07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சென்னை பித்தன். Show all posts
Showing posts with label சென்னை பித்தன். Show all posts

Sunday, January 15, 2012

நாள்-7-பல்சுவை வேந்தர்கள்,வல்லவர்கள்!

இந்த வலைச்சரம் தொடுக்கும் முன்பே இருமுறை என் வலைப்பதிவில் வலைப்பூ மாலை  கட்டியிருக்கிறேன்.பதிவுகளின் தலைப்பை வைத்துக் கட்டப்பட்ட மாலைகள்  அவை. அம்மாலைகளில் ரோஜா,மல்லிகை,முல்லை,ஜாதி,சம்பங்கி எனப் பல மலர்களிருக்கின்றன.அனைத்தும் என்னைக் கவர்ந்த மலர்கள். எனக்குப் பிரியமானவை அந்த மலர்களில் சிலவற்றையும் வேறு சில மலர்களையும் எடுத்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். வெல்லப் பிள்ளையாரில் எந்தப்பக்கம் இனிப்பு என்று சொல்வது? எனவே  வலைப்பூக்களில் எந்தப்  பதிவையும் குறிப்பிட்டுச் சொல்லாது,  வலைப்பூக்களை மட்டும் பகிர்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
படித்த பின்னும்  நினைத்துப்  பார்க்கத்தூண்டும் பதிவு--நினைத்துப்பார்க்கிறேன்

நெஞ்சில் தங்கும் மனோகரப்  பதிவுகளுக்கு- நண்பர் நாஞ்சில் மனோ.

இது வெறும்  கவிதைவீதி மட்டும்  அல்ல, கலக்கல் வீதி!

நல்ல பதிவுகளின் சரணாலயம் இந்த  வேடந்தாங்கல்


இது நாமெல்லாம் உணர வேண்டிய உலகம் .நல்லதை உணர்த்தும் உலகம்-    உணவு உலகம்     

நம்மை    வலை வீசி இழுக்கிறார் இந்த    வலைஞன்.

நம் நினைவிலிருந்து   வெட்டி விட முடியாத  பேச்சு இந்த  கொஞ்சம் வெட்டிப்பேச்சு!

இவர் எழுதும் ஒவ்வொரு வரியும் பளீரென்று  ஒளிரும் மின்னல் வரிகள்


இந்த  மெட்ராஸ் பவன்ல  ஸ்பெசல் மீல்ஸ் சாப்பிட்டுப் பாருங்க! அறுசுவை.

ஃபிலாசஃபி என்றால் தத்துவம்.ஆனால் அது என்ன தத்துப் பித்துவம் ?தெரிஞ்சுக்கலாமா?

 இவர்,ஒரு ராஜபாட்டைக்கு என் ராஜபாட்டை என்று சொந்தம் கொண்டா டுகிறார்.  ராஜ நடைதான்!

நண்பர்கள் கூட்டம் என்றால் கொண்டாட்டம்தான்!எத்தனை சுவையான பேச்சுக்கள்!ரசிக்கலாம்!

உலகே மாயம் என்பர்..மாய உலகத்தில்  எத்தனை எத்தனை ரசிக்க வைக்கும் காட்சிகள்!

நாற்றில்லாமல் பயிருண்டோ!இந்த நாற்று  இல்லாமல் பதிவுல குண்டோ!

 நல்ல பயனுள்ள கருத்துக்களை   அனைவருக்கும்  ஆணித் தரமாகச்  சொல்பவர் இவர்.அவரே சொல்வது போல் counsel for any..

சிறகுகள் காற்றில் பறந்தால் வானம் தாண்டுமோ!மென்மையான பறக்கும் சிறகு போல் இந்த  வலைப்பூஜீ

வலைப்பூவின் தலைப்பே எவ்வளவு அழகு!நுனிபுல்லில் ஓர் பனித்துளி!அழகான பதிவுகளும்.

இவர்  எழுத்துகள்  ஆயுதம்தான்.நம இதயத்தில் நுழையும் ஆயுதம்

இந்த சிட்டுக்குருவியின் சமூகம் சார்ந்த  சொற்சித்திரங்கள் அருமை.

இவர் ஒரு nighthawk.சமூகப் பிரச்சினைகளை எழுதுபவர்.அதிகம் எழுத வேண்டும்

இவை சில பகிர்வுகள் மட்டுமே!

நன்றி! வணக்கம்!

 -------------------------------------------------------------------
 எந்நன்றி கொன்றார்க்கும்!
-----------------------------------------
இந்த ஒரு வாரம் வலைச்சரப் பொறுப்பை என் மீது நம்பிக்கை வைத்து  எனக்களித்த சீனா அவர்களுக்கும்,

நான் பகிர்ந்ததைப் படித்துப் பின்னூட்டமிட்டவர்க்கு,படித்து ஆனால் பின்னூட்டமிடாதவர்க்கும்,


தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்றைய பதிவு பற்றிக் கருத்துரைத்த அன்பு நண்பர்க்கும்,


ஏதோ ஒரு விதத்தில் ஆதரவு தந்த அனைத்து அன்பு நெஞ்சங் களுக்கும்,


நன்றி,நன்றி,நன்றி.




இன்று தமிழர் திருநாள்.


அனைவருக்கும் என் மனங் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!



மேலும் வாசிக்க...

Saturday, January 14, 2012

நாள்-6 -பொங்கி வரும் புதுப்புனல்!

சென்ற ஆண்டு - 2011-கலக்கத்தொடங்கியிருக்கும் சில பதிவர்கள் பற்றிய பதிவு இன்று.

தேடல் கொண்டவர்கள் இளைப்பாறிச் செல்ல தண்ணீர்ப்பந்தல் அமைத்திருக்கிறார் வே.சுப்ரமணியன்.இவரது கடவுள், கத்தரிக்காய்,  வெங்காயம், மனிதன் ஒரு நல்ல பதிவு.

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான் மூன்று முத்துக்கள் என்ன தெரியுமா?சொல்கிறார் திண்டுக்கல் தனபாலன்.

குடியா குடிமகன் இவரின் படைப்பு, மரணம்-அதை ஒரு சிறுகதை முயற்சி என்று சொல்கிறார் இவர்--ஒரு சிறந்த சிறுகதை.




இவர் தி.தமிழ்இளங்கோ பக்குடுக்கை நண்கணியாரின் புறநானூற்றுப் பாடல் பற்றிய இவரது பதிவில் இலக்கிய மணம் கமழ்கிறது.

எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடிக்கும் என்று சொல்லும்  இவருடைய உன்னோடு நானிருந்த  என்ற கவிதை நினைவில் நிற்கும்.

2010 இல் பதிவு தொடங்கினாலும் 2011 இல் தான் அதிகம் எழுதியிருக்கிறார் டி.என்.முரளிதரன்.இவரது காதில் விழுந்த கவிதை குட்டிக் கவிதைதான். ஆனால் ’நச் ’ ரகம்


முன்பனிக்காலம் பூவின் பெயர்.24 பதிவுகள் எழுதியிருக்கிறார்.இதைப் படித்துப் பாருங்கள்

2010 இல் தொடங்கப்பட்டாலும் இந்த வீடு  2011 இலிருந்துதான் அதிக நடமாட்டம் உடையதாக இருக்கிறது!பாருங்கள் சுரேஷ்குமாரின்  அழகிய வீடு.


இவர்  ”ஒயினுக்குப் பேர்போனது கோவா... ஒலகத்துல நடக்குறத எழுதுறேன் ராவா...”  என்ற அறிமுகத்தோடு பதிவிடுகிறார்-மதுரை அழகு.


விநோதினியின் இந்தக் கிறுக்கல்களை ரசிக்கலாம்

ப.பிரகாஷ் அவர்களின் பெயரில்லாத வலைப்பூ! கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகள்.ஒரு உதாரணம்


இவை மணம் வீசும் ஒரு சில புது மலர்களே.இன்னும் உண்டு எத்தனையோ வாசப் புது மலர்கள்.தேடிப் படியுங்கள்!


 
மேலும் வாசிக்க...

Friday, January 13, 2012

நாள்-5 (மாலை) -வழிகாட்டிகள் இவர்கள்!


ஒரு  கணினி உபயோகிப்பவரின் சந்தேகம்”எனது மின்னஞ்சலுக்கு பெறுநரிடமிருந்து பதில் வரவேண்டுமென்றால் நான் ஒரு சுய விலாசமிட்ட,   தபால் தலை ஒட்டப்பட்ட உறை இணைக்க வேண்டுமா?!”
--------------------------------------------
ஒரு பெண் திரும்பத் திரும்ப வாசலுக்கு வந்து கடிதப் பெட்டியைத் திறந்து    பார்த்து விட்டுச் சென்று கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரர் அவளைக் கேட்டார்”என்ன செய்கிறீர்கள்”

அவள் சொன்னாள்”இந்த முட்டாள் கணினி ’தபால் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.வந்து பார்த்தால் ஒன்றும் இல்லை!”
------------------------------------------
   
இன்றைய கால கட்டத்தில் கணினி என்பது ஒரு இன்றியமையாத சாதனமாய் மாறியிருக்கிறது.சாதாரணமாகக்  வீட்டுக்கணினிகளைப் பெரும்பாலோர்,மின்னஞ்சல் அனுப்பவும்,பெறவும் அல்லது அயல்நாட்டு உறவுகளோடு உரையாடவுமே பயன் படுத்துகிறார்கள்.  என்னைப் போன்று சிலர் அதற்கும் மேல் வலைப்பூ எழுதவும் பயன் படுத்து கிறார்கள்.இவர்களுக்கு அதிகப்படியான தொழில் நுட்பமெல்லாம் தெரியாது. அதெல்லாம் கிரேக்கமும் லத்தீனும்தான்தான். அப்படிப்பட்டவர்களுக்காகத் தொழில் நுட்பத்தை எளிதாக்கிப் புரிய வைக்கும் வித்தகர்கள் பலர் இருக்கிறார்கள்.இது வரை அவர்களைத் தொடுக்காத சரம் இல்லை. அவர்களில் சிலர்..   

மனித உடலுக்குப் பிரச்சினையென்றால் மருத்துவரிடம் போகிறோம். கணினிக்கு என்ன பிரச்சினை என்று அறிய சிஸ்டம்டாக்டரைப்  பார்க்கச் சொல்கிறார் வேலன்!--- 

புதிதாக வலைப்பூ தொடங்க விருப்பமா?கவலை ஏன்?உதவுகிறார் ப்ளாக்கர் நண்பன்.ப்ளாக் தொடங்குவது எப்படி என்று இதுவரை 13 பகுதிகள் எழுதியிருக்கிறார்-
 
புதிய ப்ரிண்டர்,மானிட்டர் போன்ற உபகரணங்கள் வாங்க வேண்டுமா?     வாங்கும் முன் கவனிக்க என்று பதிவுகள் எழுதியுள்ளார் இவர்.


உங்கள் ப்ளாக்கில் நகரும் ஃபெவிகான் இணைக்க வேண்டுமா?
பாருங்கள்   பொன்மலர்பக்கம்-

உங்கள் பதிவின் முடிவில் கையெழுத்து வரவைக்க வேண்டுமா?        இதோ பதில் தருகிறார் வைரை சதீஷ்-

உங்கள் டெஸ்க்டாப் ஐகான்களை அழகு படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்  சூர்யாகண்ணன்.

கூகிள் ஆட்சென்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் அதை எப்படிப் பெறுவது என்பதெல்லாம் பலருக்குத் தெரியாது.இது குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் பிரபுகிருஷ்ணா.நாமும் கற்போம்!

நீங்கள் வீடியோக்கள் தரமிறக்குவதில் விருப்பம் உள்ளவரா? அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள்     தரமிறக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் வடிவேலன்.

மிக ரகசியமான செய்தி ஏதாவது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா? அதற்கென்றே ஓர் இணையதளம் இருக்கிறதாம். சொல்கிறார்  சிம்மன்

உங்கள் கணினியில் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு வழி சொல்கிறார் கவிரூபன்

நாளை வேறு சரம் தொடுக்கலாம்!

மேலும் வாசிக்க...

நாள் 5 -சீவன் என்ன சிவன் என்ன வேறில்லை!


"விருந்துண்டோம்,அரு மருந்துண்டோம்

கரும்புக் கவிதைச் சாறுண்டோம்- பெரும்

பேறுதான் பெறவேண்டி இந்நாளில்

சிறிதே ஆன்மீகச் சுவை உண்போம் நாம்"

ஒரு கோவில் குடமுழுக்கின் போது   மண்டபத்தில் ஆன்மீகச் சொற் பொழிவு  நடந்து கொண்டிருந்தது.சொற்பொழிவாளர் கடவுள் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.இறைவன் எங்கும் இருப்பவன், அவன் இல்லாத இடம் இல்லை என்று அவர் சொன்னபோது,கூட்டத்தில் ஒருவன் எழுந்து கேட்டான்”அவன் எங்கும் இருப்பவன் என்றால் எங்கு வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாமே,கோவில்கள் எதற்காக?”


சொற்பொழிவாளர் கேட்டார்”உங்களுக்குக் காற்று வீசுகிறதா?”


அவன் சொன்னான்”ஆம்”


”எதனால்”


“மின் விசிறி இருப்பதால்”


“காற்றுதான் எங்கும் நிறைந்திருக்கிறதே,பின் மின் விசிறி எதற்காக?”


அவன் திகைத்துப் போனான்.

இப்போது ஆன்மீகம் பற்றிச் சிறிது பார்க்கலாமா?

தமிழ் வலைப்பதிவுலகில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறை ஆன்மீகம்  என நான் நினைக்கிறேன்.ஆன்மீகப் பதிவுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இருப்பதில்லை.

இருந்தும் தொடர்ந்து ஆன்மீகம் பேசும் பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி நான் அறிந்த சில பதிவர்களைப் பார்க்கலாமா?

இந்த  வலைப்பூவில் முதன்மை பெறுவது

1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்
2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்

 ஆம்! இதுதான் மாதவிப்பந்தல்! கண்ணபிரான் ரவிசங்கரின் வலைப்பூ! 

நான் ஒரு சிவபக்தன்.தொலைபேசியை எடுத்வுடன் ஹலோ என்று சொல்லாமல் “ஓம் நமச்சிவாய’ என முகமன் சொல்பவன்,சிவனின் பெருமைகள் பற்றி 46 பதிவுகள் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றால் ,ஆகா,அதை விட எனக்கு வேறென்ன வேண்டும்?

ஆம்! குமரன் அவர்களின்  கூடல் பற்றித்தான்  சொல்கிறேன்.பாருங்கள்

வேதத்தின் அந்தம் வேதாந்தம்.அவைதாம் உபநிடத்துகள்.அவற்றில் சொல்லப்படாத கருத்துகள் இல்லை.முக்கியமான உபநிடத்துகளில் ஒன்றாகப் பேசப்படுவது, கடோபநிசத்து.சிறுவன் நசிகேதன் யமலோகம் சென்று,எமனிடம் வரங்கள் பெற்றுத் தன் கேள்விகளுக்கு எமனிடம் பதில் பெறுகிறான்.அவை நசிகேதனுக்கு மட்டுமல்ல.நமக்கும் வழி காட்டிகள்தான். இத்தகைய கடோபநிசத்தை மிக எளிமையாக வெண்பா வடிவில்  அருமையான விளக்கத்துடன் தருகிறார் அப்பாதுரை நசிகேத வெண்பா என்ற தலைப்பில்.


ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் கோவில்களுக்குப் போவதிலும் அவை பற்றி அறிவதிலும் தாகமுள்ளவர்களாகத்தான் இருப்பர்.அத்தாகத்தைத் தீர்த்து வைக்கிறார் தன் மணியான பதிவின் மூலம் திருமதி இராஜராஜேஸ்வரி.கோவில்கள் பற்றிய செய்திகள்,தல புராணம்,அழகிய படங்கள் என்று ஒரே பக்தி மணம்!

”குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
கந்தரனுபூதி படித்ததுண்டா?அந்தப் பாடல்களைப் பதம் பிரித்து அருமையாக  விளக்கம் தருகிறார்  ஆத்திகம்  பதிவில்.படிக்கப் படிக்க சுவைக்கிறது 

இப்போது ஒரு ஆன்மீகப்பயணம் போகலாமா,அழைத்துச் செல்பவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.”நமச்சிவாய வாழ்க,நாதன் தாள் வாழ்க “ என்று 20க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளார்.அருமை!


நமக்கெல்லாம் கந்த சஷ்டிக் கவசம் தெரியும்;சண்முகக்கவசம் தெரியும். ஆனால் ஆறு படை வீடுகளுக்கும் தனித்தனிக் கவசம் எழுதியி ருக்கிறார்  தோழி.படிக்கக் கிடைத்ததே ஒரு பாக்கியம்.பதிவின் பெயரே ஆன்மீகம்

தைத்திரீய உபநிடதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி என்பது.குரு- சீடன் தொடர்பு பற்றிப்  பேசுகிறது .அதைப் பற்றி அருமையாக விளக்குகிறார்  மதுரையம்பதி.

கடைசியாக திருமந்திரம் பற்றிய ஒரு பதிவின் அறிமுகம். நமக்குத் தொழில் பேச்சு என்று திருமந்திரப் பாடல்கள் பற்றி எழுதுகிறார் மதுரைசொக்கன். இந்தப் பதிவை முதல்நாள் அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம்.எனவே இப்போது செய்கிறேன். ஜூலை மாதத்துக்குப் பின் எதுவும் எழுதவில்லை! எழுதுவாரா?!

போதுமா ஆன்மீகம்?


மேலும் வாசிக்க...

Thursday, January 12, 2012

நாள்-4(மாலை)--இசை கேட்டால்!


ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கவிதை படித்து விட்டோம். இப்போது  தூக்கம் லேசாகக் கண்களைத் தழுவுகிறதோ?கொஞ்சம் இசை கேட்டுக் கொண்டே துயிலில் ஆழலாமா?எடுங்கள் ஐ பாட்டை,காதில் செருகுங்கள் இயர் ஃபோனை.கேளுங்கள் பாட்டு!

கதிரி கோபால்நாத்தின் சாக்ஸில் தவழ்ந்து வரும் கர்நாடக சங்கீதம்.ரசியுங்கள் 

தமிழ் திரைப்பாடல்களில்  கர்நாடக சங்கீத ராகங்கள்  இணயும்போது அந்தப்பாடல் மேலும் இனிமையாகிறது.கேளுங்கள் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த பாடல்களை


ஸ்ரீராகத்தில் அமைந்த ஒரு பாடல்,சிட்டிபாபுவின் இனிய  வீணை


ஒரு புதுமையான பாடல்.மாம்பலம் சகோதரிகளின் குரலில்.பாடலைக்கேளுங்கள்;பாடல் வரிகளையும் படியுங்கள்.இதோ


நல்லிரவு!




மேலும் வாசிக்க...

நாள்-4-நமக்குத் தொழில் கவிதை

நல்ல விருந்து உண்டாகி விட்டது. செரிக்க மருந்தும் சாப்பிட்டாகி விட்டது.  என்ன செய்யலாம்?சாய்வு நாற்காலியில் அமர்ந்து கவிதை படிக்கலாமா? ஆனால் பாட்டுக் கலந்திட பத்தினிப் பெண் இல்லை; எனவே கூட்டுக் களியும் இல்லை!(கூட்டும் களியும் திருவாதிரை யன்றுதான்!)

எனவே கவிதை மட்டுமே!



"சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
 
வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
 
காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
 
காயரைத்து வைப்பாய் கறி!"

இது இலக்கணத்துக்கு உட்பட்ட படைப்பே!ஆனால் இது கவிதை யாகுமா? இலக்கணத்துக்கு உட்பட்டு எழுதிய ஒரே காரணத்தால் எதுவும் கவிதையாகி விட முடியாது.இது வெறும் செய்யுள்;கவிதையல்ல.

பள்ளிப்பருவத்தில் எனக்குப் பாரதி பரிச்சயமானான். கல்லூரிப் பருவத்தில்  கம்பன் கைகோத்தான். பின், கணையாழியும், கசடதபறவும் புதுக்  கவிதையை  எனக்கு அறிமுகம் செய்து வைத்தன.மரபுக்கவிதை புதுக்கவிதை இரண்டுமே என்னைக் கவர்ந்தன.புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைப் படிப்பவன் மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்ள வேண்டும்.ஒரு ஒலி நயம் வேண்டும்.வெறும் வாக்கியங்களை மடித்துப் போட்டுக் கவிதை என்று சொல்லும் ஒரு அபாயம் இருக்கிறது.அவையெல்லாம் கம்பாசிட்டர் கவிதைகளே!

பதிவுலகில் தங்கள் கவிதைகளால் கலக்கும் பதிவர்கள் பலர்.அவர்களுள் நான் ரசித்த சிலர் பற்றிய பகிர்வே இன்று.

பதிவின் பெயரே கவிதைகள் என்றால்,நான் வேறெதுவும் சொல்லவும் வேண்டுமோ?மரபுக் கவிதை மன்னன் இவர். குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லல் இயலாது.பாருங்கள்


இவர் மதுரை பாரதி.புதுக்கவிதையில் மட்டுமே தொட இயலும் என்ப வற்றை  மரபுக்கவிதையிலும் அழுத்தமாகச் சொல்பவர். ரிக்‌ஷாக்கார மாரிமுத்துவின் திருமணம் பற்றி இவர் எழுதிய கவிதை “நானாச்சு,நீயாச்சு” அருமை. 

வசந்த மண்டபத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் இவர்.நலிந்துவரும் தமிழ்நாட்டுக்கலைகள் பற்றி இவர் எழுதிய கவிதைகள்

இவர் அம்பாளடியாள்;நான் இவர் கவிதைகளடியான்.காதல் பற்றிய இவரது கவிதைகள் மகிழ வைக்கும்;கலங்க வைக்கும்;வியக்க வைக்கும்.பாருங்கள்


இவர் குட்டிக் கவிதைகளில் பெரிய விஷயங்களை நறுக்கென்று சொல்லும் கவித்துரைதுரை டேனியல்

இவர் அழகான கவிதைகள் எழுதும் கவிக்கிழவன்!


இவரது தூரிகையின் தூறல் கவிதைத் தூறல். மதி போன்ற கவிதைகளில் மது இருக்கும்-


மேலோட்டமாகப் படித்து விட்டுப் போக முடியாது இவர் கவிதைகளை. முதலில் அந்த வார்த்தை ஜாலங்கள்,பின் உள்ளிருக்கும் கருத்து; பொறுமையாய்ப் படிக்க வேண்டும்.இது கலியுகம்

இவர் ஒரு கவி மன்னர்தான்.சமீபத்திய ஒரு கவிதையில் தான் ஏன் கவி மன்னராயிருக்கிறார் என்பதை இவரே சொல்கிறார்.ரமணியம்!

கன்னங்களால் முத்தமிடுவோம்!கவிதைகளால் எழுதப்படுவோம் என்று சொல்கிறார் இவர். கவிதைகளுக்காக இவர் முத்தமிடப் படலாம்!


நதியில் விழுந்த இலை,இந்தப் பூவின் பெயர்.இவரது கடவுளும் சாத்தானும் என்ற வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை அருமை


காதலும் காதல் சார்ந்த உளறல்களும் கவிதையாய் மலர்ந்தால்?!- பாருங்கள் இந்தக் காதலில் உதிர்ந்தாய்--


கவிதைச் சரத்தில் இந்த சில ரோஜாக்கள் இல்லாவிட்டால் எப்படி? ஒவ்வோரு ரோஜாவும் ஒவ்வொரு நிறம்!


வேல்கண்ணன் கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன. படித்துப் பாருங்கள் இந்த அமிழ மறுக்கும் பந்துகள்.


இந்த மழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்.என்ன ஒரு கற்பனை இந்தக் கவிதையில்?


இன்னும் இருக்கிறார் எத்தனை எத்தனையோ.இது கடற்கரையில் நான் பொறுக்கிய சில கிளிஞ்சல்கள் மட்டுமே!

மேலும் வாசிக்க...

Wednesday, January 11, 2012

வலைச்சரம் நாள் 3-- விருந்துக்குப் பின் மருந்து!

 
ஒரு  இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.

முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழைத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.

பழையவர் சொன்னார்அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கீழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.

எப்படி டயக்னோசிஸ்!

(இது பாதிக்கதை மட்டுமே!மீதிக்கதை தெரிய   இங்கு போக வேண்டும்!)

ஆக மருத்துவம் கால்,மதி முக்கால் என்பது தெளிவாகிறது!

இப்போது இந்தக் கதை எதற்கு?
இன்று மருத்துவம்,மருத்துவம் சார்ந்த பதிவுகளைப் பார்க்கப்  போகிறோம்.

நேற்று சாப்பாட்டில் ,சுவை காரணமாக அதிகம் சாப்பிட்டதால், அஜீரணம் ஏற்படும், அதற்குப் பாட்டி வைத்தியம் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார் நண்பர் வாசு.இதோ அவர் கேட்ட பாட்டி வைத்தியம்! இங்கு நமது நோய்களுக்கான பாட்டி வைத்திய முறைகள் கொட்டிக் கிடக்கின்றன!


சமையலறை மருத்துவம் பாருங்கள், இந்தப் பெட்டகத்தில்.பல நாட்டு வைத்திய முறைகளும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இன்று இரத்தக் கொதிப்பு என்பது ஒரு தேசீய நோயாகி விட்டது. மாறி வரும் வாழ்க்கை முறைகளே அதற்கான பெருங்காரணமாக இருக்கின்றன. இதைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிய முறைகள் என்னவென்று சொல்கிறார் Dr.G.சிவராமன்.

நமது நாட்டில் 5 கோடிக்கும்  மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. 2030 இல்  இது 8.7 கோடியாக உயரும் என்றும் சொல்லப் படுகிறது. அநேகர்  இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்கள்.நமக்கெல்லாம் இன்சுலின் ஊசி தெரியும்; இன்சுலின் செடி தெரியுமா? அதை நமக்கு அறிமுகம் செய்விக்கிறார் திரு.குப்புசாமி.

நமது பல நோய்களுக்கு/குறைபாடுகளுக்கு எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் தருகிறார் கை.க.சோழன்.எல்லாமே சின்னச் சின்ன குறிப்புகள். தேவைப்படுவர்கள் முயன்று பார்க்கலாம்.

தைலங்களில்தான் எத்தனை வகை?வாத நோய்க்கு ,உடல் குளிர்ச்சிக்கு,வலிபோக,முடி வளர என்று எத்தனை தைலங்கள்? அவற்றின் செய்முறை பற்றியும்,பயன்கள் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார்  curesure4u.தைலங்களைச் செய்ய இயலாவிடினும், அவற்றின் பலன் தெரிந்து  அவற்றை வாங்கிப் பயன் படுத்தலாமே!பாருங்கள் ஆயுர்வேத மருத்துவம்

இவரது உலகம் அன்பு மயமானது.ஆம்,அன்பு உலகம் ரமேஷ் பற்றித்தான் சொல்கிறேன்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்கள் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்;எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றியும் எழுதுகிறார்.  உடல் நலம் பேணப் பாருங்கள்.

மற்றொரு தளம்.நாம் பயன்படுத்தும் காய்,கனிகளின் இயற்கை மருத்துவ குணங்கள் பற்றிக் கூறும் தளம் ,இதோ!

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்,அது சரியாகச் செயல் படவில்லை யெனில்  ஏற்படும் விளைவுகள்,அதற்கான அறிகுறிகள், யாருக் கெல்லாம் சிறுநீரகம் பாதிப்படையும்,சிறு நீரகத்தைக் காப்பதற்கான வழிமுறைகள் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் கனடா பதிவர் தென்றல்,கீரன் தகவல் பலகையில்.

வெங்காயத்துக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் வெங்காயத்தை எப்படிப் பயன் படுத்தினால்,என்ன பலன்கள் கிடைக்கும் என்று விளக்கமாக 50 குறிப்புகளில் சொல்கிறார் சிவகுமாரின் சித்த வைத்தியத்தில்

 காய்ச்சல் வராத மனிதர்கள் இருக்கலாம்.வயிற்றுப்போக்கு வராதவர்களும் இருக்கலாம்.ஆனால்    ஜலதோசம் எனப்படும் சளித்தொல்லை வராதவர்கள் இருக்க முடியுமா?சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்பார்கள்.ஆங்கில மருத்துவத்தில்,மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும் சாப்பிடாவிட்டால் 7 நாட்களிலும் சரியாகி விடும் என்று சொல்வார்கள்.  அந்தச் சளிக்குச்,சித்த மருத்துவ முறைகள் சொல்கிறார்  சாந்தன் 

           போதுமா?     
மேலும் வாசிக்க...

Tuesday, January 10, 2012

நாள்-2--வயிற்றுக்கு ஈயப்படும்!

ஒருவன் வியாபார நிமித்தமாய் வெளியூர் போக நேரிட்டது.அந்த     ஊரில்தான்   அவன் மாமியார் வசித்து வந்தார்.எனவே மதிய உணவுக்கு மாமியார் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தான்.மாமியாருக்கு முன்   கூட்டியே தகவலும் அனுப்பி விட்டான்.

அவன் போன வேலை மதியத்துக்கு முன்பே முடிந்து விட்டது.சாப்பிட்டு விட்டு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.

மாமியார் வீட்டில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமியார் கொழுக்கட்டை அருமையாகச் செய்வார்கள்.எனவே அது விருந்தில் முக்கிய இடம் பெற்றது.அவன் வயிறு முட்டச் சாப்பிட்டான். குறிப்பாக  20 கொழுக்கட்டைகளுக்கு மேல் உள்ளே தள்ளினான். மாமியாரிடம் கேட்டான்”இது என்ன ?நான் சாப்பிட்டதே இல்லையேஎன்று.

மாப்பிள்ள! இது கொழுக்கட்டை.சரோஜா(மகள்) நல்லாச் செய்வாளே? செய்ததே கிடையாதா?” என்றாள்.

மாப்பிள்ளை புறப்பட்டான். பெயர் மறக்காமல் இருக்க ”கொழுக்கட்டை, கொழுக்கட்டை”    என்று  ஜபித்த படியே புறப்பட்டான்.நடுவில் பாதையில்            தண்ணீர் தேங்கியிருந்தது.கால் நனையாமல் அதை ஒரே தாவலில் தாண்ட எண்ணி "அத்திரிமாக்கு” என்று சொல்லிய படியே தாண்டினான்.பின் அது வரை சொல்லி வந்ததை மறந்தவனாய் ”அத்திரிமாக்கு” என்று சொல்லிய படியே வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்கு வந்து மனைவியிடம் “உன் அம்மா அத்திரிமாக்கு செய்திருந் தார்கள். பிரமாதம்.நீயும் அத்திரிமாக்கு செய்” என்றான்.

அவளுக்கு ஏதும் புரியவில்லை”அத்திரிமாக்கா?அப்படி எதுவும் கிடையாதே”  என்றாள்.

வாக்குவாதம் நடந்தது.முடிவில் அவன் அவளை நன்கு அடித்து விட்டுக் கோபத்துடன் வாசலில் போய் அமர்ந்து கொண்டான்.

சத்தம் கேட்ட அடுத்த வீட்டுப் பாட்டி வந்து பார்த்தாள் ”அய்யய்யோ! இப்படி அடிச்சிருக்காறே!கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிப் போச்சே” என்றாள்.

அது அவன் காதில் விழுந்ததும்அதேதான் என்று குதித்தானாம்.

க, ஒரு ஆண் நாக்கு ருசிக்கு எந்த அளவு அடிமை எனத் தெரிகிறது.

அதனால்தான் சொன்னார்கள்"The way to a man's heart is through his stomach" என்று!

அப்படி அருமையாகச் சமைக்க உதவும் சில தளங்களை இன்று பார்க்கலாம்!

உணவுக்குப் பின்தானே மற்றதெல்லாம்!

எனவே ஒரு விருந்துடன் தொடங்கலாம்.

அம்மாவின் சமையல் என்றால் தனி ருசிதான்.முதலில் ஒரு சூப்புடன் ஆரம்பிக்கலாமா? பாருங்கள் அம்மாவின்  சமையலில்   காலிப்பிளவர் சூப்.

 எத்தனையோ விதமான பாயசம் சாப்பிட்டிருப்பீர்கள்.உளுந்து பாயசம் சாப்பிட்டிருக்கிறீர்களா? எப்படி என்று சொல்கிறார்  தர்ஷினி.


அடுத்ததாக அடுப்பங்கரையில் கொஞ்சம் எட்டிப்பார்க்கலாம்!என்ன செய்கிறார்கள்?அடடே,சொஜ்ஜியப்பம்! 

வடையில் இத்தனை விதமா?அடேயப்பா!தனியாக ஒரு வடை விருந்தே வைக்கலாம் போலிருக்கிறதே!பத்து வித வடைகள் பற்றிச் சொல்கிறார் காஞ்சனா ராதாகிருஷ்ணன்

அடுப்பங்கரை,சமையலறை எல்லாம் ஒன்றுதான்.இங்கே ”என் சமைய லறையில்” சுவையான முள்ளங்கி சப்பாத்தி எப்படிச் செய்வது எனச் சொல்கிறார் கீதா.

சப்பாத்திக்குத் துணையாக ஒரு சப்ஜி வேண்டுமா?அனைவருக்கும் பிடித்த பன்னீர் பட்டர்  மசாலா செய்து பார்க்கலாமா? வித்யாஸ் கிச்சனில் பார்க்கலாம்.

நல்ல காரசாரமான துவையல் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?இதோ பீர்க்கங்காய்த் துவையல்  தருகிறார்  ராகவன்


அடுத்ததாக ஒரு கலந்த சாதம்;வழக்கமான புளியோதரை,லெமன் சாதம் இவற்றுக்குப் பதிலாக கொத்தமல்லிச் சாதம் செய்து பார்க்கலாமா?இதோ ஆதி வெங்கட் சொல்கிறார்.

புதுமையான,சுவையான, பச்சடி ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? முருங்கைக்காய் கத்தரிக்காய் பச்சடி செய்முறை பற்றிச் சொல்கிறார் தேனம்மை லெக்ஷ்மணன்

பொரியலுக்கு ஒரு ஸ்டஃப்டு கத்திரிக்காய் செய்து பார்க்கலாம். சொல்பவர் தெய்வ சுகந்தி.


ரசமில்லாத சாப்பாடு ரசமில்லை என்று சொல்வார்கள். சுவை, ஆரோக்கியம்  இரண்டும் சேர்ந்த பூண்டு ரசம் எப்படிச் செய்வது என்று அகிலாவின் அடுப்படியில் எட்டிப் பார்க்கலாமா?

கடைசியாக எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாத ஒரு வலைப்பூ! எனது தமிழ்மண நட்சத்திர வாரத்தில் சாம்பார்  பற்றி எழுதிய பதிவில் இவரது சின்ன வெங்காய சாம்பார் பற்றிய பதிவை வெளியிட் டிருந்தேன்.அதைப் படித்த அமெரிக்க நண்பர்கள் பலர் செய்து பார்த்து அசந்துபோக,அமெரிக்காவில் எல்லாத் தமிழ் வீடுகளிலும் அச்சாம்பார் மணக்கிறதாம்! பாருங்கள் ஜயஸ்ரீ கோவிந்தராஜனின் வலைப்பூ.செய்து பாருங்கள்!

வயிறு நிறைந்து விட்டதல்லவா?
மேலும் வாசிக்க...

Monday, January 9, 2012

நாள்-1-மூங்கையான் பேசலுற்றான்!

பதிவுலகில் என் வாசிப்பு அனுபவம் குறைவே.இருப்பினும் ,சீனா அவர்கள் கேட்டவுடன்   ஒப்புக்கொண்டேன்!காரணம்,நான் படித்தவற்றைப்  பகிர்ந்து கொள்ளலாம்   என்ற அவா!உங்களுக்குத் தெரியாத புதிய பதிவர்கள் என்று  அநேகமாக யாரும் என் சரத்தில் இருக்கமாட்டார்கள். இவர்கள் யாருக்குமே அறிமுகம் தேவையில்லை. எனவே இதை அறிமுகம் எனக்கூறாது ,பகிர்வு என்று கூறுவதே முறை. எனது வாசிப்பு அனுபவத்தைப் பகிரும் இம் முயற்சியைகம்பன் சொல்வது   போல்”மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன்”  என்றுதான் கூற வேண்டும்.

இந்த வாரம் முழுவதும் விருந்தா அல்லது மருந்தா என்பது கடைசி யில்தானே தெரியும்!

முதல் நாள் சுய அறிமுகம்.நானும் என் பதிவும் என்று நான் சொல்லும் போதே   “நீயும் உன் மூஞ்சியும்” என்று யாரோ சொல்வது போல் உள்ளது!

விருப்ப ஓய்வுக்குப் பின் சமஸ்கிருதம்,ஜோதிடம் ,வேதம் என்று என்ன எல்லாமோ கற்றுப் பின் ஒரு நாள் தற்செயலாகத் தமிழ் வலைப்பதிவு அறிமுகமாகப்,   பின் பிறந்ததே “நான் பேச நினைப்பதெல்லாம்”. தொடக்கம் முதலே நிகழ்வுகள்,அனுபவம்,கதை என்று எல்லா வகையானவையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்;ஆனால் கவிதையில் கால் பதிக்கக்(கை பதிக்க?) கொஞ்ச நாள் ஆயிற்று.பள்ளி நாட்களில் பாரதியும்,கல்லூரி நாட்களில் கம்பனும்,கணையாழி,கசடதபற நாட்களில் புதுக்கவிதையும் அறிமுகமாகி  எல்லா விதமான கவிதைகள் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.நான் எழுதுவது கவிதையா என எனக்குத் தெரியாது.இருப்பினும் என் படைப்புகள் சில உங்கள் பார்வைக்கு.

என்னுள் பிரவாகமாய்ப் பொங்கி வந்த ஒன்று-

ஊழிக்கூத்து-கவிதை முயற்சி.


எனது காதல்(காதலி) பற்றிய புலம்பல்கள்-
இன்னும் மறக்கவில்லை  

சாந்தோம் சந்திப்புகள்  


சாந்தோம் சந்திப்புகளின் முடிவு

 சிறுகதையையும் விட்டு வைக்கவில்லை.எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது-

துணை 

விதி

நாகரத்தினம்

கொஞ்சம் நகைச்சுவையும் முயன்றதுண்டு. நான் ஜோக்குகள் எழுதுவதைச் சொல்லவில்லை.வேறு பதிவுகள்.இதோ, மாதிரி

கண்ணும் கதையும் 


பயண அனுபவம் எழுதியதில் ஒரு அனுபவம்!

பயணமும் எண்ணங்களும் 

சென்னை பித்தன் ஆகிய என்னை சென்னைக் காதலன் என அழைத்து என் சென்னைக் காதல் பற்றி எழுதத்தூண்டி விட்டார் நண்பர்  கக்கு மாணிக்கம் .

சென்னைக் காதல் 


சென்னைக் காதல்-2


சென்னைக்காதல்-3

ஆனால் மிகுந்த வேகத்துடன் எழுத ஆரம்பித்து,நடுவில் பலமுறை தேங்கி, மீண்டும் வளர்ந்து,மீண்டும் தேங்கிப்போன ஒரு பதிவு, கட்டாயமாக நான் எழுதியே தீர வேண்டிய ஒரு பதிவு,”ஒரு வரலாறு"   என்ற தலைப்பில் நான் எழுதி வந்த பதிவு.


ஏதோ சில காரணங்களால் நின்றுபோன இப்பதிவைத்தொடர எல்லாம் வல்ல இறைவன் அருளும் நீங்கள் தரும் ஆதரவும் துணை நிற்கட்டும்.

போதுமா சுய அறிமுகம்?!


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது