07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 7, 2014

அவியல் - பலவகைத் தளங்கள்

வலைச்சர நட்புகளுக்கு இனிய வணக்கம்.

வலை வீச வலையை சுத்தம் செய்து  படகை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். உதிரி மல்லிப் பூ விற்றுக் கொண்டு வந்தார் வண்டியில் ஒருவர். மல்லிகைனா மதுரை, மதுரைனா மல்லிகை, விட்ருவோமா? வாங்கிட்டேன்..அதைக் கோர்த்து (எனக்கு அழகாத் தொடுக்க வராதுங்க) சொஞ்சம் நேரம் செலவழித்து விட்டேன்.  கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய விரத நாட்கள் தொடங்கிவிட்டன. வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதை (சர்ச்சிற்கு) செல்லவேண்டும், அதற்கு நேரமாகிவிட்டது. அதனால் மொத்தமா வேகப்போட்டு அவியல் செஞ்சுட்டேங்க. சாப்பிட்டு (பார்த்து) கருத்துகளைச் சொல்லுங்க.

அறிவியல் கனவு காண்போர் இயற்கையை கெடுக்காமல் ஒதுக்குபுறமாகச் சென்று காணுங்கள் என்று இவர் சாடுவது ஏன் என்று அறிய அறிவியலுக்கு அப்பால் நிகழும் அறிவீனம் பதிவைப் படியுங்கள். நேற்றைய பதிவில் இணைந்திருக்க வேண்டிய ஒரு இடுகை, தலைவர்கள் மறந்த ஒரு தமிழறிஞர்.
எவ்வளவு விசயத்திற்கத்தான் கவலைப்படுவது என்று கேட்கும் இவரின்அழிந்து வரும் நெல்மணிகள் - ஆபத்தும் பேராபத்தும் பதிவு பூச்சிகொல்லி மருந்தால் ஏற்படும் கேடுகளை விவரிக்கிறது..அதிர்ச்சிதரும் பல தகவல்களுடன்.

அறிவியல்புரம் என்ற தளத்தில் எழுதி வரும் திரு.ராமதுரை அவர்கள்அறிவியலையும் விண்வெளியையும் அருமையாய்ப்  பதிவு செய்கிறார். வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த இந்திய மாணவரை அறிந்து கொள்ளுங்கள், இப்பதிவில்.

இதயநோய் பற்றிய விரிவான பதிவு இப்பொழுது நான் பாதி கார்டியாலஜிஸ்ட். இதைப் படித்து நாம் கால்வாசி கார்டியாலஜிஸ்ட் ஆகிவிடலாம், வாருங்கள்.

குழந்தைகள் மேலான பாலியல் தொந்திரவு பற்றி ஒரு விழிப்புணர்வு பதிவு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது.  இந்த தளத்தில் வானவில் பற்றி பல்வேறு நாட்டினரின் நம்பிக்கைகள் என்ற பதிவு நன்றாக உள்ளது. பெண்கள் தினம் வரப் போகிறது, பெண்ணியத்தின் முன்னோடியைப் பற்றி அறிந்து கொள்ள சொடுக்குங்கள்.

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற இப்பதிவு புதியவர்களுக்கு உபயோகமாய் இருக்கலாம். கற்போம் என்ற மாத இதழையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பணம் கொடுத்து விளம்பரங்கள் பார்க்கும் இந்தியர்...புரியவில்லையா? படியுங்கள் இப்பதிவை.

சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் உள்ள இப்பதிவில் தலைப்பில் சொடுக்கி உள்ளே சென்று படத்தைப் பார்த்தவுடன் தலைப்பு சொல்லியிருப்பது உண்மையாகிவிட்டது. அருமையான நினைவுகள் இப்பதிவு.

சகோதரர் மகேந்திரன் அவர்களின் இலையே ..நீ இலைதானா கவிதை இனிமை, வசந்த மண்டபம் தளத்தில்.


நாளை சந்திப்போம்,
நட்புடன்,
கிரேஸ்

25 comments:

  1. வணக்கம்
    இன்று வலை வீசி சிக்கிய வலைப்பூக்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது .....அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  2. இதுவரை அறியாத தளம் ஒன்றினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிரேஸ்

    ReplyDelete
  3. பார்த்ததும் படித்ததும் Reader-ல் சேர்க்க முடியவில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்...

    தம்பி ரூபன் அவர்களுக்கு special நன்றி... (இங்கு இப்போது தான் மின்சாரம் வந்தது...) இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கற்போம் தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி :-)

    ReplyDelete
  5. இன்றைய அறிமுகங்களுக்கும் அறிமுகப் படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்
    சகோதரா .

    ReplyDelete
  6. வார்த்தைகளைத் தொடுக்கத் தெரிந்த தங்களுக்கு
    வாச மலரைத் தொடுக்கத் தெரியாதா!..
    அந்தப் பூச்சரத்தில் வாசம் உள்ளதோ - இல்லையோ!
    வலைச்சரம் முழுதும் தமிழ் வாசம்!..

    வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா, அழகாகத் தொடுக்க முடியாது..
      உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மின்சார தடை, வேலைப்பளு காரணமாக இணையம் வர முடியவில்லை! பிறகு சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள்! நல்ல அறிமுகங்கள் கிரேஸ்..

    ReplyDelete
  9. எனது தளத்தினையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.....

    இன்றைய மற்றைய பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பயனுள்ள தளங்கள் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  11. அவியல் அருமை... ருசி மிகுந்து இருக்கிறது :)

    ReplyDelete
  12. சிறந்த பகிர்வு
    தங்கள் அறிமுகங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  13. இன்றைய அவியல்.. மிக ருசியாகவும் அழகாகவும் இருந்ததுப்பா கிரேஸ்...

    அறிமுகப்படுத்தப்பட்ட அறிமுகங்கள் அனைத்து பேருக்கும் அன்பு வாழ்த்துகள்... வெங்கட் நாகராஜ்.. இவருடைய பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரசனையான பதிவுகள்...

    ReplyDelete
  14. எல்லோருக்கும் வணக்கம் .
    ”அறிமுகம் “ என்பதிலேயே இவ்வளவு விசயங்களைத் தெரியமுடிகிறது .
    தளத்தினை எனக்கும் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றியினைத்
    தெரிவித்துக்கொள்கிறேன் , குறிப்பாக திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி அய்யா .

    <> கோ.மீ.அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி -627416

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது