்,பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளித்தவர்கள் ,வலைச்சர குழுவிற்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.ஆசியராக இன்றுடன் விடைபெறுகிறேன்.மாணவனாக தொடர்கிறேன்.நன்றி.......
மேலும் வாசிக்க...
கொஞ்சம் சினிமாத்தனமான டயலாக்கா தெரியும்.எனக்கு வேற மாதிரி சொல்லத்தெரியல.ஓகே.விசயத்துக்கு வரேன்.இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு தீப்பெட்டிக்குள் தூங்கிக்கிட்டு இருக்குற தீக்குச்சி மாதிரி இதனால் நல்ல விசயங்களை ஆக்கவும் முடியும் நல்ல விசயங்களையே அழிக்கவும் முடியும்.இதை கையிலெடுத்துக்கொண்டு சமூகத்தின் ஆக்கப்பாதைக்கு வெளிச்சம் தரும் சில பதிவுகளின் அறிமுகத்தை இன்று பார்க்கலாம்.
கிராமத்து காக்கை இந்தகாக்கை நகரத்திற்கு உணவு தேடி வந்திருக்கிறதாம்.சுற்றுச்சூழலை காக்க மரம நடுவோம் என சொல்லி கேட்டிருப்போம்.ஆனால் இந்த காக்கை மரம் வெட்டுங்கள் நாடு வளம் பெறும் என்கிறது.நான் கூட நாம தான் தப்பா படிக்குறமோன்னு நினைச்சு திருப்பியும் பாத்தேன்.மரம் வெட்டுங்கள் அப்படிதான் இருக்கு ஏன் அப்படி இருக்கு?
உண்மையா பொய்யா? நாம் கேள்விப்படும்,படிக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது நமது மனசில எழும் கேள்வி இது.இவரும் இப்படித்தான் கேட்கிறார்.எப்போதாவது நடந்தால் விபத்து எங்கேயும் எப்போதும் நடந்தால் அது என்ன என கேட்கிறார்.
நவீனத்துவம்,நாகரிகம்(!)கன்னாபின்னாவென்று வளர்ந்து வந்தாலும் பெண் குழந்தைகளைளிடம் நமது கருத்துகள் சிலவற்றை திணிக்கத்தான் செய்கிறோம்.இந்த stereotype விளைவுகளை உலகம் எனது பார்வையில் தளத்தில் பார்க்கலாம்.
சில பேர் தங்கள் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகளை எத்தனை நாள் கழித்து கேட்டாலும் அப்படியே சொல்லுவார்கள்,அவங்களையெல்லாம் கேமிரா கண்ணுங்க உங்களுக்கு ன்னு சொல்லுவோம்.இன்னைக்கு எல்லோருடைய கையிலும் கேமிரா இருக்கிறது.எல்லா இடத்திலும் கேமிரா இருக்குது.எந்நேரமும் கேமிராக்கண் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது இந்த கேமிராக்களால் வரு விபரீதங்களையும் நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வழிமுறைகள் இங்கே நமது நண்பர் பகிர்ந்திருக்கிறார்.
தினம் தினம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களது எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.அதேநேரத்தில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வருவது போன்ற பணம் கட்டி ஏமாந்து போகும் சம்பவங்களும் கணிசமான அளவில் நடக்கிறது.சரி எப்படித்தான் ஏமாறாமல் இருப்பது?அது குறித்து இங்கே சொல்லப்பட்டிருக்கிறது வாருங்கள்.
ஏன் இந்த கொலை வெறி? இது அந்த பாட்டைப்பத்திய விசயமில்லைங்க.மருத்துவர்களுக்கும் ,மக்களுக்கும் இடையயுள்ள உறவு சார்ந்த விசயங்களை இந்த வேண்டுகோளுடன் சொல்கிறது இந்த பதிவு.அன்பு நண்பர்களே அடுத்தமுறை நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மனிதனாக நடத்துங்கள் ! இது மக்களுக்கும் பொருந்தும்; மருத்துவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு இடத்தில் விவாதம் நிகழ்ந்தால் அமைதி ஏற்படுமா?மணம் திறந்த விவாததால் ஏற்படட்டும் உலக அமைதி என்கிறார் இவர்.பசித்தால் என்ன செய்வோம்.இது என்ன கேள்வி ,சாப்பிடுவோம் என்கிறீர்களா?எதை சாப்பிடுவோம்?சிலர் சைவம்,சிலர் அசைவம் இதுதான் பதிலாக இருக்கும்.ஆனால் நாம் சாப்பிடுவது விசத்தை என்கிறார் இவர்.
எகத்தாளம்.பேர்தாங்க இப்படி,பதிவுகளில் பொறுப்புணர்வு மிஞ்சி நிற்கிறது.இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே.ஆமாங்க,வாயில் இருக்கும் வரை உமிழ்நீர் அப்படின்னு சொல்றோம்.துப்பிட்டா அதை எச்ச(ல்)என்கிறோம்.துப்பு கெட்ட பொழப்பு என கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இல்லையா?அப்ப வாங்க.
நண்பர்களே,ஆக்கப்பதையில் நாமும் பயணிக்கலாமா?
மேலும் வாசிக்க...
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாயம் சார்ந்த நாடு.இன்றைய நகரமயமாகும் சூழலில் விவசாயத்தின் நிலை கேள்விக்குறியாக மாறி வருகிறது.நம்மில் பலர் விவசாய சூழலை விட்டு வேறு துறைகளுக்கு மாறிவிட்டிருக்கிறோம்.இந்நிலையில் விவசாயத்திற்கான தேடல் வலையில் கிடைக்கிறதா என தேடிய போது கிடைத்த முத்துகள் சில பற்றி இன்றைய அறிமுகத்தில் பார்ப்போம்.
வேளாண்மை உலகம்.ஆம் பெயருக்கேற்ற மாதிரி நிறைய வேளாண்மைத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்டோசல்ஃபான் போன்ற ரசாயன பூச்சி மருந்துகளுக்கு தடை வந்திருக்கும் சூழலில் பயிரைக்காக்க இயற்கை முறையே போதுமானது.இதை உணர்வோமா?
பயிர் விளையுமுன் அல்லது அறுவடைக்கு முன் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடு விவசாயிகளிடையே உண்டு.இதற்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் பற்றிய தகவல்கள் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
மண்,மரம்,மழை இந்த தளத்தில் காப்புரிமை,அறிவுசார், சொத்துரிமை,வணிகம் பற்றிய விழிப்புணர்வையும் தகவல்களையும் தருகிறது.வேம்பு,மஞ்சள்,பாசுமதிக்கு நான் காப்புரிமை இழந்ததை இப்பதிவு நினைவூட்டுகிறது
வேளாண்மை.காம் என்ற தளம் நாளுக்கு நாள் வேளாண்மை குறித்த தகவல்களை தந்து வருகிறது.
விவசாயத்திற்கான தேடலில் இணைந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...
இன்னைக்கு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குறதுன்னு ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்.சிரிக்காம யாரும் தப்பிச்சுட முடியாது.
பொண்ணு பாக்கப்போறப்போ பஜ்ஜி சொஜ்ஜிஎல்லாம் சாப்பிட்டுட்டு ....ம்,சரிங்க ஊர்ருக்குப்போய் லெட்டர்(ஓ!இது அந்தக்காலத்துலதான) மிஸ்டு கால்(!) குடுக்குறோம்ங்க.இப்படித்தான் நடக்குது.ஆனா இந்த கதை வேற.காதலிக்குற பொண்ணோட அப்பாகிட்ட பொண்ணு கேக்க போறப்போ அவரு போன வாரம் வந்து பொண்ணு கேட்டது நீயில்லையா?அப்படின்னு கேட்டா பையனோட ரியாக்சன் எப்படி இருக்கும்?
கடுகு சிறுத்தாலும்..........இல்லைங்க நான் சொல்ல வந்தது அது இல்லைங்க இங்கே காரமெல்லாம் கிடைக்காதுஇங்கே இருப்பது எல்லாமே இனிப்புதான்.ஹிட்லரையே ஜோக்கராக்குகிறார் ஒரு ஜோக் எழுத்தாளர்.
பரிட்சைகள்ல கேக்குற சில கேள்விக்கு பதில் தெரியாம ஏதோ கைக்கு வந்தத எழுதி வைப்போம்.காசா,பணமா? சும்மா அடிச்சு விடறது தானே.அந்தப்பழக்கம் தான் இன்னைக்கு பிளாக் வரைக்கும் வந்திருக்கு.ஒரு தேர்வுத்தாளில் நாயக்கர்கள் பெயர்க்காரணம் சொல்லப்பட்டிருக்கு.இதுக்கு எத்தனை மார்க் கிடைச்சது?
இந்த நாட்டுல அஞ்சு மிகப்பெரிய முட்டாளுங்க(என்னது முக்காவாசி பேருங்க அப்படித்தானா?ஓகே.அதுல பெஸ்ட் அஞ்சு பேர்) இருக்காங்களாம்.அதுல நெ.1 முட்டாள் யாருன்னு தெரியுமா?ஐ!நான் சொல்ல மாட்டேன் நீங்களே போய் பாருங்க.
நகைச்சுவை.காம் இந்த பேர்ல புதுசா ஒருத்தர் கிளம்பியிருக்கார் இங்கே இருக்குற திருடன் போலிஸ் ஜோக்ஸ் வாரஇதழ்களில் வரும் ரகம்.அதிலும் ஒருத்தர் திருட்டுத்தொழிலை விட்டுட்டு வேற தொழில் ஆரம்பிசிருக்காராம்.
இந்த டக்கால்டி வேலை எல்லாம் என்கிட்டே வைச்சுக்காத,அப்படின்னு கவுண்டரு ஒரு படத்துல டயலாக் பேசுவாரு.தன்னோட பிளாக்குக்கு டக்கால்டின்னே பேர் வைச்சிருக்கார் இந்த கவுண்டமணி ரசிகர்.கபாலியும் ககன்லால்சேட்டும் பேசிக்குறாங்க பாருங்க.
நண்பேண்டா என சொல்லிக்கொண்டு எழுதி வருகிறார் ஒரு நண்பர்(மெட்ராஸ்பவன் சிவகுமாரின் இன்னொரு தளம் நண்பேண்டா இது அது அல்ல).நம்ம கிரிக்கெட் டீம் படற பாட்ட என்ன கொடும சார் அப்படின்னு கேக்குறார்.சச்சின் எப்ப நூறாவது செஞ்சுரி அடிப்பாருன்னு போய் பாருங்க.
நண்பர்களே,அறிமுகமாகியுள்ள பதிவுகளில் உள்ளவற்றை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கலாமே.
இன்னும் சில அறிமுகங்களை அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி.
மேலும் வாசிக்க...
உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை இயற்கை பல ரகசியங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.இந்த ரகசியம் உலகில் வீற்றிருக்கும் ஒவ்வொரு பொருளிலும்,ஒவ்வொரு உயிரிலும் அடங்கியுள்ளது.அதைக்கண்டுபிடிக்க மனிதன் கண்டுபிடித்த சாவிதான் அறிவியல்.தேடத்தேட முடிவுறாப்புள்ளியை நோக்கி பயணிக்கும் இந்த ரகசியம்.அறிவியலைப்படிப்பது நம்மில் பலருக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கசக்கச்செயதாலும் கற்க கற்க இனிக்கும் விஷயம்.அதுவும் நமது இனிய தமிழில் சொல்லவா வேணும்.இன்றைய அறிமுகங்களில் சில அறிவியல் விசயங்களை எளிமையாக சொல்லிச்செல்லும் பதிவுகளைப்பார்ப்போம்.
தமிழ்த்தோட்டம் என்ற தளத்தில் தாய்மொழிக்கல்வி,அறிவியல் தமிழ்,போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுற்றுசூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியலால் வெல்வோம் வாருங்கள்.
வாழ்க்கைச் சுவடுகளும்,
சிந்தையும்,
பார்வையுமாய் வளைய வரும் பதிவு.இப்படி அறிமுகத்துடன் வளவு என்ற பெயரை தாங்கி வரும் தளத்தில் தமிழர்களின் அறிவியல்,வானியல் நுட்பங்களைப்பற்றி நிறைய அறியலாம்.தமிழர் வானியல் என்ற பதிவைப்பார்க்கலாமா?
அறிவியலுக்கு என ஒரு ஊர் இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்து அறிவியல்புரம் என பெயர் வைத்து பூமியியலைப்பற்றி நிறைய தகல்வல்கள் கொண்டுள்ள தளம் இது.காற்றழுத்தத்தாழ்வு நிலை ஒன்று புதிதாய் உருவாகியிருக்கிறது என டி.வி.ல திரு ரமணன் சொல்ல அடிக்கடி கேட்டிருப்போம்.அதென்ன காற்றழுத்த தாழ்வு மண்டலம்?தெரிஞ்சுக்க வேணாமா?
வணக்கம் இணையக்கல்வி இந்த தளம் தமிழ் அறிவியல்,விஞ்ஞானப்ப்ரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,பல துறைகள் சார்ந்த தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.ஏன்,எதற்கு,எப்படி,எனும் இந்த தளத்தின் பக்கத்தில் மூடநம்பிக்கையாகப்பார்க்கும் சில விசயங்களுக்கு அறிவியல் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
இன்னும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி!
மேலும் வாசிக்க...
பதிவுக்கு தலைப்புவைக்க ரொம்ப யோசிப்போம்.சில பேரோட வலைப்பூவின் பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்கும் அப்படிப்பட்ட சில தளங்களின் அறிமுகத்தை இன்று பார்ப்போம்.
யோசிங்க ,அட உங்களைசொல்லலைங்க இங்க ஒருத்தர் அப்படித்தான் தன் தளத்துக்கு பேர் வைச்சிருக்காரு.அப்படி என்ன யோசிக்க சொல்றார்னு உள்ள போய்த்தான் பாப்போமேன்னு போனேன்.சும்மா சொல்லக்கூடாதுங்க மண்டைய பிச்சுக்க வைச்சிட்டார்(யோசிச்சு தாங்க)அறிவுக்கு வேலை கொடுக்கும் பல விளையாட்டுகளை நீங்களும் போய் விளையாடுங்கள்.
யார்கூடவாவது பேசிக்கிட்டு இருக்கும் போது அடிக்கடி எதிர்வாதம் பேசுறவங்களை பாத்து ஏன்பா இப்படி எடக்கு மடக்கா பேசுற அப்படின்னு கேப்போம்.உடனே அவங்க பார்த்திபன் மாதிரி எடக்குன்னா என்ன மடக்குன்னா என்னன்னு அதுக்கும் மடக்குவாங்க.இப்படி தன் வலைக்கு பேர் வைச்சு வாழ்க்கை பற்றி தனது நடையில் சொல்லியிருக்கிறார்.
பிசாசு இது யாரையாவது திட்டுறத்துக்கு நாம பயன்படுத்துற வார்த்தை இதை கோபமாவோ இல்ல செல்லமாவோ பயன்படுத்தலாம்.செல்லமா தன் வலைக்கு பிசாசுக்குட்டி அப்படின்னு பேர் வைச்சிருக்கார் ஒருத்தர்.இவர் ஆண்களின் ஆளுமை பெண்களின் ஆளுமை பற்றி சொல்லியிருக்கிறார் பார்க்கலாமா?
சரியான லொள்ளு பார்ட்டி அப்படின்னு சில பேர சொல்லுவோம் .இங்கே ஒருத்தரு லொள்ளு அப்படின்னு பேர் வைச்சுக்கிட்டு பேருக்குத்தகுந்தமாதிரியே எழுதிக்கிட்டு வராரு.இவரு சம்பள உயர்வு பெற சில வழிகள் சொல்றாரு.பாத்து கடைபிடிக்கலாம் வாங்க.
காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள்,
எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle
எனும் தத்துவத்துடன் ... "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு.... இப்படித்தன் வலையைப்பற்றி அறிமுகம் செய்து வழக்கம் போல் அப்படின்னு பேர்வைச்சு வீராப்பு பேசுறார் .
நாஸ்தென்கா – இது எந்த மொழின்னு தெரியுதுங்களா?எனக்கும் தெரியலைங்க .சரி தெரிஞ்சுக்கலாம்னு கூகுள்ல தேடினப்போ எஸ்.ரா.அவர்களோட தளத்துக்கு கூட்டிட்டுப்போச்சு அங்கே தஸ்தாயெவ்ஸ்கி இவரோட அறிமுகமும் இவரோட (White Nights, by Fyodor Dostoevsky
இந்த கதையில வரும் பெரு பெண்ணின் பெயர் என ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.இவர் அடிக்கடி எழுதுவதில்லை.இவரது ஹைக்கூ முயற்சியை ரசிக்கலாம் வாங்க.
படம் ரொம்ப மொக்கடா சாமின்னு ஏதாவது மொக்க படத்த பாத்து ரொம்பவே அலுத்துப்போயிருப்போம்சில நேரம்.இவரு தன்னை மொக்கசாமி-ஆனா ரொம்பஷார்ப் அப்படின்னு சொல்லுறார் தன்னைப்பத்தி. இவரு உயிர் காக்குமா மருந்துகள் அப்படின்னு கேக்குறார்.
மேலும் சில அறிமுகங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி.
மேலும் வாசிக்க...
வாழ்க்கை இனிப்பது சில நெகிழ்வான தருணங்களில் புரியும் ,அப்படிப்பட்ட சில தருணங்களின் அறிமுகம் இன்று.....
வாழ்க்கை வாழ்வதற்கே இரண்டு வார்த்தைகளில் இருந்தாலும் இது மாபெரும் தத்துவமாக எனக்கு தோன்றுகிறது.என்னடா இது வாழ்க்கை என சலித்துக்கொள்ளும் சில வேளைகளில் இந்த வார்த்தை புது தெம்பூட்டும்.இதையே தனது வலையின் தலைப்பாக வைத்து எழுதி வருகிறார் திரு பிரபாகர் இவர்
தாத்தாவுக்கு எழுதிய கடிதத்தை நாமும் பார்க்கலாமா?
நாம் வாழும்காலத்துக்குப்பிறகு அல்லது நமது முன்னோர்கள் தமது வாழ்வின் அடையாளமாக விட்டுச்செல்வதை
சுவடுகள் என்போம்.தனது அடையாளமாக
சொல்லும் நிமிடங்கள் இவை .
கற்றலும் கேட்டலும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள்,இந்த பெயரில் குறையாத செல்வங்களை நமக்கு தந்து வருகிறார்,சகோ.ராஜி.மருந்து,சிகிச்சைகளுடன்மரணத்தை வெல்ல முக்கியமான விஷயம் பற்றி நல்லதோர் வீணை செய்தே இங்கே சொல்லியிருக்கிறார்.
சுனாமி இந்த வார்தைக்கேட்டால் பதறத்தான் தோன்றும்.ஆனால் தனது எண்ணங்கள் அலையல்ல சுனாமி எனச்சொல்லி எழுதி வருகிறார் விச்சு அவர்கள் இவர் தனது எழுத்தால் மொக்கராசுவின் கட்டிலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.
ஊர் விட்டு ஊர் போனா சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது,காரணம் கேட்டா அந்த ஊர்க்காத்து எனக்கு ஒத்துக்கல அப்படிம்பாங்க ஆனா இந்த கோவைக்காற்று எல்லோருக்கும் ஒத்துக்கும்.ரமேஷ் வேங்கடபதி அப்படி என்னதான் சொல்றார் இந்த பேரின்ப விலாசம் பற்றி.
மேலும் வாசிக்க...
தமிழறிந்த அனைத்து உறவுகளுக்கும் எனது வணக்கங்கள்,
தற்செயலாகப் பதிவெழுத வந்தவன் நான்,சில பதிவுகளை எழுதிய பின் இந்த வேலைக்கு நான் சரி வருவேனா என என்னை நானே கேட்டுக்கொண்டிருந்த போது,சக பதிவர்கள்,நண்பர்களின் ஆதரவு,கருத்து காரணமாக இந்த வேலைக்கு எப்படியோ நம்மள ஒத்துக்கிட்டாங்க போல அப்படின்னு நினைச்சுக்கிட்டு தொடர ஆரம்பித்தேன்.இந்த நிலையில் திரு.சீனா ஐயா அவர்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்த போது முந்தைய ஆசிரியர்களின் பட்டியலை பார்த்து பிரமித்தேன்.நான் பதிவெழுத வந்தபிறகு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை எனக்களித்த ஐயாவிற்கும்,வலைச்சரம் குழுவிற்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இனி எனது பதிவுகளின் சரம்..........
பயணம் நமக்கு பல படிப்பினைகளையும் அனுபவங்களையும் கொடுக்கும் எனது பயண அனுபவங்கள் சில......
ஓடத்தில் பயணம் செய்து கரை சேரலாம் ஆனால் தண்டவாளம் கரை சேர்த்து கேள்விப்பட்டிருக்கீர்களா?பயணிகளின் கனிவான கவனத்திற்கு என்று சொல்லுவாங்க,எனக்கு கிடைச்ச கனிவான கவனத்தை கொஞ்சம் பாருங்களேன்.
வலைச்சரம் வழியாக ஒரு வேண்டுகோள்.
மேலும் வாசிக்க...