07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 19, 2011

புதன் ஸ்வரம் - ' ரி '

            

 மிருதங்கம் ஓர் உறுதியான தோல் வாத்தியக் கருவி.இதன் இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத்தோல்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது. அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதற்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது.

இன்றைய ஸ்வரமான 'ரி' இரண்டாம் இடம் வகிப்பதாகும்

2 ரிஷபம்: இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் ஸ்வரம் ரிஷபம் எனப்பட்டது.ஸ்வர எழுத்து "ரி"


ஸ்வர எழுத்து 'ரி' கம்பீரமாகவும் பலமுள்ளதாகவும் இருப்பது போல் தோல் வாத்தியக் கருவியான மிருதங்கமும் உறுதியானதே.

உறுதியான "ரி" இசையில் இரண்டாம் இடம் வகிப்பது போல்,  உறுதி
சம்பந்தப் பட்ட  ஆரோக்கியம் பற்றிய எழுத்துக்கள் இன்று அடையாளம் காட்டப் படுகின்றன.

சங்கீதம் என்பது சரீரம்,சாரீரம்,ஸ்ருதி மற்றும் லயம் கொண்டது.
ஸ்ருதி என்பது மாதாவாகவும் லயம் பிதாவாகவும் கொள்ளப்படுகிறது.

ஸ்வரம் 'ரி' யை தாளம் தப்பாமல் வாசிக்கறவங்களை பார்க்கலாம்.

த தி தொம் நம்....

ஆரோக்கியமான உறுதியான உடல்நிலை இருக்கணும்னா அதுக்கு நாம செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்  நடைப் பயிற்சிதான்.அந்த நடைப்பயிற்சி எப்படி இருக்கணும், என்னல்லாம் செய்யக் கூடாது,எவ்வளவு தூரம் நடக்கணும்,அதோட பலன்கள் என்ன? இப்படின்னு ஒரு லிஸ்டே கொடுக்கறார் மெய்ப்பொருள் காண நினைக்கற இந்த தமிழ்க் குருவி

அதே  சமயத்துல இரத்த சோகை இல்லாமல் செய்வோம்னு சொல்லி அதுக்கு என்ன காரணங்கள்,எப்படி அதை தெரிஞ்சுக்கறது, அதுக்கு என்ன சிகிச்ச்சை முறைன்னு தெளிவா விளக்கி இருக்கார்.

மனதில் பட்டதை எழுதுகிறேன்னு சொல்லிக்கிட்டாலும் நமக்குத் தேவையான தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் கொடுத்து, என்ன மாதிரியான உணவு எடுத்துக்கணும்?உணவு நமக்கு எப்படி மருந்தா உதவி செய்யுதுங்கற விவரமெல்லாம் நமக்குத் தரார் இவர்.

ராத்திரி ஒழுங்கான உணவை சாப்பிடலேனா அதனால தூக்கம் பாதிக்கப் பட்டு வியாதிகள் வரும்.அதனால இரவு நேரத்துக்கேற்ற உணவுகள் பற்றி நமக்கு விளக்கமா சொல்றார்  இந்த பதிவர்

சாப்பிட்ட உடனேயே செய்யக் கூடாதவை பத்தியும் நாம கட்டாயம் தெரிஞ்சுக்கணும் இல்லையா.அதை தெரிஞ்சுக்கணும்னா நாம மேலப்பாளையம் வரைக்கும் போகணும்

உணவைப் பத்தி மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதாதே.அதை தயாரிக்கும் பாத்திரத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு சொல்றார்
இங்க ஒருத்தர்.

கொத்துமல்லி பத்தின விவரங்கள் அதோட மருத்துவப் பயன்கள் பத்தி தெரிஞ்சுக்கணுமா?அப்படின்னா மூலிகை வளத்துக்கு வாங்க.திரு குப்புசாமி அவர்கள் பல மூலிகைகள் பற்றி தன் வலையில எழுதிக்கிட்டு வரார்.
துளசி பத்தி பல விஷயங்கள் சொல்லிருக்காரு
 
இஞ்சி இடுப்புக்கு உறுதின்னு நிறைய பேருக்குத் தெரியும்.அதைத் தவிர அதுக்கு என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா?
இஞ்சியும் மருத்துவ குணமும் போய்ப் பாருங்க.
 
என்னென்னவோ சாப்பிடறோம்.ஆனா கீரையின் மகத்துவம் தெரிஞ்சா அதை யாரும் ஒதுக்க மாட்டாங்க.இந்த தமிழ்த் தோட்டம் வச்சுருக்கறவர்
பல விதமான கீரை வகைகளையும் அவைகளோட பலன்களையும் தெளிவா சொல்லியிருக்கார்.எல்லாரும் இவர் தோட்டத்தைப் போயி பாத்துட்டு விதவிதமான கீரைகளை எடுத்துக்கலாம்.
கீரை பறிச்சுக்கிட்டு கோடைகால நோய்களைத் தவிர்க்க குறிப்புகளும் தெரிஞ்சுக்கிட்டு வரலாம்.
 
என்னது? என்ன சொல்றீங்க? இப்படியே கணினி முன்னாடி உக்காந்துக்கிட்டு
இருந்தா முதுகு வலிக்குதா?அதனால கவலை வேண்டாம்.அன்போடு ஆனந்தமா முதுகு வலிக்குத் தீர்வு சொல்லித் தரார் இங்க ஒரு தங்கமணி(ப்ரொஃபைல் ல பாத்தா ரங்கமணி) .தாளம் தப்பாம சொல்லித் தரும்போது அப்பறம் என்ன?
 
நிறைய பேர் இன்னிக்கு சக்கரை வியாதில கஷ்டப் படறாங்க.இந்த நிலைமை மாறணும்னா நம்ம உடம்புல உள்ள இன்சுலினை பாதுகாத்துக் கொள்வது எப்படின்னு நாம கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.அதைத்தான் தமிழ்த்துளி சொல்றார்.இவர் வாசிக்கற தாளத்தை கேட்டு நடந்தா உடம்பு நல்ல சங்கீதம் மாதிரி இருக்கும்
 
 நோய் நாடி நோய் முதல் நாடி உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து.சமீப காலமா பெண்களுக்கு கருப்பை அகற்றும் சிகிச்சை நிறைய  நடக்குது.
இதை ஹிஸ்டரெக்டமினு சொல்வாங்க.இது ஏன் நடக்குது, என்ன நிலைமைல இதை செய்யணும்னு தகவல் கொடுத்திருக்காங்க பூங்குழலி.
 
உடல் மட்டுமில்லாம உள்ளமும் சம்பந்தப் பட்டதுதான் ஆரோக்கியம்.
உள்ளக் கமலத்தால உடலைக் கட்டுப்படுத்தும் சக்கரங்கள் பத்தி சொல்றார் மணிமேகலா. நம் உடம்புக்குள் இருக்கற ஏழு சக்கரங்கள் நம் உடலை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கின்றனனு இங்க தெரிஞ்சுக்கலாம்.


                                                          


ஷண்முகப்ரியா:


இசைப்பவர் மற்றும் இசையைக் கேட்டு ரசிப்பவரின் அறிவினைக் கூர்மைப்படுத்தும் திறன் கொண்ட ராகம் இது. மனதிற்கு வலிமையும் உயிருக்கு ஊட்டமும் தந்து சக்தி கொடுக்கும் ராகம். சிவபெருமானின் ஒளிவீசும் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஷண்முகனுக்குப் பிடித்த ராகம்.

முத்தைத் தரு பத்தித் திருநகை..............
இந்த ஆரோக்கியப் பதிவுகளை கடைப்பிடிச்சா உடல் நலம் மிருதங்கம் மாதிரி உறுதியும்,ஷண்முகப்ரியா ராகம் போல் மனதிற்கு உறுதியும்
பெற்று வாழலாம் இல்லையா?

35 comments:

 1. சூப்பர் ராஜி. பதிவு சங்கீதமாய் இருக்கிறது.

  ReplyDelete
 2. ஷண்முகப்பிரியா ராகம் பற்றி அழகிய
  விளக்கம் நன்று.
  'ரி' ஸ்வரத்தில் அமைந்த இன்றைய
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சூப்பர்.எதைச் செய்தாலும் குறிப்பிட்ட சிலரால்தான்
  மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் செய்ய முடிகிறது
  அருமையான முன்னுரை.அருமையான பயனுள்ள அறிமுகங்கள்
  ஜமாயுங்கள்

  ReplyDelete
 4. ரி ரி ரி ரீங்காரத்துடன் ஆரோக்கியம்... சூப்பர்!

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு. சங்கீதம் பற்றி தெரியாதவர்கள் கூட ரசிக்கும்படியாக இருக்கிறது சங்கீதம் பற்றிய தகவல்கள். தொடரட்டும் ஸ்வரங்கள், அவற்றின் விளக்கங்கள் மற்றும் அருமையான பயனுள்ள அறிமுகங்கள்..

  ஒவ்வொருவராய் சென்று படிக்கிறேன்....

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 7. அறிமுகத்திற்கு நன்றி ராஜி

  ReplyDelete
 8. ஷண்முகப்பிரியா ராகம் பற்றி அழகிய
  விளக்கம் நன்று.
  'ரி' ஸ்வரத்தில் அமைந்த இன்றைய
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. Health is Wealth!
  Very Good Introductions. Congratulations to all.
  vgk

  ReplyDelete
 10. சுகமான ராகங்களின் அறிமுகத்துக்கு நன்றீ. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. @ரமணி சார் சொன்னதையே நானும் சொல்ல விரும்புகிறேன்.மங்களகரமா இருக்கு உங்கள் ப்ரசண்டேசன்.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. மாலை இவர்களை சந்திக்கிறேன், அதுவரை அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள். நன்றி.

  //மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். //

  மிருதங்கத்தில் தடவப் படும் அந்த மாவையும் “ரவை” என்று அழைப்பார்கள் என்று கேள்வி.

  ReplyDelete
 14. நேற்று ஸ்வரம்; இன்று லயம். கச்சேரி களை கட்டட்டும்.

  ReplyDelete
 15. 'ரி' ஸ்வரத்தில் அமைந்த இன்றைய
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மிருதங்கம் உங்ககிட்ட கத்துக்கிட்டுருக்கலாம் போலருக்கே!

  ரவையை உருட்டி த, தொம் அடிக்கிற இடத்தில வைப்பாங்க!!

  ReplyDelete
 17. ஆரோக்கியமான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 18. மிகப் பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 19. வலைச்சரத்தில் என் பாத்திரங்கள் பற்றிய இடுகையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல சகோ.ராஜி

  வாழ்த்துகள்...

  தொடர்கிறேன்

  ReplyDelete
 20. இசையில் நனைந்து கொண்டே அறிமுகங்களை ரசித்தேன்!அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. ஸ்வர எழுத்து 'ரி' கம்பீரமாகவும் பலமுள்ளதாகவும் இருப்பது போல் தோல் வாத்தியக் கருவியான மிருதங்கமும் உறுதியானதே

  ரீதிகௌள ராகத்துக்கு ஜீவ ஸ்வரமே ரீ தான் அருமையாஇருக்கும் அதைப்போலவே இருக்கு சங்கீத வரிசையில் பதிவுகள். நீயில் முடிக்கும்போது போட்காஸ்ட்டில் உங்கள் பாட்டோடு முடியுங்கள்.

  ReplyDelete
 22. அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதற்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது
  என்னுடைய சங்கீத ஜாதிமுல்லையிலும் இதைப்பற்றி சொல்லியிருந்தேன்

  பாகவதர் நன்றாகப்பாடிக்கொண்டிருந்தார்.ஆனால் பக்க வாத்யம் பக்கா வாத்தியமாக இல்லை.மிருதங்கம் தகராறு.மிருதங்கத்தில் தோலை இழுத்து பிடித்து (வார் பிடித்தல்) சரி செய்தால்தான் சுருதி சரியாக இருக்கும் செய்யாமல் விட்டுவிட்டு கச்சேரியின் போது நடுவில் அவ்வப்போது செய்துகொண்டு இருந்தார்.பாகவதர் பொறுமை இழந்து இரண்டாவது முறை சரி செய்யும்போது சொன்னார்"என்ன அண்ணா போன வார்லே வார் பிடிச்சதா அடுத்த வார் வந்தா தான் சமாதானம் ஆகும்' என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது

  ReplyDelete
 23. மிருதங்கம் பற்றிய பல தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 24. இசையுடனான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. @வித்யா சுப்ரமணியம் மேடம்

  கச்சேரிக்கு முதல் ஆளாக வந்து ரசித்ததில் ரொம்ப சந்தோஷம் மேடம்

  @மகேந்திரன்
  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  @ரமணி சார்

  பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி

  @மாதவி

  நன்றி மாதவி

  @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

  @MANASAALI
  @பூங்குழலி
  @மாய உலகம்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @வை கோபாலகிருஷ்ணன் சார்
  நன்றி சார்

  @லக்ஷ்மி மா

  நன்றி

  @திருமதி பி எஸ் ஸ்ரீதர்

  நன்றி ஆச்சி.இதற்கு உங்கள் ஊக்கம் அவ்வளவு அல்லவா?

  @suryajeeva

  நன்றி

  @வேங்கட ஸ்ரீனிவாசன்

  ரவை என்றுதான் கூறுவார்கள்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @சே குமார்

  நன்றி

  @RVS

  தியரி வேற, ப்ராக்டிகல் வேற.

  என் கிட்ட கத்துக்கிட்டு வாசிச்சா மக்கள் கிட்டேருந்து உங்களுக்கு 'த தி தொம்' நம் கிடைச்சிருக்கும்

  @அருள்

  வருகைக்கு நன்றி

  @Ramvi
  @இராஜராஜேஸ்வரி
  @நிகழ்காலத்தில்
  @கோகுல்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @தி ரா ச

  ரீதிகௌளை மனம் கவரும் ராகம்.கருத்திற்கு நன்றி.

  வார் நகைச்சுவை சூப்பர்

  @Srikar
  @அமைதிச்சாரல்

  நன்றி

  @

  ReplyDelete
 26. எனது முதுகு வழிக்கு தீர்வு இடுகையை
  அறிமுகப்படுதியதற்கு நன்றிகள்
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 27. தங்களுக்கு நன்றி.அறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. எனது "மூலிகைவளம்" (mooligaivazam-kuppusamy.blogspot.com) வலைப்பதிவை உங்கள் மூலம் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்சி, நன்றியும். எல்லாம் நன்றாக உள்ளன. தொடருங்கள் உங்கள் பணி. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 29. இசையுடனான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  Vetha.Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 30. @V.N.Thangamani
  @Shanmugavel
  @kuppusamy
  @kavithai

  நன்றி

  ReplyDelete
 31. Thanks for introducing my blog

  ReplyDelete
 32. @Sathik Ali

  Thanks for the visit

  ReplyDelete
 33. தோட்டத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி ராஜி

  ReplyDelete
 34. @தமிழ்த் தோட்டம்

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது