07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 13, 2014

கொஞ்சம் தூசி தட்டுங்க!!


கருவாச்சியின்,அன்பனா பணிவான (ரொம்ப மருவாதக் கொடுக்குற புள்ளைங்க ) வணக்கமுங்க!  

இன்னைக்கு ரொம்ப மருவாத இருக்கே யாருக்கு இந்த வலை நு யோசிக்கீரிங்களா?எல்லாம் நம்ம சீனியர்ஸ்க்குதான்..பதிவுலகில் புகழின் உச்சியில் இருந்துக் கொண்டு தனது பதிவுகளாலும் பின்னூட்டங்களாலும் ஒருக் காலத்தில் பதிவுலக ஜாம்பவான்களாக இருந்தவர்கள் இப்போது ஏன் எழுதவில்லை என்பதே என் ஆதங்கம். அறிமுகப் பதிவர்களை ஊக்குவித்து எழுதத் தூண்டும் நாம் இவவை பக்கம் போயி சட்டையப் புடிச்சி நல்லா எழுதுற உங்களுக்குலாம் என்னையா பிரச்சன, ஏன்யா எழுதலன்னு கேக்கணும்நு தோணுது.ஆனா தனியா கேக்கபயமா இருக்கு. அதான் துணைக்கு உங்களையும் அழைச்சிகிட்டு என்னான்னு கேட்டுட்டு வருவோம் வாங்க ..




முதல்ல, சீனியர்கிட்ட அனுமதி வாங்கிட்டு வழக்கம்போல நம்மச் சேட்டைய ஆரம்பிப்போம்




சீனியர்,நா ஒரு வாத்துக் கடிக் கடிக்கவா
P.R(பன்னி):நீ மட்டும் கடிச்ச,வெறிப் புடிச்ச சொறிநாய விட்டு உன்னைக் கடிக்க வைச்சிடுவேன்
(ஹிஹீஹீ சேதாரம் நாய்க்கு தான் நு தெரியமா பேசுறார்,சீனியர்)

அப்போ கவித கவித ஓகே வா
மங்கு: நாழுக் கழுதைய விட்டு உன்னை உதைப்பேன் ஒகே வா

ங்ஞே ங்ஞே ங்ஞே ங்ஞே ங்ஞே,
அப்போ நா ஒருக் கதை சொல்லவா
அஞ்சா சிங்கம் :கதை சொல்லுற வாய்க்குள்ள கரப்பான்பூச்சிய போடவா


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,நான் இன்றைக்கு எந்த ஆணியையும் புடுங்கல சீனியர்ஸ்.நேரடியா விடயத்துக்கே வருகிறேன்.பதிவுலகில் நீங்கள் எல்லாரும் பெரிய ஜாம்பவான்கள் என்று நான் சொல்லி மக்களுக்குத் தெரியவேண்டியதில்லை. நீங்கள் பதிவிட்ட அக்காலக் கட்டத்தில் பதிவுகளும் அதனை சார்ந்த பின்னூட்டங்களும் வித்தியாசம் கொண்டவையாக இருக்கும்.கவிதை,கதை ,நக்கல்,நையாண்டி,கேலி ,கிண்டல்விமர்சனம் ன்னு பல்சுவைகளும் கலந்து இருக்கும்(இப்போது எல்லாம் ரெடிமேட்ஆக டெம்ப்ளட்)  

உங்கள் பதிவுகளில் நண்பரை ஊட்டி ஊட்டி வளர்ப்பதும் உங்கள் எதிரியை கல்லால  துரத்தி துரத்தி அடிப்பதும் நடுவுல சிலர் திரியைத் தூண்டுவதுமாய் சுவாரஸ்யமாய் இருக்கும் அதுவும் சுடச்சட போண்டா காப்பியுடன் கணினி முன் அதைக் கண்டு ரசிப்பதுல இருக்குற சுகமே தனி தான்.ஏழரை சனிப் புடிச்சவங்களுக்கு கூட விமோர்சனம் கிடைக்கும் ஆனா பதிவுல சனிப் புடிச்சவங்களுக்கு விமோர்சனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

சரிங்க வாங்க இப்போ சிலப் பிரம்மாக்களை பார்த்துட்டு வருவோம் 

பதிவர் :அஞ்சாசிங்கம் 

வலைப்பூ :அஞ்சா சிங்கம் 

 பதிவுலகில நான் முதல் முதலா படித்த நக்கல் பதிவு இது மேதைப் படம் பார்த்த மாமேதைகள் 

குறும்பட குஷ்கா சாப்பிட இங்கபோங்க 



பதிவர்:ரெவெரி

வலைப்பூ:ரெவெரி

இந்த வலைப்பதிவுல உங்களுக்கு அறியாத பல விடயங்கள்  முடியும் என்பது உறுதி..உள்ளூர் அரசியல் இருந்து உலக அரசியல் ,கதை ,கவிதை ன்னு கலக்கிட்டு இருந்தவர் .  

நாம குடிக்கிற பால் ல விஷமாம் எப்படி ன்னு படிச்சிட்டு வாங்க இங்க 

நாம நம்மள சிறப்பத்துக்கொள்ள ஒரு ஐடியா சொல்லுறார் பாருங்க 


பதிவர்:நிலாமதி  

சோகக்கதை ,காதல் கதை ,குடும்பக் கதைன்னு சுவாரஸ்யமா கதை சொல்லும் இவரையும் கேக்கணும் 

கடந்துப் போன காலம் கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும் 

தாயும் நீயே தந்தையும்நீயே கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும் 


பதிவர்:பன்னிகுட்டி ராமசாமி
வலைப்பூ:ஸ்டார்ட் மியூசிக் 

ஆல் இன் ஆல் அழகுராஜாவோட சைக்கிள்கடைய இப்போ முகநூல்ல நடத்திட்டு இருக்கார்..இவர்கிட்ட ஏன் யா வரலன்னு கேட்டா என்ன சொல்லுவார் தெரியுமா (யோவ் நீர்  fake  id தானே நு கேப்பார் )இவர ஒரு தனிரூம் குள்ள புடிச்சிப் போட்டு ,நம்ம இளையதிலகம் பிரபுவோட கல்யான் ஜுவல்லேர்ஸ் விளம்பரத்தை விளம்பரமே இல்லாமே போட்டுக் காண்பிக்கணும்யா ...நம்பிக்கை தான் வாழ்க்கை சார் ..  

இவங்க எல்லாம் அப்போவே அப்படித்தானாம் போயி படிங்க 

  
பன்னிகுட்டியும் ஒரு காப்பி பேஸ்ட்பதிவர் தாங்க ..சொன்னா நம்ப மாடீங்கன்னு தான் ஆதாரத்தோட நிருபீக்கிறேன் ..காப்பி பேஸ்ட் பதிவைப் பார்க்க இங்கே சொடுக்கவும் 
ஒரிஜினல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்   மேலும் ஆதாரத்திற்கு இங்கே சொடுக்கவும் 




பதிவர் :மங்குனி அமைச்சர் 

மங்குவோட வோட தீப்பெட்டி காணுமாம் ..எனக்கு புடிச்ச பதிவு போயி பாருங்க ...

இந்த பதிவை பார்த்தபோது எனது உயிர் என்கிட்டேயே இல்லைங்க .. இடம்மாறி வந்துட்டனே ன்னு ஒரு டவுட் இல்லை இவரு  தான் குடிச்சிட்டு அவரோட ப்ளாக்ய வேற இடத்துல தூக்கி வைத்துட்டரோ இல்லை யாரவது எங்கயாவது பதிய வேண்டியது இடம் மாறி வந்து இவரு  வலைல போட்டுட்டாங்களோ ஒரு வேலை அப்படி இருக்குமோஇல்லை இப்படி இருக்குமோ ஒன்னும் புரியல எனக்கு...இந்த மகானிடமிருந்து இப்படி ஒருப்பதிவை நான் எதிர்ப்பார்க்கல செந்தழல்( என்ன ஒரு தமிழ்ப் படைப்பு)

டிஸ்கி: இன்னைக்கு பதிவு இவ்ளோ late ஆனதுக்கு காரணமே நான் இன்னொரு பிரபல வலைப் பதிவரின் பூவையும் அதிகாலை நான்கு மணி வரை தேடிட்டு இருந்தது தான்..கடைசியா இப்போ அவரோட நெருங்கிய நண்பர்கிட்ட கேட்டு வலைப்பூவின் முகவரியை வாங்கினா அந்த மாமனிதர் பதிவெழுதிக் கொண்டுதான் இருக்கிறார்(ஒருவட போச்சே )..அவர் வேறு யாருமில்லைங்க வீடு சுரேஷ்குமார் தான்..வலைப்பூ முகவரிக் கொடுத்த திருப்பூர் பதிவருக்கு கோடான கோடி சிறப்பு நன்றிகள்.


 பதிவுலக பிரம்மாக்களே!!தமிழ்கூறும் நல்லுலகில் வலையுலகில் நீங்கலாம் அடித்தளங்கள் ..நீங்கள் ஏன் எழுதாமல் இருக்கீர்கள் நு கேக்கமாட்டேன் ( நேரமில்ல வேலை பிஸிநு அலம்பல் பண்ணுவீங்கபதிவுலக பரமப் பிதாக்களே!!உங்களிடம் நான் மன்றாடிக் கேட்பெதெல்லாம் வாரமொரு முறை இல்லையென்றாலும்  மாதமொருமுறை யாவது உங்கள் வலைய திறந்துத் தூசித்தட்டி எங்களது அறிவுக் கண்ணை திறந்து வைப்பீராக!எங்கள் பதிவுக்கும் பாவவிமோர்சனம் தருவீராக!       

அட்லீஸ்ட் எங்கள அப்ரண்ட்டீஸ்களா சேர்த்துக்கோங்க பாஸ்..


 


42 comments:

  1. மருமகளுக்கு வணக்கம்!நலமா?///பிரபலங்கள் அறிமுகம் இன்று!அதிலும் காமெடிப் பதிவாளர்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்.'வீடு' சுரேஷ்குமார் கொஞ்சம் பிஸி மாதிரி......ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாமா ....நான் நலமே ..நீங்கள் நலமா ...ரேவேரி அண்ணா ,நிலாமதி அக்கா அவர்கள் எல்லாம் காமெடி பதிவர்கள் இல்லை மாமம் ..வீடு சுரேஷ் குமார் வலைப் பூவ தேடி தேடி தொலைஞ்சிட்டேன் ...வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றிங்க மாமா

      Delete
  2. பதிவேற்றிய பதினோராவது நிமிடத்தில் வந்திருக்கிறேன்.இன்னிக்கு எனக்குத்தான் 'பால்கோப்பி!'

    ReplyDelete
    Replies
    1. ஹும்ம்ம்ம் சூப்பர் இதே மாறி எல்லாப் பதிவுக்கும் வாங்க

      Delete
  3. /// பதிவுலக பரமப் பிதாக்களே!!உங்களிடம் நான் மன்றாடிக் கேட்பெதெல்லாம் வாரமொரு முறை இல்லையென்றாலும் மாதமொருமுறை யாவது உங்கள் வலைய திறந்துத் தூசித்தட்டி எங்களது அறிவுக் கண்ணை திறந்து வைப்பீராக!எங்கள் பதிவுக்கும் பாவவிமோர்சனம் தருவீராக! ///////

    ஏனுங்க கலை.... நீங்களே உங்களை திரும்பி பார்த்திங்களா?????

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ்ஷ்ஷ் நான் லாம் மொக்கை பதிவருங்க ...என்னால பதிவுலகம் சாகமா இருந்தாலே சந்தோஷம்

      Delete
  4. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் தோழிக்கும் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாள்

      Delete
  5. இன்னும் நிறையப் பேரு இருக்காங்க எழுதாம... ஐடியா மணி மாதிரி... இவங்களை எழுத அழைச்ச வாத்துக்கு ஸ்பெஷல் பொக்கே..! (இளவரசின்னு சொல்லாம வாத்துன்னு சொல்லிட்டேன் யோகா ஸார். சந்தோஷமா...?)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அங்கிள்... நானும் கூடதான் ...இனிமேலாவது எழுதுறது நு நினைத்து இருக்கேன் ...இளவரசி நு நீங்க மட்டும் தன கூபிடுவீங்க ..இப்போ நீங்களுமா

      Delete
    2. எப்பவும் போல உரிமையா இளவரசின்னுதான் முதல்நாள் கூப்ட்டேன் கலைம்மா. உன் யோகா மாமாதான் இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு கொம்பு சீவினாரு. அதான்.... ஹி,,, ஹி,,,, நீ எனக்கு எப்பவும் இளவரசி தாம்மா.

      Delete
    3. சரி பால கணேஷ் சார் அப்புடியே(இளவரசி) விழிச்சுக்குங்க!

      Delete
  6. வணக்கம்

    இன்றைய வலைச்சரஅறிமுகங்கள்அனைவருக்கும்வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்ப்பா ....தொடர்ந்து வாருங்கள் ..ரொம்ப நன்றிங்க

      Delete
  7. நீங்கள் சொன்னது சிலரே... மிகமிகச் சிலரே... ஒரு நீண்ட பட்டியலே உண்டு சகோதரி... ம்...!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அண்ணா....ஆனா பாருங்க எனக்க்கு சரியா தெரியல யார் யாருன்னு அதான் ..

      Delete
  8. வணக்கம்
    இன்று அறிமுகம் செய்த தளங்களில் 2தளங்கள் அறிந்தவை ஏனையவை அறியாதவை.... அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்கநன்றி....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹே கொஞ்சம் சந்தோசமா இருக்குதுபா ...இன்றைய பதிவை சோதப்ப்பிடனோ ன்னு நினைச்சேன் ...தேங்க்ஸ்

      Delete
  9. முன்னெச்சரிக்கையா ..தடுப்பு ஊசி கை வசம் கொண்டு வந்தா..
    அப்பரண்டீஸ்.. அப்படீன்னு ஆகிப் போச்சே!..

    நல்லவேளை.. நகைச்சுவைன்னு.. வாய் விட்டு சிரிச்சாச்சு!..

    ReplyDelete
    Replies
    1. வாணக்கம் அய்யா ... இன்னைக்கு நானு அடக்கி வாசிகிரதுனால தடுப்பூசிக்கு வேலை இல்லை ..

      நன்றிங்க அய்யா வருகைக்கு

      Delete
  10. நம்ம நிலா அக்காவின் வலைத்தளத்தை அறிமுகம் செய்த தங்கை கலைக்கு (ஆசிரியருக்கு) பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. // யோவ் நீர் fake id தானே நு கேப்பார் //

    அப்டின்னா.. நீங்க நிஜமாவே Fake ID இல்லையா..?!!

    :) :) :P

    ReplyDelete
  12. // நாழுக் கழுதைய // " தமிழ் இனி மெல்ல சாகும்னு " இதை தான் பாரதி அப்பவே சொன்னாரோ..!!

    ReplyDelete
    Replies
    1. நான் நேத்தே சொல்லிட்டேன்,இது "தமிழ்" க் கடி ன்னு!

      Delete
  13. ஆமா நீங்க எங்க போனீங்க இத்தினி நாளா? காணாமல் போனவங்க லிஸ்ட்ல நீங்களும்ல இருந்தீக..........

    மீண்டு(ம்) வந்துட்டாப்புல.

    காணாமல் போறவங்கள எல்லாம் கூப்புட்டு வலைச்சரத்துல கவனிங்ககிறாங்க. நம்மள யாரும் கண்டுக்கிறதில்ல பாருங்க... ஹூம் எல்லாம் கொடுப்பினை வேணும்......

    ReplyDelete
  14. உங்க எழுச்சியுரை படித்தாவது இவங்க சீக்கிரம் பொங்கி வரட்டும்! வலையுக பிதாக்களே வருக வருக!

    ReplyDelete
  15. ஹாஆஆச்சும் ..ஹஆச் ஹச் :) யாரது தூசி தட்டி விட்டது :)

    ம்ம்ம் கலை ..மிக அருமையா ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி விட்டுரீகீங்க
    (நீங்க எல்லார் ப்ளாகையும் தட்டி விட்டதில் எனக்கு இங்கே அச்சும் வந்திடுச்சி :)
    அதான் லேட் .. :)


    ReplyDelete
    Replies
    1. ஹாய்...........தங்கச்சி!நலமா?///இந்தப் பக்கம் வராதீங்க,ஜலதோஷம் புடிச்சுக்கும்!

      Delete
    2. அண்ணா !!! நான் நலம் நீங்க ..
      அண்ணா எப்படியும் வார கடைசிக்குள்ள எனக்கும் மஞ்சள் தெளிச்சி மாலை போட்டு ......கோடிட்ட இடத்தை நிரப்புக .. :)

      அதனால் அடிக்கடி வந்துபோனா மேடம்கிட்டருந்து கொஞ்சமாச்சும் கன்செஷன் /டிஸ்கவுன்டுன்னு எதாச்சும் கிடைக்குமேன்னு தான் வந்தேன் :)

      Delete
    3. Cherub CraftsFri Mar 14, 03:23:00 AM
      அண்ணா !!! நான் நலம் நீங்க ..
      அண்ணா எப்படியும் வார கடைசிக்குள்ள எனக்கும் மஞ்சள் தெளிச்சி மாலை போட்டு ......கோடிட்ட இடத்தை நிரப்புக .. :)

      அதனால் அடிக்கடி வந்துபோனா மேடம்கிட்டருந்து கொஞ்சமாச்சும் கன்செஷன் /டிஸ்கவுன்டுன்னு எதாச்சும் கிடைக்குமேன்னு தான் வந்தேன் :)///பிச்சுப்புடுவேன்,(அவவ)பிச்சு!

      Delete
  16. அனைவருமே ஜாம்பவான்கள் ஒரு காலத்தில் அவர்கள் பக்கம் வரும் பின்னூட்டத்தை வாசித்தாலே அவ்ளோ interest aaga இருக்கும் .

    ReplyDelete
  17. எல்லாமே பெருந்தலைகள்!! ஆவி விடு ஜூட்..!

    ReplyDelete
  18. பெருந்தலைகளை எல்லாம் கூப்பிட்டிருக்கீங்க... பன்னிக்குட்டியார் முகநூலில் மிகவும் பிஸி... நிலாமதியின் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... நகைச்சுவையில் கலந்துகட்டி ஆடுபவர் மங்குனி... மற்றவர்களைப் படிக்கிறேன்...

    அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மிகவும் நன்றி நம்ம கருவாச்சிக்கு.... சில வருடங்களாக் குடும்பம் சுப காரியம் என்று இருந்துவிட்டேன். நீங்க கூப்பிட்டால் வராமல் இருப்பேனா. மிக விரைவில்வர முயற்சிக்கிறேன். நன்றி நட்புடன்.நிலாமதி

    ReplyDelete
  20. ஜாம்பாவான்களுக்கு இப்போது நேரச்சிக்கல் போலும்!ஹீ மீண்டும் வரவேண்டி நானும் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  21. தூசு தட்டிவிடவேண்டும் கிராமத்து கருவாச்சி வலையும்!ஹீ

    ReplyDelete
  22. அறிமுகங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் வாழ்த்துக்கள் யாவருக்கும் !

    ReplyDelete
  23. ரொம்ப துடிப்பான பொண்ணு தூசெல்லாம் தட்டி பார்த்து எடுத்து பதிவுகளை போடுவதற்குள் போதும் போதும் என்றாகியிருக்கும் இல்ல கருவாச்சி.
    its ok ம்மா good job.வழமை போலவே ரசித்தேன் ....! வாழ்த்துக்கள் கலை...!
    அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  24. தொடர்ந்து எழுதுவது என்பது சற்று சிரமமாக உள்ளது. அச்சிரமத்தைப் புரிந்துகொண்டதோடு மட்டுமன்றி பிறரைத் தொடர்ந்து எழுத உற்சாகமூட்டும் தங்களது எழுத்துக்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  25. கலை புண்ணியத்தில் நிலாமதி தூசு தட்டியாச்சு. :-)

    ReplyDelete
  26. சிறந்த அறிமுகங்கள்
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  27. nalla sonninga. nan 2010 la irunthu eluthuvathai niruthi vitten. thodara muyarchikinren

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது