07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Monday, December 17, 2012

வலைச்சரத்தில் முதல் நாள்-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சரத்தில் முதல் நாள்! -காரஞ்சன்(சேஷ்)
 
இந்த உலகினில்  என்னை அறிமுகப் படுத்திய என் தாய், தந்தை, மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் முதல் வணக்கம்! வலைச்சர அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!
 
 
17-12-2012 முதல் 23-12-20012 வரை  வலைச்சர ஆசிரியர் பணிக்கு என்னைஅழைத்து இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரத்தில் நானும் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடத்தில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயன்ற வரையில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறேன். 

பணிச்சுமையும், பிணிகளும் வாட்டிடும் இன்றைய உலகில், மன அமைதி விழையும் தருணங்களில், சிந்தனைகளுக்கு ஒரு வடிகாலாக ஒரு வலைப்பூ எனக்கென உருவாக்க விழைந்ததில், உருவானது தான் “காரஞ்சன் சிந்தனைகள்”.  இந்த வலைப்பூ தொடங்க என்னைத் தூண்டிய என்னுடைய மாமனார் திரு, இ.சே.இராமன் அவர்களுக்கு இத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஒரு வலைப்பூ ஆரம்பிக்கத் தூண்டிய திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எழுத ஆரம்பித்து  ஓராண்டுகள் ஓடிவிட்டதை எண்ணிப்பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. அன்றாடப் பயணத்தில் நான் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், சுற்றி நடக்கும் நிகழ்வுகள், நான் கண்டு இரசித்த புகைப்படங்கள் இவையே என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.  இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளேன்.. இந்த வலைப்பூ மூலம் கிடைத்த அறுபதுக்கும், மேலான அருமையான‌ தோழமைகள், அவர்களின் அன்பான பின்னூட்டங்கள், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கும் செல்வங்கள்! .விரும்பித் தொடரும் நல்லுளங்களின் கருத்துரைகள் எனக்கு ஊக்கமளிப்பவையாக அமைகின்றன.. என்னுடைய படைப்புகள் யாரையும் புண்படுத்தாவண்ணம் ஏதாவது ஒரு பயனுள்ள கருத்தைச் சொல்லக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறேன்.

 இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவுடன் எட்டிப் பார்த்து பிரமித்துப் போனேன். எத்தனை விதமான படைப்பாளிகள்! பல வண்ணத்தில் படைப்புகள்! இந்த வண்ணங்களின் கூட்டணியில் என் எண்ணங்களுக்கும் ஒரு இடம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். "பேனா முனை போர்வாளைவிட வலிமையானது" என்பார்கள்! வன்முறைகளும் கலாச்சார சீரழிவுகளும் பெருகி வரும் இந்நாளில், பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சகற்றும் நற்பணியினை நாம் செய்யத் துணிவோம்,துவங்குவோம்  என வேண்டுகோள் விடுக்கிறேன்!
என்னுடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு!. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
 
1) உழவின் பெருமையை , இன்றைய நிலையை உணர்த்தும் கவிதைகள்!

1. கனவு மெய்ப்பட வேண்டும்!
2. வாழவை!
3. நம்பிக்கைக் கீற்று!

2)  காதல்

1. நேச மலர்கள்
2. மீட்டிட வருவானோ?
3. தாகம்!
4. இமைகள்!
5. இதயத்தில் நீ
6. தனிமை!

3)  விழிப்புணர்வு/சமுதாயம்/தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

1) விழுந்ததும் எழுந்திரு!
2) கா!கா!கா!
3) கடைக்கண்பார்வை!
4) வேர்களை மறவா விழுதுகள்!
5) கழிவிரக்கம்!
6) முதியோர் இல்லம்!
7) நாளை நமதே!
8) வெற்றிப்பாதை!
9) எது ஊனம்?
10) புற்றுநோயைப் புரையோடவிடலாமா?

4)ஆன்மிகம்

1.  நலம் தருவாய் நரசிம்மா!

5) இயற்கைச் சீற்றம்!

1)  ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
2)  "தானே" உன்னால்தானே?
3)  பேய்மழை

படித்து மகிழுங்கள்!
தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்!
தொடர்ந்து இந்த வாரத்தில் என் பணி சிறக்க ஆதரவு தாருங்கள்!
மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி !
 நாளை சந்திப்போம்!


என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)
 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது