07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சீனு. Show all posts
Showing posts with label சீனு. Show all posts

Saturday, March 29, 2014

வழிகாட்டிகள்

என் பள்ளி கல்லூரி நட்புகளையும் தாண்டி ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டம் பதிவுலகம் மூலம் கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி அமைந்த சில நடப்புக்களைப் பற்றி இன்று 


சற்றே வித்தியாசமான பெயருடன் வலம்வரும் ஆவி பழகுவதற்கும் வித்தியாசமானவர் தான். தனது பதிவுகளில் ஆவி தொட்டுப் பார்க்காத பகுதிகளே கிடையாது எனலாம். சிறுகதை, நாவல், பயணக்கட்டுரை, அனுபவம், ஆராய்ச்சி, கவிதை, பாடல் என்று அனைத்து வகையிலும் குறைந்தபட்ச பரிட்சார்த்த முயற்சியிலாவது இறங்கியிருப்பார். தற்போது எழுதிவரும் கடவுள் என்னும் கோட்பாடு நான் மிகவும் விரும்பி வாசித்துவரும் பகுதி. சிறந்த திட்டமிடலுடன் எழுதினால் பெருத்த வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான சமயங்களில் ஆவிக்கும் எனக்கும் பல விசயங்களில் ஒத்த கருத்துக்கள் நிலவும். சிலசமயகளில் கடும் வாக்குவாதங்களும் நிகழும். அப்படி நிகழும் வாக்குவாதங்களின் போது எங்கள் இருவருக்குள் இருக்கும் மற்றொரு குணம் 'நாங்கள் இருவரும் பிடிக்கும் முயலுக்கு எப்போதும் மூன்றே கால்கள் தான்'. சிலசமயம் தனது பதிவுகளை ஜஸ்ட் லைக் தட்டாக ஹாண்டில் செய்வதால் பல முக்கியமான பதிவுகள் இந்த ஜஸ்ட் லைக் தட் முன்பு காணாமல் போய் விடுகின்றன, அதனை மட்டும் ஆவி கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். 



பதிவுலகத்தின் ஒரு பரந்த வாசகதளத்தில் இயங்கிவரும் ஸ்கூல்பையன்  தானும் ஒரு வாசகராய் இருந்து பதிவராக மாறியவர் தான் . பெரும்பாலும் அனுபவக்கட்டுரைகளும் சினிமா விமர்சனமும் எழுதிவரும் ஸ்கூல்பையன் அவ்வபோது சிறுகதைகளையும் எழுதுவார். முன்பெல்லாம் இடைவெளிவிடாமல் எழுதிக்கொண்டிருந்தவர் தற்போது ஏனோ இடைவெளிகளுக்கு நடுவில் எழுதிக்கொண்டுள்ளார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவருடைய குட்டிக்குழந்தைகள் குட்டி பதிவெழுத கூட அனுமதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். ஸ்கூல்பையனின் பதிவுகளை அவரது முதல் பதிவில் இருந்து தொடர்ந்து வருவதால் அவரது எழுத்தில் ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியை காண முடிகிறது. யாரிடமும் அதிகம் பேசாத ஸ்கூல்பையனிடம் அதிகம் வாயைப் பிடுங்கியவன் நானாகத்தான் இருப்பேன் என்பது என் அவதானிப்பு. அவ்வகையில் அவரிடம் ஏராளமான சுவாரசிய கதைகள் இருக்கின்றன. ஸ்கூல்பையனுக்கு கூறவிழைவது எழுதுதலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் சார்.


பாசித்தை தெரியாதவர்கள் வேண்டுமானால் பதிவுலகில் இருக்கலாம் ஆனால் ப்ளாகர் நண்பனை தெரியாதவர்கள் ம்கூம் இருக்கவே முடியாது. எனக்கொரு பிரச்சனை என்றால் யார் வீட்டு கதவ தட்டனும் என்று தெரியாது ஆனா என் பிளாகுக்கு ஒரு பிரச்சனைன்னா இவர் வீட்டு கதவு எப்போதுமே திறந்திருக்கும். அறிமுகமான பதிவர்கள்தான் என்றில்லை யார் இவரிடம் உதவி என்று கேட்டாலும் ப்ளாக் சம்மந்தமாக தன்னிடமிருக்கும் பதிவுகளை வாரி வழங்கக்கூடிய தன்னிரகரில்லாத நண்பன் ப்ளாகர் நண்பன் :-) தொழிநுட்ப பதிவுகளையும் கடந்து தனது அனுபவ பதிவுகளை எழுத இவர் வைத்திருக்கும் மற்றொரு வலைப்பூ நண்பன் பக்கம். ஏனோ தெரியவில்லை இவரும் தற்போது பதிவுகள் எழுதுவதை குறைந்துவிட்டார். தொடர்ந்து எழுத வேண்டும் என்பது காமடிகும்மியின் பேரவா...!



யுத்தம் ஆரம்பம் என்னும் தொடர்கதை எழுதத் தூண்டியதன் மூலம் ஒட்டுமொத்த பதிவுலகத்தையும்  பக்கம் திருப்பிப் பார்க்கச் செய்தவன் ஹாரி. ஒரு முறையான கோர்வை இல்லாமல் கடிவாளம் பூட்டப்படாத குதிரையாக பயணித்த அந்த கதை இன்று எங்கோ ஒரு சுவத்தில் போய் முட்டிக்கொண்டு நிற்கிறது என்றே தெரியவில்லை. எப்படியாவது அதனை ஒரு முழு வடிவத்திற்கு கொண்டுவர வேண்டுமென்பது ஹாரியின் ஆசை. சினிமா குறித்த பதிவுகள் அவ்வபோது சிறுகதைகள் எழுதிய ஹாரி தற்சமயம் எப்போதாவது மட்டுமே எழுதுவதால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. பதிவுகள் மற்றும் பிறபதிவர்களின் பதிவுகளுக்கு கருத்துக்கள் எழுதுவதில்லையே தவிர தொடர்ந்த சைலண்ட் ரீடராகத் தான் இருந்து வருகின்றான். மீண்டும் உற்சாகமாக பழையபடி தனது பாமிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது சங்கம்.


முதலில் அரசனை ஒரு கவிஞனாக மட்டுமே தெரிந்த எனக்கு அவருக்குள் பொதிந்து கிடக்கும் இலக்கிய ஆர்வம் மெல்ல தான் தெரிந்தது. கிட்டத்தட்ட என் புத்தக ரசனைகளோடு ஒத்துப்போகக் கூடிய ஒருநபர். சமீப காலமாக அனுபவம் சார்ந்த பதிவுகளையும் சமூகக் கோபங்களையும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். அரசனுக்கு இயல்பாய் வசப்படும் வார்த்தைகள் அவரது பலம் இருந்தும் சிலசமயம் அவை கடிவாளம் கட்டபடாமல் அத்துமீறிப் போவது போன்ற எண்ணம், அதை மட்டும் கருத்தில் கொண்டால் நலமாய் இருக்கும்.   

        பைத்தியப் பேச்சுக்கள் ...


   
*****
  

முழுக்க முழுக்க அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்து எழுதும் வரலாற்றுச் சுவடுகளின் உண்மைப் பெயரை எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால் காமடிகும்மி அவருக்கு வைத்த பெயர் வசு. இவருடைய பதிவுகள் மிக நீளமானதாக அதே நேரம் அறிவியல் பௌதீக கருத்துக்கள் அடங்கியவையாக இருந்தாலும் வாசிப்பின் சுமை தெரியாமல் சுவாரசியமாக கூடியவர். இரண்டாம் உலகம் பற்றி எழுதிய இவரது பதிவை நான் படித்திரா விட்டால் புவியில் அப்படி ஒரு திட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது என்பதே எனக்கு தெரிந்திருக்காது. பதிவெழுத ஆரம்பித்த புதிதில் மிக தீவிரமாகவும் உற்சாகமாகவும் எழுதிய வசுவை பிற்கால வரலாறு முன்பொரு காலத்தில் வரலாற்றுச் சுவடுகள் என்றொரு பதிவர் வரலாறு குறித்த பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தார் என்ற நிலை வந்தாலும் வந்துவிடும்... மீண்டும் அவர் எழுத ஆரம்பிக்க வேண்டும். காரணம் தமிழ் வலையுலகம் தவறவே விடக்கூடாத பதிவர். 


மேலும் வாசிக்க...

Friday, March 28, 2014

கற்றுக்கொடுக்கும் பதிவர்கள்

இன்றைய வலைசரத்தில் நான் பகிரும் பதிவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேலும் இவர்கள் பெரும்பாலான பதிவர்களுக்கு அறிமுகமானவர்கள் தான், இருந்தும் யாரேனும் சிலருக்கு இவர்கள் புதிய அறிமுகமாய் இருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். 


பதிவர்கள் மத்தியிலும் சரி எழுத்தாளர்கள் மத்தியிலும் சரி சற்றே பிரபலமானவர் வாத்தியார் பாலகணேஷ். வலையுலகில் நான் முதன்முதலில் சந்தித்த நபர் வாத்தியார் தான், அந்தநிமிடம் இன்றும் நியாபகம் உள்ளது. தனக்கு நேர்ந்த நேரும் அனுபவங்களை ஹாஸ்யமாக கூறுவதில் வல்லவர், ஆனால் நிஜத்திலோ கொஞ்சம் கோவக்காரர்! என்னவொன்று கோவப்படும் அடுத்தநொடி அதையே ஹாஸ்யமாக்கி விடுவார். இவரது நடைவண்டிகள் தொடரைத் தவிர வேறெதையும் சீரியசாக பதிவு செய்யவில்லை. சமீபத்தில் பேசும்போது கூட 'எனக்கு கனமான சப்ஜெக்ட் எல்லாம் எழுதனும்னு ஆச இல்ல, லைட்டாவே எழுதுவோம்' என்றார். கட்டுரைகள் கதைகள் தவிர்த்து விறுவிறுப்பான ஒரு நாவலை இவர் எழுத வேண்டும் என்பது எனது அவா! 




சீரியசான விஷயத்தை சீரியசாகவும் சிரியஸான விஷயத்தை சிரியசாகவும் கூறுவதில் வல்லவர். நான் புதிதாக அறிமுகம் ஆகும் ஒவ்வொருவரிடமும் தவறாது கூறுவது சிறுகதை எழுத ஆர்வம் இருந்தா சிவகாசிக்காரன வாசிங்க என்பது தான். தொய்வே இல்லாத எழுத்துநடைக்கு சொந்தக்காரர். ஒருமுறை ஒரு பிரபல பதிவர் என்னிடம் 'சீனு தயவு செஞ்சு பதிவ சின்னதா எழுது, ஏன் இவ்ளோ பெருசா எழுதுற என்று கூறியபோது 'ஏங்க சிவாகாசிக்காரன் என்னவிட பெருசா எழுதுவாருங்க' என்றேன். அவரோ நொடிப்பொழுதும் தாமதியாமல் 'அவரு நல்ல சுவாரசியமா எழுதுவாரு, ஆனா நீ' என்று மொக்கை கொடுத்தார். நிஜமாகவே அதுதான் சிவாகாசிக்காரன். ஏனோ இவரோடு பேசும்போதெல்லாம் என் வகுப்புத் தோழனோடு பேசும் ஒரு உணர்வு ஏற்படும். பெரும்பாலும் ஒரே போன்ற பதிவுகளாக எழுதமாட்டார். ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், சிலசமயம் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்தாலும் தான் கூற விழைந்த கருத்துகளை தைரியமாக கூறுபவர். இவருடைய சில கதைகள் குறும்படமாகி உள்ளன. விகடனில் மாணவ பத்திரிக்கையாளனாய் பணியாற்றியவர். சமீபத்தில் இவருடைய பழைய பதிவுகளை நோண்டிக் கொண்டிருந்த போது தற்செயலாய் சில பதிவுகள் என் கண்ணில் பட்டன, நல்லவேளை அது போன்ற பதிவுகளை அவர் தற்போது எழுதுவதில்லை என்பது யாருக்கு சந்தோசமோ இல்லையோ எனக்கு சந்தோசம், அந்த பதிவின் லேபிளில் குறிப்பிட்டிருந்த ஒரு வார்த்தை 'கவிதை'.  

        சார் நீங்க செத்துப்போயிட்டா??!! - சிறுகதை...


   

நீதி நேர்மை நியாயம் என்ற வார்த்தைகளை கண்டறிந்தவர்கள் இப்போது இருந்திருந்தால் அதற்கு அடுத்த வார்த்தையாக அண்ணன் மெட்ராஸின் பெயரையும் சேர்த்திருப்பார்கள். ஒரு பதிவரை எப்படி அணுக வேண்டும் எல்லாரும் கற்றுக் கொடுக்க ஒரு பதிவரை எப்படியெல்லாம் அணுகக்கூடாது என்று கற்றுகொடுத்தவர் சிவா. பொய்யாக நீங்கள் புகழ்ந்தால் மதிக்காதவர் நேர்மையாக இகழ்ந்தால் புன்னைகையோடு ஏற்றுக்கொள்வார். நான் வலையுலகிற்கு வரும் முன் வெரைட்டி ரைட்டராக இருந்தவர் அதன்பின் சினிமா மற்றும் நாடக ரைட்டராக மாறிவிட்டார். எந்தவொரு விசயமாக இருந்தாலும் நாம் சிந்திக்காத கோணத்தில் எள்ளலாக கூறும் தன்மை படைத்தவர். தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளில் சிவா எழுத வேண்டும் என்பது என் அவா!    



அண்ணன் கே.ஆர் பி செந்தில் ஆரம்பித்திருக்கும் சினிமா மற்றும் சினிமா சார்ந்த தகவல்கள் அடங்கிய வலைதள ஆக்கத்தில் சிவா மற்றும் கற்போம் பிரபுகிருஷ்ணாவிற்கு பெரும்பங்கு உண்டு.  




    


எதற்கும் சற்றும் விட்டுகொடுக்காத வளைந்து கொடுக்காத எழுத்து பிலாசபி பிரபாகரனுடையது. இவரையும் அறிமுகபடுத்தியது விஜயன் தான் 'அதோ நிக்றாரு பாருங்க பிலாசபி, அவரோட போஸ்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நிறைய மிரட்டல் எல்லாம் வந்தருக்கு' என்று விஜயனிடமிருந்து வந்த ஒற்றை ஸ்டேட்மென்ட்தான் பிரபாவின் தளத்தை வாசிக்கத் தூண்டியது. எதையுமே நீட்டி முழக்கி எழுதாதவர், கூறவிழைவதை கூறிவிட்டு அடுத்த விசயத்திற்கு நகர்ந்து விடுவார். எழுத்துக்களை வாசிக்கும் போது வாசிப்பது போலவே உணர மாட்டோம், அவர் எழுதிய வேகத்திலேயே அவ்வளவு சுவாரஸ்யமாக முடித்து விடுவார். இவருடைய அந்தமான் பயணக் கட்டுரைகளை வாசித்ததில் இருந்து என் அண்ணன் என்னிடம் கூறிக்கொண்டே இருப்பது 'வா நாமளும் அந்தமான் போயிட்டு வரலாம்' என்பது தான். பிரபா தன்னுடைய எழுத்துப்பணியை புத்தகம் நோக்கி நகர்த்துவதாக ஒரு தகவல் காற்றுவாக்கில் வந்தது. இது நான் நெடுநாட்களாக எதிர்பார்த்திருக்கும் விஷயம் பிரபா, வாழ்த்துகள்.





ஜீவன்சுப்பு ஒருமுறை நான் வாசித்தே ஆக வேண்டிய தளம் என்று எனக்கு அறிமுகப்படுத்திய தளம் சுபத்ராவினுடையது. என்னுடைய வலையில் நடைபெற்ற காதல் கடிதம் போட்டியிலும் சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியிலும் முதல்பரிசு வென்றவர். இவருடைய எழுத்தில் இன்னதென்று கூறமுடியாத ஒரு வாசிப்பு அனுபவத்தை உணரலாம். நம் கண்களுக்கு சாதாரணமாக தெரியும் சில விஷயங்கள் இவருடைய எழுத்தில் அவ்வளவு சுகமாகத் தெரியும் அதுதான் சுபத்ரா. தற்போது சீரிய படிப்பில் ஆழ்ந்திருக்கும் சுபத்ரா அவ்வபோது மட்டுமே எழுதிவருகிறார். சமீபத்தில் வெளிவந்த எனக்கு மிகவும் பிடித்துப்போன மூடர்கூடம் படத்திற்கு இவர் எழுதிய விமர்சனம் தான் நான் படித்த விமர்சனங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது. மூடர்கூட பொம்மையில் எழுதியிருக்கும் happy life வார்த்தைக்கு இவர் கண்டறிந்திருக்கும் குறியீடு பற்றி குறிப்பிட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது. சொல்லமறந்துட்டேன் எனக்கு சுபத்ராவின் கவிதைகளும் மிகப்பிடிக்கும்.



இவர்கள் அனைவரது எழுத்திலும் நான் கற்றுக்கொண்ட மற்றொரு முக்கியமான விஷயம் எதற்காகவும் எழுத்தில் இவர்கள் சமரசம் செய்து கொள்ளாதவர்கள். 
மேலும் வாசிக்க...

Wednesday, March 26, 2014

கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்


நானும் பதிவுலகமும் என்ற தலைப்பில் எழுதிவந்த பதிவு சற்றே அனாயசமாக நீண்டுவிட்டதால் அதனை இங்கே பதிவிடுவதை விட எனது பதிவில் வெளியிடுவது நலமாய் இருக்கும் என நினைக்கிறன். ஏற்கனவே இந்த வாரம் சக பதிவர்களின் பார்வையில் பதிவுலகம் பற்றிய தொகுப்பு வெளிட்டுக் கொண்டிருப்பதால் அது முடிந்த பின் நானும் பதிவுலகமும் திடங்கொண்டு போராடுவில் தொடரும். முன்பெல்லாம் தொலைகாட்சியில் போடுவார்களே சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று அதை இங்கே கூறிகொள்கிறேன் :-) ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது... 

*****  


ஒரு தற்செயலான பயணத்தில் சந்திக்கும் சக பயணி வாழ்க்கை முழுவதும் நண்பனாதல் என்பது மிகக்கடினம். எல்லையில்லாமல் பரந்து விரிந்த இந்த வலையுலகில் எழுத ஆரம்பித்த பொழுது அறிந்திருக்கவில்லை என்னோடு பயணிக்கும் சில சக பயணிகள் கைபிடித்து அழைத்துச்செல்லும் தோழர்கள் ஆவார்கள் என்று. அப்படிபட்டவர்களில் ஒருவர் ஜீவன்சுப்பு. 

சமயங்களில் நான் ஒழுங்காக எழுதவில்லை என்றால் என்னைவிட அதிகமாய் வருத்தப்படும் ஒரு ஜீவன் இருக்குமென்றால் அது ஜீவன்சுப்புதான். இவரது நட்பிற்கு பின் எனது எழுத்தில் வெகுவான மாற்றம் வந்திருப்பதை என்னால் உணர  முடிகிறது. ஒவ்வொருமுறை பதிவெழுதிய பின்னரும் அதை ஜீவன்சுப்பு வாசித்தால் எப்படியிருக்கும் என்று ஒருமுறை வாசித்துப் பார்பதுண்டு. அப்படி வாசிக்கையில் ஒருவேளை அது அவருக்கு பிடிக்காது என்று தோன்றினால் அழித்து விடுவேன். இதை மிகைபடுத்தி கூறவில்லை, வலைசரத்தில் என் முதல் நாள் பதிவை படித்துவிட்டு highly disappointed என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், வலைச்சரத்திற்காக எழுதியிருந்த அடுத்த மூன்று நாட்கள் பதிவையும் அப்போதே அழித்துவிட்டேன்.             

இவரிடம் ஒரு பழக்கம் உண்டு இவருக்கு பிடித்த ஒரு பதிவு எங்கேனும் இருக்குமானால் அதனை நான் படித்திருக்க மாட்டேன் என்றால் உடனே மின்னஞ்சல் அனுப்பிவிடுவார். இவர் அனுப்பும் எந்த ஒரு பதிவும் மோசமாயிருக்காது. எழுதுதலை விட வாசிப்பை அதிகம் நேசிப்பவர். கணினி மற்றும் இணைய தட்டுப்பாடால் சரிவர இணையத்தில் இயங்க முடியாத நிலையில் இருந்தாலும் தற்போதும் பேசாத வார்த்தைகள் எனும்  தலைப்பில் எழுதிவரும் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். பதிவுகள் பெரிதாக பெரிதாக வாசித்தல் கஷ்டம் என்று கருதுவதால் தன்னுடைய பதிவுகளையும் சுருங்கக் கூறி சீக்கிரம் முடித்து விடுகிறார். 

இவரை வைத்து தனியொரு பதிவு திடங்கொண்டு எழுத நினைத்திருப்பதால் இவருடைய மற்றொரு 'உயரமான' பக்கத்தை அங்கு பகிர்கிறேன்.



தமிழ் அபூர்வமாக வாசிக்கபடும் ஒரு இடத்தில் தமிழ் அபூர்வத்திலும் அபூர்வத்திலும் அபூர்வமாக எழுதப்படும் ஒரு சூழலில் பணிபுரியம் ஒருவனிடம் 'பாஸ் நானும் தமிழ்ல ப்ளாக் எழுதணும் ஐடியா குடுங்க' என்று யாரேனும் கேட்டால் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்குமா இருக்காதா! அலுவலகத்தில் என்னுடன் பதிவுகள்/புத்தகங்கள் குறித்து பேசும் சிலர் இக் கேள்வியைக் கேட்டிருந்தால் கூட இவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன், ஆனால் ஆச்சரியம் கேட்டதோ ரூபக். இப்போ வரை கூட என் ஆச்சரியம் குறையவில்லை 'ரூபக்குள்ள இவ்ளோ திறமையா ஆர்வமா' என்று. தீவிர சுஜாதா வாசகனான ரூபக் தீவிர உலக சினிமா ரசிகனும் கூட (இங்கேற்படும் ஆள் மாறாட்டத்திற்கு நான் பொறுப்பல்ல :-)) 

சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், சாப்பாட்டு ராமனாக சாப்பாடு குறித்து எழுதிவரும் ரூபக் சாகும் காண வேண்டிய சினிமாக்கள் என்றும் ஒரு பகுதி எழுதி வருகிறான். இதில் விமர்சனம் ஆகும் ஒவ்வொரு சினிமாவும் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும்.

Duel - உலக சினிமா


*****
விஜயன் துரைராஜ்

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எழுதுவதையும், படிப்பதையும் மட்டும் விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவன் விஜயன் துரைராஜ். துரைராஜ் இயற்பெயர். விஜயன் புனைப்பெயர். எப்போது தனக்கு ராமேஸ்வரம் சொந்த ஊர் என்று கூறினானோ அப்போதே விஜயனையும் பிடித்துவிட்டது. நான்குபுறமும் கடற்கரை சூழ்ந்த கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் தன்னுடைய வலைப்பூவின் பெயரையும் கடற்கரை என்றே வைத்துக் கொண்டான். 

விஜயனை ஒரு கட்டுரையாசிரியனாக பிடித்ததை விட ஒரு கவிஞனாகவே எனக்கு மிகவும் பிடிக்கும். கவிதை, கட்டுரை, புத்தக ஆய்வு என்று பல்வேறு தளங்களில் எழுதிவரும் விஜயனுக்கு சமயமும் சந்தர்ப்பமும் அமைந்தால் மிகச்சிறந்த எழுத்தாளனாக வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதிகம் கவனிக்கப்படாத கவனிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் விஜயனுடையது. 



எப்போது எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் 'இங்க இருக்கதிலயெ நான்தான் சின்ன பையன்' என்று அறிமுகமாகிக் கொள்ளும் வெற்றிவேல் அரசனுக்கு பக்கத்து ஊர். கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மையுடன் வலம் வரும் வெற்றி தற்போது வானவல்லி என்னும் சரித்திர நாவலும் எழுதி வருகிறான். வானவல்லியின் கதையை கேட்டதில் இருந்து ஆவிபாஸ் கூறிவருவது 'ஹே செம ஒன்லைன் பா, ஒரு நல்ல வடிவம் கிடைச்சா நிச்சயமா ஒரு மிகபெரிய வெற்றி வெற்றிக்கு கிடைக்கும்' என்பதுதான். 

வலைப்பூவில் நாவல் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் எண்ணம் புக்கா வந்ததும் படிச்சிக்கலாம் என்பதாகவும், எழுதுபவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் எண்ணம் ச்ச யாருமே படிக்க மாட்டேங்காங்க என்பதாகவும் தான் இருக்கிறது. ஒருநாவல் முயற்சியில் இறங்கி கைவிட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் வெற்றிக்குள் இருக்கும் உற்சாகம் அசாத்தியமானது. தொடர்ந்து எழுதிமுடிக்க வாழ்த்துகள்... ( நான் நாவல் முயற்சியை கைவிட்டதன் காரணம் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியால் பலரும் கதையை தொடர கஷ்டப்பட்டனர் என்பதுமே ஆகும்)  



கடந்த வருட பதிவர் சந்திப்பு நிகழ்வு முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கும் தருவாயில் சந்தித்த ஒரு நபர் தினேஷ். என் பால்ய கால வயதில் என்னோடு படித்த நண்பனின் சாயலில் இருந்தார் தினேஷ். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரோடு பேசச் சொன்னாலும் அவர் முதல்முறை சந்தித்தாலோ என்னவோ வார்த்தையை அளந்து அளந்தே பேசினார். தற்போது முகநூலில் தொடர்ந்து இயங்கிவரும் தினேஷ் அவ்வப்போது மனக்குதிரையிலும் தன் மனக்குதிரையை ஓட விட்டால் நன்றாக இருக்கும்.    



நாளை வேறுசில பதிவர்களோடு மீண்டும் சந்திப்போம்... 
மேலும் வாசிக்க...

Tuesday, March 25, 2014

நானும் பதிவுலகமும் - 2

ன்றைய பதிவுலகத்தையும் அன்றைய சிறுபத்திரிக்கைச் சூழலையும் ஒன்றோடொன்று ஒப்பிடும் அளவிற்கு பல விஷயங்கள் ஒத்துப்போகின்றன. அன்றைய காலங்களில் வெகுஜன பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்காத எழுத்தாளர்கள் சிறுபத்திரிக்கை அல்லது கையெழுத்துப் பத்திரிக்கைகள் மூலம் தங்கள் எழுத்தார்வத்தை தணித்துக் கொண்டார்கள் அல்லது வளர்த்துக் கொண்டார்கள். இது போன்ற சிறுபத்திரிகையில் எழுதியவர்களுக்கு, வெகுஜனபத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு நிகரான பரந்துவிரிந்த வாசகத்தளம் இருந்திருக்கவில்லை. 

மேலும் பெரும்பாலான சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு தங்களுடைய சக எழுத்தாளர்களே வாசக மற்றும் விமர்சகர்களாக இருந்துள்ளார்கள். எதுவாயிருந்தாலும் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் இங்கும் வார்த்தைச் சிக்கனம் முக்கியம், அப்போதுதான் ஒன்றிற்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட முடியும். மற்றொரு முக்கியமான விஷயம், எங்கே மற்றொருவன் படைப்பை விமர்சித்தால் தன் படைப்பையும் மட்டம்தட்டி விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் கலந்த சூழலும் இருந்துள்ளது. 

பாரதியில் இருந்து சுந்தர ராமசாமியில் இருந்து சுஜாதா வரை பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களாக இருந்து வெகுஜன ஊடகத்திற்கு வந்தவர்கள்தாம். என்ன, சிலர் உயிரோடு இருக்கும்போது, சிலர் இறந்தபின்பு. இன்றைய நிகழ்காலத்திலும் சிறுபத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அவை பதிவுலகம் என்னும் மாபெரும் ஊடகத்தின் முன்னே கொஞ்சம் கலையிழந்து காணப்படுகிறது, இருந்தும் அங்கும் தொடர்ந்து இயங்குபவர்களும் இருக்கிறார்கள்.  

திவுலகத்தை சிறுபத்திரிக்கையுடன் ஒப்பிட மிக முக்கியக்காரணம், வெகுஜன ஊடகத்துடன் ஒப்பிடுகையில் இங்கும் வாசகப்பரப்பு குறைவு. பெரும்பாலான நேரங்களில் விமர்சகர் என்பவர் சக பதிவராகவே இருப்பார். வார்த்தைச் சிக்கனம் வெகு முக்கியம். பதிவு பெரிதாக பெரிதாக நுனிப்புல் மேய்தல் அதிகமாகும். இருந்தும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் கொஞ்சம் திறமையாகவும் தீவிரமாகவும் இயங்கினால் ஒரு வெகுஜன ஊடகத்திற்கு நிகரான வாசகபரப்பை பெற்று விடலாம் என்பது குறிப்பிடப்பட்ட வேண்டிய விஷயம். இன்னும் சொல்லபோனால் ஏதோ ஒரு விதத்தில் வெகுஜன ஊடகங்களே பதிவுலகத்தைப் பார்த்து தங்கள் பாணியை மாற்றிக் கொண்டுள்ளன உ.தா:விகடன் டைம் பாஸ்.

ருவர் எதற்காக பதிவுலகத்தைத் தேடி வர வேண்டும் என்ற வினா எழும்போது நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான பதில் கிடைக்கலாம். எழுதனும்னு ஆச, பத்திரிக்கைக்கு அனுப்புனேன் ரெஸ்பான்ஸ் இல்ல அதான் இங்க வண்டேன், என்னுடைய விருப்பங்கள பகிர்ந்துக்க எனக்குன்னு ஒரு இடம், கிட்டத்தட்ட டைரி மாதிரி யூஸ் பண்றேன், பொழுது போகல அதான் எழுதுறேன். இது போல் இன்னுமின்னும் ஏராளமான பதில்கள் கிடைக்கலாம். பதில்கள் என்னவாயிருந்தாலும் பதிவுலகத்தின் வெற்றியை நிர்ணயிக்கப்படும் ஒரு ஒத்தகருத்து என்ற ஒன்றே. இங்கே ஒத்தகருத்து என்பது பதிவருக்கும் பதிவருக்கும் இடையில் எழுத்தார்வம் என்ற புள்ளியிலும், வாசகனுக்கும் பதிவருக்கும் இடையில் தன் எண்ணத்தோடு ஒன்றிப்போதல் என்ற புள்ளியிலும் இணையலாம்.

நேற்றைய பதிவில் 'நான் பதிவுலகத்தினுள் அடியெடுத்து வைத்திருந்த நேரம் அது பதிவுலகத்தின் தேய்பிறைக் காலம்' என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கான காரணத்தை விரிவாகப் பேசுமுன் எனது பதிவுலக அனுபவத்தையும் பேச வேண்டியது கட்டாயமாகிறது.

தொடர்ந்து பேசுவோம் 

பதிவுலக வரலாற்றுப் பயணம் குறித்த ஒரு கட்டுரை எனது வலையில் எழுதியது  


இன்றைய அறிமுகங்கள் 


மெட்ராஸ் தமிழன் என்ற பெயரில் எழுதிவரும் நண்பர் 2007ம் ஆண்டு முதலே எழுதி வந்தாலும் மிகக் குறைவாக எழுதி வருகிறார். தன்னுடைய சமீபத்திய பதிவில் சென்னையின் மூர்மார்கெட் என்னும் பகுதியைப் பற்றி எழுதியிருக்கும் பதிவு அட்டகாசம். மூர்மார்க்கட் பற்றி எனக்குத் தெரியாத பல விசயங்களை மிகவும் சுவைபட எழுதியுள்ளார்.


வார்த்தைகள் விருப்பம் 

வார்த்தைகள் விருப்பம் என்னும் தளத்தில் எழுதிவரும் திரு காரிகன் அவர்களும் மிகக் குறைவான பதிவுகளே எழுதியிருந்தாலும் மிக சுவைபட எழுதுகிறார்.  கூறவரும் விசயங்களில் இவர் மேற்கோள் காட்டும் உவமைகள் அத்தனையும் அத்துணை அழகு.
 

இசை விரும்பிகள் XIII -- மறைந்த கானம்



நாடோடியின் பார்வையில் என்ற தளத்தில் எழுதிவரும் திரு ஸ்டீபன் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அதாவது 2012-ம் ஆண்டுக்கு அப்புறம் மீண்டும் தன் வலைப்பூவை தூசி தட்டி எழுதத் தொடங்கியுள்ளார்.    

பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..


உலக இலக்கியம் விரும்பும் நண்பர்களுக்கு இந்த வலைபூ ஒரு பெருத்த தீனி போடும் என்று நம்புகிறேன்.


மேலும் வாசிக்க...

Monday, March 24, 2014

திடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1

டந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்கிவரும் வலைச்சரம் மற்றும் பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் வலையுலக தோழமைகளுக்கும் உற்சாகமான வணக்கங்கள். வலைச்சரத்திற்கு ஆசிரியாராவது எனக்கு இரண்டாம் முறை. முதல் முறை பணியாற்றிய போது ஏதோ குறை வைத்துவிட்டது போன்ற உணர்வு. அதனால் தானோ என்னவோ இந்தமுறை நிறைவாய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. நிச்சயம் செய்ய முயல்கிறேன்.        

துதான் பதிவுலகம், இப்படித்தான் இருக்கும் என்ற எவ்வித புரிதலுமே இல்லாமல்தான் பதிவுலகினுள் எனது முதலடியை எடுத்து வைத்தேன். வலையுலகம் எவ்வளவு பெரியது? என்னால் தொடர்ந்து எழுத முடியுமா? எனது எழுத்தை யார்யாரெல்லாம் படிப்பார்கள்? இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. அதே சமயம் என் கெட்டநேரமோ என்னவோ நான் அடியெடுத்து வைத்த சமயம் பதிவுலகம் தன்னை பேஸ்புக் நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த ஒரு தேய்பிறைக் காலமாக இருந்தது. 

சிறுவயதில் அப்போதுதான் கணினி எனக்கு அறிமுகமாகி இருந்த சமயம், கோயமுத்தூரில் இருந்து தென்காசி வந்திருந்த அசோக் அண்ணன் தற்செயலாய் என்னிடம் 'ப்ளாக்ஸ்பாட் பத்தி உனக்குத் தெரியுமாடா?'என்று கேட்டார். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது என்னுள் ப்ளாக் என்ற வார்த்தையை முதன்முதலில் விதைத்தவர் அசோக் அண்ணன்தான். 'தெரியாதுண்ணே, அப்படின்னா' என்றவனிடம் 'அது கிட்டத்தட்ட ஒரு டைரி மாதிரிடா, இதான் எழுதனும்னு கிடையாது, உனக்கு புடிச்சது எல்லாம் எழுதலாம், அத யாரு வேணும்னாலும் படிக்கலாம்' என்றபடி அறிமுகம் செய்தார். அதன்பின் அவ்வப்போது கூகுள் தேடலில் ஏதாவது ப்ளாக் என்முன் வந்து விழும் போதெல்லாம் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். 

ல்லூரியில் சேர்ந்திருந்த சமயம் எனது அண்ணன் மாவட்ட அளவிலான சிறுகதை போட்டி ஒன்றில் வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் என்ற சிறுகதைக்கு முதல் பரிசு வென்றிருந்தான். அவனைப் பார்த்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாய் வளர்ந்த சமயமது. விகடனின் மாணவ பத்திரிக்கையாளர் திட்டதிற்கு அவனும் அவனது நண்பன் கணேசனும் முயல, கணேசன் அண்ணன் அதில் தேர்வானார். அதற்கு அடுத்த வருடம் என்னையும் முயன்று பார்க்கச் சொன்னான் என் அண்ணன். அவனே தேர்வாகவில்லை நான் எமாத்திரம் என்ற எண்ணமும், கொஞ்சம் சோம்பேறித்தனமும் மேலிட இருமுறை கிடைத்த வாய்ப்பை தவறவிட்டிருந்தேன்.

ழுத வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? என்ன எழுதுவது என்று எதுவும் தெரியவில்லை. பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் நம் எழுத்தையெல்லாம் மதித்து பிரசுரிப்பார்களா? பிரசுரிப்பார்கள் என்றால் அவர்களை அணுகுவது எப்படி? இப்படி பல்வேறு எப்படிக்கள் இணைந்து ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை வரைய தற்செயலாய் கிடைத்த பதில் ப்ளாக். 

ஹாய் கங்கிராட்ஸ் என்ற எனது முதல் சிறுகதையுடன் திடங்கொண்டு போராடத் தொடங்கினேன். முதல் கதையை எழுதி அதை இணையத்தில் பார்த்ததும் உற்சாகம் தாளவில்லை. பேஸ்புக்கில் எனது அத்தனை நண்பர்களுக்கும் அனுப்பி, அவர்களது நண்பர்களின் நண்பர்களுக்கும் அனுப்பி படிக்கும்படி உயிரை வாங்கினேன். சிலர் படித்தார்கள், சிலர் படிக்கிறேன் என்றார்கள் சிலர் 'தமிழ்ல்லாம் கஷ்டம் ப்ரோ' என்றபடி விலகிவிட்டார்கள். முதல்கதையை படித்தவர்களும், படிக்கிறேன் என்றவர்களும் எனது அடுத்தடுத்த தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் ஓடியேவிட்டனர். 

தோ ஒரு உற்சாகம் கொடுத்த உந்துதலில் எழுத ஆரம்பித்தாயிற்று, ஒரே பாடலில் பெரியாளாகிவிடலாம் என்ற எனது சிறுபிள்ளைத்தனமான எண்ணமா என்று தெரியவில்லை, யாருமே என்னுடைய கதைகளைப் படிக்கவில்லை பின் யாருக்காக எழுத வேண்டும் என்ற மனநிலைக்கு என் இரண்டாம் மூன்றாம் பதிவுகளிலேயே தள்ளபட்டிருந்தேன். இருந்தாலும் எழுத்து என் கனவு, சிறுவயது முதல் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் ஒரு பேர்-ஆசை. அவ்வளவு எளிதில் தளர்ந்து விட முடியுமா என்ன?          

ரி. கடையைத் திறந்தாயிற்று தாக்குபிடிக்க வேண்டுமே. அப்போதுதான் என் நண்பன் செல்வமணி திரட்டிகளை பற்றிக் கூறினான். இன்ட்லி, உடான்ஸ் முதலான திரட்டிகளில் இணைத்ததும் முன்புக்கு கொஞ்சம் பரவாயில்லை. எனது நண்பர்களைத் தவிர்த்து முதன்முதலில் எனது வலைபூவிற்கு வேறு சிலரும் வரத் தொடங்கியிருந்தனர். அப்படி வந்தவர்களில் முதாலாமானவர் தமிழ்மொட்டு என்னும் தளத்தில் எழுதி வரும் சங்கத்தின் தீவிரவாதி சதீஷ் செல்லத்துரைதான். கிட்டத்தட்ட நானும் சதீஷ் அண்ணனும் மூன்று நாட்கள் இடைவெளியில் எழுத ஆரம்பித்தவர்கள். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரது வலைப்பூவிற்கு இன்று மூன்றாவது பிறந்தநாள்... வாழ்த்துக்கள்ன்னே. 

தீஷ் அண்ணனை எப்படிக் கண்டுபிடித்தேன் என்று தெரியவில்லை, கூகுள் தேடலிலா அல்லது திரட்டியின் மூலமா என்று  நியாபகம் இல்லை. ஆனால் அவரிடம் என்னைக் கவர்ந்த விஷயம், அவர் எல்லை பாதுகாப்புப்படையில் பணிபுரிந்துகொண்டே பதிவெழுதுவதுதான். என்னால் ஆர்மியில் வேலை செய்ய முடியவில்லையே தவிர அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அந்த வகையில் இவர்மீதும் ஒரு தனி மரியாதை கலந்த ஈர்ப்பு ஏற்பட்டது, போதாக்குறைக்கு நெல்லைக்காரர் வேறு. என்னுடைய ஒவ்வொரு கதைகளை எழுதி முடித்ததும் இவரிடம் இருந்து வரபோகும் பின்னூட்டத்தை எதிர்பார்த்துதான் காத்திருப்பேன். எதுவாயிருந்தாலும் நேரிடையாக கூறிவிடுவார். ஆரம்பகாலம் முதல் என்னை மிக அதிகமாக உற்சாகபடுத்தி வருபவர்.   

சதீஷ் அண்ணன் புரட்சி சார்ந்த பதிவுகளாக அதிகம் எழுதினாலும் இவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது எல்லைப் பாதுகாப்பு படை குறித்த பதிவுகள் தான். என்னதான் உணர்ச்சி பொங்க சீரியசாய் எழுதினாலும் இவர் நகைச்சுவையாய் எழுதிய இந்தக் காதல் கடிதத்தை நீங்கள் என்ன மனநிலையில் எத்தனை முறை படித்தாலும் அலுக்காமல் உங்களை சிரிக்க வைப்பார் என்பதற்கு நான் உத்திரவாதம். கருத்துரீதியாக எங்களுக்குள் மிகுதியான சண்டைகள், அடிதடிகள் ஏற்பட்டிருந்த போதும் பதிவர் சந்திப்பின் போது ஆரத்தழுவி அன்பை வெளிபடுத்திய விதம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம்.


ன்னுடைய வலைப்பூவை இரண்டாவதாக கண்டறிந்து வந்தவன் சின்னமல. காமடிகும்மி என்னும் சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தது சின்னமலதான். என்னுடைய வலைப்பூவை, எழுத்துகளை சக பதிவர்களிடம் கூறி அவர்களையும் படிக்கும்படி பணித்தது சின்னமலதான். தான் எழுதிவந்த தலபோலவருமா வலைப்பூவில் சிலபல காரணங்களால் தற்போது எழுதாமல் இருந்தாலும் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்பது காமடிகும்மியின் பெருத்த அவா.

முதல்மூவர் எப்போதுமே சிறப்பு என்பதால் மூன்றாமவரையும் கூறிவிடுகிறேன். இன்ட்லியில் எனது கர்ணனின் பதிவு பார்த்துவிட்டு வந்தவர் ஸ்ரீராம் ஸார். பின்னூட்டத்தில் ஸ்ரீராம் என்ற பெயரைப் பார்த்ததும் எங்க ஏரியா அண்ணன் ஸ்ரீராமோ என்றுதான் முதலில் நினைத்தேன். நூல்பிடித்துப் போனபோது நான் சென்று சேர்ந்த இடம் எங்கள்பிளாக். சுவாரசியமான மனிதர். சிறுவயதில் இருந்தே புத்தகம் படித்துப்படித்து வளர்ந்தவர். மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம், இவரது அப்பாவும் ஒரு எழுத்தாளர். என்னுடைய நீண்ட நாள் அவா இவரை சந்தித்தே தீருவது என்பது, சமீபத்தில் G.M.B அவர்கள் வேளச்சேரி வந்திருந்த போது ஸ்ரீராம் சாரின் தரிசனம் கிடைத்ததில் யான் தன்யவானானேன் ஸ்ரீராம் சார் :-) அனுபவக் கட்டுரைகளையும், கதை கவிதைகளையும் எழுதிவரும் ஸ்ரீராம் சாரின் சமீபத்திய சாதனை அவருடைய கவிதை கல்கி இதழில் பிரசுரமானதுதான். வாழ்த்துகள் சார்.       

   

ரு நல்ல தேய்பிறைக் காலத்தில் பதிவுலகம் தேடி வந்தவன் என்று ஏற்கனவே கூறினேன் அல்லவா. நான் இங்கு வந்த நேரம் பெரும்பாலான பதிவர்கள் பேஸ்புக் தேடி ஓட, நானோ பேஸ்புக்கில் ஒருவருடமாக பழம் தின்று கொட்டைபோட்டு விட்டுத்தான் பதிவுலகம் தேடியே வந்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

இன்றைய புதிய பதிவர்: 

எழுதுவதே ஒரு ஆத்மதிருப்தி என்ற நிலையில் அதைவிட வேறு என்ன பிரதிபலன் கிடைத்துவிட முடியும் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் மட்டுமே எவ்வித பிரதிபலனையும் பாராமல் எழுதிக் கொண்டிருப்பர். அப்படியொருவர் தான் ரெங்கசுப்ரமணி. முழுக்க முழுக்க புத்தக விமர்சனம் மட்டுமே எழுதிவரும் இவர் எடுத்தவுடன் புத்தக விமர்சனத்தை ஆரம்பித்து விடாமல், தான் விமர்சனம் செய்யப்போகும் புத்தகம் தன்னை எப்படியெல்லாம் பாதித்தது, அவை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்ற தனது அகன்ற பார்வையை ஒவ்வொரு புத்தக விமர்சனத்தின் போதும் பதிவு செய்வது இவரது தனிச்சிறப்பு.

வலையுலகிற்கு இவர் புதியவர் இல்லை என்றாலும், பெரும்பாலான பதிவர்களால் அறியபடாதவர். வெகுசமீபத்தில் அறிமுகமான இவரது தளத்தின் பெரும்பாலான புத்தக விமர்சனங்களை படித்துவிட்டேன். அவ்வளவு சுவாரசியமாக எழுதிவருகிறார். ரெங்கா சார் தயவு செஞ்சு பாலோவர்ஸ் விட்ஜெட் வைக்கவும்.

ரெங்கசுப்ரமணி - http://rengasubramani.blogspot.in/
             
பதிவுலகம் குறித்து தொடர்ந்து பேசுவோம்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது