07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 22, 2012

நாள் 7 : கருவூர்த் தேவர் வரலாறும், பதிவுகள் அறிமுகமும்எங்கள் தஞ்சை அரசின் வரலாற்றில் நடந்த சம்பவங்களில் ஒன்று. கருவூர்த் தேவர் கருவூரில் பிறந்தவர். தேவர் என்ற அடைமொழி, உயர்வு கருதி மக்களால் வழங்கப்பெற்றது. இவருடைய இயற்பெயர் மறைந்து கருவூர்த் தேவர் என்ற நாமமே நிலைபெற்றது. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் கருவூர்த் தேவர் பாடிய திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளில் ஒன்று தஞ்சை இராசராசச்சரம் என்னும் தஞ்சைப் பெரிய கோயிலைப்பற்றியது.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும் அம்மண்ணனின் மகன் ராஜேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர். எனவே இவருடைய காலம் கி.பி 10 நூறு்றாண்டின் பிற்பகுதி தொடங்கி 11ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை என்று கருதப்படுகிறது. அந்தணர் குலத்தில் பிறந்த இவர் தமிழிலிலும், வடமொழியிலும் பெரும் புலவராக விளங்கினார். முதலாம் ராஜராஜ சோழனின் நட்பைப் பெற்று அவருடைய ஆன்மீக குருவாக விளங்கினார் என்று கருதப்படுகிறது.

இவரைப் பற்றிய புராண வரலாறுகளில் மிக முக்கியமானவை, 1, பழநிமலையில் யோகநாதரின் சீடராக இருந்து அட்டமாசித்திகள் பெற்றது. 2, மற்றும் அவர் அருளால் காயகல்பத்தை உண்டு நீண்ட நாள் வாழும் திறம் பெற்றது. 3, தஞ்சையில் பெரிய கோயிலை கட்டி முடித்து குடமுழுக்குக்கு ராஜராஜன் ஏற்பாடு செய்த போது பெருவுடையாரை தாபிக்கச் சாற்றிய மருந்து இளகிய போது கருவூர்த் தேவர் தம் சித்தியால் மருந்தைக் கெட்டிப்படச் செய்தது ஆகியவையாம்.

நாடெங்கும் பயணம் செய்து திருத்தலங்களைத்த தரிசித்து திருப்பாடல்களை பாடி வந்த கருவூரார் இறுதியாக, கருவூரில் ஆனிலையப்பர் கோயிலில் தென்மேற்குப் பகுதியில் நிட்டை கூடி சிவானந்த பெருவாழ்வை எய்தினார். தேவாரம் பாடிய மூவரைப் பின்பற்றியே இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

------------------------------

இன்றுடன் என்னுடைய ஆசிரியர் பணி நிறைவடைகிறது. வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும், தமிழ் பிரியன் தமிழ்வாசி பிரகாஷ்க்கும் நன்றிகள் பல.
அதே போல் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

------------------------------

இன்றைய அறிமுகங்கள்

தமிழாரன் இணைய மஞ்சரியில் வந்துள்ள என்னுடைய போதிமரங்கள் - மு.மேத்தா என்ற கவிதைத் தொகுப்பு அருமை.

புரட்டிப் போட்ட படைப்புகள் என்ற பதிவில் வந்த பாரதியின் ஒரு பாட்டு (சாமியாட்டம் - பாலபாரதி)அருமை.

தமிழ்தொட்டில் வலைப்பூவில் வந்துள்ள பிரிவு என்பது துயரமல்ல ஆனந்தம் என்ற கவிதையும் அருமை.

அன்னைத் தமிழ் என்ற வலைப்பூவில் வந்துள்ள என் உயரின் கீதம் நீ. என்ற கவிதை நன்றாக உள்ளது.

கலகலப்பிரியா என்ற வலைப்பூவில் வந்துள்ள இவ்விதமாக என்ற கவிதை நன்றாக உள்ளது.

எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள் என்ற வலைப்பூவில் வந்துள்ள நான் குருடனான கதை என்ற கவிதை நன்றாக உள்ளது.

இடிமுழக்கம் என்ற வலைப்பூவில் வந்துள்ள சக்கரை மேல் எறும்புகள் என்ற கவிதை நன்றாக உள்ளது.


அதீத கனவுகள் என்ற வலைப்பூவில் வந்துள்ள இது எல்லாம் கவிதைகள் என்ற கவிதை நன்றாக உள்ளது.


ஆரூர் மூனா செந்தில்

9 comments:

 1. சிறப்பாக பணியாற்றியமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தொடர்ந்து வர முடியவில்லை, இருப்பினும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன், பதிவின் முதல் பகுதியில் தொகுத்திருக்கும் விஷயங்கள் அனைத்துமே மிக அருமை. நல்ல அறிமுகங்களும் கூட. சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் செந்தில்!

  ReplyDelete
 4. சிறப்பாக பணியை நிறைவு செய்த்ததற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. /// கோகுல் said...

  சிறப்பாக பணியாற்றியமைக்கு வாழ்த்துகள். ///

  நன்றி கோகுல்.

  ReplyDelete
 6. /// veedu said...

  நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் வாழ்த்துகள். ///

  நன்றி சுரேஸ்

  ReplyDelete
 7. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

  தொடர்ந்து வர முடியவில்லை, இருப்பினும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன், பதிவின் முதல் பகுதியில் தொகுத்திருக்கும் விஷயங்கள் அனைத்துமே மிக அருமை. நல்ல அறிமுகங்களும் கூட. சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள் செந்தில்! ///

  மிக்க நன்றி ப.ரா.

  ReplyDelete
 8. /// Lakshmi said...

  சிறப்பாக பணியை நிறைவு செய்த்ததற்கு வாழ்த்துகள். ///

  இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி லட்சுமி அம்மா,

  ReplyDelete
 9. கருவூரார் விஸ்வகர்மா குலத்தில் பிறந்தவர். அந்தணர் குலமென்ற தவறான தகவல் உள்ளது. திருத்தி கொள்ள வேண்டுகிறேன்.

  விஜய்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது