07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 29, 2014

வழிகாட்டிகள்

என் பள்ளி கல்லூரி நட்புகளையும் தாண்டி ஒரு ஆரோக்கியமான நட்பு வட்டம் பதிவுலகம் மூலம் கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி அமைந்த சில நடப்புக்களைப் பற்றி இன்று 


சற்றே வித்தியாசமான பெயருடன் வலம்வரும் ஆவி பழகுவதற்கும் வித்தியாசமானவர் தான். தனது பதிவுகளில் ஆவி தொட்டுப் பார்க்காத பகுதிகளே கிடையாது எனலாம். சிறுகதை, நாவல், பயணக்கட்டுரை, அனுபவம், ஆராய்ச்சி, கவிதை, பாடல் என்று அனைத்து வகையிலும் குறைந்தபட்ச பரிட்சார்த்த முயற்சியிலாவது இறங்கியிருப்பார். தற்போது எழுதிவரும் கடவுள் என்னும் கோட்பாடு நான் மிகவும் விரும்பி வாசித்துவரும் பகுதி. சிறந்த திட்டமிடலுடன் எழுதினால் பெருத்த வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான சமயங்களில் ஆவிக்கும் எனக்கும் பல விசயங்களில் ஒத்த கருத்துக்கள் நிலவும். சிலசமயகளில் கடும் வாக்குவாதங்களும் நிகழும். அப்படி நிகழும் வாக்குவாதங்களின் போது எங்கள் இருவருக்குள் இருக்கும் மற்றொரு குணம் 'நாங்கள் இருவரும் பிடிக்கும் முயலுக்கு எப்போதும் மூன்றே கால்கள் தான்'. சிலசமயம் தனது பதிவுகளை ஜஸ்ட் லைக் தட்டாக ஹாண்டில் செய்வதால் பல முக்கியமான பதிவுகள் இந்த ஜஸ்ட் லைக் தட் முன்பு காணாமல் போய் விடுகின்றன, அதனை மட்டும் ஆவி கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். பதிவுலகத்தின் ஒரு பரந்த வாசகதளத்தில் இயங்கிவரும் ஸ்கூல்பையன்  தானும் ஒரு வாசகராய் இருந்து பதிவராக மாறியவர் தான் . பெரும்பாலும் அனுபவக்கட்டுரைகளும் சினிமா விமர்சனமும் எழுதிவரும் ஸ்கூல்பையன் அவ்வபோது சிறுகதைகளையும் எழுதுவார். முன்பெல்லாம் இடைவெளிவிடாமல் எழுதிக்கொண்டிருந்தவர் தற்போது ஏனோ இடைவெளிகளுக்கு நடுவில் எழுதிக்கொண்டுள்ளார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவருடைய குட்டிக்குழந்தைகள் குட்டி பதிவெழுத கூட அனுமதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். ஸ்கூல்பையனின் பதிவுகளை அவரது முதல் பதிவில் இருந்து தொடர்ந்து வருவதால் அவரது எழுத்தில் ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியை காண முடிகிறது. யாரிடமும் அதிகம் பேசாத ஸ்கூல்பையனிடம் அதிகம் வாயைப் பிடுங்கியவன் நானாகத்தான் இருப்பேன் என்பது என் அவதானிப்பு. அவ்வகையில் அவரிடம் ஏராளமான சுவாரசிய கதைகள் இருக்கின்றன. ஸ்கூல்பையனுக்கு கூறவிழைவது எழுதுதலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் சார்.


பாசித்தை தெரியாதவர்கள் வேண்டுமானால் பதிவுலகில் இருக்கலாம் ஆனால் ப்ளாகர் நண்பனை தெரியாதவர்கள் ம்கூம் இருக்கவே முடியாது. எனக்கொரு பிரச்சனை என்றால் யார் வீட்டு கதவ தட்டனும் என்று தெரியாது ஆனா என் பிளாகுக்கு ஒரு பிரச்சனைன்னா இவர் வீட்டு கதவு எப்போதுமே திறந்திருக்கும். அறிமுகமான பதிவர்கள்தான் என்றில்லை யார் இவரிடம் உதவி என்று கேட்டாலும் ப்ளாக் சம்மந்தமாக தன்னிடமிருக்கும் பதிவுகளை வாரி வழங்கக்கூடிய தன்னிரகரில்லாத நண்பன் ப்ளாகர் நண்பன் :-) தொழிநுட்ப பதிவுகளையும் கடந்து தனது அனுபவ பதிவுகளை எழுத இவர் வைத்திருக்கும் மற்றொரு வலைப்பூ நண்பன் பக்கம். ஏனோ தெரியவில்லை இவரும் தற்போது பதிவுகள் எழுதுவதை குறைந்துவிட்டார். தொடர்ந்து எழுத வேண்டும் என்பது காமடிகும்மியின் பேரவா...!யுத்தம் ஆரம்பம் என்னும் தொடர்கதை எழுதத் தூண்டியதன் மூலம் ஒட்டுமொத்த பதிவுலகத்தையும்  பக்கம் திருப்பிப் பார்க்கச் செய்தவன் ஹாரி. ஒரு முறையான கோர்வை இல்லாமல் கடிவாளம் பூட்டப்படாத குதிரையாக பயணித்த அந்த கதை இன்று எங்கோ ஒரு சுவத்தில் போய் முட்டிக்கொண்டு நிற்கிறது என்றே தெரியவில்லை. எப்படியாவது அதனை ஒரு முழு வடிவத்திற்கு கொண்டுவர வேண்டுமென்பது ஹாரியின் ஆசை. சினிமா குறித்த பதிவுகள் அவ்வபோது சிறுகதைகள் எழுதிய ஹாரி தற்சமயம் எப்போதாவது மட்டுமே எழுதுவதால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. பதிவுகள் மற்றும் பிறபதிவர்களின் பதிவுகளுக்கு கருத்துக்கள் எழுதுவதில்லையே தவிர தொடர்ந்த சைலண்ட் ரீடராகத் தான் இருந்து வருகின்றான். மீண்டும் உற்சாகமாக பழையபடி தனது பாமிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது சங்கம்.


முதலில் அரசனை ஒரு கவிஞனாக மட்டுமே தெரிந்த எனக்கு அவருக்குள் பொதிந்து கிடக்கும் இலக்கிய ஆர்வம் மெல்ல தான் தெரிந்தது. கிட்டத்தட்ட என் புத்தக ரசனைகளோடு ஒத்துப்போகக் கூடிய ஒருநபர். சமீப காலமாக அனுபவம் சார்ந்த பதிவுகளையும் சமூகக் கோபங்களையும் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். அரசனுக்கு இயல்பாய் வசப்படும் வார்த்தைகள் அவரது பலம் இருந்தும் சிலசமயம் அவை கடிவாளம் கட்டபடாமல் அத்துமீறிப் போவது போன்ற எண்ணம், அதை மட்டும் கருத்தில் கொண்டால் நலமாய் இருக்கும்.   

        பைத்தியப் பேச்சுக்கள் ...


   
*****
  

முழுக்க முழுக்க அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்து எழுதும் வரலாற்றுச் சுவடுகளின் உண்மைப் பெயரை எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியாததால் காமடிகும்மி அவருக்கு வைத்த பெயர் வசு. இவருடைய பதிவுகள் மிக நீளமானதாக அதே நேரம் அறிவியல் பௌதீக கருத்துக்கள் அடங்கியவையாக இருந்தாலும் வாசிப்பின் சுமை தெரியாமல் சுவாரசியமாக கூடியவர். இரண்டாம் உலகம் பற்றி எழுதிய இவரது பதிவை நான் படித்திரா விட்டால் புவியில் அப்படி ஒரு திட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது என்பதே எனக்கு தெரிந்திருக்காது. பதிவெழுத ஆரம்பித்த புதிதில் மிக தீவிரமாகவும் உற்சாகமாகவும் எழுதிய வசுவை பிற்கால வரலாறு முன்பொரு காலத்தில் வரலாற்றுச் சுவடுகள் என்றொரு பதிவர் வரலாறு குறித்த பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தார் என்ற நிலை வந்தாலும் வந்துவிடும்... மீண்டும் அவர் எழுத ஆரம்பிக்க வேண்டும். காரணம் தமிழ் வலையுலகம் தவறவே விடக்கூடாத பதிவர். 


25 comments:

 1. அனைத்துப் பதிவர்களும் சிறப்பான பதிவர்களே .அனைவருக்கும் என்
  இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
 2. சிறப்பான அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. இன்னிக்கும் எல்லாரும் என் நண்பர்கள்ங்களதால கூடுதல் மகிழ்ச்சி. பாஷித் என் ப்ளாக்கின் ப்ரச்சினைகளை சரிசெய்ய எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடிய கணினி வைத்தியர். வசு விரைவில் மீண்டு(ம்) வந்து நல்ல பல படைப்புகளை வழங்கிட வேண்டுமென்ற பேராவல் என்னிடமுமுண்டு. அழகான பகிர்வு சீனு! அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.,.!

  ReplyDelete
 4. இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. எவ்வளவோ முறை கூறிய போதும் இன்னும் வசு வின் எழுத்துகளை மட்டும் நான் படித்ததில்லை.. இன்று படித்து விடுகிறேன்..

  ReplyDelete
 6. அறிமுகத்திற்கு நன்றி.. அதுவும் நண்பனாக.. சந்தோஷமாக இருக்கிறது நண்பா..
  கடவுள் எனும் கோட்பாட்டை இன்னும் கொஞ்சம் சீரியசாக எழுத முயற்சிக்கிறேன்.. :)

  ReplyDelete
 7. இன்றைய பதிவர்கள் - அனைவருக்கும் வாழ்த்துகள்.

  எல்லோரும் தெரிந்தவர்கள் எனும்போது மனதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. //அவருடைய குட்டிக்குழந்தைகள் குட்டி பதிவெழுத கூட அனுமதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்///

  ஹா ஹா... இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் என்னுடைய சோம்பல் என்ற ஒன்றும் இருக்கிறதே.....

  /அதிகம் வாயைப் பிடுங்கியவன் நானாகத்தான் இருப்பேன் ///

  ஹா ஹா...

  //அவரிடம் ஏராளமான சுவாரசிய கதைகள் இருக்கின்றன. ஸ்கூல்பையனுக்கு கூறவிழைவது எழுதுதலில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் சார்//

  திட்டமிடலுடன் விரைவில் தொடர்கிறேன்....

  ReplyDelete
 9. எல்லோரும் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்களெல்லாம் என் தம்பிகள் எனும்போது கூடுதல் மகிழ்ச்சி!

  ReplyDelete
 10. எனக்கு அனைவரும் புதியவர்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இன்றைய பதிவர்கள் அனைவரும் அறிமுகம் ஏற்கனவே உண்டு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. நீளமான பதிவுகள் மட்டும் இன்றி பதிவுகளுக்கு நீ....நீ...ளாமான தலைப்பு வைப்பவர் வசு. ஆரம்ப கால எனது பதிவுகளுக்கு கருத்திட்டு உற்சாக மூட்டியவர். படிப்பின் காரணமா நிறுத்தி வைத்ததை மீண்டும் தொடர்வார் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 13. ஆவி யின் எழுத்தாற்றல் வித்தியாசமானது... அதில் பைனல் பர்சனல் டச் எனக்கு பிடித்தது. அதே போல அவர் எழுத்துக்கள் நட்புக்களை ஈர்த்ததில் ஆச்சர்யம் இல்லை. ஒரு சமயம் வித விதமான நிலா..க்கள் இருக்கும் புகைப்படங்கள் கொடுத்து கவிதை எழுத முடியுமா என கேட்டேன். ஏன் முடியாது என்று பத்து நிமிடத்தில் வித விதமான கவிதைகளை தொடுத்து (தொகுத்து) கொடுத்ததை இங்கு நினைவு கூர்கிறேன்.

  ReplyDelete
 14. சொன்னதை மனதில் நிறுத்திக் கொண்டேன் தோழர் ....

  ReplyDelete
 15. ஆவி - தனக்கென்றொரு trend வைத்து இருப்பவர்.. அதை நேர்த்தியாகவும் தொடர்பவர்..

  ஸ்பை - எந்த வகையில் சேர்த்தி என்பது தெரியவில்லை.. காரணம் அனுபவம், சினிமா பற்றி மட்டும் எழுதுவதாலோ என்னவோ..

  அரசன் - சீரியசான பய

  வா.சு - பத்தாங்கிளாஸ் சோசியல் புத்தகம்.. பயபுள்ள விகடன்ல பெயர் வருமுன்னே காணமல் போய்டான்பா..

  பாசித் - உங்கள் நண்பன்.. கொய்யால இது இவரோட பேக் ID பேரு.. கொஞ்ச நாள் நான் வேற நம்பிட்டன்யா.. இருந்தாலும் இணையத்தில் ஏதும் உதவி என்றால் தாரளமாக தயங்காமல் செய்வார்.. நன்றி பாஸ்..


  ReplyDelete
  Replies
  1. //தமிழ் வலையுலகம் தவறவே விடக்கூடாத பதிவர். // கண்டிப்பாக.. வசு எங்கங்க ஜி இருக்கீங்க?? ..

   Delete
 16. //சைலண்ட் ரீடராகத்//

  //அதனால் அதிகம் கவனிக்கப்படுவதில்லை//

  //பழையபடி தனது பாமிற்கு//

  வேணாமுங்க ஜி.. இப்படியே இருக்கட்டும்.. ;-)

  ReplyDelete
 17. வரலாற்று சுவடுகள், ஹாரி, ஸ்கூல் பையன் போன்றோர் மீண்டும் முழுநேரம் இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது பதிவுகள் எழுத வேண்டும் என்பது என் விருப்பமும் கூட! கோவை ஆவி சகலகலா வல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை! அரசனின் ஊர்ப்பேச்சின் ரசிகன் நான்! அருமையான அறிமுக பதிவர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. பாசித்தை விட்டுவிட்டேனே! முதன் முதலில் பதிவினை எழுதிவிட்டு இணைக்கத்தெரியாமல் தவித்த போது இவரிடம் மின்னஞ்சல் செய்து கேட்டபோது சிம்பிளாக உதவினார்! மறக்க முடியாத உதவி! ப்ளாக்கில் ஏதாவது பிரச்சனை என்றால் இவரது வலைப்பூவைத் தான் மேய்வேன்! நன்றி!

  ReplyDelete
 19. Thank u seenu! also thank u to all who mentioned me.

  Sorry for english comment, i'm in office :D

  ReplyDelete
 20. அனைவரும் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 21. வசு எழுதிய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் அனைத்தும் ஏராளமானக தகவல்களை உள்ளடக்கியது. நிறையப் பதிவர்களை ஊக்குவித்த பெருமையும் அவருக்கு உண்டு.அவர் தற்போது எழுதாதது ஏமாற்றம் அளிக்கிறது

  ReplyDelete
 22. அனைவரும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. தங்கள் பயனுள்ள அறிமுகங்களை வரவேற்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது