07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 9, 2011

கதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011

Glittering Red Rose
வணக்கம்
ரோஜாக்கள் காதல் மற்றும் அழகின் பழங்காலக் குறியீடு. ரோஜாக்கள் ஐசிஸ் மற்றும் அபிரோடைட் போன்ற எண்ணற்ற தேவதைகளுக்குப் புனிதமானது மற்றும் இது கன்னி மேரியின் குறியீடாகவும் பயன் படுத்தப்படுகிறது.இது யு எஸ் யின் நான்கு மாகாணங்களின் மாகாண மலர்: அயோவா மற்றும் நார்த் டக்கொடா ("ஆர்.அர்கான்சனா"), ஜார்ஜியா (ஆர்.லேவி கேடா ), மற்றும் போர்ட் லேன்ட்ம், ஓரேகான்ம் "ரோஜாக்களின் நகரம்" என்பதை தமது செல்லப் பெயர்களாகக் கருதுகின்றன, மற்றும் ஒரு வருடாந்திர ரோஜா திருவிழாவையும் நடத்துகின்றன.

Orkutjunks.com™
நன்னம்பிக்கை உள்ளவன் ரோஜாவைப் பார்க்கிறான் அதன் முட்களை அல்ல; நம்பிக்கை அற்றவன் முட்களையே உற்று நோக்குகிறான், ரோஜாக்கள் இருப்பதையே மறந்தவனாக. - கலீல் கிப்ரான்.
(விக்கிப்பீடியா தகவல்)


Orkutjunks.com™இன்று நான் விடைபெறும் நாள்.இன்றைய மற்றும் இதுவரை நான் அளித்த கதம்ப ரோஜக்கள் வலைச்சரத்தில் இணைந்து மேலும் மணம் பெற்றிருக்கும் என நம்புகிறேன்.வாய்ப்பளித்த சீனா சார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தினமும் வருகை தந்து நிறை குறைகளை தெரிவித்தவர்களுக்கும் அறிமுகமானவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டம்  தந்தும்  ஃபாளோயர்சில் இணைந்து ஊக்கமளித்தவர்களுக்கும்            மிக்க நன்றிகள்.வரவிருக்கும் வலைச்சர ஆசிரியரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல தளங்களை படிக்க நேர்ந்த போது,சிறப்பான பதிவுகளை எழுதியிருக்கும் பலர் ஏனோ தற்போழுது எழுதாமல் இருக்கின்றனர்.சொந்த காரணங்கள் இருக்கலாம்.அவர்களும் தொடர்ந்து பதிவுகளை படைப்பது பதிவுலகத்திற்கு மேலும் பலன்கள் தரும்.ஒரு சிலர் அனைவருக்கும் பரிச்சையமானவர்கள் என்றாலும் பலருக்கும் அறிமுகமில்லாதவர்களை மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டுமென நினைத்து வலைதளங்களை தேடி அறிமுகம் செய்துள்ளேன்.புதிய பதிவர்களும் ஊக்கமுடன் தொடர்ந்து எழுத வேண்டும்.

இன்றைய கதம்ப ரோஜாக்களை காணலாம் வாருங்கள்:


Teddy Bear spreading flowersTeddy Bear spreading flowers
.

1.மறையும் குமிழாக அழிந்து போக விரும்பாதவர் சொல்லாற்றலில் பொருளை உணர்த்தி பிரமிக்கவைத்த சாகம்பரி அவர்கள் இத்தகைய அணைப்பை வேண்டுகிறார்.

2. ஜாக்கி சேகர். தன் அம்மாவிடம் என்ன சொல்கிறாரென்று பாருங்கள்.

3. வம்சி புத்தக வெளியீடுகள் பற்றி பகிர்ந்துள்ளார் பவா செல்லதுரை அவர்கள். புத்தகப் பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

4.தமிழில் மின்னூல் தொழில்நுட்பம் வந்துள்ளதாம்.அப்படியே உலகத் தமிழாசிரியர் மாநாட்டிற்கும் சென்று வரலாம் வாருங்கள். இத்துடன் மென்பொருள் சொல்திருத்தியையும் தெரிந்துகொள்வோம்.
5.விரும்பாத வலைதளத்தின் ஃபாளோயரிலிருந்து விடுபடும் முறைகளை பகிர்ந்துள்ளார் இவர்.

6.வெண்புரவிக்கு லேசாக நெஞ்சுவலி வந்துள்ளது.எதனால் என்று அவர் வீட்டிற்கு சென்று விசாரிப்போம் வாருங்கள்.அதற்கு காரணம் தொடர் பதிவையும் படித்தால் புரியும்.

7. பிரிவின் வலியில் உன்னைவிட்டு போகமாட்டேன் என்கிறார் அன்பான மனைவி லலி அவர்களின் கவிதையில்.

8.எந்தளவிற்கு உண்மை என்று சொல்லுங்கள்.சம்மந்தப்பட்டவர்கள் சீரியசாக வேண்டாம்.வியப்பான படங்களையும் பகிர்ந்துள்ளார் வசந்தமுல்லை ரவி.

9. வாங்க இயலாவிட்டாலும் பங்குதாரராவது ஆகுங்கள் என்கிறார் சின்னதூரல்.இவரின் விற்பனை விலை, மதிப்பற்றது.வரியுமற்றது.

10.இந்த கால கட்டம்வரை தொந்தரவில்லா மனிதர்களும்,சூழ்நிலைகளும் வேண்டும் என்கிறார் குணா

11.உலகிற்கு தருவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்?கேட்கிறார் உதிரும் சருகுகள்.

12.மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதின் விளைவுகளும் கடலில் எண்ணெய் கம்பளம் படர்ந்துள்ளதின் விபரங்களும் பதிந்துள்ளதை தமிழ் மருதத்தில் தெரிந்துகொள்வோம்.

13திருப்பணிகளும் பல தகவல்வகளும் இங்கே கிடைக்கின்றது.


14.கருந்துளை பற்றிய விபரங்களை பாருங்கள்.

15.தாராளமா தயிர் சாப்பிடுங்க.கேசம் காத்தல் ,இப்படி பல அழகு குறிப்புகளை பாருங்கள்.


இன்றைய அன்பு பரிசுகள்


                                     blue flower glitter The Greek Roseblue flower glitter
.
இந்த          ஐஸ்கிரீமை        அப்படியே சாப்பிடவும்.      .


சரிவல்லைனா தனித்தனி கோன் ஐஸ்கிரீம்களாக எடுத்துக்கொள்ளவும்
 வாய்ப்பளித்த சீனா சார் மற்றும் வலைச்சர குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
                                                                                            
                                              
 
Animated Rose To Say Thank You
 மிக்க நன்றிகள்


27 comments:

 1. நன்றி மேடம்

  ReplyDelete
 2. You have done a wonderful job! Pl. Take the bouquet of roses from my profile picture!! :-)

  ReplyDelete
 3. @சூர்யஜீவா
  நான் அறிமுகப்படுத்திய சில தளங்களில் உங்கள் பின்னூட்டங்களை கண்டேன்.மிக்க நன்றிகள்.

  @மிடில் கிளாஸ் மாதவி
  ரொம்ப சந்தோஷம்.எடுத்துகிட்டேன்.நன்றி,நன்றி.

  ReplyDelete
 4. மிகச் சிறப்பான அறிமுகங்கள். மிக சிறப்பாக இருந்தது இந்த வாரம். பாராட்டுகள் ஆச்சி. இவர்களை தேர்வு செய்ததற்கு சீனா அய்யாவிற்கும் என் பாராட்டுகள்

  ReplyDelete
 5. வலைச்சரத்தில் மலர்ந்து மனம் வீசிய அருமையான கதம்ப ரோஜாக்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்>

  ReplyDelete
 6. ஒவ்வொரு நாளும் அருமையான ரோஜாக்களைத் தந்து அசத்திட்டீங்க.

  அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ஐஸ்க்ரீம்களை அப்படியே சாப்பிடுவேன்.. தனித்தனியாகவும் சாப்பிட்டுக்கொள்கிறேன்.... அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ஹ்ம் இந்த ரோஜாவும் கிடைக்கல..ஐஸ்க்ரீமும் கிடைக்கல. கனினி மூலமாவே இதுபோல பரிசுப்பொருட்களை அனுப்புவது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்.ஆராய்ச்சி வெற்றி பெற்றால் இதுமாதிரி சும்மா சொல்லி ஏமாத்த முடியாது நிஜமாவே அனுப்பனும்:)

  இதெல்லாம் வராதுன்னு நினைக்கிறிங்களா!!! பாஸிட்டிவா நினைப்போம்.

  ஒருகாலத்துல நடக்காதுன்னு நினைச்சதுதான் இப்பலாம் நடந்துகிட்டு இருக்கு.

  தொலைக்காட்சி வந்த புதுசுல ஒரு டிவில ஒரு சேனல்தான் வரும்னு எங்க ஊர்க்காரர் ஒருவரிடம் வாதம் பன்னியிருக்காங்க எங்க அப்பா!!..இருக்குறது ஒரு ஒயரு, ஒரு ஒயர்ல ஒரு படம் தான் வரும் அது எப்டி மாறி மாறி வரும்?இப்டி சொன்னது எங்க அப்பா.!!!
  அதுக்கு அவர் அட இல்ல சொக்குப்புள்ள(எங்க அப்பா) நான் பார்த்தேங்குறேன்..
  கடைசில பார்த்தபிறகுதான் நம்பியிருக்காங்க எங்க அப்பா.!!!

  எங்க அப்பா ஞாபகம் அதோட இப்டி எழுதின பிறகு இன்று ஒரு தகவல் தென்கச்சி.கோ.சுவாமிநாதன் ஐயா ஞாபகம்.


  அப்புறம் கொடுத்த பணியை சிறப்பா முடிச்சிருக்கீங்க வாழ்த்த வயசில்லை...வணங்குகிறேன் நன்றி:)

  சொ.கமலக்கண்ணன்.C.Kamalakkannan
  கருவேலங்காடு,
  நாகப்பட்டினம் மாவட்டம்

  ReplyDelete
 9. தினமும் ரோஜாக்களாகவும் கதம்ப ரோஜாக்களாகவும் அள்ளித்தந்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள். வாழ்த்துக்கள்.

  நாளை முதல் ரோஜா கிடைக்காதே என்ற ஏக்கத்தில் நெஞ்சில் முள் குத்துவது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

  அடுக்கடுகாக அடுக்கியுள்ள ஐஸ்க்ரீம் மொட்டைகள் வெகு ஜோர், அது தவிர கோன் ஐஸ் வேறு. ஆஹா, எல்லோர் தலையிலும் ஐஸ் வைத்து ஜில்லாக்கி விட்டீர்கள்.

  ஒரு வாரப்பணியை ஒரு வழியாக மிகச்சிறப்பாக முடித்துச் செல்ல இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  இன்றைய அறிமுகங்களும் அருமை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  vgk

  ReplyDelete
 10. வெற்றிகரமான ஒரு வார பணிக்கு எனது வாழ்த்துக்கள்.அதனை நிறைவாகவும்,பிறருக்கு பயனுள்ளதாகவும் செய்து முடித்தமை நன்று.
  இன்றைய ரோஜா பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இன்றைய அறிமுகத்திற்கு நன்றி. ஒரு வாரமாக கண்சிமிட்டும் பூக்களின் அணிவகுப்பில் அழகானது வலைச்சரம். விதவிதமான இனிப்பிற்கும் நன்றி. சிறப்பாக பணியை முடித்த மகிழ்ச்சியுடன் உருகாத ஐஸ்கிரீம்களும் இனிக்கின்றன.

  ReplyDelete
 12. @அதீதம்
  வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

  @இராஜராஜேஸ்வரி
  ரோஜாக்களுக்கு தாமரை வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்ததாக இருக்கட்டும்,மிக்க நன்றிகள்.

  @வெங்கட் நாகராஜ்
  தங்கள் கருத்திலும் மகிழ்கிறேன்.நன்றிகள்.

  @மாய உலகம்
  குட்.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 13. @மழை
  மொபைலில் வீடியோ காலிங்,கணினியில் வீடியோ சாட்டிங்,ஆன்லைன் பர்சேசிங்னு எவ்வளவோ வந்துவிட்டது.அது போல எதிர்காலத்தில் நினைக்காதது எல்லாம் வரும்.

  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு ஆசிரியர் இதைதான் சொன்னார்,அதாவது எதிர்காலத்தில் டீவியில்,திரைப்படங்களில் வரும் உணவுப் பொருட்களின் மணம்,சுவை உணரும்படியான தொழில்நுட்பங்கள் வரலாம் என்றார்.

  அவர் சொன்னபோது மொபைல்,கம்ப்யூட்டர்லாம் எட்டாக் கனி.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  ReplyDelete
 14. @வை.கோபாலகிருஷ்ணன் சார்
  வாங்க,நாளை இதைவிட மனங்கவரும் வகையில் வேறெதாவது வரலாம்.

  குழந்தையை மேடையேற்றி அழகுபார்த்து மகிழும் பெற்றோரின் பாவிப்பாய் தங்களை கருதுகின்றேன்.

  மிக்க நன்றிகள்.

  @ராஜி
  தொடர்ந்து வருகை தந்து உற்சாகம் தந்தமைக்கு நன்றிகள்.

  @சாகம்பரி
  தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.மிக்க நன்றி.

  @சார்வாகன்
  வாங்க,வருகைக்கும்,நன்றிக்கும் நன்றி,

  ReplyDelete
 15. மீண்டும் மீண்டும் என்னை அறிமுகப்படுத்தும் வளச்ச்சரத்திற்கும் அதன் ஆசிரியர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

  ReplyDelete
 16. @MANASAALI

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. தொடர்ந்து ஒரு வாரம் கேக்கும் ஸ்வீட்டுமா கொடுத்து எங்களை மகிழ்ச்சி
  பெருங்கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் .அத்தனை அறிமுகங்களும் அருமை .வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 18. @ஏஞ்சலின்
  மிக சந்தோஷம்,திருப்தியாக விடைபெறுகிறேன்.நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 19. எங்களைப் போன்ற எளியவர்களையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. கதம்ப ரோஜாக்களில்.....
  ஒரு மலராக
  அறிமுகபடுத்தியதற்கு
  மிகவும் நன்றி .....
  கதம்ப ரோஜாக்ககளில்
  அறிமுகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 21. @வெண்புரவி
  //எங்களைப் போன்ற எளியவர்களையும் அறிமுகப் படுத்தியதற்கு .//

  நீங்கள் இப்படி மதிப்பீடு செய்ய வேண்டாம்.தரமான பதிவுகளை அனைவரும் வரவேற்பார்கள்.வருகைக்கு நன்றி

  @மெளனமலர்

  வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 22. THANKS FOR INTRODUCING ME TO OTHERS...

  THANK U SO MUCH

  ReplyDelete
 23. @குணா
  நன்றி.தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

  ReplyDelete
 24. என் வலைமனையையும், கவிதையையும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றிகள் திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர்

  ReplyDelete
 25. என்னையும் ஒரு ஆளாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 26. @ஜாக்கி சேகர்

  தற்போழுது வருகை தந்துள்ளமைக்கு நன்றிகள் சார்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது