07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 9, 2012

நாள்-1-மூங்கையான் பேசலுற்றான்!

பதிவுலகில் என் வாசிப்பு அனுபவம் குறைவே.இருப்பினும் ,சீனா அவர்கள் கேட்டவுடன்   ஒப்புக்கொண்டேன்!காரணம்,நான் படித்தவற்றைப்  பகிர்ந்து கொள்ளலாம்   என்ற அவா!உங்களுக்குத் தெரியாத புதிய பதிவர்கள் என்று  அநேகமாக யாரும் என் சரத்தில் இருக்கமாட்டார்கள். இவர்கள் யாருக்குமே அறிமுகம் தேவையில்லை. எனவே இதை அறிமுகம் எனக்கூறாது ,பகிர்வு என்று கூறுவதே முறை. எனது வாசிப்பு அனுபவத்தைப் பகிரும் இம் முயற்சியைகம்பன் சொல்வது   போல்”மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன்”  என்றுதான் கூற வேண்டும்.

இந்த வாரம் முழுவதும் விருந்தா அல்லது மருந்தா என்பது கடைசி யில்தானே தெரியும்!

முதல் நாள் சுய அறிமுகம்.நானும் என் பதிவும் என்று நான் சொல்லும் போதே   “நீயும் உன் மூஞ்சியும்” என்று யாரோ சொல்வது போல் உள்ளது!

விருப்ப ஓய்வுக்குப் பின் சமஸ்கிருதம்,ஜோதிடம் ,வேதம் என்று என்ன எல்லாமோ கற்றுப் பின் ஒரு நாள் தற்செயலாகத் தமிழ் வலைப்பதிவு அறிமுகமாகப்,   பின் பிறந்ததே “நான் பேச நினைப்பதெல்லாம்”. தொடக்கம் முதலே நிகழ்வுகள்,அனுபவம்,கதை என்று எல்லா வகையானவையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்;ஆனால் கவிதையில் கால் பதிக்கக்(கை பதிக்க?) கொஞ்ச நாள் ஆயிற்று.பள்ளி நாட்களில் பாரதியும்,கல்லூரி நாட்களில் கம்பனும்,கணையாழி,கசடதபற நாட்களில் புதுக்கவிதையும் அறிமுகமாகி  எல்லா விதமான கவிதைகள் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.நான் எழுதுவது கவிதையா என எனக்குத் தெரியாது.இருப்பினும் என் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு.

என்னுள் பிரவாகமாய்ப் பொங்கி வந்த ஒன்று-

ஊழிக்கூத்து-கவிதை முயற்சி.


எனது காதல்(காதலி) பற்றிய புலம்பல்கள்-
இன்னும் மறக்கவில்லை  

சாந்தோம் சந்திப்புகள்  


சாந்தோம் சந்திப்புகளின் முடிவு

 சிறுகதையையும் விட்டு வைக்கவில்லை.எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது-

துணை 

விதி

நாகரத்தினம்

கொஞ்சம் நகைச்சுவையும் முயன்றதுண்டு. நான் ஜோக்குகள் எழுதுவதைச் சொல்லவில்லை.வேறு பதிவுகள்.இதோ, மாதிரி

கண்ணும் கதையும் 


பயண அனுபவம் எழுதியதில் ஒரு அனுபவம்!

பயணமும் எண்ணங்களும் 

சென்னை பித்தன் ஆகிய என்னை சென்னைக் காதலன் என அழைத்து என் சென்னைக் காதல் பற்றி எழுதத்தூண்டி விட்டார் நண்பர்  கக்கு மாணிக்கம் .

சென்னைக் காதல் 


சென்னைக் காதல்-2


சென்னைக்காதல்-3

ஆனால் மிகுந்த வேகத்துடன் எழுத ஆரம்பித்து,நடுவில் பலமுறை தேங்கி, மீண்டும் வளர்ந்து,மீண்டும் தேங்கிப்போன ஒரு பதிவு, கட்டாயமாக நான் எழுதியே தீர வேண்டிய ஒரு பதிவு,”ஒரு வரலாறு"   என்ற தலைப்பில் நான் எழுதி வந்த பதிவு.


ஏதோ சில காரணங்களால் நின்றுபோன இப்பதிவைத்தொடர எல்லாம் வல்ல இறைவன் அருளும் நீங்கள் தரும் ஆதரவும் துணை நிற்கட்டும்.

போதுமா சுய அறிமுகம்?!


52 comments:

 1. வலைச்சரத்தில்,வலைப்பூக்களைக் கொண்டு தாங்கள் தொடுக்க இருக்கின்ற வலைச்சரம் வண்ணச்சரமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ‘ஒரு வரலாறு-ஒரு அத்தியாயம் தொடரை ஆவலுடன் படித்தவன் என்பதால் உரிமையுடன் கேட்கிறேன். அதைத் தொடருங்கள் என்று. வாழ்த்துக்களுடன்!

  ReplyDelete
 2. வாழ்த்துகள் சென்னை பித்தன்.,

  வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பில் தங்களின் பங்களிப்பை ஆர்வத்துடன் தொடர்கிறேன் .

  ReplyDelete
 3. அன்புநிறை சென்னைபித்தன் ஐயா
  தங்களின் எழுத்து வளத்தை நான் பேச நினைப்பதெல்லாம்
  என்று நீங்கள் பதிவிட்ட ஒவ்வொன்றிலும் கண்டதால்...
  வலைச்சரம் இன்னும் அதைவிட வளமாக இருக்கும்,,
  இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. வாழத்துகளும்...வணக்கங்களும்...அய்யா?

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் புதிய ஆசிரியர் பொறுப்புக்கு.

  ReplyDelete
 6. @வே.நடனசபாபதி
  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 7. @சி.பி.செந்தில்குமார்
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 8. @நிகழ்காலத்தில் சிவா
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 9. @மகேந்திரன்
  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 10. @veedu
  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. @Lakshmi
  வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 12. இனிய காலை வணக்கம் ஐயா,
  வலைச் சரத்தில் பதிவு மாலைகளைத் தொடுக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வாழ்த்துகள் அய்யா .. கலக்குங்கள்

  ReplyDelete
 14. வலைசர வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 15. வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 16. வலைசர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. தங்களின் அறிமுகங்களை அறிய ஆவலுடன் உள்ளேன்.

  ReplyDelete
 18. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  அறிமுகமே அசத்தல்... தொடருங்கள்

  ReplyDelete
 19. வாங்க சார். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. வாங்க... வாங்க நண்பரே... நீங்கள் நல்ல ரசிகர் என்பதை அறிவேன். இந்த வலைச்சர வாரம் வண்ணமயமாக எங்களுக்கு அமையும் என்பதில் மிக மகிழ்கிறேன். தொடர்கிறேன்...

  ReplyDelete
 21. ஆரம்பமே பின்னி ( சிலேடை தற்செயலே )விட்டீர்களே ! நிச்சயம் கதம்பமாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை .மணக்க மணக்க பின்னுங்கள் .
  வாசு

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. ஒரு வாரம் வலைச்சரம் திருவிழா கோலம்தான்
  ஜமாயுங்க்கள்

  ReplyDelete
 24. வாழ்த்துக்கு நன்றி நிரூ.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கு நன்றி ராஜா.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கு நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 27. வாழ்த்துக்கு நன்றி சிவகுமார்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கு நன்றி சமுத்ரா.

  ReplyDelete
 29. நன்றி ஷக்திப்பிரபா.

  ReplyDelete
 30. வளமாக வளரும் வண்ணச்சரம்...
  வனப்பான பகிர்வுகளுக்குப்
  பாராட்டுக்கள் ஐயா..

  ReplyDelete
 31. //விருப்ப ஓய்வுக்குப் பின் சமஸ்கிருதம்,ஜோதிடம் ,வேதம் என்று என்ன எல்லாமோ கற்றுப் பின் ஒரு நாள் தற்செயலாகத் தமிழ் வலைப்பதிவு அறிமுகமாகப், பின் பிறந்ததே “நான் பேச நினைப்பதெல்லாம்”. தொடக்கம் முதலே நிகழ்வுகள்,அனுபவம்,கதை என்று எல்லா வகையானவையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்;//

  ஆஹா, நல்லதொரு அனுபவ முதிர்ச்சியுடன் கூடிய வரிகளாக எழுதியுள்ளீர்கள். தங்களுக்கு என் நமஸ்காரங்கள், ஐயா. vgk

  ReplyDelete
 32. அறிமுகமே நன்று... தொடர்ந்து அசத்துங்கள்....

  ReplyDelete
 33. அன்பின் பித்தன் - அருமையான சுய அறிமுகம் - அத்தனையும் படிக்க வேண்டும் - நேரம் ஒதுக்குகிறேன். பதிவு - தொடக்கமே நன்றாய் வந்திருக்கிறாது. தொடர்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 34. முதல்முறையாக தங்கள் தளம் சென்றுவந்தேன். படிக்க நிறைய உள்ளது. ஒவ்வொன்றாகப் படிப்பேன்.

  வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 35. அன்பின் பித்தன் - சில சுய அறிமுகப் பதிவுகள் படித்து இரசித்து மறு மொழி இட்டேன் - மற்றவற்றையும் படிக்கிறேன். வரலாறினைத் தொடர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 36. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. தங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. நன்றி இராஜராஜேஸ்வரி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது