07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜீவ்ஸ். Show all posts
Showing posts with label ஜீவ்ஸ். Show all posts

Thursday, April 10, 2008

04 . வலைச்சரம் - என்று தணியும் இந்த .......!

இன்னைக்கு காலைல பி.எஸ்.என்.எல். ஆப்பிஸ் போனேங்க ... செம கடுப்புல திரும்பி வந்திருக்கேன்.
****
போன் வேலை செய்யலை. அந்த கம்ப்ளைன்ட் எடுத்துக்க அவங்களுக்கு தேவைப்பட்ட நேரம் ஏறக்குறைய ஒரு மணி. அடுத்தது வயர்லெஸ் மோடம் வேலை செய்யல ..
****
" சார் மோடம் அடிக்கடி ஹங் ஆகுது "
" என் அப்படி ஆகுது ( அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்த பதில் )"
" மோடம் ரொம்ப சூடாகுது அப்புறம் வேலை செய்ய மாட்டேங்குது "
" ஓ " ( அப்புறம் பத்து நிமிஷம் கழிஞ்சது )
" ஏன் நின்னுட்டு இருக்கிங்க உக்காருங்க " ( அப்ப்பாடா -- இதுக்குள்ளார முப்பத்தி அஞ்சு நிமிஷம் முடிஞ்சு போச்சு ).

" என்ன மாதிரி மோடம் "

இப்படியாக எல்லா விவரங்களும் தந்து முடித்த போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகி விட்டிருந்தது.
*****
"மேடம் என்னோட போன் வேற இடத்துக்கு மாத்தனும் அப்ப்ளிகேசன் தாங்க "
" ஓ தீந்து போச்சு .. எதிர்ல ஒரு ஜெராக்ஸ் கடை இருக்கும் அவங்க கிட்ட கேளுங்க கிடைக்கும்"
அப்ப்ளிகேசன் ( அஞ்சு ரூபாய் ) கொண்டு வந்து எல்லாம் நிரப்பியா பின்னாடி
" உங்க இடத்துக்கு பக்கத்துல யாருடைய வீட்டில இல்ல கடைல பி.எஸ்.ஏன்.எல் நம்பர் இருக்கும் இல்லையா அதை இங்க குறிப்பிடுங்க"
"அது ஆப்ஷனல் இல்லையா மேடம் "
" அது இல்லாம எதுவும் செய்ய முடியாது சாரிங்க "
மறுபடி வீட்டுக்கு போயி புது வீட்டு அட்ரஸ் எடுத்துக்கிட்டு அங்க போயி பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கேட்டு மறுபடி வந்த பின்னாடி

"என்ன சார் இப்படி அவசரப் பட்டா எப்படி பொறுங்க " ( காலைல பத்து மணிக்கு போனது.. இதை இவங்க சொன்னப்ப பதினொரு மணி நாற்பத்தெட்டு நிமிடங்கள் )

" இதை இங்க பண்ண முடியாது. இது வேற சர்க்கிள் ல வருது அங்கப் போயி குடுத்துட்டு வாங்க "

" $%$%^%$&%^&%^&"
*********************

நம் இந்திய அரசு அலுவலகங்கள் என்று மாறும் ?

சர்வேசன் பதிவு ஒன்னுல நம்ம காவல் துறை தங்கங்களின் "திறமை" யை வெளிச்சம் போட்டு காமிச்சிருக்கார் தருமி ஐயா.

குறைகளைக் கண்டு வெம்பி ஒதுங்காமல் நாமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்ன செய்தேன் ? துறையின் பல இடத்துக்கு தொலைபேசியில் அழைத்து புகார் அளித்த பின் இதோ இந்தப் பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் நேரத்தில் பழுதுகள் சரி செய்யப்பட்டுவிட்டன. இட மாற்றம் இன்னும் சற்று கால தாமதமாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். which is ஓகே & acceptable.

மேலும்
இவர்கள் அனைவரின் கூட்டணியில் http://fixmyindia.blogspot.com/ என்ற வலைத்தளம் இயங்கு கிறது. நம் குறைகளை உரிய இடத்தில் புகார் செய்ய இவர்களின் உதவியை நாடலாம்.
தருமி அவர்களின் முயற்சிகள் சில.

முதல் முயற்சி இங்க பாருங்க ..
இரண்டாம் முயற்சி இங்கே.
மூன்றாம் முயற்சி

சிலவற்றிற்கு பதில் கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

ஆரம்ப்பித்து வைத்த இது இந்தியாவுல தான் நம்புங்க! என்ற பதிவிற்கு நாம் ப்ளாக் யூனியனுக்கு நன்றி சொல்வோம்
****************


உங்களுக்கு இது போன்ற இடர்கள் ஏற்பட்டதா ? என்ன முயற்சித்தீர்கள் எப்படி எதிர்கொண்டிர்கள் என்ன பலன் விளைந்தது.. ?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.


மேலும் வாசிக்க...

Wednesday, April 9, 2008

03 - வலைச்சரம் - சிரிப்பு வருது சிரிப்பு வருது!!


வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும் ?

அட உண்மை தாங்க மனம் விட்டு வாய்விட்டு சிரிக்கறதால நோய்கள் குணமாகுமாங்க.


குறைந்த இரத்த அழுத்தம் சரியாகுதல், நோய் எதிர்ப்பு சக்தி அப்படி இப்படின்னு நிறைய சொல்றாங்க இங்க. உண்மையச் சொல்லனும்னா சிரிப்புங்கறது ஒரு தொத்து வியாதிங்க. வேணும்னா பாருங்களேன் நீங்க காலைல மகிழ்ச்சியா சிரிச்சுட்டே உங்க மனைவி/கணவன்/நண்பர், எதிர்படும் புதியவர் என யாரையாச்சும் பாருங்க. உடனே உங்கக் கிட்ட இருந்து சிரிப்பு அவங்களுக்கும் பரவிடும். அவங்க கிட்ட இருந்து இன்னொருத்தர் இப்படி பரவிட்டே போய்டும்


சிரிப்புல பலவகை இருக்குன்னு கலைவானர் பாட்டுல கேட்டு இருப்பீங்க. சிரிக்க வைக்கப் பலவழிகளும் உண்டுங்க. அதுல சில நேரம் லேசா எரிச்சல் வந்தாலும், சில நேரம் பல்பு வாங்கினாலும் குறைஞ்ச பட்ச புன்னகைக்கு வழி வகுக்கும் கடி ஜோக்ஸ். அதுவும் இந்த மொபைல் வந்தாலும் வந்தது எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் ரொம்பவே படுத்தல். இதுக்கு பேர் போன நம்ம யோசிப்பவர் பதிவு இங்கே.

உதாரணம் பாருங்க !!

***********
டீச்சர் : ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?

பையன் : நாலு

டீச்சர் : மொத்தமாக!

பையன் : ஐந்து

டீச்சர் : என்னது?

பையன் : நாலு

டீச்சர் : அறிவு கெட்டவனே!

பையன் : எட்டு

டீச்சர் : நிப்பாட்டு!!

பையன் : ஐந்து

டீச்சர் : ?!?!
**************
இவரோட அண்ணே ஜோக்ஸ்கள படிச்சுத் தான் பாருங்களேன் ? மினிமம் புன்னகைக்கு கேரண்டி உண்டு.

சிரிப்புன்னா நம்ம கைப்புள்ள நினைவுக்கு வராம இருக்குங்களா யாருக்காச்சும் ? அதுவும் அவரின் உலகப் புகழ்பெற்ற சூரியப் புகைப்படம்

இந்த சரித்திரப் புகழ்பெற்ற புகைப்படம் எடுக்கப் பட்ட வரலாறை மேலே குறிப்பிட சுட்டியில் சென்று படியுங்கள்.

இவர் எழுதிய தடிப்பசங்க தொடரும் நகைச்சுவைக்கு உத்தரவாதமான ஒன்று தான். பொதுவாகவே இவரு எழுதும் எல்லாமும் மிதமான அல்லது சற்றே அதிக நகைச்சுவையுடன் கூடியிருக்கும் எழுத்துக்களே.

வருத்தப் படாத வாலிபச் சங்கத்துல இவரு தானுங்க தல. அடிக்கடி ஆளுங்களை கூட்டியாந்து அவங்கள வச்சு ஆப்பு வாங்கறதுல பெரிய ஆளு.

என்னதான் சொல்லுங்க. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு
ரொம்ப நல்ல்ல்ல்ல்லவரு!

இப்படி பேசிட்டே ஹாஸ்ய ரசம் எழுதும் கோமாவை மறந்துட முடியுமா என்ன ? பத்திரிகைக்கு எல்லாம் எழுதிருக்காங்க.

அய்யய்யோ கண்மனி டீச்சர் உங்களோட கும்மி பதிவும், பாப்பா சங்கப்பதிவும் மறந்துட இருந்தேன்.

அபியப்பா பத்தியும் அவரோட குசும்புகளையும் அவரோட வாக்குத் தவறாத நேர்மையயும் அவரோடப் பதிவுல நீங்களே படிச்சுக்கோங்க. ஹ்ம்ம்... அபிஅம்மா எப்படித் தான் சமாளிக்கறாங்களோ ?

சரித்திரப் புகழ் படம் தவிர்த்து மேலே இருக்கும் அனைத்துப் படங்களும் நான் எடுத்தவையே. அப்படியே நான் முயற்சித்த சில நகைச்சுவையையும் படித்துப் பாருங்க. சற்றே பெரிய சிறுகதை ஷியாமளி அத்தை

நாளைக்கு என்ன எழுதலாம்னு கொஞ்சம் யோசனை சொல்லுங்க மக்கா!!

அதுவரை டாட்டா


மேலும் வாசிக்க...

Tuesday, April 8, 2008

02 - வலைச்சரம் - இசையால் உருகாத இதயமெது?

இசை கேட்டால் புவியே அசைந்தாடுமாம். இசையால் உருகாத இதயமே இல்லையாம். அது உண்மை தானுங்களே!

சின்ன வயசுல ரேடியோவில " மிலே சுரு" ஆரம்பிக்கும் மதியம் 12 ன்னு நினைக்கிறேன். அதைக் கேட்டுக்கிட்டே பின்னாடி கிழிஞ்ச டவுசரை ( லக்கி கிழிச்சது இல்லைங்க - நிஜம்மாவே கிழிஞ்ச ) பெரிய சட்டைய இழுத்து விட்டு மறைச்சுக்கிட்டு சுடும் தார் சாலையில வெறும் காலால பள்ளிக் கூடத்துக்கு ஓடிய சுகம் இன்னைக்கு எத்தனைப் பேருக்கு கிடைக்கும் சொல்லுங்க.

திருச்சி வானொலி, இலங்கை வானொலி, விவித பாரதி, சென்னை வானொலி அப்படின்னு வளந்தவங்களுக்குத் தான் தெரியும் அதோட அருமை.
எனக்கு ரொம்ப பிடிச்சது "நேயர் விருப்பம் " மற்றும் தேன் கிண்ணம்.

" இந்தப் பாடலை விரும்பிக் கேட்டவர் ****, படம் **** பாடல் " **** " அப்படின்னு வரும். ( நம்ம பேரு ரேடியோவில சொல்லிட்டாங்கடோய்னு சவுண்டு விட்டவங்க எல்லாம் ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க இங்க )
கண்ணதாசனையே ஒருத்தர் " நீங்க பாடல் கண்ணதாசன் " தானே அப்படின்னு கேக்க, அட இது கவிஞர் கண்ணதாசனை விட நல்லாருக்கேன்னு சொன்னாராம். அவ்வளவு தாக்கம் இருந்தது மக்களிடையே.

இன்னைக்கு என்னதான் நம்ம கிட்ட பல பாடல்கள் கணினியிலோ அல்லது மற்ற பாட்டு கேட்கும் உபகரணத்தில் இருந்தாலும், நாம் கேட்டு அந்தப் பாடல் ஒலிபரப்பப் படும் போது கிடைக்கும் சுகமே தனி தாங்க.


அந்த வகையில நமக்கு வலைப்பதிவுல மத்தவங்க கேக்கற பாட்டு போடுற கானா பிரபாவோட றேடியோஸ்பதியும் கூட்டு வலைப்பதிவான தேன்கிண்ணமும் ரொம்ப பிடித்தமான ஒண்ணு.

றேடியோஸ்பதி பத்திச் சொல்லனும்னா ரொம்பவும் அழகான, அபூர்வமானப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து போடுவதாகட்டும், பாடல்கள் பற்றி எந்தக் கேள்வி இருந்தாலும் அதுக்கு சரியான பதில் தருவதாகட்டும், கானா பிரபா இசையிலே வாழுகிறார். தற்போது வாரம் ஒரு சிறப்பு நேயர் பகுதியை ஆரம்பித்து வைத்த போது என்னுடைய சிறப்பு விருப்பம் கேட்டு போட்ட பாடல்கள் இங்கே.

பாடல்கள் பற்றிப் பேசும் போது அபூர்வ வகைப் பாடல்கள் மற்றும் மறக்கப் பட்ட பாடகர்களின் பாடல்கள் என பொறாமைப் படும் அளவிற்கு தன்னுடைய பட்டியலை வைத்திருக்கும் புது மாப்பிள்ளை மரவண்டு ( ஹைக்கூ கணேஷ்) கணினியை அப்படியே அபேஸ் செய்ய ஆசை எனக்கு. பாடல்களோடு நிறைய விஷயங்களை அள்ளித் தருவதில் பெரிய கில்லாடி. மரவண்டு கணேஷ். கிருஷ்ணசந்தர் பாடல்கள் சிலது மட்டும் கேட்டிருக்கேன்.அதேப் போல யேசுதாஸ் பாடல்களின் பட்டியலை பாருங்க. இதுல எத்தனைப் பாடல்கள் நீங்க கேட்டிருக்கீங்க ?. மரவண்டு தன் பதிவில் கேட்டிருக்கும் கேள்வியை நானும் இளையராஜாவைப் பார்த்தால் கேட்க ஆசை. ஏன் தீபன் சக்கரவர்த்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஜெயச்சந்திரன் பாடல்கள் மட்டும் முன்னூறுக்கும் மேலாம். இப்ப சொல்லுங்க... அந்த கணினியை அப்படியே லவட்டிடலாம் தானே ?

ஆனாலும் சந்திரவதனா அளவுக்கு இல்லைன்னு சொல்லனும். பாட்டு போடறது மட்டும் இல்லாம ஒவ்வொரு பாட்டையும் வரிகளோட போடறதுக்காக அவங்களுக்கு ஒரு ஓ போட்டுடலாம் இங்க. அப்படியே உங்களுக்கு இசையரசி பி.சுசீலாவிடம் ஏதேனும் கேள்வி இருக்குங்களா .. இங்க வாங்க. ஒரு குழுவே உங்களுடைய கேள்விகளை அவங்களுக்கு அனுப்பி பதில் பெற்றுத் தரக் காத்திருக்கு.

உங்களுக்கு என்னப் பாட்டு எந்த ராகம்னு ஒரு பட்டியல் போட்டு புத்தகம் போட்டார் சிமுலேஷன். மோகன ராகத்துல எத்தனைப் பாட்டுனு இங்க வந்து பாருங்க. இவரோடப் பதிவு பெரும்பாலும் இசையைப் பற்றியே இருப்பது சிறப்பு.

சினிமா இசையைப் பற்றி சொல்லிட்டு பக்தியை விட்டுடலமா ? இதோ கண்ணன் பாடல்கள், முருகன் பாடல்கள் மற்றும் அம்மன் பாடல்கள் போற்றும் பதிவுகள்.



சரி இப்பச் சொல்லுங்க. இசையால் உருகாத இதயமெது?


தொடுக்க மறந்த இரு பூக்கள். சுட்டிகள் தந்துதவிய கானாபிரபா மற்றும் குமரனுக்கு என் நன்றி.

இசையின்பம் - ரொம்பவே ஆழமா அலசி ஆராய்ஞ்சு தொவச்சு காயப் போட்டு வச்சிருப்பாங்க. நம் ஆண்மீகப் பதிவரு இருக்கிற குழுமப் பதிவு.
சிவமுருகனோடது கீதம் சங்கீதம். இப்ப என்ன செய்யறார் இவர்? மறுபடி வாங்க சிவமுருகன்!
மேலும் வாசிக்க...

Monday, April 7, 2008

01 - வலைச்சரம் - படிக்காதவன் எழுதும் வலைச்சரம்

வாங்க மக்கா வாங்க. சும்மா சிவனேன்னு வேலைய செஞ்சுட்டு, குசும்ப கல்யாண கும்மி அடிச்சிட்டு இருந்த என்னைய வலைச்சரம் எழுத சொல்லிட்டாங்க முத்தக்கா!. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்த்துடுச்சி தெரியுமா?

பின்ன என்னங்க.. நான் பதிவெழுதறதே பல வருஷங்களுக்கு ஒரு முறை தான். ஆனா என்னையும் நம்பி வலைச்சரம் தொடுக்கச் சொன்ன முத்தக்கா விற்கு என் நன்றிகள் பல.

முதல் பதிவு அறிமுகப் பதிவாமே? அதான் என்னைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச வரையில் சொல்லி இருக்கேன்.


வலைப்பதிவர் பெயர்:

ஜீவா (ஜீவ்ஸ்) என்கிற ஐயப்பன்

வலைப்பூக்களின் பெயர் :

எண்ணங்களும் எழுத்துகளும் ,
இயன்றவரையிலும் இனியதமிழில் ,
எண்ணங்கள் இனியவை ,
தமிழில் புகைப்படக் கலை மற்றும்
கடுவெளி


( அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு கருக்கருவான்னு பழமொழி நினைவுக்கு வந்தா என்னங்க செய்யறது )

தொடரமுடியாமல் அப்படியே நிற்கும் பதிவுகளை முக்கியமாக கடுவெளி மற்றும் எண்ணங்கள் இனியவை ( வெண்பா பதிவு ) போன்றவைகளைத் தொடரத்தான் ஆசை. ஆனால் அலுவலகப் பணி மற்றும் என் குழந்தையுடன் செலவிடும் நேரத்துடன் புகைப்படக் கலை என்னுடைய முழு ஓய்வு நேரத்தையும் மெல்ல மெல்ல உள்வாங்கி தன்னுள் இழுத்துக் கொண்டது.


தமிழில் புகைப்படக் கலை பதிவு ஆரம்பித்தப் போது சற்று தயக்கமாகத் தான் இருந்தது. "ஆரம்பிங்க ஐயப்பன்" என்று தைரியம் தந்த செல்லாவுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்து பின் சீவீஆர், சர்வேசன், ஆனந்த் என்று பலரும் சேர்ந்து இதை இன்றைக்கு இந்த அளவு உயர்த்தியிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தனை வளர்ச்சிக்கு ஆசிரியக் குழு அனைவருக்கும், பங்கு பெற்ற நடுவர்களுக்கும், ஆர்வமாய் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் இதன் மூலம் என் நன்றியை புகைப் படக் குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.



வாழ்விடம் / ஊர் :

பிறந்தது வாழியூர் எனும் கிராமம். வேலூரில் இருந்து கிட்ட தட்ட 35 கிலோ மீட்டர் தொலைவு. பெங்களூர் என்னத் தத்தெடுத்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்களாகிவிட்து.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

நமக்கு நாமே.. தன் கையே தனக்குதவி என்று மிகவும் நம்பிக்கையாய் ஆரம்பித்தது.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

முதல் முதலில் பதிவெழுதி போட்டது 11/21/2003 .


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

தாளில் எழுதுவது எதையும் அவ்வப்போதே கிழித்துப் போடும் ஒரு பழக்கம் இருந்தது. சில சமயம் கிழித்துப் போடாதவற்றை எடுத்துப் படிக்கும் போது அட என்று தோன்றும் ( நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் :)) ) .. சரி எழுதியதை இணையத்தில் போட்டு வைக்கலாம் என்று ஆரம்பித்தது தான்.



எழுத ஆரம்பித்தது மன்றமையம்( மன்ற மையம் ). அப்புறம் மெதுவாக மரத்தடி மற்றும் ராயர் காபி கிளப், அகத்தியர் போன்ற யாஹூக் குழுமங்களில் சேர்ந்து அதிகம் எழுத ஆரம்பித்த அப்போது கல்யாணம் ஆகி இருக்கவில்லை.

பின்பு நமக்கென தனியாய் ஒரு இடம் இருந்தால் நல்லது என்று http://iyappan.net என்று ஒரு வலைதளம் ஆரம்பித்து அதை தொடர்ந்து பராமரிக்காமல் போனதால் அது போயே போச்சு. அவ்வளவு காசு கொடுத்து அவஸ்தை படுவானேன் என்று வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேன்.

எழுதியவை எல்லாம் கல்யாணத்துக்கு முன்பு. இப்போது அதிகம் எழுத முடியவில்லை. குழந்தை என்னும் இனியக் கவிதையின் இனிமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் எழுத வரவேண்டும்.

எனக்கு அதிகம் எழுத இடமளித்த மரத்தடி நிர்வாகிகளுக்கு என் நன்றிகள் பல. அப்போதெல்லாம் அடிக்கடி ஊக்கமளித்து எழுத வைத்த மதியக்காவிற்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சந்தித்த அனுபவங்கள்:

பற்பல நல்லனுபவங்களும் .. சற்றே வேறுமாதிரியான அனுபவங்களும் உண்டு..

" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ".

தீமைகளை விட நன்மைகள் அதிகம்


கிடைத்த நண்பர்கள்:

மிக அதிகம்.

கற்றவை:

எப்போ கற்றேன் ?? கற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் தான் :)

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ள மென்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்


(-- சரியான வரிகளைச் சொல்லி தவறை சுட்டிக் காட்டிய இராம.கி அவர்களுக்கு நன்றி)

இது தாங்க எனக்கு இணையத்தில் கிடைத்த எழுத்து சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை:
இயன்றவரையிலும் இனியதமிழில் எழுதவும் பேசவும் முயல்வது

என்னைப் பற்றிய முழுமையான குறிப்பு:

பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகம் என்றாலும் தற்சமயம் இருப்பது பெங்களூர். வேலை செய்வது யாஹூ என்கிற பன்னாட்டு நிறுவனத்தில். வயது முப்பத்திரண்டு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு.
மற்றபடி என்னைப் பற்றி சொல்ல அதிகமில்லை.

முதலில் எழுதிய கவிதை (???!!)

உண்டு உண்டு என்ற போதும்
இல்லை இல்லை என்ற போதும்
ஏதோ சக்தி இயக்குது நம்மை
அதுவே கடவுள் என்பதென் உண்மை

இன்றைக்கும் இந்த நிலைப்பாடு மாறவில்லை. பார்க்கலாம் பிற்காலம் எப்படி மாறுதல்களைத் தரப் போகிறதென்று


முதலில் எழுதிய கதை ஏகலைவன் .

அது சரி இப்ப வலைச்சரத்தில் என்ன செய்யப் போகிறேன் :
அதான் இன்னும் தெரியல. நைட்டு குப்புறப் படுத்துக்கிட்டு யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்.

சந்திக்கும் வரை..

- ஜீவ்ஸ்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது