07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 5, 2014

வலை வீசம்மா வலை வீசு

வலைச்சர நட்புகளுக்கு இனிய வணக்கம்.
 
வலை வீசம்மா வலை வீசு 
வலைச்சரம் தொடுக்க வலை வீசு
மீனுக்காக  இல்லை கடலில் 
மலருக்காக  வீசு கணினியில் 
என்றே களிப்பாய் வலை வீசிக்கொண்டிருக்க
என்னவர் சொன்னார் புளிப்பாய் ஒரு செய்தி
நான்கு மணிமுதல் இரண்டு மணிவரை
நாளை இல்லை இணையத் தொடர்பு
உடனே சொடுக்கினேன் புது இடுகையை
உங்களுடன் பகிர சில தளங்களை

பசித்தும் அழவில்லை பாலுக்கும் அழவில்லை என்று குழந்தை எசப்பாட்டு பாடுகிறது தாலாட்டிற்கு, ஏன் அழுகிறது என்றும் சொல்கிறது. காவியமும் கவியும் சேர்ந்திருக்குமோ என்றறிய பாருங்கள் இனியாவின்  காவியக்கவி.
காட்டாறு முற்றத்திலே ஓடுது என்று சொல்வாரைக் கண்டால் எப்படி இருக்கும்?
கேட்கிறார் பாருங்கள் ஒரு கேள்வி, பூக்கள் பூக்கிறதே புகழுக்கு ஏங்குகிறதா?

இலக்கியம், எழுத்தாளர்கள், கவிதைகள், புத்தகங்கள் என்று பலவற்றையும் பதிவு செய்திருக்கிறார் லோகேசு, புதுத்தமிழ் என்ற தளத்தில். இவரின் சுதந்திரத் தினம் மணம் வீசவில்லை, ஏன் என்று பாருங்கள். ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள், பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் என்று சுட்டிக்  கொடுத்துள்ளார்.

குழந்தைகளிடம் எதை வேண்டுமானாலும் கொடுப்பதா என்று கேட்கின்றனர் நான்குபெண்கள் தளத்தில்.
அட, இந்த இடுகையை எழுதியிருப்பவர் ரஞ்சனி அம்மா.
இந்த வரலாற்றை நீங்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ  படித்திருக்கவே மாட்டீர்கள்.

 ஊதா கலரு ரிப்பன் என்று பாடியதெல்லாம் போதும், கருப்பு ரிப்பன் பற்றி என்ன சொல்றாங்க தீபா பாருங்கள். எனக்கு வாழைமரம் வளர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டது வாழை மரத்தின் கதை .

இங்கு எழுத்தாக நான் என்று சொல்லும் மிருணாவின் இன்னொரு நாள் புலர்வதைப் படியுங்கள், சைக்கிள் எனும் தளத்தில்.  தட்டான்கள் பிடிக்க,பட்டாம்பூச்சி பறக்க பால்ய வனம் அருமையாய் இருக்கிறது.

முக்கியமாக உங்கள் பதிவுகளை யாரும் திருடாமல் இருக்க இந்தப் பதிவைப் படிங்கள். பெரியாரின் நூல்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறார்.

எண்ணங்கள் பலவிதம் மகாலக்ஷ்மிக்கு தனக்கு மட்டும் தேநீர் போட பிடிக்காதாம், ஏன் என்று பாருங்கள்.

கிளிகளின் பேச்சை எவ்வாறு ஆராய்கிறார் பாருங்கள் நிலாமகள்.

படித்து உங்கள் கருத்துகளை இடுங்கள்..இணைய இணைப்பு  வந்ததும் ஓடி வருகிறேன் படிக்க..நன்றி!

நட்புடன்,
கிரேஸ்

49 comments:

 1. இதுவரை இருந்த இணையத் தொடர்பிற்கு நன்றி :)

  ReplyDelete
 2. அனைத்து அறிமுகங்களும் அருமை கிரேஸ்!

  ReplyDelete
 3. அனைத்து அறிமுகங்களும் வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 4. கிரேஸ் தமிழ்மணத்தில் பதிவை இணைத்ததும் தங்களின் வாக்கையும் இட்டு பதிவை சேர்த்தாள் பலரும் வாக்கு இட்டு வலைச்சரத்தை மகுடத்தில் வைப்பார்கள் /கவனிப்பார்கள் .இது என்னுடைய் கருத்து பிழை எனில் மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வாக்களித்துவிட்டேன்..இனிமேல் அப்படியே செய்கிறேன்..சொல்லிக்கொடுப்பதில் பிழை என்ன இருக்கிறது சகோ?
   மிக்க நன்றி.

   Delete
 5. பகிர்வுக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 6. வலை வீசம்மா வலை வீசு பாடல் அருமை....

  தாங்கள் அறிமுகப் படுத்தியுள்ள விதமும் சிறப்பு...

  பாராட்டுகள்... தொடருங்கள்..

  ReplyDelete
 7. வணக்கம் கிரேஸ்...!
  வலை வீசுதலும் வித்தியாசமாக அருமையே ! பாடலும் அருமை...!
  ஆசிரியப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
  என்னை அறிமுகம் செய்து வைத்ததமைக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.....!
  அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.....! உரித்தாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் இனியா. உங்கள் கருத்துரைக்கு நன்றி..

   Delete
 8. கலக்கல் கிரேஸ். வலை வீசம்மா வலை பாடலும், பதிவுகளும் அருமை... தொடருங்கள் :)

  ReplyDelete
 9. புதிய அறிமுகங்கள் உள்ளனவா என்று பார்த்து விட்டு வருகிறேன்... அதுவரை இன்றைய பகிர்வை வாசிக்க :

  வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமுடைய அனைவருக்கும், இன்றைய பதிவர்களுக்கும் சிலது உதவும் எனும் எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்...

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாகப் பார்க்கிறேன்..நன்றி.

   Delete
 10. அறிமுகங்களை சென்று பார்த்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... இந்த wordpress -ல் இருப்பவர்களை இணைக்க முடியவில்லையே எப்படின்னு யாராவது சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. சமீபத்திய google-ன் மாற்றத்தால் wordpress-ல் இணைப்பு (link) கொடுக்க முடியாது...

   அதே போல் கருத்துரையும் 1.Wordpress, 2. Facebook, 3. Twitter, 4. Google plus இதன் மூலம் தான் இட முடியும்...

   Wordpress-ல் கருத்துரை இடுவதற்கு, அதன் கருத்துரைப் பெட்டிற்கு கீழ் Fill in your details below or click an icon to log in:- ல் Google plus தேர்வு செய்து கருத்துரை இடவும்... நன்றி...

   Delete
 11. புதுத்தமிழ் தளம் எனக்கு புதிய தளம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  வலை வீசம்மா வலை வீசு அருமை... இன்று வலைச்சரம் வந்தவுடன் தலைப்பு தான் கவர்ந்தது... ஏனென்றால் இன்றைய எனது பதிவிற்கு வைத்த நினைத்த தலைப்புகளில் ஒன்று...!

  மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....இது போதுமே.மகிழ்ச்சி :)

   ஓ அப்படியா..நீங்கள் வைப்பதற்கு முன் நான் சுட்டுவிட்டேனா?
   மிக்க நன்றி திரு.தனபாலன்.

   Delete
 12. பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. வலை வீசம்மா வலை வீசு!..
  என்று வலை வீசியதில் - அகப்பட்ட அனைத்தும் அருமை!..
  தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 14. வணக்கம்


  கடலோரம் வலை வீசி அள்ளி எடுத்த
  முத்துக்களின் அணிவகுப்பு நன்றாக உள்ளது.....வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
 15. வணக்கம் சகோதரி கிரேஸ்,
  என் வலைதளத்தையும் அறிமுகம் செய்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சகோதரி! ஆசையாய் இவ்விஷயத்தை பகிர்ந்த தனபாலன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
  அன்புடன்,
  மஹாலக்ஷ்மிவிஜயன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி, மகிழ்ச்சி. தொடருங்கள்!

   Delete
 16. பாடலுடன் அறிமுகங்கள் அசத்தல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. அறிமுகத்துக்கு மகிழ்வும் நன்றியும் சகோ... இதர வலையாளர்களை கண்டு கொண்டு வருகிறேன்.
  அறிவித்த பாலாண்ணாவுக்கும் நன்றி!

  ReplyDelete
 18. ஊக்கத்திற்கு நன்றி கிரேஸ்!

  ReplyDelete
 19. அறிமுகங்கள் நன்று...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சிறப்பான பதிவுகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 21. வலையில் புதுப் புது தளங்கள் கிடைத்ததுப் போல!!!

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா..உங்களுக்குப் புதுசா..மகிழ்ச்சி..
   நன்றி ராஜி.

   Delete
 22. என் பதிவை அறிமுகபடுத்தி என்னை ஊக்கபடுத்திய உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 23. அருமையான அறிமுகங்கள்! நேரமில்லை! நாளை சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்..கண்டிப்பாகப் பாருங்கள்.

   Delete
 24. நல்லதொரு தொகுப்பு... அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

   Delete
 25. சிறப்பான அறிமுகங்கள் உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் என்
  வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோ .

  ReplyDelete
 26. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. வலை வீசம்மா வலை வீசு.. ரொம்ப அழகா பாடலாவே சொல்லிட்டீங்க கிரேஸ்..

  அறிமுகங்கள் அத்தனைப்பேருக்கும் அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது