07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 22, 2014

பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு

இந்த குளிர் செய்யும் தந்திரம், நமது தாகத்தை அடக்கி, உடலுக்கு தேவையான நீரை நம்மை அருந்தவிடாமல் செய்வதுதான். உணர்விழந்து நான் கீழே அமர, சில நொடிகள் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. என் நண்பன் மேல் இருந்து கொண்டுவந்த நீரைப் பருகியதும் தான் உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கொஞ்சம் வலு பெற்று மெதுவாக ஒரு கடைக்கு முன் சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்தேன். ஆளுக்கு ஒரு ப்ளேட் மேகி (maggi) ஆர்டர் செய்தோம். அந்தத் தருணம், அந்தக் குளிருக்கு இதமாக சூடாக சுவைத்த மேகி எனது வாழ்நாளில் வேறு எந்தத் தருணத்திலும் அவ்வளவு சுவையாக இருந்தது இல்லை.

உணவு உண்டபின் கிடைத்த வலுவுடன், மீண்டும் தடைபட்ட எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். என் போலிக் குதிரையின் மேல் ஏறி மலை இறங்கத் தொடங்கினோம். இறங்குவது சற்று பயமின்றி சுலபமாகவே இருந்தது. அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் எங்களை அடுத்த இலக்கு நோக்கி அழைத்துச் சென்றார். அப்பொழுது சீருந்தில் இருந்த டிஸ்ப்ளே காட்டிய வெப்பம் 4 டிகிரி செல்சியஸ்.     

எங்களை தட்டா பாணி(Tata Paani) என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது சிந்து நதியின் ஒரு பிரிவான சட்லஜ் நதி பாயும் இடம்.  அண்ணன் பேரம் பேச அந்த நதியில் நாங்கள் ராப்டிங்(rafting) செல்ல தயாரானோம். எங்களது காலணிகளை சீருந்திலேயே விட்டு விட்டோம். எங்களது பணப் பை, கேமரா, கைபேசி அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையினுள் போட்டு கட்டி அந்த பலூன் படகின் ஒரு மூலையில் போட்டார் அந்தப் படகுக் காரர். எங்கள் படகில் படகுக் காரருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர், நதியில் மிதக்கத் தொடங்கினோம். 

என் வாழ்வில் தண்ணீரே பாயாத பாலாரைக் கண்டு வளர்ந்த எனக்கு வற்றாத நதிகளைக் கண்டால் கொஞ்சம் போறாமையாகத் தான் இருக்கும். நமது தென்னகத்து நதிகளுக்கு நேர் மாறாக கோடைக் காலத்தில், இமய மலையில் பனி உருகி, அந்த நதிகளில் வெள்ளம் இன்னும் அதிகமாக இருக்குமாம். அந்த நதியின் கரையில் காலை வைக்கும் பொழுதே அந்த நீரின் குளிர்ச்சி புலப் பட்டது. நீங்கள் ஐஸ் கட்டியில் கரைந்து வரும் நீரில் காலை வைத்து பார்த்ததுண்டா? அப்படித்தான் இருந்தது அந்த நீரின் குளுமை. 

படகுக்காரர் சொல்லும் கட்டளைகளை கேட்டு நாங்கள் துடுப்பு விட்டு மறுமுனை செல்ல வேண்டும். துடுப்பு விட பெண்களுக்கு மட்டும் விடுப்பு, அவர்கள் அழகாக மத்தியில் அமர்ந்து படகுச் சவாரியை ரசித்தனர். அந்த நதியில் படகு சீறிப் பாய்ந்து சென்றது. நதியின் சுழல்களுக்கு ஏற்ப அவர் திறமையாக எங்களை துடுப்பு பிடிக்கச் செய்து நதியில் படகை விரைவாக செலுத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் நீருக்கு வலிக்காத வண்ணம் சற்று மெதுவாகவே துடுப்பை வலித்துக் கொண்டிருக்க. எனது பாசாங்கை அறிந்து நக்கலாக அவர் ஹிந்தியில் எதோ சொல்ல, அந்தப் பெண்கள் குபீர் என்று சிரித்தனர். 

ஒரு வழியாக நதியின் மறுமுனைக்கு திறமையாக வந்து சேர்ந்தோம். படகு செலுத்தும் சுவாரசியத்தில், எனது கால்களை கவனிக்க மறந்தே போனேன். எனது கால், படகினுள் புகுந்த குளிர்ந்த நீரின் சதியால், ரத்தம் செல்லாத வண்ணம் மறத்துப் போயிருந்தது. படகை விட்டு இறங்கி நொண்டிக்கொண்டு கரையை அடையும் பொழுது மற்றொரு அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது.


கரையின் ஓரங்களில், மணலில் இருந்து சூடான ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த ஆவி கிளம்பும் இடங்களில் நீர் வெதவெதவென்று குளிருக்கு இதமாக இருந்தது. எனது கால், மற்றும் நீரில் நனைந்த மற்ற பாகங்களை அந்த சூட்டில் காட்டி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தேன். இப்படி இயற்கையாக உஷ்ணம் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் 'Sulfur Springs' என்று சொல்லுவார்கள். இயற்கையில் தான் எத்தனை விந்தைகள் அடங்கியுள்ளன?. அந்த குளிரில் அந்த சூடான மணலில் அமரும் பொழுது எத்தனை சுகமாக இருந்தது தெரியுமா? ஆனந்தம்! பிரியா விடைபெற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.          

எங்கள் பயணத்தில் நாங்கள் எதிர் பார்த்து வந்த ஆசை நிறைவேறாத வருத்தமும், எதிர்பாராத பல சுவாரசியமான அனுபவங்கள் நிகழ்ந்த சந்தோஷமும், எங்கள் மனதை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. மலைகளை கடந்து, வளைந்து வளைந்து, மலையை ஒட்டி செல்லும் அழகான சாலைகள் எங்கள் மனதிற்கு குதூகலத்தை தந்தது. ஒரு இடத்தில மரங்களுக்கு நடுவில் சென்று சீருந்தை நிறுத்தி, எங்களை ஒரு மணல் பாதையில் அழைத்துச் சென்றார். பசுவின் பின் செல்லும் கன்றைப் போல அவரை பின் தொடர்ந்து சென்றோம். அந்தப் பாதை சற்று சரிவின் மேல் ஏறியது, எங்கள் உள்ள மகிழ்ச்சியும் இமயத்தின் மேல் ஏறியது. எங்கள் பயண இலட்சியத்தை நாங்கள் அடைந்தது அங்கேதான். எங்கள் கனவு நினைவானது அங்கேதான். அதுதான் நார்க்கண்டா (Narkanda) என்னும் இடம்.


எங்கள் கண் முன் தோன்றிய காட்சி வெள்ளைப் பனி சூழ்ந்த பனி மலை. அங்கு மக்கள் கூட்டம் எறும்புகள் போல் தெரிந்தது. படங்களில் காண்பது போன்ற பனி, என் முட்டி வரை அந்தப் பனியில் புதைந்தது. மீண்டும் மழலைகள் ஆகி, பனிப் பந்தெறிந்து விளையாடினோம். சற்று வளர்ந்து வாலிப வயதை எட்டி, ஜேம்ஸ் பான்ட் படங்களில் வருவது போல் பனி சறுக்கும் செய்தோம். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். 'மீண்டும் அப்படி ஒரு நாள் வருமா?' என்று மனம் இன்றும் ஏங்குகிறது.  இன்றைய அறிமுகங்கள்:

*********************************************************************************************************
எனது 'தேன் மிட்டாய்' உருவாக ஒருவித உத்வேகம் தந்தது இவரது இந்தப் பதிவு தான். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாவிட்டாலும், இவரது ஒயின்ஷாப்பிற்கு தவறாமல் செல்வது எனது வழக்கம்.

'பிரபாகரனின் தத்துபித்துவங்கள்' என்னும் தளத்தில் பிரபாகரன் அவர்கள் எழுதிய 'பிரபா ஒயின்ஷாப் - 15042013' என்ற பதிவு.        

*********************************************************************************************************

இவரும் தனது வாழ்வில் நடக்கும் அனுபவங்களை சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர்.

'மெட்ராஸ்பவன்' என்னும் தளத்தில் சிவா அவர்கள் வழங்கிய 'ஸ்பெஷல் மீல்ஸ் 9/4/13' .

*********************************************************************************************************

எனக்கு இவரை பற்றி நினைத்தால் ஏனோ சந்திரபாபு தான் நினைவுக்கு வருகின்றார். ஒரு வார்த்தை சொன்னாலும், அதை நெற்றிப்பொட்டில் பதிய வைத்து விடும் வல்லமை படைத்தவர் இவர்.

ஜீவன் சுப்பு அவர்கள் சொல்லும் அவர் 'கணினி கற்ற கதையை' படித்து தான் பாருங்களேன்.

*********************************************************************************************************
அரைஞாண் கயிறு எதற்காக பயன்படுத்தப் பட்டது என்பதை இவரது பதிவின் மூலம் நான் அறிந்தேன்.

'பட்டதும் சுட்டதும்' என்னும் தளத்தில் 'நம் முன்னோர்கள் நம் பெருமைகள்' என்ற பதிவு தான் அது.

*********************************************************************************************************
இவர் ஒரு காமிக்ஸ் காதலன் மற்றும் காவலன்.

'jsc Johnny' என்னும் தளத்தில் ஜான் அவர்கள் எழுதிய  'இயந்திரப் படையும்!!! இரும்புக்கை மாயாவியும்!!' என்ற பதிவு.                

*********************************************************************************************************

மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   

18 comments:

 1. பேசுவதே வார்த்தைகளுக்கு வலிக்காத வண்ணம் இருக்கும் போது, நீருக்கு வலி கொடுக்க தோணுமா...? ஹிஹி... ரசிக்க வைத்தது விந்தைகள்...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் காதலன் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

   Delete
  2. ஹி ஹி ஹி . மிக்க நன்றி

   Delete
 2. சில பேர் புதிது.. படிக்கிறேன்..

  ReplyDelete
 3. ஆவியால ஏற்படற தண்ணீரால கால் இயல்பா ஆச்சா... ஆவியின் உதவி எப்பவும் தேவைதான் போலருக்கு... இந்தில அந்தப் படகோட்டி உங்களை கமெண்ட்டி பெண்களைச் சிரிக்க வெச்சா பதிலுக்கு தமிழ்ல நீங்க அவரை எள்ளிநகையாடி நம்மவர்களை சிரிக்க வெச்சிருக்க வேணாமோ...? காமிக்ஸ் சமாச்சாரம் பேசற தளம் தவிர மத்த எல்லாரும் அறிமுகமானவங்க. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா . எள்ளிநகையாடுவது நமக்கு சரளமா வருவதில்லை

   Delete
 4. அறிமுகப்படுத்தி அன்பால் இணைத்ததற்கு மிக்க நன்றி தோழரே!!!

  ReplyDelete
 5. பனியைப் பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சி.... சொல்ல முடியாத மகிழ்ச்சி உண்டாவது புரிந்து கொள்ள முடிந்தது!

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அன்பு தோழா!
  இப்போது புரிகிறது. சூப்பர் ஸ்டார் ஏன் அடிக்கடி பனி பிரதேசங்களை நோக்கிச் செல்கிறார் என்று.
  வெண்மை - குளிர் - அமைதி - தியானம். விட்டு வர யாருக்கு தான் மனசு வரும்!!
  இன்றைய அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அது ஏனோ உண்மை தான், அங்கிருந்து கிளம்பவே மனசு இல்லை

   Delete
 7. மின்வெட்டும் வேலைப் பளுவும் சேர்ந்து கொள்ள இரண்டு நாளாய் வலைப்பக்கம் நெடுநேரம் வலைவீச முடியவில்லை! விட்டுப்போன பகுதிகள் படித்து வருகிறேன்! அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 9. ஆகா! பனிச்சறுக்கு ஆனந்தம்....

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது