07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 1, 2008

6. பிரேக் பாஸ்ட் வித் இம்சை - வாசிப்புகள்

புத்தகம் - 1 : காந்திஜி & கஸ்தூரி பா
வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது

புத்தகம்-2 : Its Not about the Bike — Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று இருக்காரு. அதுவும் உலகத்தில் மிகவும் கொடிய நோயான புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவர்களால் பிழைப்பதற்கு மிகக்குறைவான (10%-20%) வாய்ப்பே உள்ள நிலையில், அதில் இருந்து போராடி மீண்டு இந்த சாதனையை செய்து உள்ளார்.
புற்று நோயினால் அவதிப்பட்ட Lance Armstrong, அந்த நோயினால் அவதிப்படுபவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதைப்பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

புத்தகம்-3: மோட்டார் சைக்கிள் டயரி , http://elanko.net/?p=289
திட்டமிடப்படாத பயணங்கள் பல ஆச்சரியங்களை, அதிர்ச்சிகளை, சந்தோஷங்களை, துக்கங்களைப் பொதிந்து வைத்திருந்து, அப்பொதியில் இருந்து எதிர்பாராதவொன்றை அவ்வப்போது நம்மெதிரே வீசுகிறது. ‘சே’ இந்தப் பயணத்தில் இருந்து தெரிந்து கொள்வது வாழ்க்கையும் அவ்வாறான ஒரு திட்டமிட முடியாத பயணமே என்பது தெரிகிறது.

இப்பயணத்திற்கு நடுவே இவருக்கு 24 வயது நிரம்புகிறது. எனக்கு 24 வயது ஆனபோது சனிக்கிழமையும் அலுவலகம் வந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருந்தேன். 40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ! 24 வயதில் இவருக்கு இருந்த கருத்துச் செறிவும், மனிதாபிமானமும் இன்னும் எனக்கு இல்லை! இதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு
நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றினை என்னால் சுவை பட சொல்ல முடியுமா.. என்பதை நான் அறியேன். இருந்தாலும் முயற்சித்து பார்க்கிறேன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன். குறிச்சொல்லாக பெரியார் வரலாறு என்று கொடுத்திருப்பதால் ஒரு சேர வாசிக்கவும் முடியும். இனி…

படிக்க நினைத்து இருப்பது:
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

புத்தக விமர்சனம் : The Indian Clerk கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு என்று செய்தி படித்தேன்.

ஜாக்கிஜான் வாழ்க்கை வரலாறு முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முயற்சி செய்ய வேண்டும் முயற்சி என்றால் சாதாரணமாக இருந்தால் போதாது. மதுரை பாஷையில் சொன்னால் காட்டுத்தனமாக முயற்சிக்க வேண்டும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி.

7 comments:

 1. மிக அருமையான தொகுப்பு குறிப்பா 'தி இண்டியன் க்ளர்க்' புத்தக விமர்சனம்.

  மீதிய படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 2. என்னவோ நடக்குது ஒன்னுமே புரியல... அடுத்தது என்ன பதிவு போடலாம்னு ஒரு யோசனை சொல்லுங்கப்பா...

  ReplyDelete
 3. இம்சை டைம் மேனேஜ்மெண்ட், செல்ஃப் டெவெலப்மெண்ட், மோட்டிவேஷன் பத்தி யாராச்சும் எழுதிருந்தா சரம் தொடுங்களேன்.

  ReplyDelete
 4. ////40 வயதிற்குள்ளாகத் தம் வாழ்க்கையைத் தமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாகக் கழித்து, பிறர் நலனுக்காக எங்கோ போய் உயிர்விட்டார். இவர் இன்னும் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ!////


  'சே'வின் வாழ்க்கையை படிக்கும் யாருக்கும் இந்த எண்ணம் கண்டிப்பாக எழும்.

  ReplyDelete
 5. //மங்களூர் சிவா said...

  இம்சை டைம் மேனேஜ்மெண்ட், செல்ஃப் டெவெலப்மெண்ட், மோட்டிவேஷன் பத்தி யாராச்சும் எழுதிருந்தா சரம் தொடுங்களேன்.//

  இதுக்கு ஏன் மத்தவங்க?

  நம்ம இம்சை மாமாவே இதுக்கெல்லாம் உதாரணம் இல்லையா?

  ReplyDelete
 6. //மங்களூர் சிவா said...

  இம்சை டைம் மேனேஜ்மெண்ட், செல்ஃப் டெவெலப்மெண்ட், மோட்டிவேஷன் பத்தி யாராச்சும் எழுதிருந்தா சரம் தொடுங்களேன்.
  //

  ரிப்பீட்டேய்..

  ReplyDelete
 7. ம்ம்ம்ம்ம் ஒண்ணுமே புரில - புத்தகங்கள் - விமர்சனங்கள் - சுட்டிகள் - ஆறே ஆறு மறு மொழிகள் - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது