07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 7, 2008

01 - வலைச்சரம் - படிக்காதவன் எழுதும் வலைச்சரம்

வாங்க மக்கா வாங்க. சும்மா சிவனேன்னு வேலைய செஞ்சுட்டு, குசும்ப கல்யாண கும்மி அடிச்சிட்டு இருந்த என்னைய வலைச்சரம் எழுத சொல்லிட்டாங்க முத்தக்கா!. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்த்துடுச்சி தெரியுமா?

பின்ன என்னங்க.. நான் பதிவெழுதறதே பல வருஷங்களுக்கு ஒரு முறை தான். ஆனா என்னையும் நம்பி வலைச்சரம் தொடுக்கச் சொன்ன முத்தக்கா விற்கு என் நன்றிகள் பல.

முதல் பதிவு அறிமுகப் பதிவாமே? அதான் என்னைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச வரையில் சொல்லி இருக்கேன்.


வலைப்பதிவர் பெயர்:

ஜீவா (ஜீவ்ஸ்) என்கிற ஐயப்பன்

வலைப்பூக்களின் பெயர் :

எண்ணங்களும் எழுத்துகளும் ,
இயன்றவரையிலும் இனியதமிழில் ,
எண்ணங்கள் இனியவை ,
தமிழில் புகைப்படக் கலை மற்றும்
கடுவெளி


( அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு கருக்கருவான்னு பழமொழி நினைவுக்கு வந்தா என்னங்க செய்யறது )

தொடரமுடியாமல் அப்படியே நிற்கும் பதிவுகளை முக்கியமாக கடுவெளி மற்றும் எண்ணங்கள் இனியவை ( வெண்பா பதிவு ) போன்றவைகளைத் தொடரத்தான் ஆசை. ஆனால் அலுவலகப் பணி மற்றும் என் குழந்தையுடன் செலவிடும் நேரத்துடன் புகைப்படக் கலை என்னுடைய முழு ஓய்வு நேரத்தையும் மெல்ல மெல்ல உள்வாங்கி தன்னுள் இழுத்துக் கொண்டது.


தமிழில் புகைப்படக் கலை பதிவு ஆரம்பித்தப் போது சற்று தயக்கமாகத் தான் இருந்தது. "ஆரம்பிங்க ஐயப்பன்" என்று தைரியம் தந்த செல்லாவுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்து பின் சீவீஆர், சர்வேசன், ஆனந்த் என்று பலரும் சேர்ந்து இதை இன்றைக்கு இந்த அளவு உயர்த்தியிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தனை வளர்ச்சிக்கு ஆசிரியக் குழு அனைவருக்கும், பங்கு பெற்ற நடுவர்களுக்கும், ஆர்வமாய் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் இதன் மூலம் என் நன்றியை புகைப் படக் குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்விடம் / ஊர் :

பிறந்தது வாழியூர் எனும் கிராமம். வேலூரில் இருந்து கிட்ட தட்ட 35 கிலோ மீட்டர் தொலைவு. பெங்களூர் என்னத் தத்தெடுத்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்களாகிவிட்து.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

நமக்கு நாமே.. தன் கையே தனக்குதவி என்று மிகவும் நம்பிக்கையாய் ஆரம்பித்தது.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

முதல் முதலில் பதிவெழுதி போட்டது 11/21/2003 .


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

தாளில் எழுதுவது எதையும் அவ்வப்போதே கிழித்துப் போடும் ஒரு பழக்கம் இருந்தது. சில சமயம் கிழித்துப் போடாதவற்றை எடுத்துப் படிக்கும் போது அட என்று தோன்றும் ( நெனப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் :)) ) .. சரி எழுதியதை இணையத்தில் போட்டு வைக்கலாம் என்று ஆரம்பித்தது தான்.எழுத ஆரம்பித்தது மன்றமையம்( மன்ற மையம் ). அப்புறம் மெதுவாக மரத்தடி மற்றும் ராயர் காபி கிளப், அகத்தியர் போன்ற யாஹூக் குழுமங்களில் சேர்ந்து அதிகம் எழுத ஆரம்பித்த அப்போது கல்யாணம் ஆகி இருக்கவில்லை.

பின்பு நமக்கென தனியாய் ஒரு இடம் இருந்தால் நல்லது என்று http://iyappan.net என்று ஒரு வலைதளம் ஆரம்பித்து அதை தொடர்ந்து பராமரிக்காமல் போனதால் அது போயே போச்சு. அவ்வளவு காசு கொடுத்து அவஸ்தை படுவானேன் என்று வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேன்.

எழுதியவை எல்லாம் கல்யாணத்துக்கு முன்பு. இப்போது அதிகம் எழுத முடியவில்லை. குழந்தை என்னும் இனியக் கவிதையின் இனிமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் எழுத வரவேண்டும்.

எனக்கு அதிகம் எழுத இடமளித்த மரத்தடி நிர்வாகிகளுக்கு என் நன்றிகள் பல. அப்போதெல்லாம் அடிக்கடி ஊக்கமளித்து எழுத வைத்த மதியக்காவிற்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சந்தித்த அனுபவங்கள்:

பற்பல நல்லனுபவங்களும் .. சற்றே வேறுமாதிரியான அனுபவங்களும் உண்டு..

" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ".

தீமைகளை விட நன்மைகள் அதிகம்


கிடைத்த நண்பர்கள்:

மிக அதிகம்.

கற்றவை:

எப்போ கற்றேன் ?? கற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் தான் :)

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ள மென்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்


(-- சரியான வரிகளைச் சொல்லி தவறை சுட்டிக் காட்டிய இராம.கி அவர்களுக்கு நன்றி)

இது தாங்க எனக்கு இணையத்தில் கிடைத்த எழுத்து சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை:
இயன்றவரையிலும் இனியதமிழில் எழுதவும் பேசவும் முயல்வது

என்னைப் பற்றிய முழுமையான குறிப்பு:

பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகம் என்றாலும் தற்சமயம் இருப்பது பெங்களூர். வேலை செய்வது யாஹூ என்கிற பன்னாட்டு நிறுவனத்தில். வயது முப்பத்திரண்டு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு.
மற்றபடி என்னைப் பற்றி சொல்ல அதிகமில்லை.

முதலில் எழுதிய கவிதை (???!!)

உண்டு உண்டு என்ற போதும்
இல்லை இல்லை என்ற போதும்
ஏதோ சக்தி இயக்குது நம்மை
அதுவே கடவுள் என்பதென் உண்மை

இன்றைக்கும் இந்த நிலைப்பாடு மாறவில்லை. பார்க்கலாம் பிற்காலம் எப்படி மாறுதல்களைத் தரப் போகிறதென்று


முதலில் எழுதிய கதை ஏகலைவன் .

அது சரி இப்ப வலைச்சரத்தில் என்ன செய்யப் போகிறேன் :
அதான் இன்னும் தெரியல. நைட்டு குப்புறப் படுத்துக்கிட்டு யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்.

சந்திக்கும் வரை..

- ஜீவ்ஸ்

55 comments:

 1. வநதேன்!

  வாழ்த்து சொல்ல :))

  ReplyDelete
 2. இன்னொரு முறை

  வந்தேன்


  வாழ்த்து சொல்ல


  (”ந்”ல புள்ளி விட்டுப்போச்சுப்பா சாரி...!)

  ReplyDelete
 3. ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..

  உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..

  ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..


  (ஆட்டம் போடுறேன்....)

  ReplyDelete
 4. //அறுக்க மாட்டாதவனுக்கு அம்பத்தெட்டு கருக்கருவான்னு பழமொழி நினைவுக்கு வந்தா என்னங்க செய்யறது /

  அட! இந்த நினைவுக்கு வர்ற மேட்டர கூட நீங்க தனியா பதிவா போட்டு பிளாக் ரெஃப்ரஷ் பண்ணலாமே...!!

  ReplyDelete
 5. என்னாத்தை எழுத என்றுக் கேட்டு விட்டு, அருமையான அறிமுகமா வந்திருக்கு,..

  ReplyDelete
 6. சுட்டிகள் எல்லாம் அமுக்கிப் படிச்சா, அடுத்த வருடம் தான் பின்னுட்டம் போட முடியும்..

  ReplyDelete
 7. அதனாலே..சுட்டிகள் படிக்காம பின்னுட்டம்..

  ReplyDelete
 8. பிட்டுக்கு மண் சுமந்தவர் நீர் தானா..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. கடவுளாய் நான் இருந்த போது!!!
  Aug 30 2005
  கபீர் தாசர் சிந்தனை (மொழிபெயர்ப்புக் கவிதை)
  Dec 17 2004
  கோலம் - (6)
  Nov 23 2004
  கோலம் - (5)
  Nov 6 2004
  சமையல் குறிப்பு
  Aug 27 2004
  வாய்மை எனப்படுவது யாதெனின்...
  Aug 27 2004
  பிருந்தாவன்
  Aug 27 2004
  வெற்றிடம்
  Aug 13 2004
  கண்ணாமூச்சி
  Aug 13 2004
  தேவதையும் சாத்தானும்
  Aug 13 2004
  நினைவுகள்
  Aug 13 2004
  தடங்கள்
  Aug 13 2004
  அத்வைதம்
  Aug 13 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (3)
  Jun 8 2004
  கோலம் - (4)
  Jun 4 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (2)
  Jun 3 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (1)
  Jun 3 2004
  சமுத்திர குமாரி
  May 21 2004
  ஏகலைவன்
  May 17 2004
  ரகசியமாய்.... ஒரு ரகசியம்
  May 12 2004
  குட்டிக் கதைகள்
  May 2 2004
  சீதையின் குரல்
  Apr 22 2004
  குருக்ஷேத்திரம்
  Apr 14 2004
  கோலம் - (3)
  Apr 12 2004
  கோலம் - (2)
  Apr 7 2004
  கோலம் - (1)
  Apr 7 2004
  ஜென்- கேள்வி/பதில்கள்
  Mar 29 2004
  வெண்பா முயற்சி - வெண்குழல்
  Mar 5 2004
  வெண்பா முயற்சி
  Feb 28 2004
  வாழ்க்கை
  Feb 27 2004
  உன்னைத் தேடி / என்னையா தேடி?
  Feb 27 2004
  உறவுகள்
  Feb 16 2004
  ஜென் கதைகள்: [11-]
  Feb 9 2004
  Tree TV channel - part (3)
  Feb 8 2004
  Tree TV channel - part (2)
  Feb 8 2004
  Tree TV channel - part (1)
  Feb 8 2004
  மரத்தடி கொண்டாட்டம்- அறிவிப்பு......
  Feb 8 2004
  மரத்தடியில் வில்லுப்பாட்டு - (1)
  Feb 7 2004
  காதலா?? காதலா!!
  Feb 7 2004
  பொங்கல்
  Jan 21 2004
  பொய்க்கூவா ஹைக்கூவா
  Jan 21 2004
  கவிதைகள்: சில நேரங்களில் சில மனிதர்கள்
  Jan 21 2004
  கண்டவர் விண்டிலர் / இயற்கை சாட்சி
  Jan 21 2004
  கேள்வியும்.. கேள்வியும்..
  Jan 20 2004
  மகனே.. உன் தாய் பேசுகிறேன்
  Jan 20 2004
  கர்ணன் பேசுகிறேன்
  Jan 20 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 6
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 5
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 4
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 3
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 2
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 1
  Jan 19 2004
  மாறியது நானா...
  Jan 19 2004
  சிறு கூட்டுல
  Jan 19 2004
  மனது / பொறு மனமே!
  Jan 19 2004
  கனவுக் காதல்
  Jan 16 2004
  மரங்கள்
  Jan 16 2004
  உண்ணும் விரதப் போராட்டம் / ரத்ததானம்
  Jan 16 2004
  ஆவினமே ஆவினமே
  Jan 16 2004
  தாண்டவக்கோனே!..
  Jan 16 2004
  காத்திருப்பு
  Jan 15 2004
  யார் கடவுள் / தேடித்தேடி..
  Jan 15 2004
  ஏகலைவன் பேசுகிறேன்
  Jan 15 2004
  ஒரு மௌனத்தின் குரல்
  Jan 15 2004
  மாயை
  Jan 15 2004
  ஏனென்று தெரிவதில்லை
  Jan 15 2004
  கடவுளும் காதலியும்
  Jan 15 2004
  என் இடம்
  Jan 15 2004
  ஜென் கதைகள்: [1-10]
  Jan 14 2004
  தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு (Dynamic Font)
  Jan 14 2004
  கடவுள்
  Jan 14 2004
  மறை போற்றத் தகுமோ?
  Jan 14 2004
  வேட்கை
  Jan 13 2004
  நினைவுச்சாரல்
  Jan 13 2004
  கவிதைகள்: "சுயம்"
  Jan 13 2004
  சித்தர் பாடலும் என் கவிதையும்..
  Jan 13 2004
  வந்திடும் நாளெது?
  Jan 13 2004
  காதல் என்பது
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 5
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 4
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 3
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 2
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 1
  Jan 12 2004
  சமர்த்தனம்
  Jan 12 2004
  இதையும் கூட காதல் எனலாமோ??
  Jan 12 2004
  மணிமேகலை

  இவ்ளோத்தையும் ஒரே ஒரு சின்ன லிங்க்ல கொடுத்துட்டு படிச்சுட்டு வாங்கன்னு சொன்னா நாங்க இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் வருவோம் ஒ.கேவா?

  ReplyDelete
 10. அண்ணாத்தே இது சுட்டியில கொடுக்கற விஷயமில்ல

  பெரிய தட்டி கட்டி சொல்லணும் :)

  ReplyDelete
 11. //போற்றுவார் போற்றட்டும்
  புழுதி வாரித்
  தூற்றுவார் தூற்றட்டும்
  தொடர்ந்து செல்வேன்
  உற்றதொரு கருத்தை
  எனதுள்ளமெனில்
  எடுத்து சொல்வேன்
  எவர் வரினும் நில்லேன்
  அஞ்சேன் !!/

  நல்லா இருக்கு!

  ReplyDelete
 12. //. பெங்களூர் என்னத் தத்தெடுத்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்களாகிவிட்து.
  //

  அப்ப நீங்க யார் பக்கம் ????

  ReplyDelete
 13. //குசும்ப கல்யாண கும்மி அடிச்சிட்டு இருந்த என்னைய வலைச்சரம் எழுத சொல்லிட்டாங்க முத்தக்கா!. /

  வரமா?

  சாபமா?????

  ReplyDelete
 14. //குசும்ப கல்யாண கும்மி அடிச்சிட்டு இருந்த என்னைய வலைச்சரம் எழுத சொல்லிட்டாங்க முத்தக்கா!. /

  அது சரி இன்னாது குசும்ப கல்யாண கும்மி அது எப்பிடி அடிக்கிறது ???

  ReplyDelete
 15. ஆஹா.. இன்னைக்கு இங்க தான் டிஃபன், காபி, சாப்பாடு எல்லாமுமேவா..

  ஆயில்யன் நடக்கட்டும் நடக்கட்டும்.

  தத்துப்பிள்ளைங்கறதுக்காக சொந்த மண்ணை விட்டுக் கொடுக்க முடியுமா சாரே ?

  ReplyDelete
 16. இதுக்கு மேல இங்க இருந்தா.....!!!!

  வேணாம்பா!

  மீ த எஸ்கேப்பு.....

  ReplyDelete
 17. //தத்துப்பிள்ளைங்கறதுக்காக சொந்த மண்ணை விட்டுக் கொடுக்க முடியுமா சாரே ?/

  ஓ அப்ப நீங்க கேரளவிலும் இருந்ததுண்டா சாரே...?!!

  ReplyDelete
 18. ஒ.கே இப்ப நான் நீங்க கொடுத்த லிங்குக்கு போய்ட்டு வர்றேன் டாட்டா பை பை (வர்ற எப்பிடியும் ரெண்டு நாள் ஆகும்போல தெரியுது)

  ReplyDelete
 19. //வயது முப்பத்திரண்டு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு.//

  என்னத்தோயோ நம்பிட்டு இருக்கோம்... இதை நம்பமாட்டமா??? :)

  ReplyDelete
 20. ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க

  ReplyDelete
 21. //வயது முப்பத்திரண்டு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு//

  சொல்லவே இல்ல???

  ReplyDelete
 22. //இப்போது அதிகம் எழுத முடியவில்லை. குழந்தை என்னும் இனியக் கவிதையின் இனிமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.//

  ம்ம்ம் அது.

  இப்படித்தான் சமத்தா இருக்கனும். எழுதரது எப்பவேணாலும் எழுதிக்கலாம்

  ReplyDelete
 23. //
  வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

  நமக்கு நாமே.. தன் கையே தனக்குதவி என்று மிகவும் நம்பிக்கையாய் ஆரம்பித்தது./////
  நல்ல காலம்,யார் பேரையும் சொல்லாம விட்டீங்க!! :P

  //முதல் முதலில் பதிவெழுதி போட்டது 11/21/2003 .////
  இந்த தேதிக்கு மூனு நாள் கழிச்சு தான் நான் தற்போதையை நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன்!!
  இம்புட்டு மூத்த பதிவரா நீங்க??

  உங்கள் கவிதைகள் மற்றும் கதைகளின் பெறும் ரசிகன் நான்!!ஏகலைவன் கதை மட்டுமல்லாமல் உங்களின் குசேலன் கதையும் நான் பெரிதும் விரும்பிப்படித்தது!!
  வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

  ReplyDelete
 24. இவ்வளவு பழம்பெருமை மிக்கவர்னு இன்றைக்குத் தான் நீங்களே போட்டுக் குடுத்திட்டீங்க. கலக்குங்க தல. நிறைய எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 25. ஒரு குவாட்டர் போட்டு வாழ்த்து சொல்றேனுங்க. :-)

  ReplyDelete
 26. பதிவு எங்கே? ஓ.. நாந்தான் அந்த பக்கமே போகலையே.. யாருப்பா இந்த வார வாத்தியாரு?

  ReplyDelete
 27. //"01 - வலைச்சரம் - படிக்காதவன் எழுதும் வலைச்சரம்"//

  படிக்காதவன் ரஜினியா? இல்ல படிக்காதவன் தனுஷா?

  ReplyDelete
 28. அறிமுகம் நல்லா இருக்கு.. இப்படி ஒரு பழம்பெரும் எழுத்தாளரை அறிமுகப்படுத்திய முத்துக்காக்கு நன்ன்றி. :-)

  ReplyDelete
 29. //அது சரி இப்ப வலைச்சரத்தில் என்ன செய்யப் போகிறேன் :
  அதான் இன்னும் தெரியல. நைட்டு குப்புறப் படுத்துக்கிட்டு யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்.//

  ஆஹா.. இது வேறையா? ;-)

  ReplyDelete
 30. //.:: மை ஃபிரண்ட் ::. said...

  அறிமுகம் நல்லா இருக்கு.. இப்படி ஒரு பழம்பெரும் எழுத்தாளரை அறிமுகப்படுத்திய முத்துக்காக்கு நன்ன்றி. :-) ///
  ரிப்பீட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 31. நண்பரே!

  கொஞ்சம் கண்ணதாசன் பாட்டைத் திருத்திக்கிடுறீங்களா?

  சரியான பாட்டு இது தான்:

  போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
  தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
  ஏற்றதொரு கருத்தை எனதுள்ள மென்றால்
  எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்

  கல்லூரி வாழ்க்கையிலே எல்லா மேடையிலும் முதல்லே சொல்லித் தொடங்கியதாலே, அப்படியே எனக்குள் பதிஞ்சு போச்சு.

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 32. Blogger இராம.கி said...

  நண்பரே!

  கொஞ்சம் கண்ணதாசன் பாட்டைத் திருத்திக்கிடுறீங்களா?
  //


  கண்டிப்பா இராமகி ஐயா. உடனடியாக.

  நினைவில் இருந்து எழுதியதால் தவறு ஏற்பட்டிருக்கிறது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 33. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  பதிவு எங்கே? ஓ.. நாந்தான் அந்த பக்கமே போகலையே.. யாருப்பா இந்த வார வாத்தியாரு?
  //

  மைஃப்ரெண்ட் திரும்பவும் நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க!

  இது வலைச்சரம் ஸோ அட்லீஸ் படிக்கலைங்கறத காமிக்காத அளவாவது நடந்துக்கோணும்! :)

  ReplyDelete
 34. அறிமுக பதிவு சூப்பர்

  ReplyDelete
 35. பத்து மணிக்கு பேசும்போது க்ளையண்ட் ப்ளேஸ்க்கு போறேன் பிசின்னு சொன்னா மாதிரி இருந்தது நல்லா வேலை பாக்குறீங்க!!

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. இந்த வாரம் முழுக்க இப்பிடியே நல்லா வேலை பாத்து நிறைய பதிவுகள் தரணும்.

  :))

  ReplyDelete
 37. /
  TBCD said...

  ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..

  உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..

  ஏ இந்தா...ஏ இந்தா..ஏ இந்தா..


  (ஆட்டம் போடுறேன்....)
  /

  நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்பா !!!

  ReplyDelete
 38. என்னாத்தை எழுத என்றுக் கேட்டு விட்டு, அருமையான அறிமுகமா வந்திருக்கு,..

  ReplyDelete
 39. சுட்டிகள் எல்லாம் அமுக்கிப் படிச்சா, அடுத்த வருடம் தான் பின்னுட்டம் போட முடியும்..

  ReplyDelete
 40. அதனாலே..சுட்டிகள் படிக்காம பின்னுட்டம்..

  ReplyDelete
 41. /
  ஆயில்யன். said...

  கடவுளாய் நான் இருந்த போது!!!
  Aug 30 2005
  கபீர் தாசர் சிந்தனை (மொழிபெயர்ப்புக் கவிதை)
  Dec 17 2004
  கோலம் - (6)
  Nov 23 2004
  கோலம் - (5)
  Nov 6 2004
  சமையல் குறிப்பு
  Aug 27 2004
  வாய்மை எனப்படுவது யாதெனின்...
  Aug 27 2004
  பிருந்தாவன்
  Aug 27 2004
  வெற்றிடம்
  Aug 13 2004
  கண்ணாமூச்சி
  Aug 13 2004
  தேவதையும் சாத்தானும்
  Aug 13 2004
  நினைவுகள்
  Aug 13 2004
  தடங்கள்
  Aug 13 2004
  அத்வைதம்
  Aug 13 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (3)
  Jun 8 2004
  கோலம் - (4)
  Jun 4 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (2)
  Jun 3 2004
  யோகம்.. போகம்.. ரோகம்- (1)
  Jun 3 2004
  சமுத்திர குமாரி
  May 21 2004
  ஏகலைவன்
  May 17 2004
  ரகசியமாய்.... ஒரு ரகசியம்
  May 12 2004
  குட்டிக் கதைகள்
  May 2 2004
  சீதையின் குரல்
  Apr 22 2004
  குருக்ஷேத்திரம்
  Apr 14 2004
  கோலம் - (3)
  Apr 12 2004
  கோலம் - (2)
  Apr 7 2004
  கோலம் - (1)
  Apr 7 2004
  ஜென்- கேள்வி/பதில்கள்
  Mar 29 2004
  வெண்பா முயற்சி - வெண்குழல்
  Mar 5 2004
  வெண்பா முயற்சி
  Feb 28 2004
  வாழ்க்கை
  Feb 27 2004
  உன்னைத் தேடி / என்னையா தேடி?
  Feb 27 2004
  உறவுகள்
  Feb 16 2004
  ஜென் கதைகள்: [11-]
  Feb 9 2004
  Tree TV channel - part (3)
  Feb 8 2004
  Tree TV channel - part (2)
  Feb 8 2004
  Tree TV channel - part (1)
  Feb 8 2004
  மரத்தடி கொண்டாட்டம்- அறிவிப்பு......
  Feb 8 2004
  மரத்தடியில் வில்லுப்பாட்டு - (1)
  Feb 7 2004
  காதலா?? காதலா!!
  Feb 7 2004
  பொங்கல்
  Jan 21 2004
  பொய்க்கூவா ஹைக்கூவா
  Jan 21 2004
  கவிதைகள்: சில நேரங்களில் சில மனிதர்கள்
  Jan 21 2004
  கண்டவர் விண்டிலர் / இயற்கை சாட்சி
  Jan 21 2004
  கேள்வியும்.. கேள்வியும்..
  Jan 20 2004
  மகனே.. உன் தாய் பேசுகிறேன்
  Jan 20 2004
  கர்ணன் பேசுகிறேன்
  Jan 20 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 6
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 5
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 4
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 3
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 2
  Jan 19 2004
  காதோடு தான் நான் பேசுவேன் - 1
  Jan 19 2004
  மாறியது நானா...
  Jan 19 2004
  சிறு கூட்டுல
  Jan 19 2004
  மனது / பொறு மனமே!
  Jan 19 2004
  கனவுக் காதல்
  Jan 16 2004
  மரங்கள்
  Jan 16 2004
  உண்ணும் விரதப் போராட்டம் / ரத்ததானம்
  Jan 16 2004
  ஆவினமே ஆவினமே
  Jan 16 2004
  தாண்டவக்கோனே!..
  Jan 16 2004
  காத்திருப்பு
  Jan 15 2004
  யார் கடவுள் / தேடித்தேடி..
  Jan 15 2004
  ஏகலைவன் பேசுகிறேன்
  Jan 15 2004
  ஒரு மௌனத்தின் குரல்
  Jan 15 2004
  மாயை
  Jan 15 2004
  ஏனென்று தெரிவதில்லை
  Jan 15 2004
  கடவுளும் காதலியும்
  Jan 15 2004
  என் இடம்
  Jan 15 2004
  ஜென் கதைகள்: [1-10]
  Jan 14 2004
  தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு (Dynamic Font)
  Jan 14 2004
  கடவுள்
  Jan 14 2004
  மறை போற்றத் தகுமோ?
  Jan 14 2004
  வேட்கை
  Jan 13 2004
  நினைவுச்சாரல்
  Jan 13 2004
  கவிதைகள்: "சுயம்"
  Jan 13 2004
  சித்தர் பாடலும் என் கவிதையும்..
  Jan 13 2004
  வந்திடும் நாளெது?
  Jan 13 2004
  காதல் என்பது
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 5
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 4
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 3
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 2
  Jan 12 2004
  ஷியாமளி அத்தை - 1
  Jan 12 2004
  சமர்த்தனம்
  Jan 12 2004
  இதையும் கூட காதல் எனலாமோ??
  Jan 12 2004
  மணிமேகலை

  இவ்ளோத்தையும் ஒரே ஒரு சின்ன லிங்க்ல கொடுத்துட்டு படிச்சுட்டு வாங்கன்னு சொன்னா நாங்க இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் வருவோம் ஒ.கேவா?
  /

  ஸ்ஸப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே

  ReplyDelete
 42. /
  ஆயில்யன். said...

  //. பெங்களூர் என்னத் தத்தெடுத்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்களாகிவிட்து.
  //

  அப்ப நீங்க யார் பக்கம் ????
  /

  சபாஷ் சரியாண கேள்வி

  ReplyDelete
 43. /
  Blogger இராம்/Raam said...

  //வயது முப்பத்திரண்டு அகவைகள் முடிய போகிறது இந்த டிசம்பரோடு.//

  என்னத்தோயோ நம்பிட்டு இருக்கோம்... இதை நம்பமாட்டமா??? :)
  /

  ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 44. /
  CVR said...

  இம்புட்டு மூத்த பதிவரா நீங்க??

  /

  வாலிப வயோதிக அன்பர் ரேன்ஞ்சுக்கு கேட்டுபிட்டாரே இந்த சிவிஆர்

  :))))

  ReplyDelete
 45. /
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  ஒரு குவாட்டர் போட்டு வாழ்த்து சொல்றேனுங்க. :-)
  /

  ஆட்டம் போடறதுக்கே ஜாயின் பண்றவன் குவாட்டர் போடறதுக்கு ஜாயின் பண்ணிக்க மாட்டேனா!?!?!?

  ReplyDelete
 46. //அது சரி இப்ப வலைச்சரத்தில் என்ன செய்யப் போகிறேன் :
  அதான் இன்னும் தெரியல. நைட்டு குப்புறப் படுத்துக்கிட்டு யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்.//

  ஆஹா.. இது வேறையா? ;-)

  ReplyDelete
 47. //.:: மை ஃபிரண்ட் ::. said...

  அறிமுகம் நல்லா இருக்கு.. இப்படி ஒரு பழம்பெரும் எழுத்தாளரை அறிமுகப்படுத்திய முத்துக்காக்கு நன்ன்றி. :-) ///
  ரிப்பீட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 48. முதலில் எழுதிய கவிதை (???!!)

  //உண்டு உண்டு என்ற போதும்
  இல்லை இல்லை என்ற போதும்
  ஏதோ சக்தி இயக்குது நம்மை
  அதுவே கடவுள் என்பதென் உண்மை

  இன்றைக்கும் இந்த நிலைப்பாடு மாறவில்லை. பார்க்கலாம் பிற்காலம் எப்படி மாறுதல்களைத் தரப் போகிறதென்று
  //

  "உண்டு என்றால் அது உண்டு
  இல்லை என்றால் அது இல்லை
  ........... அதில் உண்மை என்பது ஊமை " எனக் கவிஞன் எழுத்தில்தான் எத்துணை வலிமை !


  "அதுவே நீதான் " என்பது மறைதான்.
  ஆன்மீகத்தின் உட்பொருள் அதுதான்.
  இல்லை என்றவர் ஈசனை இகழ்வதும்
  உண்டென உணர்வோர் ஊமையாய் நின்றதும்
  எங்கே ? எங்கேயென எதிரொலி கேட்க‌
  ஏங்குவார் பல‌ரும் ஏசுவார் பல‌ரும்
  ஐயம் தீர, மெய் யது கண்டு
  ஒரு நாளேனும் ஒரு பொழுதேனும்
  ஓதாது செல்லார் ஐயனின் நாமம்.
  அஃதே அவனின் ஜாலம், மாயம்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://arthamullavalaipathivugal.blogspot.com
  இங்கே பாராட்டு விழாவாமே ! நீங்கள் பங்கெடுக்க வேண்டாமா !

  ReplyDelete
 49. வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்.

  ReplyDelete
 50. வாழ்த்துக்கள் அண்ணாச்சி !!!

  ReplyDelete
 51. அருமையான சுய அறிமுகம் - பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்கின்ற போதிலும் தன்னடக்கம் - வாழ்த்துகள்

  ReplyDelete
 52. ஐயப்ஸ்,

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது