07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 30, 2012

வணக்கங்களுடன் சுயபுராணம் மற்றும் நன்றி மொழிதல்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு.


ணக்கம் வலையுலக நண்பர்களே! பூமி உருண்டை என்பதனால் நாம் எங்கு தொடங்குகிறோமோ அங்கே வருவோம், இது அறிவியல், அது போல்தான் அமைந்து விட்டது. என்னுடைய முதல் பதிவு வீடு, வலையின் பெயரும் அதுதான், அதை வலைசரத்தில் அறிமுகப்படுத்திய திருமதிP.S.ஸ்ரீதர் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் வணங்குகிறேன்.

வயதில் மூத்தவரும், பதிவுலகில் இளைஞரும், இலக்கிய கவிதைகளுக்கு சொந்தக்காரர் புலவர் ராமாநுசம் அய்யாவையும்.

சின்ன சிலேடை கதைகளை அள்ளியிறைத்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து படிப்பவர்களை அவர் எழுத்துக்கு பித்தனாக்கும், சென்னைபித்தன் அய்யா அவர்களையும்.

குறையொன்றும் இல்லை கண்ணா! என்று பதிவுலகை தாலாட்டும் தாயாய் எங்களை ஆசிர்வதிக்கும் அம்மாலக்ஷ்மி அம்மாளையும்,

வலைமுத்துக்கள் ஒவ்வான்றாய் தேர்ந்தெடுத்து வலைசரமெனும் மாலையை நீங்களே கோர்த்து தமிழ் தாய்க்கு காணிக்கையாக்கும் பணியைச் செய்யுங்கள் என்று என்னை தேர்ந்தெடுத்த சீனாஅய்யாவையும்  மற்றும் அனைத்து மூத்தபதிவர்களை வணங்கி எம் பணியை துவக்குகிறேன். எனக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க வேண்டுகிறேன்..

இப்படிக்கு

வீடு சுரேஸ்குமார்
1.கிராமத்தில் வாழ்ந்த வீட்டை யாரும் பாராமரிக்க முடியாததால், விற்று விட முடிவு செய்து ஒரு அறிவிப்பு பலகை வைத்த போது, என் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைக்கத் தோன்றவில்லை, ஏனோ மனம் வீட்டு ஞாபகமாகவே இருந்த போது, அதன் நினைவாக தொடங்கியதுதான் வீடு வலைபூ, என் வலையில் முதல் இடுகையாக கவிதையாக என் கண்ணீரை கொட்டியிருந்தேன்,

நம்முடைய வேகமான வாகணப் பயணம் ஏற்படுத்திய விளைவுகள், கண்தானம், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பல பாமர மக்கள் அறியாமையால் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்த சம்பவம்,

ஒரு பெண்ணைப் பெற்ற ஏழைத் தாயின் நிலையை விளக்கிய கவிதை.

இது ஒரு காதல் வந்தவனின் புலம்பல், உவமையில்லாத கவிதை, நான் மிகவும் ரசித்தது எழுதியது.

மரணம் என்பது மிக வேதனையானது,உறவுகளை இழப்பதை விட நட்பை இழப்பது எனக்கு அதிக வலி கொடுக்க கூடியது.

திரைப்பட விமர்சனம் நிறைய நண்பர்கள் என்னை நோக்கி வரவைத்தது.

மொக்கையர்களுக்கெல்லாம் மொக்கையர் சந்தோஷ், பற்றி நான் இட்ட நகைச்சுவை இடுகை, தனுசின் கொலைவெறி பாட்டுக்கு இவர்தான் எடுத்துகாட்டு...

அம்மாவின் அம்மாவை நினைவு கூர்ந்த கவிதை, இன்னும் மனம் சாந்தியடைய நான் சாயும் மடிக்கு சொந்தக்கார கிழவி.

அகர வரிசையில் எழுதிய சோப்பு டப்பா கவிதை,

நான் வியந்த மனிதனின் ஆயிரம் பதிவுக்கு நான் தொடுத்த பாமாலை.

என் படிக்கும் பழக்கத்துக்கு தீனியிட்ட கருவறைக்கு நன்றி கூறி ஒரு பதிவு!

என் புத்தாண்டு ஆசை....

அதிகமா என்னைப் பற்றி அறிமுகப்படுத்தி விட்டேன் என நினைக்கிறேன்,
நாளை மீண்டும் பதிவுலகில் நான் ரசித்த இடுகை மற்றும் பதிவர்களுடன்
சந்திக்கிறேன் வணக்கம் நண்பர்களே!

21 comments:

 1. இந்த வாரம் வீடு வாரமா...

  ஆரம்பமே அசத்தல் சுரேஷ்...

  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 2. வாழ்த்துகள் சுரேஷ்

  ReplyDelete
 3. கோகுல் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 5. வீடு, சுரேஷ் நன்றி, அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வணக்கம் சுரேஷ்..இந்தவார ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும் சிறப்பான அறிமுகங்களை கொடுப்பதற்கும் எனது வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. அசத்தலோ அசத்தல் சுரேஸ். கலக்குங்கள்.

  ReplyDelete
 8. ஆரம்பமே அசத்தல்...

  வலைச்சரத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 10. அன்பின் இனிய சுரேஷ்!

  முதற்கண், இந்த வார வலைச்சர
  ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு என்
  உளங்கனிந்த வாழ்த்துகள்!
  அடுத்து தொடக்கத்திலேயே
  என் பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்கு
  நன்றியும்,தங்கள் பணி சிறக்க நல்
  வாழ்த்துகளையும் தெரிவித்துக்
  கொள்கிறேன்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. வாங்க சுரேஷ், வெல்கம்! இந்த வாரம் நல்ல அறிமுகங்களை நிறைய எங்களுக்குத் தந்து சிறப்பிக்க உங்களை உளமார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 12. மாப்ள வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் ஹவுஸ் பதிவரே!

  ReplyDelete
 13. அன்பின் சுரேஷ் குமார் - அருமையான சுய அறிமுகம் - சென்று பார்த்து இரசித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. வலைச்சரப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். தொடக்கத்திலேயே என்னை அன்புடன் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.ஒரு சிறப்பான வாரத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 15. இனிய மதிய வணக்கம் நண்பர் சுரேஷ் மற்றும் வலைச்சர நண்பர்களுக்கு,

  பெரியவர்களின் ஆசியுடன் வலைச்சர முதல் சரத்தினைக் கட்டியிருக்கிறீங்க,
  தொடரட்டும் தங்கள் பணி.
  வாழ்த்துக்கள் நண்பா,
  ஜமாயுங்க.

  ReplyDelete
 16. தமிழ்வாசி,
  நீச்சல்காரன்
  அம்மா லக்ஷ்மி
  சசிகுமார்
  மதுமதி
  ஆரூர் மூனா செந்தில்
  சிவகுமார்
  புலவர் சா இராமநுசம் ஐயா
  கணேஷ்
  மாம்ஸ் விக்கி
  சீனா ஐயா
  சென்னை பித்தன் ஐயா
  நிரூபன்
  சி.பி.செந்தில்குமார்
  நாய்நக்ஸ்
  அனைவருக்கும் நன்றிகள் வணக்கங்கள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்...தொடருங்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் வீடு சுரேஷ்.

  ReplyDelete
 19. இந்த இல்லம்(வீடு)சொர்க்கமாகும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது