07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 27, 2012

முடிந்தவரை சிரிங்க.......


இன்னைக்கு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குறதுன்னு ஒரு முடிவோடதான் வந்திருக்கேன்.சிரிக்காம யாரும் தப்பிச்சுட முடியாது.

பொண்ணு பாக்கப்போறப்போ பஜ்ஜி சொஜ்ஜிஎல்லாம் சாப்பிட்டுட்டு ....ம்,சரிங்க ஊர்ருக்குப்போய் லெட்டர்(ஓ!இது அந்தக்காலத்துலதான) மிஸ்டு கால்(!) குடுக்குறோம்ங்க.இப்படித்தான் நடக்குது.ஆனா இந்த கதை வேற.காதலிக்குற பொண்ணோட அப்பாகிட்ட பொண்ணு கேக்க போறப்போ அவரு போன வாரம் வந்து பொண்ணு கேட்டது நீயில்லையா?அப்படின்னு கேட்டா பையனோட ரியாக்சன் எப்படி இருக்கும்?

கடுகு சிறுத்தாலும்..........இல்லைங்க நான் சொல்ல வந்தது அது இல்லைங்க இங்கே காரமெல்லாம் கிடைக்காதுஇங்கே இருப்பது எல்லாமே இனிப்புதான்.ஹிட்லரையே ஜோக்கராக்குகிறார் ஒரு ஜோக் எழுத்தாளர்.

பரிட்சைகள்ல கேக்குற சில கேள்விக்கு பதில் தெரியாம ஏதோ கைக்கு வந்தத எழுதி வைப்போம்.காசா,பணமா? சும்மா அடிச்சு விடறது தானே.அந்தப்பழக்கம் தான் இன்னைக்கு பிளாக் வரைக்கும் வந்திருக்கு.ஒரு தேர்வுத்தாளில் நாயக்கர்கள் பெயர்க்காரணம் சொல்லப்பட்டிருக்கு.இதுக்கு எத்தனை மார்க் கிடைச்சது?

இந்த நாட்டுல அஞ்சு மிகப்பெரிய முட்டாளுங்க(என்னது முக்காவாசி பேருங்க அப்படித்தானா?ஓகே.அதுல பெஸ்ட் அஞ்சு பேர்) இருக்காங்களாம்.அதுல நெ.1 முட்டாள் யாருன்னு தெரியுமா?ஐ!நான் சொல்ல மாட்டேன் நீங்களே போய் பாருங்க.


நகைச்சுவை.காம் இந்த பேர்ல புதுசா ஒருத்தர் கிளம்பியிருக்கார் இங்கே இருக்குற திருடன் போலிஸ் ஜோக்ஸ் வாரஇதழ்களில் வரும் ரகம்.அதிலும் ஒருத்தர் திருட்டுத்தொழிலை விட்டுட்டு வேற தொழில் ஆரம்பிசிருக்காராம்.

வேடிக்கையான மனுசன்யா நீ,இப்படி ஒரு சிலரை பார்த்து சொல்லுவோம்.இங்கே ஒரு வேடிக்கையான மனிதன் சங்கம் வைச்சு சிரிக்க வைக்குறார். நான் பார்க்க நான் பார்க்க நான் அப்படின்னா என்ன தெரியுமா?தெரிஞ்சுக்கங்க.

வாங்க சார் வந்து ஒரு விசிட் அடித்து போங்க... அப்படின்னு ஒருத்தரு கூப்பிட்டாரு சரின்னு போய் பாத்தேன்.அங்கே சாப்ட்வேர் என்ஜினியர்கள் தங்கள் மேனஜரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில கேட்டிருந்தார்.இந்த கேள்விகள் எல்லா மேனஜர்களையும் பார்த்து கேட்கலாம்.

இந்த டக்கால்டி வேலை எல்லாம் என்கிட்டே வைச்சுக்காத,அப்படின்னு கவுண்டரு ஒரு படத்துல டயலாக் பேசுவாரு.தன்னோட பிளாக்குக்கு டக்கால்டின்னே பேர் வைச்சிருக்கார் இந்த கவுண்டமணி ரசிகர்.கபாலியும் ககன்லால்சேட்டும் பேசிக்குறாங்க பாருங்க.

நண்பேண்டா என சொல்லிக்கொண்டு எழுதி வருகிறார் ஒரு நண்பர்(மெட்ராஸ்பவன் சிவகுமாரின் இன்னொரு தளம் நண்பேண்டா இது அது அல்ல).நம்ம கிரிக்கெட் டீம் படற பாட்ட என்ன கொடும சார் அப்படின்னு கேக்குறார்.சச்சின் எப்ப நூறாவது செஞ்சுரி அடிப்பாருன்னு போய் பாருங்க.

புன்னகை உலகம் இந்த உலகம் நம்மையெல்லாம் நிச்சயம் புன்னகைக்க வைக்கும் என்ற உத்திரவாதமளித்து அதை உண்மை என உணரவும் வைக்கிறது.உழைக்கிற கழுதை தான் உதைக்குமாம்.
ஒரு தென்றல் நம்மை சிரிக்க வாங்க என அழைக்கிறது.
நண்பர்களே,அறிமுகமாகியுள்ள பதிவுகளில் உள்ளவற்றை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கலாமே.
இன்னும் சில அறிமுகங்களை அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி. 

17 comments:

 1. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. கலகலப்பான அறிமுகங்கள்.

  ReplyDelete
 3. ஒரே கலக்கலா போய்ட்டு இருக்குது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தொடர்ந்து பல சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்கின்றீர்கள்
  அருமை

  ReplyDelete
 5. அருமை அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 6. இதுவரை நான் அறியாத சில பதிவர்
  கள்.
  அறியச் செய்தீர் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. சூப்பர்..கோகுல்...
  நல்ல தேடல்...
  நல்ல அறிமுகம்..

  ReplyDelete
 8. எனக்கு அறிமுகமில்லா நிறைய பதிவர்கள்..
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. Lakshmi said...
  நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்./

  நன்றி அம்மா!

  ReplyDelete
 10. அமைதிச்சாரல் said...
  கலகலப்பான அறிமுகங்கள்.
  //
  நீங்களும் கலகலப்பா இருங்க,நன்றி!

  ReplyDelete
 11. ரமேஷ் வெங்கடபதி said...
  ஒரே கலக்கலா போய்ட்டு இருக்குது! வாழ்த்துக்கள்!
  //
  நீங்களும் இணைஞ்சு கலகலப்பா இருங்க.

  ReplyDelete
 12. K.s.s.Rajh said...
  தொடர்ந்து பல சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்கின்றீர்கள்
  அருமை

  //

  வாங்க நண்பா நன்றி.

  ReplyDelete
 13. dhanasekaran .S said...
  அருமை அருமை வாழ்த்துகள்
  //
  வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete
 14. புலவர் சா இராமாநுசம் said...
  இதுவரை நான் அறியாத சில பதிவர்
  கள்.
  அறியச் செய்தீர் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்
  //
  மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 15. NAAI-NAKKS said...
  சூப்பர்..கோகுல்...
  நல்ல தேடல்...
  நல்ல அறிமுகம்..
  //
  நன்றி!
  //


  மகேந்திரன் said...
  எனக்கு அறிமுகமில்லா நிறைய பதிவர்கள்..
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  //

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. 'நண்பேண்டா என சொல்லிக்கொண்டு எழுதி வருகிறார் ஒரு நண்பர்(மெட்ராஸ்பவன் சிவகுமாரின் இன்னொரு தளம் நண்பேண்டா இது அது அல்ல).நம்ம கிரிக்கெட் டீம் படற பாட்ட என்ன கொடும சார் அப்படின்னு கேக்குறார்.சச்சின் எப்ப நூறாவது செஞ்சுரி அடிப்பாருன்னு போய் பாருங்க'

  என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 17. என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே.S.Sivakumar, Madurai

  நகைச்சுவை.காம் இந்த பேர்ல புதுசா ஒருத்தர் கிளம்பியிருக்கார் இங்கே இருக்குற திருடன் போலிஸ் ஜோக்ஸ் வாரஇதழ்களில் வரும் ரகம்.அதிலும் ஒருத்தர் திருட்டுத்தொழிலை விட்டுட்டு வேற தொழில் ஆரம்பிசிருக்காராம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது