07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 2, 2014

சொர்க்கமே என்றாலும்.....,

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் எத்தனை வசதிகள் அனுப்வத்தாலும் பாலயத்தை செலவழித்த சொந்த ஊர் நினைவு எல்லோர் மனதிலும் நிழலாடும். சொந்த ஊர் பற்றி பதிந்த பதிவர்களின் பதிவுகளாஇ இன்னிக்கு பார்க்கலாம்....,

தான் பிறந்து வளர்ந்த வளவனூர் பற்றியும், ஊரின் பெயர்க்காரணத்தையும் காமாட்சி அம்மாபதிவு பண்ணி இருக்காங்க. அம்மாவுக்கு 78 வயசாகுதாம். இப்ப ஜெனீவாவில் மகனுடன் இருக்காங்க. 

ரெட்டணை என்கிற விவசாய ப்ண்ணைக்கு களப்பணிக்காக சென்ற அனுபவத்தை சதீஷ் குமார் பகிர்கிறார். ஒவ்வொரு குடிமகனும் விவசாயிகளுடன் சில நாட்களாவது செலவிட்டால்தான் விவசாயிகளின் அருமைப் புரியும்ன்னு சொல்றார்.

மற்க்க முடியா கிராமத்து அனுபவங்களை படங்களோடு விளக்குகிறார் மோகன்ராஜ் சிவா 

மதுரை மல்லிக்கு மட்டுமல்ல மல்லிப்போல மென்மையான மனசுக்குச் சொந்தக்காரங்கக்கூட இங்கதான் இருக்காங்கன்னு சிவக்காசிக்காரன் சொல்றது சரியான்னு படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க.

மழைப் பெய்தா அவங்க ஊர்ல மட்டும்தான் பெய்யும்ன்னு நினைச்சுக்கிட்ட பொண்ணான சந்தன முல்லையோட ஊர் என்னன்னு கண்டுக்கிட்டு வாங்க.

சொர்க்கமே என்றாலும் சேங்கனூர் போல வருமான்னு ராமராஜனுக்குப் போட்டியா விமல் ராஜ் பாடலை. பதிவாப் போட்டிருக்கார்.

எங்க ஊர் வாழ்க்கைதான் நல்லது. இப்ப இருக்கும் நகரத்து வாழ்க்கை அன்பில்லாததுன்னு கலை சொல்றாங்க.

தான் பிறந்த ஊரைப் பற்றி வரைப்படத்தோடு சமயவேல் பதிவைப் படிச்சுப் பாருங்க.

தன் ஊரில் புழுதியும் பரோட்டாவும்தான் பிரசித்தின்னு சரவணன் சொல்றார். அவங்க ஊர் பரோட்டாவை பல மைல் கடந்தும் என் அப்பா வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எனக்காக வாங்கி வருவார்.

சொந்த ஊர்ல எதுலாம் மிஸ் பண்றாங்களோ இல்லியோ அல்வாவை மிஸ் பண்ணுறதா அன்புடன் ஆனந்தி சொல்றாங்க.

தான் பிறந்து வளர்ந்த வீட்டை இடிக்கப் போறாங்கன்னு கேள்விப் பட்டும் ஏதும் செய்ய இயலாமல் இருக்கும் சோகத்தை கவிதையாய் கயல் சொல்றாங்க.

கல்யாணம் ஆகி வெளியூருக்குப் போனப்பின்னும் அம்மா சமையல் மேல் கொண்ட மோகம் போகலைன்னு சொல்றாங்க தீக்‌ஷன்யா 

பண்டிகைகள்ன்னா அது கிராமத்துல கொண்டாடுற மாதிரிவருமான்னு கேட்டு, தீபாவளி பலகாரம் சுட்டு(சட்டில சுட்டு இல்ல. சட்டியில சுட்ட்தைச் சுட்டு) சாப்பிட்டு வீட்டில் எப்படி மாட்டிக்கிட்டார்ன்னு ஜோதிஜி அழகா சொல்றார். சமுதாய கருத்துகள் நிறைஞ்ச தளம் இவருடையது. நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று.

கிராமத்துல கோவில் மதில், ஆத்தங்கரை, கண்மாய், குடிசைவீட்டு கூரைன்னு எங்கப் பார்த்தாலும் பாவற்காய் கொடி இருக்கும். அதுல பாதிதான் சமையலுக்குப் போகும். மீதிலாம் பழுத்து அணில், குருவிகளுக்கு பசியாற உதவு. அந்த பழுத்த பாகற்காய் விதையில் துவையல் செய்யலாம்ன்னு ராமன் கிருஷ்ணாச்சாரி சொல்லித் தர்றார்.

நெய்வேலி தான் பிறந்த ஊர் இல்ல.  என்னிலிருந்து என்னை பிறக்க வைத்த ஊர்ன்னு பாரதிக்குமார் சொல்றார்.

சொந்த ஊர் கல்யாணத்துல பாசமும், அன்பும் இருக்கு. ஆனா, பொழைக்க வந்த ஊர் கல்யாணங்களில் பகட்டுதான் தெரியுதுன்னு பட்டிக்காட்டான் ஜெய் நொந்துக்குறார்.

சொந்த ஊருக்குப் போய் வந்த அனுபவத்தையும், தன் கிராமத்தைப் பத்தியும் பாரதிராஜா பகிர்ந்திருக்கிறார்.

சொந்த கிராமமான குளக்கட்டாங்குறிச்சிக்காக ஒரு வலைப்பூவை தொடங்கி அதில் கிராமத்து நிகழ்வுகளை பதிவிடும் செந்தில்குமார்

சொந்த ஊர் டூரிங் கொட்டாயில் படம் பார்த்த திருப்தி இன்று ஐநாக்ஸ், சத்யம் ஏசி தியேட்டரில் இல்லைன்னு சொல்றார் நாடோடி இலக்கியன் .

சொந்த ஊர்ன்னு ஏதுமில்ல. ஆனா, மாமாவுக்கு மாப்பிள்ளைத் தோழனா போன அனுபவத்தை அது ஒரு கனாக்காலத்துல பகிர்ந்திருக்கார்.

உலகத்தி எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை வயசானாலும், எத்தனை சுகம் அனுபவிச்சாலும் சொந்த மண்ணை எப்படி மறக்க முடியாதோ!! அதுப்போல இரண்டு வார காலம் வலைச்சர ஆசிரியராய் இருந்து பணியாற்றியதையும், அதற்கு நீங்கள் அனைவரும் தந்த ஆதரவையும் என்னாலும் மறக்க முடியாது.

சொந்த மண்ணைப் போலவே இந்த சகோதரியையும் நீங்கலாம் மறக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு வலைச்சர ஆசிரியர் பணியை நிரைவு செய்கிறேன்.

ஆதரவுக்கும், அன்புக்கும் மிக்க நன்றி சகோஸ்...

21 comments:

 1. அறிமுகங்களை ஒரு சுற்று சுற்றி விட்டு வருகிறேன் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. கடமை உங்களை அழைக்கின்றது. போய் வாங்க!

   Delete
 2. உங்கள எப்படி மறக்கிறது?
  வாழ்த்துகள் ராஜி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்புக்கு நன்றிங்க கிரேஸ்

   Delete
 3. ஒவ்வொரு தலைப்பும் தேர்ந்தெடுத்து, அதற்கேற்றபடி தளங்களை தேடி, பகிர்வுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... பாராட்டுக்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

  இன்றும் சில தளங்கள் அறியாதவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அறியாத தளங்களும் உண்டா!? ஆச்சர்யம் அண்ணா!

   Delete
 4. ராஜி என்று கூப்பிடலாமா அம்மா? ஆசிகள் எங்கள் ஊரைப்பற்றிய ஞாபகங்கள் நான் குறிப்பிட்டிருந்த பதிவைப் பற்றி எழுதியிருக்கிறாய்.. மிக்க ஸந்தோஷம். தற்போது நான் மும்பையில் இருக்கிறேன். எனக்கு வயது எண்பத்தியிரண்டு முடியப்போகிறது. திரு தனபாலன் அவர்கள் இன்றைய வலைச்சரத்தில் என் அறிமுகம் பற்றி வந்ததைத் தெரிவித்தார். அவருக்கும் மிக்க நன்றி. உங்களுக்கு்ம் மிகவும் நன்றி .அன்புடன்

  ReplyDelete
 5. நான் நிறைய படிக்க வேண்டியுள்ளது என்று இந்த வார உங்கள் வலைச்சரம் சொல்கிறது. நிறைய தளங்கள். நிறைவான தளங்கள் அறிமுகம். சிறப்பான தலைப்புக்களையும் அதற்கேற்ற பதிவுகளையும் தளங்களையும் தேட நீங்கள் உழைத்திருப்பதை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்! தளங்களுக்கு சென்று வருகிறேன்! மிக்க நன்றி!

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ராஜி அவர்களே !!!!

  ReplyDelete
 7. ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. சுந்தரோட அது ஒரு கனாக் காலம் குறிப்பிட்ட பதிவை இங்கே பகிர்ந்ததை பார்த்த போது. சரியான வலை மேய்ச்சல் ராணியாக இருப்பீங்க போல. வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. சொற்கமேஎன்றாலும்....... அற்புதம்.

  மிகவும் சிறப்பாக உங்கள் வாரப்பணியை தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  பலஅறிமுகங்கள். மிக்கநன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மிக்க நன்றி சகோதரி என் ஊர் பற்றிய அந்த பதிவு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன எப்படி தேடி பிடித்து கவனித்தீர்கள் என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 10. // சொந்த மண்ணைப் போலவே இந்த சகோதரியையும் நீங்க எல்லாம் மறக்கக் கூடாதுன்னு // -

  உங்களையும் மறக்க மனம் கூடுமோ?..

  சிறப்பானது உங்கள் பணி!.. பாராட்டுகள்!..

  நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 11. ஊர் ஊரார் போய் வந்து, பதிவுகளைத் தொகுப்பாய் தந்துள்ளீர்கள், சகோதரி.
  ஆசிரியப் பணிக்காகப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. இரண்டு வாரம் தொடர்ச்சியாக வலைச்சரம் ஆசிரியைப் பணியை சலிப்பில்லாமல் தாங்கள் செய்தது ஒரு சாதனைதான்! எல்லாநாளும் கருத்துரை என்னால் எழுத இயலாவிட்டாலும், இந்த இரண்டுவாரமும் உங்கள் வலைச்சரப் பக்கங்கள் அனைத்தையும் படித்தேன். சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 13. சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல வராது! அருமையான தொகுப்பு இனிதே இந்த வாரம் சிறப்பான பணி மீண்டும் உங்கள் தளத்தில் சந்திப்போம்.

  ReplyDelete
 14. என்னதான் மும்பையில் செட்டில் ஆனாலும் மனசு முழுவதும் ஊர்லதான் இருக்கும் !

  ReplyDelete
 15. யாவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. சொந்தமண்ணின் சுகம் வேறு எங்குமே கிடைப்பதில்லை.

  ReplyDelete
 17. சிறப்பான அறிமுகங்கள் ராஜி...

  த.ம.9

  ReplyDelete
 18. இரண்டு வாரங்கள் சிறப்பாக வலைச்சர ஆசிரியராக பணியாற்றிய உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது