07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜெகதீசன். Show all posts
Showing posts with label ஜெகதீசன். Show all posts

Sunday, March 8, 2009

நன்றி!!!

கடந்த மூன்று நாட்களாக இருந்த அதிக வேலைப்பளு காரணமாக வலைச்சரத்தில் இடுகைகள் எதும் இடமுடியாததற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...(நல்லாப் பாத்துக்கோங்க "வருத்தம்"... "மன்னிப்பு" இல்லை ;-))

என்னையும் வலைச்சரத்தில் எழுத அழைத்த சீனா ஐயா அவர்களுக்கும், "முதல் நாள் வாழ்த்துகள், இரண்டாம் நாள் வாழ்த்துகள், மூன்றாம் நாள் வாழ்த்துகள்" என தினமும் வாழ்த்துகள் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய பதிவர் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!! நேரமில்லாததால் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித்தனியாக பதில் கூறமுடியவில்லை.. அனைவருக்கும் என் நன்றிகள்!!

விடைபெறும் முன், அரிய ஒலித்தொகுப்புகள் கொண்ட ஒரு தளத்தை அறிமுகப்படுத்தி விடைபெறுகிறேன்...
sivajitv.com என்னும் தளத்தில் பெரியார், அறிஞர் அண்ணா, வலம்புரி ஜான் உள்ளிட்டோரின் உரைகளும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தொகுக்கப்பட்டுள்ளன..

அவற்றில் சில சுட்டிகள்...
http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000927
அண்ணாவின் இறுதிப் பேச்சு : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000648

பெரியாரின் இறுதி உரை : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000656

வலம்புரி ஜான் : http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000617

இன்னும் பல உரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது...http://www.sivajitv.com/Category.do?category=ct000003

இந்தத் தளத்தை என்னுடன் பகிர்ந்துகொண்ட ஜோ அண்ணனுக்கு நன்றி!
மேலும் வாசிக்க...

Wednesday, March 4, 2009

படித்ததில் பிடித்தது & படைத்ததில் பிடித்தது

பதிவர் நண்பர்கள் நால்வரிடம் அவர்கள் படித்ததில் பிடித்த ஒரு இடுகையும், எழுதியதில் பிடித்த ஒரு இடுகையும், ஏன் பிடிக்கும் என்ற விளக்கத்தையும் தருமாறு கேட்டிருந்தேன்..

அவர்கள் எழுதியதில் எனக்குப் பிடித்த ஒரு இடுகையும்,
அவர்கள் எழுதியதில் அவர்களுக்குப் பிடித்த ஒரு இடுகையும்,
அவர்கள் படித்ததில் பிடித்த ஒரு இடுகையும் இந்த வலைச்சரத்தில்....

விக்னேஷ்வரன்
வாழ்க்கைப் பயணம், வாழ்க்கைச் சித்திரம் என்ற இரு வலைப்பூக்களின் சொந்தக்காரர்.. தமிழோசை நாளிதழில் கட்டுரைகள் எழுதுகிறார்..
இவரது 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும் ஒரு நல்ல தொடர்கதை. இதை 17வது பகுதியுடன் நிறுத்திவிட்டார்.. விரைவில் கதையைத் தொடர வேண்டும் என அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...

இனி அவருக்குப் பிடித்த இடுகைகள்...
நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என தனியாக எதையும் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. எழுதினவற்றை சில நாள் கழித்து படிக்கும் போது போயும் போயும் இதையா எழுதினோம் என்ற எண்ணம் மேலிடுகிறது. சில வேளைகளில் இதையெல்லாம் எதற்காக எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என சிந்திக்கச் செய்கிறது. மனிதனுக்கு அங்கிகாரம் மட்டும் இல்லாமல் போய்விட்டால் ஒவ்வொருவரும் சோர்வுடன் தான் இருப்பார்கள் போல. எனக்கு பிடித்த பதிவுகளை கேட்டு வலைச்சரத்தில் கொடுத்து உற்சாகம் கொடுக்கும் ஜெக தீசனுக்கு நன்றி. நான் எழுதியதில் இந்த பதிவு எனக்கு பிடிக்கும். http://vaazkaipayanam.blogspot.com/2008/11/troy.html

ஆதவனின் சிறுகதைகள் எனும் தொகுப்பு நூலினைப் படித்திருக்கிறீர்களா? அதில் நீர்க் குமிழிகள் எனும் தலைப்பில் ஒரு சிறுகதை இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்த எதிர்பார்ப்புகள் கனவுகளைப் போன்றவை தான். அவை வெடித்துச் சிதறும் தருனங்கள் எதிர்பார்க்கப்படாதவை. ஜி எழுதிய புரசைவாக்கம் நெடுஞ்சாலை எனும் கதையை படித்திருக்கிறீர்களா? http://veyililmazai.blogspot.com/2008/04/blog-post_22.html நிறந்தரமற்ற வாழ்க்கயில் எதையோ நோக்கி மனிதனின் பயணித்துக் கொண்டிருக்கிறார்ன். அவசியம் பெற்றவனுக்கு கிடைப்பதில்லை. கிடைத்தவனுக்கு அவசியம் இல்லை என்பது தான் இக்கதையின் சாரம்.


ஜோதிபாரதி
சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராக இருந்து வலைச்சரத்தைக் கலக்கியவர்..
தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தால் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற "ஈழத்தமிழரும் இந்திய அரசியலும்" கட்டுரையைப் படித்துப் பாருங்களேன்..

இது http://jothibharathi.blogspot.com/2008/12/blog-post_19.html அவரது இடுகைகளில் அவருக்குப் பிடித்ததாம்...எதனால் பிடிக்கும் எனக்கேட்டால், "என் பதிவைப் பற்றி நானே பெருமையாகப் பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டார்...:P

இனி அவர் படித்ததில் பிடித்த இடுகையும் ஏன் பிடிக்கும் என்று அவர் அளித்த விளக்கமும்..
தமிழக அரசியல்வாதிகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக துரோகம் செய்துவிட்ட நிலையில், ஈழமக்களுக்காக தமிழக மக்கள் எந்தெந்த வகைகளில் போராட முடியும் என்பதை பல்வேறு வகைகளில் எடுத்தியம்பியிருக்கிறார் திரு நாக இளங்கோவன் அவர்கள். அவருடைய பல பதிவுகள் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. அவருடைய நயனம் வலைப்பக்கத்தில் சில அறிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுகிறார். நாமும் அவரது கட்டுரைகளை வாசிப்போமே!
http://nayanam.blogspot.com/2009/02/blog-post_02.html


நட்புடன் ஜமால்

இந்தப் பின்னூட்ட சுனாமியின் இடுகைகளில் எனக்குப் பிடித்தது.. மின்னல் - மின்னஞ்சல்

இனி அவருக்குப் பிடித்த இடுகைகள்...
http://pirathipalippu.blogspot.com/2008/11/blog-post_10.html
ஜீவன் ‘கண்ணாடி’ என்ற பெயரில் பதிவிடுகிறார்.
இவர் சிகரெட்டை எப்படி விட்டேன் என்று பதிவு போட்டு இருக்கார்.
மிகவும் தத்ரூபமாக இருந்தது.
நான் இதனை படித்த பொழுது மிகவும் நெகிழ்வாய் உணர்ந்தேன்.
பதிவுலகின் ஆரம்ப காலம் எனக்கு அது.

என்னில் இரசித்தது.
http://adiraijamal.blogspot.com/2008/11/1992.html
கண் இல்லாதவர்களுக்காக என் காதலி கேட்டு நான் எழுதிய முதல் கவிதை வடிவம்.
கண் தானத்தை முன்னிருத்தி எழுதியது


கோவி.கண்ணன்
கோவி.கண்ணனின் இடுகைகளில் எனக்குப் பிடித்தது, கண்ணபிரான் ரவிசங்கரின் (கேஆர்எஸ்) மாதவிப்பந்தல் பற்றி அவர் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவு..

அவருக்குப் பிடித்த இடுகைகள்...
காலஞ்சென்றவை: சமஸ்கிருதமும் லத்தீனும் என்ற தலைப்பில் சமஸ்கிரதம் மற்றும் லத்தீன் குறித்த சிறு ஆயுவுக்கட்டுரையை பதிவர் ஜெகத் எழுதி இருக்கிறார். கணனி அறிவு செறிவுடன் மொழிகள் குறித்தும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். மேற் சொன்ன கட்டுரையில் லத்தீனும், சமஸ்கிரதமும் பழங்காலத்தில் கோலொச்சியதற்கு
காரணமே அவை வழிபாட்டு மொழிகளாக முன்மொழியப் பெற்றதாகும். புனிதம் கருதியதாலேயே புதிய சொற்களேற்பும், வெறும் இலக்கிய மொழி என்ற அளவில் இருந்ததால் புழக்கத்தில் இருந்து மறைந்ததாகவும் கூறுகிறார். இருமொழிகளுக்கு இடையே பெரும் ஒற்றுமை இருப்பதை எடுத்துகாட்டுகளுடன் விளக்கி யுள்ளார்.
நாமன் -> நாமம், நாமகரணம்
nomen -> name, nomenclature
தந்த் -> தாந்த் (ஹிந்தி: பல்)
dentis -> dental
த்ரி -> த்ரிமூர்த்தி, த்ரிவேதி
tria -> triangle, trinity
இன்னும் ஏராளமான சொற்கள் படித்துபாருங்கள். மிகவும் சிறந்த ஆவணம்


இவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை ?
பக்தி, இறைநம்பிக்கை இவை எதுவுமே தவறு அல்ல. ஆனால் இவற்றின் வழியாக ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டியவை மனித நேயம் தான். இதை வலியுறுத்துவிதமாக எழுதப்பட்ட கட்டுரை.


படித்ததில் & படைத்ததில் பிடித்த இடுகைகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி!
மேலும் வாசிக்க...

Tuesday, March 3, 2009

மாற்றம்!

ஒபாமாவின் மந்திரச் சொல்... அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய "மாற்றம்" இப்போது தமிழகத்திலும் ஒலிக்கத்துவங்கியுள்ளது.
தமிழகத்தில் இப்போது அரசியல் மாற்றத்தின் தேவையும் அதிகமாகவே இருக்கிறது.
அங்கு தலைமை தொடங்கிவைத்த "மாற்றம் தேவை" என்னும் குரலை மக்கள் ஏற்று மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டினர்.
இங்கு மக்களிடம் ஒலிக்கத்துவங்கியுள்ள அதே குரலை தலைவர்கள் ஏற்று மாற்றத்தை ஏற்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. தமிழகத்தின் இரு அரசியல்தலைவர்கள் தங்களது அரசியல் நிலையை மாற்றிக்கொண்டால் தமிழகத்தில் மாற்றம் முற்றிலும் சாத்தியமே!
இது குறித்து இன்னும் இங்கு பேசினால் அது அரசியலாகிவிடும் என்பதால், என் பதிவில் தொடர்கிறேன். இங்கு மாற்றம் குறித்த சில வலைப்பூக்களின் சுட்டிகள் மட்டும் தருகிறேன்.

தமிழ்சசியின், மாற்றம் : தமிழக அரசியல் தலைமையை மாற்றுவோம்

மாற்றம்நம்பியின், ஆம் தலைவர்களே! தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்

மாற்றம் குழு

டுவிட்டரில் மாற்றம்

Vote for Stopping Genocide in Eelam
மேலும் வாசிக்க...

Monday, March 2, 2009

என்னைப் பற்றி நானே!

நானும் வலைச்சர ஆசிரியரா ஆகீட்டேன்!!!!!!
முதல் இடுகையில் என்னைப் பற்றி நானே அறிமுகப்படுத்திக்கலாமாம்.. என்னைப் பத்தி சொல்ல ஒன்னுமே இல்லையே.. :P

பிறந்து வளர்ந்தது எல்லாம் விருதுநகர் பக்கத்தில் இருக்கும் ஆமத்தூர் என்னும் கிராமம். படித்தது ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர் மற்றும் மதுரை. இப்போ சிங்கையில் பொட்டிதட்டும் வேலை.:P

நான் வலைச்சரத்துக்கு திடீர் ஆசிரியர்தான். சீனா ஐயா "வெட்டியாத்தான இருக்க (அவருக்குக் கூட தெரிஞ்சிருக்கு நான் வெட்டியாத்தான் இருக்கேன்னு.. )... இந்த வாரம் வலைச்சரம் எழுது" அப்படின்னு கட்டளையிட்டுட்டார்... (ஒரு பேச்சுக்காவது எழுதுறயான்னு கேட்டுருக்கலாம். :P). என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி சீனா ஐயா. இது திடீரென முடிவானதால் முழுக்க தயாராகவில்லை... முடிந்தவரை எழுதுகிறேன்.

இந்த இடுகையில் என் பதிவை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமாம். ஆனால் சொல்லும் அளவுக்கு எதுவும் எழுதவில்லை.

இருந்தாலும்... என் பதிவில் எனக்குப் பிடித்த சில இடுகைகள்...

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத ஒரே இடம்
தமிழ்பித்தனுக்கு ஒரு எதிர்பதிவு
இதுவும் எதிர்பதிவுதான்.. ஜீவி ஐயாவுக்கு

நமக்கு அரசியல் எல்லாம் வரலைன்னு, கதையெழுத முயற்சித்தேன்.. அந்த முயற்சிதான் இது..

எதிர்பாராத திருப்பம்
இளம் ஜோடி - நஒக போட்டிக்கு அல்ல!

வழக்கம்போல, அதும் சரியா வராததால் ஆணியே பிடுங்கவேண்டாமின்னு முடிவு செய்து அன்றுமுதல் செவ்வனே மொக்கை போட்டு வருகிறேன்..
அடுத்த ஒரு வாரத்துக்கு வலைச்சரத்திலும் மொக்கை போடுறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது