07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர். Show all posts
Showing posts with label திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர். Show all posts

Sunday, October 9, 2011

கதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011

Glittering Red Rose
வணக்கம்
ரோஜாக்கள் காதல் மற்றும் அழகின் பழங்காலக் குறியீடு. ரோஜாக்கள் ஐசிஸ் மற்றும் அபிரோடைட் போன்ற எண்ணற்ற தேவதைகளுக்குப் புனிதமானது மற்றும் இது கன்னி மேரியின் குறியீடாகவும் பயன் படுத்தப்படுகிறது.இது யு எஸ் யின் நான்கு மாகாணங்களின் மாகாண மலர்: அயோவா மற்றும் நார்த் டக்கொடா ("ஆர்.அர்கான்சனா"), ஜார்ஜியா (ஆர்.லேவி கேடா ), மற்றும் போர்ட் லேன்ட்ம், ஓரேகான்ம் "ரோஜாக்களின் நகரம்" என்பதை தமது செல்லப் பெயர்களாகக் கருதுகின்றன, மற்றும் ஒரு வருடாந்திர ரோஜா திருவிழாவையும் நடத்துகின்றன.

Orkutjunks.com™
நன்னம்பிக்கை உள்ளவன் ரோஜாவைப் பார்க்கிறான் அதன் முட்களை அல்ல; நம்பிக்கை அற்றவன் முட்களையே உற்று நோக்குகிறான், ரோஜாக்கள் இருப்பதையே மறந்தவனாக. - கலீல் கிப்ரான்.
(விக்கிப்பீடியா தகவல்)


Orkutjunks.com™இன்று நான் விடைபெறும் நாள்.இன்றைய மற்றும் இதுவரை நான் அளித்த கதம்ப ரோஜக்கள் வலைச்சரத்தில் இணைந்து மேலும் மணம் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.வாய்ப்பளித்த சீனா சார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தினமும் வருகை தந்து நிறை குறைகளை தெரிவித்தவர்களுக்கும் அறிமுகமானவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டம்  தந்தும்  ஃபாளோயர்சில் இணைந்து ஊக்கமளித்தவர்களுக்கும்            மிக்க நன்றிகள்.வரவிருக்கும் வலைச்சர ஆசிரியரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல தளங்களை படிக்க நேர்ந்த போது,சிறப்பான பதிவுகளை எழுதியிருக்கும் பலர் ஏனோ தற்போழுது எழுதாமல் இருக்கின்றனர்.சொந்த காரணங்கள் இருக்கலாம்.அவர்களும் தொடர்ந்து பதிவுகளை படைப்பது பதிவுலகத்திற்கு மேலும் பலன்கள் தரும்.ஒரு சிலர் அனைவருக்கும் பரிச்சையமானவர்கள் என்றாலும் பலருக்கும் அறிமுகமில்லாதவர்களை மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டுமென நினைத்து வலைதளங்களை தேடி அறிமுகம் செய்துள்ளேன்.புதிய பதிவர்களும் ஊக்கமுடன் தொடர்ந்து எழுத வேண்டும்.

இன்றைய கதம்ப ரோஜாக்களை காணலாம் வாருங்கள்:


Teddy Bear spreading flowersTeddy Bear spreading flowers
.

1.மறையும் குமிழாக அழிந்து போக விரும்பாதவர் சொல்லாற்றலில் பொருளை உணர்த்தி பிரமிக்கவைத்த சாகம்பரி அவர்கள் இத்தகைய அணைப்பை வேண்டுகிறார்.

2. ஜாக்கி சேகர். தன் அம்மாவிடம் என்ன சொல்கிறாரென்று பாருங்கள்.

3. வம்சி புத்தக வெளியீடுகள் பற்றி பகிர்ந்துள்ளார் பவா செல்லதுரை அவர்கள். புத்தகப் பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

4.தமிழில் மின்னூல் தொழில்நுட்பம் வந்துள்ளதாம்.அப்படியே உலகத் தமிழாசிரியர் மாநாட்டிற்கும் சென்று வரலாம் வாருங்கள். இத்துடன் மென்பொருள் சொல்திருத்தியையும் தெரிந்துகொள்வோம்.
5.விரும்பாத வலைதளத்தின் ஃபாளோயரிலிருந்து விடுபடும் முறைகளை பகிர்ந்துள்ளார் இவர்.

6.வெண்புரவிக்கு லேசாக நெஞ்சுவலி வந்துள்ளது.எதனால் என்று அவர் வீட்டிற்கு சென்று விசாரிப்போம் வாருங்கள்.அதற்கு காரணம் தொடர் பதிவையும் படித்தால் புரியும்.

7. பிரிவின் வலியில் உன்னைவிட்டு போகமாட்டேன் என்கிறார் அன்பான மனைவி லலி அவர்களின் கவிதையில்.

8.எந்தளவிற்கு உண்மை என்று சொல்லுங்கள்.சம்மந்தப்பட்டவர்கள் சீரியசாக வேண்டாம்.வியப்பான படங்களையும் பகிர்ந்துள்ளார் வசந்தமுல்லை ரவி.

9. வாங்க இயலாவிட்டாலும் பங்குதாரராவது ஆகுங்கள் என்கிறார் சின்னதூரல்.இவரின் விற்பனை விலை, மதிப்பற்றது.வரியுமற்றது.

10.இந்த கால கட்டம்வரை தொந்தரவில்லா மனிதர்களும்,சூழ்நிலைகளும் வேண்டும் என்கிறார் குணா

11.உலகிற்கு தருவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்?கேட்கிறார் உதிரும் சருகுகள்.

12.மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதின் விளைவுகளும் கடலில் எண்ணெய் கம்பளம் படர்ந்துள்ளதின் விபரங்களும் பதிந்துள்ளதை தமிழ் மருதத்தில் தெரிந்துகொள்வோம்.

13திருப்பணிகளும் பல தகவல்வகளும் இங்கே கிடைக்கின்றது.


14.கருந்துளை பற்றிய விபரங்களை பாருங்கள்.

15.தாராளமா தயிர் சாப்பிடுங்க.கேசம் காத்தல் ,இப்படி பல அழகு குறிப்புகளை பாருங்கள்.


இன்றைய அன்பு பரிசுகள்


                                     blue flower glitter The Greek Roseblue flower glitter
.
இந்த          ஐஸ்கிரீமை        அப்படியே சாப்பிடவும்.      .


சரிவல்லைனா தனித்தனி கோன் ஐஸ்கிரீம்களாக எடுத்துக்கொள்ளவும்
  வாய்ப்பளித்த சீனா சார் மற்றும் வலைச்சர குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
                                                                                            
                                              
 
Animated Rose To Say Thank You
 மிக்க நன்றிகள்

மேலும் வாசிக்க...

Saturday, October 8, 2011

கதம்ப ரோஜாக்கள் @ 8/10/2011

வணக்கம்,

 நம் ஜனாதிபதி மாளிகையில் ரோஜா தோட்டம் உள்ளதை அனைவரும் அறிவோம்.முகல் கார்டன்,பொட்டானிகல் கார்டன் என்றும் பெயர் உண்டு.ஆறு ஏக்கர்  பரப்பளவில் 250 வகையான ரோஜாக்கள் காணப்படுவதோடு,பல வகை சூர்ய காந்தி பூக்கள்,மூளிகை வகைகள்,வித்தியாசமான காய்கறிகளும் உண்டு.இந்த தோட்டமானது செவ்வக, வட்ட வடிவ  அமைப்புகளுடன்  நேர் நீள் வடிவ பாதை அமைப்பில் தோட்டத்தின்   எழிலை பார்வையிடலாம்.

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தை பொது மக்கள் பார்க்க ஃபிப்ர்வரி பத்து தேதிக்கு மேல் மார்ச் 20 தேதிக்குள் அனுமதி உண்டு.கட்டணம்இல்லை.ஃபிப்ரவரி மாதத்தின் குளிர்காலம் இதமான  காலநிலையாகும்.   தோட்டத்தை    கூடுதலாக   ரசிக்க     முடியும்.

Orkutjunks.com™ Orkutjunks.com™
  
.

 கதம்ப ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் ஆடும் இவர்கள்,நம் வலைச்சர தோட்டத்தின் எழிலை ரசித்து கதம்ப ரோஜாக்களை அறிமுகம் செய்யவிருக்கின்றனர்.

1.இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது என்கிறார் கோவில்பட்டி ராஜ்.

2.அபி அப்பா தன் அம்மாவை நினைவுபடுத்தியுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.

3.பூமி புத்திரா என்பதை எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா?இண்டர்லோக் புத்தகம் உங்களுக்கு கிடைத்துவிட்டதா? விபரங்களை பகிர்கின்றார்  கிருஷ்ணா.

4. சோலார் செல் பற்றின தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் இவர்.

5.ஆடியோ கோப்புகளை ஒன்றாக சேர்க்க மென்பொருளை குறிப்பிடுகிறார் அன்பு.

6.அறிவிப்புப்பலகை மட்டும் புதிதாய் இருக்கிறது என்கிறார் .
இந்த பாமரர்.

7.பெரிய விஷயங்களில் ஆடம்பரத்தை அனுபவிப்பதை விட, சின்னஞ்சிறு விஷயங்களில் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உணருங்கள் என்கிறார் சிவரஞ்சனி சதாசிவம்.

8. இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம் ஒரு கடலைத்தாண்டிய கண்ணீரிலையே கரைந்துவிடுகிறார்கள் என்கிறார் தினேஷ்.
ஒட்டை இல்லா பருப்பு வடை கதை புரியுதானு பாருங்க.

9.கணினி பழுதுபார்க்க புதுமுறை பொய்த்த மனிதன் யாருன்னு தெம்மாங்குபாட்டுக்காரரிடம் தெரிந்து கொள்ளுங்கள்.எங்க ஊரு பாளயம்
மிக சுவாரஸ்யம்.

10.பசி என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி போகுமென்று  சொல்கிறார்.அடுத்ததா ஒரு கேள்வியும் கேட்டிருந்தாலும் ஏடாகூடமான பதிவுன்னு அவரே சொல்லிட்டார். அவரது ஆய்வை நீங்களே படித்து பாருங்க.

நம் வருகைக்கான பரிசு இந்த கதம்ப ரோஜாக்கள்  மற்றும்            இந்த கேக் 






நன்றி.

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது