07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 23, 2014

பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்

அன்று நதியில் துடுப்பு பிடித்ததும், பனியில் விளையாடியதும் உடலுக்கு தந்த சோர்வில் இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் நான்றாக தூங்கிவிட்டேன். மறுநாள் சிம்லா நகரை சுற்றி சில இடங்களுக்கு எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்றார். 

ஜக்ஹூ கோயில் (Jakhoo temple)

நாங்கள் அன்று காலை முதலில் சென்றது இங்கு தான். சிம்லா மலை மீது மற்றொரு மலை ஏறி எங்களை அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் சென்றதில் இதுதான் மிகவும் குறுகலான பாதை. ஒரு சீருந்து செல்லும் அளவு தான் சாலை இருக்க, மலை மேல் ஏறும் வளைவுகள், '<' இப்படித்தான் இருந்தன. அந்த சாலையில் வண்டி ஓட்ட ஒரு அசாத்திய திறமை வேண்டும். ஒரு வழியாக மேலே சென்றோம். இதுவரை பெரிதும் பேசாத எங்கள் ஓட்டுனர் 'குரங்குகள் இங்கு சேட்டை செய்வது அதிகம். மிகவும் ஜாக்கரதையாக இருங்கள்' என்று எச்சரித்தார். அது ஒரு ஆஞ்சநேயர் கோயில் அங்கு ஒரு மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இருந்தது. வழக்கம் போல் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு எங்கள் சீருந்தை நோக்கி இறங்கினோம். 

வரும் வழியில் அங்கு பிரசாதம் விற்பவர்கள் குரங்குகளை கொம்பு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர். சீருந்தின் அருகில் வந்து, உள்ளே ஹீட்டர் இருப்பதால், எனது ஜாக்கெட்டை கழற்றிவிட்டு, சீருந்தினுள் நுழையும் பொழுது, 'ஐயோ குரங்கு' என்று என் நண்பன் அலற அனைவரும் விரைந்து சீருந்தினுள் குதித்தோம். ஓட்டுனர் வண்டியை ஐம்பது அடி நகர்த்துவதற்குள், என் நண்பன் 'ஐயோ' என் கண்ணாடி?' என்று மீண்டும் அலறினான். ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று பார்த்தால், மரத்தின் மேல் ரே-பான் கண்ணாடியுடன் சோக்கா போஸ் கொடுத்தது அந்தக் குரங்கு. 

என்ன செய்வது என்றே எங்களுக்கு புரியவில்லை. சிறு வயதில் படித்த குல்லா கதைதான் நினைவுக்கு வந்தது. அதற்குள் எங்கள் ஓட்டுனர் ஒரு பிரசாத பாக்கெட்டை வாங்கி, மேலே வீச, யுவராஜ் சிங் போல அதை தாவிப் பிடித்தது அந்தக் குரங்கு. மனிதர்கள் போல் இல்லாமல், நேர்மையாக வாழும் அந்தக் குரங்கு, பிரசாதம் கைக்கு வந்தவுடன், கண்ணாடியை அழகாக என் நண்பன் கைக்கு வீசியது. 

ராஷ்ட்ரபதி நிவாஸ்

அடுத்து நாங்கள் சென்றது வெள்ளையர்களின் கோடைக்கால தலைமையகமாக விளங்கிய     ராஷ்ட்ரபதி நிவாஸ் மாளிகைக்கு. இது Indian Institute of Advanced Study நிறுவனத்தின் தற்காலிக கட்டிடமாக இருந்தாலும், வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த இடத்தின் சில பகுதிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கின்றனர். 

ஆங்கிலேயர்கள் ஹைட்ரோ-எலக்ட்ரிக் முறை மூலம் அந்நாளில் அந்த கட்டிடத்துக்காக தயார் செய்யப் பயன்படுத்திய மின் சாதனங்கள், இன்றளவும் அங்கு மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதை கண்டு வியந்தேன். 

ஜின்னாவின் கோரிக்கையின் படி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக பிரிக்க முடிவு செய்த வரலாற்று புகழ் பெற்ற, மவுண்ட் பாட்டன் தலைமையிலான 'சிம்லா கான்பிரன்ஸ்'  நடந்த அறையினுள் அந்த இருக்கைகைளையும் பராமரித்து வருகின்றனர். மாணவர்களின் ப்ராஜெக்ட் காட்சியளிப்பிற்காக இன்று அந்த அறை பயன்படுத்தப் படுகிறதாம். 

அங்கு விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில ஆங்கிலப் பிரபுகளின் படங்கள் இருந்தன. அதில் என்னை மிகவும் கவர்ந்தது மவுண்ட் பாட்டன் பிரபு அவர்களின் மனைவியின் புகைப்படம் தான். அந்த அம்முணி எம்புட்டு அழகு தெரியுமா. அந்த நிமிடமே அவருடன் என் மனதில் ஒரு மதராசபட்டின கனவு அரங்கேறியது.          

ஸ்ரீ சங்கட் மோச்சன் கோவில் (Shri Sankat Mochan Temple)

மீண்டும் எங்கள் ஓட்டுனர் ஒரு கோவிலுக்கு தான் எங்களை அழைத்துச் சென்றார். அந்தக் கோவில் மலை சரிவில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. முதலில் ஹனுமான் கோவிலாக உருவாகி, பின்னர் அனைத்து தெய்வங்களும் அங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 

எனக்கும் கடவுளுக்கும் மிகவும் தூரம் என்பதால், என் நண்பர்களது காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு அவர்களை உள்ளே தரிசனம் காண அனுப்பிவிட்டு, வெளியில் இருந்த இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, எனது நண்பனிடம் இருந்து உள்ளே வரச் சொல்லி கைபேசியில் அவசர அழைப்பு வரவே, காலணிகளை ஹனுமான் பொறுப்பில் விட்டு விட்டு உள்ளே சென்றேன். உள்ளே படி வழியாக இறங்கி சென்றால், ஒரு பெரிய மண்டபம் போல் இருந்தது. அங்கு வரிசையாக மக்கள் அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 'நண்பேன் டா!' என்று அவனுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு, நானும் அமர்ந்தேன். 

வெள்ளை நிறத்தில், பொங்கிய வடிக்கப்பட்ட அரிசி என் இலையில் பார்த்தவுடனே எனது மனம் தமிழகத்தை நோக்கிச் சென்றது. ராஜ்மா குழம்பு, பட்டாணி குழம்பு, மற்றும் ஒரு இனிப்பு என்று அசத்தலாக இருந்தது அந்த அன்னதானம். அந்த ஏழு நாட்களில் நாங்க உண்ட உணவில் மிகவும் சுவையானது அதுதான். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அன்றோ.                                                   
மால் ஸ்ட்ரீட் (Mall Street)

சென்னைக்கு எப்படி பாண்டி பஜார் மற்றும் ரங்கநாதன் தெருவோ அப்படித்தான் சிம்லாவிற்கு இந்த மால் ஸ்ட்ரீட். இங்கு அனைத்து அரசாங்க அலுவலங்களும் உள்ளன. அந்த அலுவலகங்களை தாண்டிச் சென்றால் வரும் பிரதான சாலையில் அனைத்து ரக பிரான்டட் கடைகளும் இருக்கும். அந்த பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் சற்று கீழே இறங்கினால் மலிவு விலைக் கடைகள் அனைத்தும் இருக்கும். 

அப்படி ஒரு சந்தினுள் ஒரே சாப்பாட்டுக் கடைகளாக இருக்க, ஒரு கடையின்  உள்ளே சென்று அமர்ந்தோம். அங்கு சுடச் சுட கிடைத்த சென்னா படுறா(சோலாபூரி) வின் சுவை இன்றும் என் நாவில் உமிழ் நீர் சுரக்ச் செய்கின்றது. 

மால் ஸ்ட்ரீடில் தென்பட்ட பொம்மைகளை ரசித்தபடி இனிதே எங்கள் சிம்லா பயணம் முடிவடைய, மறுநாள் விடியற்காலை கல்கா நோக்கி சென்றோம். ஆறு மணிக்கு கல்காவில் ரயில் என்பதால், நான்கு மணிக்கு சிம்லாவை விட்டு கிளம்பினோம். நான்கு மணிக்கு அந்தக் குளிரில் குளிக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல. சிம்லாவில் இருந்து மலை இறங்கும் அந்தப் பயணம் சந்திர ஒளியில் அழகா இருந்ததை நான் ரசித்துக் கொண்டே வர, என் நண்பர்கள் தூங்கி கொண்டே வந்தனர். சில நேரம் கடந்து தான் எங்களது சீருந்தின் என்ஜின் ஓடாததை உணர்ந்தேன், neutral கியரில் வண்டியை எங்கள் ஓட்டுனர் மலையில் இருந்து கீழு உருட்டிக்கொண்டு வந்தார் என்பதை அறிந்தவுடன் எனக்கு 'குபீர்' என்றானது. அவருக்கு என்னமோ அப்படி ஓட்டிப் பழக்கம் இருந்தாலும், மலையில் இருந்து கீழ் இறங்கும் வரை ஒவ்வொரு முறை அவர் பிரேக் அழுத்தும் பொழுதும் எனது உயிர் சந்திரனை தொட்டு விட்டு பூமி திரும்பியது.                
  

நிசாமுத்தின் ரயில் நிலையத்தில், 3 3௦ மணிக்கு வழக்கமாக வரும் சென்னை செல்லும் MAS-Durronto எக்ஸ்பிரஸ் அன்று மணி ஏழாகியும் வரவில்லை.

இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************

சமுதாய சிந்தனை மிக்கவர் இவர். இவரது கவிதைகள் நம் மனதைப் பல கேள்விகள் கேட்க வைக்கும்.

கே.ஆர்.பி. செந்தில் என்னும் தளத்தில், செந்தில் அவர்கள் எழுதிய 'பதின்ம இரவுகள்' என்ற பதிவு.

*********************************************************************************************************

எனக்கு பல சமயங்களில் வாழ்கையின் மீது வெறுப்புவருவதுண்டு. இவரது கதையின் நாயகனும் அப்படி ஒரு நிலையில் இருக்க கதை துவங்குகின்றது.

'கடற்கரை' என்னும் தளத்தில் விஜயன்  அவர்கள் எழுதிய 'வாழ்க்கையை வேறுத்தவர்க்ளுக்கான கதை' என்ற பதிவு.

*********************************************************************************************************

வரலாற்று சிறப்பு மிக்க குடந்தையூரில் இருக்கும் தR.V. சரவணன் அவர்கள், 'குடந்தையூர்' என்னும் அவரது தளத்தில் எழுதிய 'மருமகளான மாமியார்' என்னும் சிறுகதை.

*********************************************************************************************************

எனக்கு மிகவும் பிடித்த விஸ்வரூபம் படத்தை பற்றி 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்னும் தளத்தில் 'விஸ்வரூபம்' என்று RVS அவர்கள் எழுதிய பதிவு.
*********************************************************************************************************

'தெனாலி' என்ற தளத்தில் 'வலி' பற்றி எழுதிய பதிவைப் படித்துப்பாருங்கள். 

*********************************************************************************************************

இன்றுடன் எனது ஆசிரியர் பணி இனிதே நிறைவடைகின்றது. வாய்ப்பு அளித்த பிரகாஷ் மற்றும் சீனா அய்யா அவர்களுக்கும், தினமும் வருகை தந்த உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 

இங்கிருந்து நான் பிரியா விடைபெற்று சென்றாலும், இங்கு கிடைத்து உற்சாகத்துடன் எனது தளத்தில் தொடர்ந்து எழுதுவேன். அங்கும் உங்கள் ஊக்கம் தொடர்ந்து தேவைப்படுகின்றது. என்னைத் தொடரப்போறவர்களுக்கும் நன்றி.

நன்றியுடன் 
ரூபக்

30 comments:

  1. குரங்கு ரொம்பவே வெவரம் தான்...

    பனியைத் தேடி - சிம்லா பயண அனுபவத்துடன், ஆசிரியர் பொறுப்பை சுவாரஸ்யமாக முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி

      Delete
  2. அந்தக் குரங்கோட நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் கோல் கொண்டு குரங்குகளை விரட்டுகின்றனர் என்பதில் என்ன ஒரு நகைமுரண் பாத்தீங்களா...? சிம்லாவின் பல பகுதிகளை கையப் புடிச்சு கூட்டிச் சென்று காட்டிட்டீங்க ரூபக். அருமை. இன்று உங்களினால் அறிமுகம் பெற்றவர்களுக்கும் வலைச்சயப் பயணத்தை அழகாய் நிறைவு செய்த உங்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  3. Replies
    1. முடிவில் உள்ள தெனாலி தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

      இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
    2. டிடியையே புளகாங்கிதப் படுத்திய நீர் வாழ்க! உம் குலம் வாழ்க :-)

      Delete
    3. சில புதிய தளங்களை எனக்கு அறிமுகம் செய்த ஸ்கூல் பையன் அவர்களுக்கு தான் எல்லாப் புகழும் சேர வேண்டும்

      Delete
  4. சிம்லா சென்று வந்த அனுபவம் கிடைத்தது.. அருமையான நடை.. அழகான விவரிப்புகள்.. நீங்களும் இலக்கியவாதிதான், மிஸ்டர் ரூபக்..!

    ReplyDelete
    Replies
    1. //நீங்களும் இலக்கியவாதிதான்// இப்படி அனைவரையும் நீங்களும் இலக்கியவாதி ஆக்கும் உங்கள் பாங்கைக் கண்டு வியக்கிறோம் !

      Delete
    2. ஹா ஹா ஹா . ஒரு ஆகச்சிறந்த இலக்கியவாதி சொன்னால் சரிதான்

      Delete
  5. அருமையான பணி ரூபக்... தாங்கள் விட்டுச் செல்லும் பணியை உங்களுக்கு அடுத்து வருபவர் சீரும் சிறப்புமாக செய்ய வேண்டுமே என்ற கவலை இப்போதே என்னை வெகுவாக ஆட்கொள்கிறது.. பார்க்கலாம் அந்த நபர் எப்படி செய்யப்போகிறார் என்று :-)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :) அடுத்து வருபவர் ஒரு பிரபலம் என்பதால் அவர் பனி எட்டு திக்கும் அதிரும்படி இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை

      Delete
  6. காலணிகளை பாதுகாக்கும் பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு//

    பொதுவாக வடநாட்டு திருத்தலங்களில் தென்னகத்துக் கோவில்கள் போல செருப்புகள் திருடு போவதில்லை என்பதை கண்கூடாகக்கண்டோம்..!

    ReplyDelete
    Replies
    1. இந்த விசயத்தை நான் கண்டபோதும் அது என் மனதில் பெரிதாய் பதியவில்லை

      Delete
  7. நல்ல பகிர்வு..... பதிவர்கள் பலரை சிம்லா அழைத்துச் சென்றமைக்கு வாழ்த்துகள்.....

    விருந்தாவன் குரங்குகள் இப்படி நல்ல மனம் கொண்டவை அல்ல! பிரசாதம் தூக்கிப் போட்டால் அதை பிடித்து வாயில் இடுக்கிக்கொண்டு பல்களைக் காட்டி சிரிக்கும்! கண்ணாடியைத் தராது!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  8. கடந்த ஒரு வார காலமாய், ஷிம்லாவிற்க்கு சுற்றுலா சென்று வந்த உண்ர்வை அஞ்சு பைசா செலவில்லாமல் எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.

    பணி நிறைவு பெறும் ஆசிரியருக்கு எமது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  9. மிக்க நன்றி தலைவரே, திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி :)

    ReplyDelete
  10. எங்கள் சிம்லா பயணம் பார்க்கணுமா? இங்கே:-)
    http://thulasidhalam.blogspot.co.nz/2011/05/blog-post_09.html

    ஜஸ்ட் மூணே இடுகைகள்தான்:-))))) நேரம் இருந்தால் நூல் பிடிச்சுப் போய்ப் பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வாசிக்கின்றேன்.

      Delete
  11. சிம்லா பயணக்கதையை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! அருமையான பதிவர்கள் அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  12. சிம்லா பயணக்கதையை ரசித்தேன். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  13. சிம்லாவை சுற்றிப்பார்த்துமகிழ்ந்தோம். எத்தனைதடவைகள் குளிர்பிரதேசங்களை பார்த்தாலும்அவை புதுப்பயணமாகவே தோன்றும். அவை தம்அழகில' எம்மை கட்டிப்போட்டு வைத்துவிடுகின்றன.

    மிக்க நன்றி.

    அருமையான பணி. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கம் என்னை ஒரு பயண கட்டுரையை முழுமை அடைய செய்தது. தவறாமல் பயணித்த தங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  14. என் தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ரூபக் ராம். அறிமுகமான மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது