07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Monday, September 26, 2011

ஊருக்கு நல்லது சொல்ல...

என்னைத் தெரியுமா?
என்னை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்கலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பணிக்குச் செல்லும் பெண்மணி. மனைவியாக, இரண்டு மகன்களுக்கு அன்னையாக, வயதான ஒரு தாய்க்கு மகளாக, புகுந்த வீட்டுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணாக, இதற்கு மேல் நேர்மையான, உண்மையான உழைக்கும் பெண்மணியாக ஒரு சராசரி குடும்பத் தலைவி. சுருக்கமாக, உங்களைப் போல ஒருத்தி!

மகாகவி பாரதியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களை மிகவும் ரசிப்பேன். அடுத்து எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளை முடிந்தவரை திருப்பித் திருப்பி சுவாசித்து வாசித்திருக்கிறேன். எழுத்தார்வத்துக்கு இவர்கள் காரணம். மகாகவிக்கு சமர்ப்பணமாக எனக்குப் பிடித்த அவர் பாடல் முதலில்:
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்

எனக்கு இங்கே எழுத வாய்ப்பளித்த வலைச்சரக் குழுவினருக்கு நன்றி!

சென்ற வாரம் ஆசிரியப் பணியைச் சீரிய வகையில் செய்திட்ட திரு மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! குவிக்கும் கவிதைக் குயிலாகச் சிறந்து பணியாற்றினார்!

இனி, என் வலைப்பூ பற்றி -

எனக்கு வலைப்பூவை அறிமுகம் செய்து, நான் எழுத ஆரம்பித்தது எப்படி என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இதில் என் பெயர்க் காரணமும் இருக்கும். சில சமயம், ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?, மொக்கை -ஆராய்ச்சி என்று நகைச்சுவையாக எழுதுவேன். சில சமயம், உயில் எழுதுவதின் முக்கியம், தற்கொலையைத் தவிர்ப்போம் போன்ற பதிவுகளும் இடுவேன். காரட் கீர், புளிமிளகாய் ஊறுகாய் போன்ற சமையல் குறிப்புகளும் உண்டு. பல்வேறு சமயங்களில் என்னைப் பாதித்த விஷயங்களைத் தொகு(டு)த்து கதம்பம் என்றும் பதிவிடுகிறேன், (கொடுத்திருக்கும் லிங்க் சமீபத்தியது)

சிறுகதைகளுக்கு :தண்ணி, , 50-50, மொழிமாற்றக் கதை... கவிதையிலும் கைகளைச் சுட்டுக் கொண்டிருக்கிறேன் மூன்று வார்த்தைகள், சமமான கல்வி { ;-( }; என் முதல் சிறுகதை அனுபவத்தையும் பதிவிட்டிருக்கிறேன்! லாஜிக்கா, மொக்கையா என்றே தெரியாமல் சில சமயம் கேள்விகள் கேட்பதுமுண்டு! எனது பதிவுகளில் அதிகம் படிக்கப்பட்டது இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும் மற்றும் சொந்த சரக்கில்லையும் தாம்!

என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் எழுத வைத்த தோழமை உள்ளங்களுக்கு நன்றியாக 'தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?' சக பதிவர்களுக்காக நகைச்சுவையாக ச்சும்மா- காமெடிக்கு!

சுய புராணம் எனக்கு பழக்கமில்லை (?!!) எனவே அறிமுகம் போதும் என நினைக்கிறேன். ஏழு நாட்கள் உங்களுடன் என் பார்வையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தவர்களுக்கு மறுபடியும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை வரவேற்று வாழ்த்தளித்த உள்ளங்களுக்கும் நன்றி!

ஏழு என்றவுடன் என்ன ஞாபகம் வருகிறது? என்னைப் போன்ற ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு அது ஒரு மாய எண். ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் உடனே ஞாபகத்துக்கு வந்தது, வானவில் தான். என் பார்வையை வலையுலகில் வலைச்சர ப்ரிசம் (prism) மூலம் பார்ப்பதில் வானவில்லாகப் பதிவர்கள் தெரிகிறார்கள். வானவில்லின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டாம்! உதாரணத்துக்கு வயலட் நிறம் மனித நேயத்தையும் தெய்வீகத் தன்மையையும் காட்டுகிறதாம்!
என் பார்வையில் வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களை நாளை முதல் காண்போம்! 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது