07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 10, 2012

நாள்-2--வயிற்றுக்கு ஈயப்படும்!

ஒருவன் வியாபார நிமித்தமாய் வெளியூர் போக நேரிட்டது.அந்த     ஊரில்தான்   அவன் மாமியார் வசித்து வந்தார்.எனவே மதிய உணவுக்கு மாமியார் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தான்.மாமியாருக்கு முன்   கூட்டியே தகவலும் அனுப்பி விட்டான்.

அவன் போன வேலை மதியத்துக்கு முன்பே முடிந்து விட்டது.சாப்பிட்டு விட்டு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.

மாமியார் வீட்டில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமியார் கொழுக்கட்டை அருமையாகச் செய்வார்கள்.எனவே அது விருந்தில் முக்கிய இடம் பெற்றது.அவன் வயிறு முட்டச் சாப்பிட்டான். குறிப்பாக  20 கொழுக்கட்டைகளுக்கு மேல் உள்ளே தள்ளினான். மாமியாரிடம் கேட்டான்”இது என்ன ?நான் சாப்பிட்டதே இல்லையேஎன்று.

மாப்பிள்ள! இது கொழுக்கட்டை.சரோஜா(மகள்) நல்லாச் செய்வாளே? செய்ததே கிடையாதா?” என்றாள்.

மாப்பிள்ளை புறப்பட்டான். பெயர் மறக்காமல் இருக்க ”கொழுக்கட்டை, கொழுக்கட்டை”    என்று  ஜபித்த படியே புறப்பட்டான்.நடுவில் பாதையில்            தண்ணீர் தேங்கியிருந்தது.கால் நனையாமல் அதை ஒரே தாவலில் தாண்ட எண்ணி "அத்திரிமாக்கு” என்று சொல்லிய படியே தாண்டினான்.பின் அது வரை சொல்லி வந்ததை மறந்தவனாய் ”அத்திரிமாக்கு” என்று சொல்லிய படியே வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் “உன் அம்மா அத்திரிமாக்கு செய்திருந் தார்கள். பிரமாதம்.நீயும் அத்திரிமாக்கு செய்” என்றான்.

அவளுக்கு ஏதும் புரியவில்லை”அத்திரிமாக்கா?அப்படி எதுவும் கிடையாதே”  என்றாள்.

வாக்குவாதம் நடந்தது.முடிவில் அவன் அவளை நன்கு அடித்து விட்டுக் கோபத்துடன் வாசலில் போய் அமர்ந்து கொண்டான்.

சத்தம் கேட்ட அடுத்த வீட்டுப் பாட்டி வந்து பார்த்தாள் ”அய்யய்யோ! இப்படி அடிச்சிருக்காறே!கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிப் போச்சே” என்றாள்.

அது அவன் காதில் விழுந்ததும்அதேதான் என்று குதித்தானாம்.

க, ஒரு ஆண் நாக்கு ருசிக்கு எந்த அளவு அடிமை எனத் தெரிகிறது.

அதனால்தான் சொன்னார்கள்"The way to a man's heart is through his stomach" என்று!

அப்படி அருமையாகச் சமைக்க உதவும் சில தளங்களை இன்று பார்க்கலாம்!

உணவுக்குப் பின்தானே மற்றதெல்லாம்!

எனவே ஒரு விருந்துடன் தொடங்கலாம்.

அம்மாவின் சமையல் என்றால் தனி ருசிதான்.முதலில் ஒரு சூப்புடன் ஆரம்பிக்கலாமா? பாருங்கள் அம்மாவின்  சமையலில்   காலிப்பிளவர் சூப்.

 எத்தனையோ விதமான பாயசம் சாப்பிட்டிருப்பீர்கள்.உளுந்து பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா? எப்படி என்று சொல்கிறார்  தர்ஷினி.


அடுத்ததாக அடுப்பங்கரையில் கொஞ்சம் எட்டிப்பார்க்கலாம்!என்ன செய்கிறார்கள்?அடடே,சொஜ்ஜியப்பம்! 

வடையில் இத்தனை விதமா?அடேயப்பா!தனியாக ஒரு வடை விருந்தே வைக்கலாம் போலிருக்கிறதே!பத்து வித வடைகள் பற்றிச் சொல்கிறார் காஞ்சனா ராதாகிருஷ்ணன்

அடுப்பங்கரை,சமையலறை எல்லாம் ஒன்றுதான்.இங்கே ”என் சமைய லறையில்” சுவையான முள்ளங்கி சப்பாத்தி எப்படிச் செய்வது எனச் சொல்கிறார் கீதா.

சப்பாத்திக்குத் துணையாக ஒரு சப்ஜி வேண்டுமா?அனைவருக்கும் பிடித்த பன்னீர் பட்டர்  மசாலா செய்து பார்க்கலாமா? வித்யாஸ் கிச்சனில் பார்க்கலாம்.

நல்ல காரசாரமான துவையல் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?இதோ பீர்க்கங்காய்த் துவையல்  தருகிறார்  ராகவன்


அடுத்ததாக ஒரு கலந்த சாதம்;வழக்கமான புளியோதரை,லெமன் சாதம் இவற்றுக்குப் பதிலாக கொத்தமல்லிச் சாதம் செய்து பார்க்கலாமா?இதோ ஆதி வெங்கட் சொல்கிறார்.

புதுமையான,சுவையான, பச்சடி ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? முருங்கைக்காய் கத்தரிக்காய் பச்சடி செய்முறை பற்றிச் சொல்கிறார் தேனம்மை லெக்ஷ்மணன்

பொரியலுக்கு ஒரு ஸ்டஃப்டு கத்திரிக்காய் செய்து பார்க்கலாம். சொல்பவர் தெய்வ சுகந்தி.


ரசமில்லாத சாப்பாடு ரசமில்லை என்று சொல்வார்கள். சுவை, ஆரோக்கியம்  இரண்டும் சேர்ந்த பூண்டு ரசம் எப்படிச் செய்வது என்று அகிலாவின் அடுப்படியில் எட்டிப் பார்க்கலாமா?

கடைசியாக எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாத ஒரு வலைப்பூ! எனது தமிழ்மண நட்சத்திர வாரத்தில் சாம்பார்  பற்றி எழுதிய பதிவில் இவரது சின்ன வெங்காய சாம்பார் பற்றிய பதிவை வெளியிட் டிருந்தேன்.அதைப் படித்த அமெரிக்க நண்பர்கள் பலர் செய்து பார்த்து அசந்துபோக,அமெரிக்காவில் எல்லாத் தமிழ் வீடுகளிலும் அச்சாம்பார் மணக்கிறதாம்! பாருங்கள் ஜயஸ்ரீ கோவிந்தராஜனின் வலைப்பூ.செய்து பாருங்கள்!

வயிறு நிறைந்து விட்டதல்லவா?

61 comments:

 1. அடே அப்பா ..அறுசுவை நடராஜன் கெட்டார் போங்கள் ..படிக்கும் போதே தின்னும் உணர்வு ..அஜீர்ணதின் காரணம் அவதி படுவோருக்கு பாட்டி வைத்தியம் அடுத்த பதிவில் எதிர் பார்கலாமா ! வாசு

  ReplyDelete
 2. ‘செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
  வயிற்றுக்கும் ஈயப் படும்.’
  என்கிறார் தெய்வப்புலவர்.

  நீங்கள் சுவையான சமையல் பற்றி தரும் வலைத்தளங்களோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்.அனைத்து தளங்களையும் பார்வையிட்டு ஒரு சுற்று வந்தாலே வயிறு நிறைந்து விடுகிறது.சமையல் பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் உணவகத்தில் சாப்பிட விரும்பாமல் தானே நள பாகம் செய்ய விரும்புவோருக்கும் இது ஒரு கையேடு போல. நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. இந்த அத்திரி மாக்கு எங்க பக்கம் குழந்தைகளை வச்சு சொல்லுவோம். நல்ல பகிர்வு. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. அன்பின் பித்த்ன - அட - சரியான சாப்பாட்டு ராமரா நீங்கள் - பலே பலே - நல்லாவே இருக்கு சாப்பாடு - ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. அத்திரிபஜ்ஜா கொழுக்கட்டை கதை அருமை.

  எங்கள் பக்கம் ’அத்திரிமாக்கு’ என்பதற்கு பதில் ’அத்திரிபஜ்ஜா கொழுக்கட்டைக்கதை’ என்றே குழந்தைகளுக்குச் சொல்வோம்.

  இன்று அழகான ருசியான சாப்பாட்டு அறிமுகங்கள்.

  அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. தெரியாத பல வலைப்பூக்கள்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மிக அருமையான சமையல் குறிப்பு பதிவுகளின் அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. சமையல் வல்லுனர்களை அறிமுகம் செய்வதற்காக சொல்லப்பட்ட
  கதை மிக மிக ருசி.அறிமுகங்களும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. உங்கள் பதிவைப் படித்தவுடன் உன்னால் முடியும் தம்பி திரைப்படப்பாடல் ”என்ன சமையலோ....” பாடல்தான் நினைவுக்கு வந்தது.

  நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிற வலைப்பக்கங்களை வைத்து எங்களைவிட ஆண்கள் சிறப்பாக சமைத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கறது.

  ReplyDelete
 10. வலைச்சர வாய்ப்புக்கு முதற்கண்
  நன்றி!

  அடுத்து சுவைமிகு சாப்பாடு!
  பதிவு வாயிலகத் தந்தீர் !

  இராமாநுசம்

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..வயிறு நிறைந்து விட்டது..நன்றி..தொடர வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. @Vasu
  எதிர்பார்க்கலாம்!
  நன்றி.

  ReplyDelete
 13. நன்றி சபாபதி அவர்களே

  ReplyDelete
 14. @cheena (சீனா)

  ரசிக்கத் தெரிந்தவன்(தஞ்சாவூர் மாவட்டமாச்சே!)

  அது ஏன் சாப்பாட்டு ராமன் என்று சொல்கிறோம்?ஏன் சாப்பாட்டு கிருஷ்ணன் இல்லை?!
  நன்றி சீனா.

  ReplyDelete
 15. @கடம்பவன குயில்
  சுவையான சமையலை ’நள’பாகம் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்!
  நன்றி.

  ReplyDelete
 16. ஆஹா! சுவை அறுசுவை பிரமாதம்.

  வழங்கிய விதம் அருமை.

  ReplyDelete
 17. அறுசுவையான அறிமுகங்கள். நன்று.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்.அத்தனையும் ருசியான பகிர்வு.மிக்க நன்றி.

  ReplyDelete
 19. நான் தேடித் தேடிப் போய் படிக்க சிரமப்பட்டதை ஓரே மூச்சில் கொடுத்து அசத்திவிட்டீர்கள். பல தளங்கள் எனக்குப் புதியவை. பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. ஆரம்பத்திலேயே
  அறுசுவை உணவு பரிமாற்றம்.
  அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இப்படி எழுதி பசியை கிளப்பி விடுறீங்களே?

  ReplyDelete
 23. ஐயா இங்க வந்துட்டரா..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. @கவிதை வீதி... // சௌந்தர் //

  நன்றி.

  ReplyDelete
 25. கருத்துக்கு உணவிடும் நண்பர் செ.பி. இம்முறை வயிற்றுக்கு உணவிட்டீர்கள். படித்ததில் வயிறு முட்ட உண்ட திருப்தி. நன்று. தொடர்கிறேன்.

  ReplyDelete
 26. சுவையான கதை சொல்லும் நீங்கள் உணவின் சுவையிலும் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்

  ReplyDelete
 27. அருமையான அறிமுகங்கள்!! நன்றிங்க!

  ReplyDelete
 28. நன்றி தெய்வசுகந்தி

  ReplyDelete
 29. கொழுக்கட்டை கதை அருமை...
  சமையல் குறிப்புகள் பற்றிய பதிவுகளை சேர்த்ததும் அருமை...அதில் என் பதிவையும் சேர்த்ததற்கு நன்றி.....

  ReplyDelete
 30. Intha Vaara Valaichara Asiriyarukku en manamaarntha Vaalthukkal! Aarambame Kalakkal. Arumaiyana Samaiyal Thalaththai arimugap paduththi irukkinga. Nanri.

  ReplyDelete
 31. ஆஹா.... வயிற்றுக்கு ஈயப்படும்... :)

  சுவையான சமையல் விருந்து இன்று....

  ReplyDelete
 32. அருமையான விருந்துப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 33. கொஞ்சம் கை, கால் வீங்கினாலும் இதே கதை தான் சிறு வயது முதற் கொண்டு கேட்ட கதை வாழ்த்துகள். அறிமுகங்களிற்கு நன்றியும், வாழ்த்துகளும்.பயணம் தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 34. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
  விருந்து தடபுடலாக இருந்தது. என் பதிவையும் பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 35. மிக்க நன்றி சென்னைப் பித்தன்.. என் புத்தக வெளியீடு காரணமாக அதிகம் எல்லா ப்லாகும் படிக்க இயலவில்லை.. என் சமையயல் ப்லாகில் பச்சடியை குறிப்பிட்டமைக்கு நன்றி..:)

  ReplyDelete
 36. romba nandri thiru.chennai pithan. :) iniya pongal nal vaalthukkal.

  ReplyDelete
 37. நன்றி துரை டேனியல்

  ReplyDelete
 38. நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

  ReplyDelete
 39. நன்றி Vidhoosh.பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது