07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 28, 2011

பார்த்ததும் ரசித்தேன்!!


ஏன் எழுதுட்டே வர்ர?

அஸ்மா அழுதுச்சு…….. அதான் நானும் அழுகுறேன்

அஸ்மா ஏன் அழுதுச்சு?

இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பூக்கள்லாம் செத்துடுமாம்………..

அப்படியா………. என்ன செய்ய? அடுத்த வருஷம் திரும்பவும் பாக்க வந்துடும்னு நா சொன்னதா சொல்லிடு சரியா?  

ம் சொல்லுறேன்

நீ சொன்னதும் எனக்கு ஜோஸ்பின் தோட்டத்துல இருக்குற வாசமில்லா பூவ ஞாபகப்படுத்துது. சரி கைல என்ன வெயிட்டா கொண்டு வந்துருக்க?

உனக்காகதேன்……. நீ ஆசையா பாப்பன்னு கொண்டு வந்தேன்

ஆல்பமா? அடடா……… எப்படி வாங்கிட்டு வந்த?

நேத்து வல்லிம்மா விடியகருக்கா 3 மணிக்கு மொட்டமாடில நின்னுட்டிருந்தாங்க கேமரா கைய்யுமா……. நிலா எடுக்க வந்தாங்களாம். அவங்க கிட்ட விஷாரிச்சப்ப குடுத்தாங்க.

எங்கே நிலாவ காணாம்??

நிலாவ தான் தெனமும் பாக்குறேனே அதான் ஏரோபிளேன்ல இருந்து எடுத்த போட்டோ கொண்டு வந்துருக்கேன்….. எப்படி இருக்குன்னு பாரேன்……..

ம் கலக்கல் போ


இது ரஃபி எடுத்த பாம்பன் போட்டோ…. பத்திரிக்கைல கூட வந்துருக்கு

அழகா இருக்கே

100 வருஷத்துக்கு முன்னாடி இந்தியா இப்படி தான் இருந்துச்சாம் வடகரை தாரிக் சொன்னாவ!

ஆச்சர்யமா இருக்கே…..

எனக்கும் மொதல்ல அப்டிதேன் இருந்துச்சு. அரசன் அவுக ஊர்க்கு போனபோது எடுத்த கிராமத்து போட்டோ வாம்  

அட ஆர்காடு இது!!!

அதெல்லாம் ஆரு காடுன்னு எனக்கு தெரியாது. இளங்கோ கொடுத்த போட்டோ புள்ள இது

ஸ்ஸ்ஸ்ஸப்பா……….  அடுத்து?

சேலம் தேவா சிற்றுலா போனபோது எடுத்ததாம்

சுற்றுலா கேள்விபட்டிருக்கேன் அதென்ன சிற்றுலா?

சின்னதா ஊர் சுத்துனாகளாம். அதான் சிற்றுலா

ஓஹோ…….. எப்பவும் கைல கேமராவோட சுத்திட்டிருப்பாகளே??? இமாதேனே இவுக?

ஆங் ஆமா!!! இது கூட பாரேன் பறவை போட்டோ தான்

ம்ம்

ஞானசேகரன் சார் பிரகதீஷ்வரர் கோயிலுக்கு போகும் போது எடுத்த போட்டோவோம். நல்லாயிருக்குல?

அட ஆமா!!!  அப்பறம் இது போட்டிக்கு அனுப்புன போட்டோ தானே

ஆமா, புன்னகையே வாழ்க்கைன்னு சொல்லிட்டு திரிவாகளே பாய்க்…. அவுக எடுத்த போட்டோ.

ம் ஏற்கனவே காமிச்சாக

இந்த போட்டோல பாரேன்… வயசானவர் எவ்வளவு நிம்மதியா படுத்துருக்காங்க இல்ல. எனக்கும் இது மாதிரி தூக்கம் வராதான்னு இருக்கு……. எங்கே ???

இப்ப போனவொடனே தூங்க தானே போற? அப்பறம் என்ன?

அதுவும் சர்தேன்

காசிமேடு பீச்சுல  எடுத்த போட்டோ புள்ள இது!

எவ்வளவு அழகா எடுத்துர்க்காக பாரேன்……..

ம் ஆமா. இன்னும் நெறையா வச்சுருக்காக. போனா போயி பாரு!!!

இது வந்து……. சத்யா தெரியுமா?

ம் ஆமா!!! அவுக எண்ணப்படி அமைச்சுகிட்ட ரூம். நல்ல ரசனை இல்ல?

ஆமா பொண்ணு. பாக்கவே கண்ண பறிக்குது

சரி கொண்டா எல்லாத்தையும்……… சீக்கிரம் கொண்டு வரச்சொன்னாங்க.

எல்லாருக்கும் காமிச்சுட்டு பொறவு கொடுக்கலாம்னு நெனச்சேன். சரி இன்னொரு நாள் வாங்கிக்கிறேன்

அதான் சரி

எல்லார்கிட்டையும் போட்டோவ கவனமா வச்சுக்க சொல்லு.தவ்பிஹ் சொன்ன மாதிரி காலம் ரொம்ப கெட்டு கெடக்கு

சொல்லிடுறேன் புள்ள…. வர்ட்டுமா…..
   *******************************
 அடுத்த பதிவு- அனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....

45 comments:

 1. போட்டோக்களை தொகுத்த விதம் அழகு :-)

  ReplyDelete
 2. நன்றி ஜெய்லானி

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள் ஆமினா

  ReplyDelete
 4. போட்டோ பதிவை உங்கள் நகைச்சுவை நடையில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி..!! :)

  ReplyDelete
 5. ஆச்சர்யமா இருக்கே…..

  அருமையான படங்களின் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. மிக நல்ல தொகுப்பு..

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  ReplyDelete
 8. பார்த்ததும் ரசிக்க வைத்த போட்டோக்கள் ,அறிமுகங்களும்.

  ReplyDelete
 9. அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள்... என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 10. நீச்சல் அடிக்க பாயும் சிறுவன் படத்தை எடுத்த சேலம் தேவா வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி. பிற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அட, எல்லாமே எனக்கு புது அறிமுகமா இருக்கே...??? எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. @ஜெய்லானி

  //போட்டோக்களை தொகுத்த விதம் அழகு :-)//

  ரொம்ப நன்றி ஜெய்

  ReplyDelete
 15. @வெளங்காதவன்

  :-)

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 16. @ப்ரகாஷ்
  //நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள் ஆமினா//

  நன்றி சகோ

  ReplyDelete
 17. @சேலம் தேவா
  //போட்டோ பதிவை உங்கள் நகைச்சுவை நடையில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி..!! :)//

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 18. @ராஜேஷ்வரி

  //ஆச்சர்யமா இருக்கே…..

  அருமையான படங்களின் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள்..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஷ்வரி

  ReplyDelete
 19. @ஆசியா
  //மிக நல்ல தொகுப்பு..//

  நன்றி ஆசியா

  ReplyDelete
 20. @காந்தி பனங்கூர்
  //அறிமுகங்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்//

  நன்றி சகோ

  ReplyDelete
 21. @கோகுல்
  //பார்த்ததும் ரசிக்க வைத்த போட்டோக்கள் ,அறிமுகங்களும்.//

  நன்றி சகோ கோகுல்

  ReplyDelete
 22. @சூர்ய ஜீவா

  //very good//

  தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 23. @பாய்க்

  //அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள்... என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி//

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 24. @சகோ சிவகுமார்
  //நீச்சல் அடிக்க பாயும் சிறுவன் படத்தை எடுத்த சேலம் தேவா வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி. பிற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

  காசிமேடு பீச் போட்டோவ சொல்றீயளா? அது சேலம் தேவா எடுத்ததில்லையே :-)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 25. @ராஜா

  //அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்//

  வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 26. @நாஞ்சில் மனோ
  //அட, எல்லாமே எனக்கு புது அறிமுகமா இருக்கே...??? எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்....//

  அட அப்படியா..... மகிழ்ச்சி சகோ

  ReplyDelete
 27. @ ரத்னவேல் ஐய்யா

  //வாழ்த்துக்கள்.//

  நன்றி ஐய்யா

  ReplyDelete
 28. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. ஸலாம் சகோ.ஆமினா,
  மிகவும் புதுமையான பாணியை கைக்கொள்கிறீர்கள். அருமையாக இருக்கிறது. தொடருங்கள் சகோ..!

  ReplyDelete
 30. ஓரே இடத்தில இவ்வளவு அருமையான படங்கள் பார்க்க வைத்துவிட்டீர்கள்!
  நன்றி!

  ReplyDelete
 31. எங்க வீட்ல பூத்த அழகான லில்லி மலர் போட்டோவை கம்மேன்ட்ல சேர்க்க பார்கிறேன் முடியல யாராவது ஹெல்ப் ப்ளீஸ்

  ReplyDelete
 32. அழகான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 33. நல்ல அறிமுகங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 35. அறிமுகம் இல்லாத அறிமுகங்கள்.நன்றி ஆமினா.பொறுமையாக ஒவ்வொரு வலைப்பூவில் போய் பார்க்கிறேன்.

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி..,
  எனது வலைத்தளத்தை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 37. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.. என்னையும் (மதிச்சி) அறிமுகம் படுத்தியதற்கு நன்றி..

  ReplyDelete
 38. அழகிய புகைப்பட அறிமுகங்கள் .எல்லாமே சூப்பர்ப் .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  இங்கு அறிமுகமானதையிட்டு ஆமினாவுக்கும் வலைச்சரத்துக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரி! அருமையான தொகுப்பு!

  ReplyDelete
 41. //அஸ்மா அழுதுச்சு…….. அதான் நானும் அழுகுறேன்//

  நான் அழுதா நீங்களும் அழுவீங்களா ஆமினா? :))) இதான் 'தோழி'ங்கறது ;)) நல்ல பதிவு. அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி ஆமினா :) வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 42. நேரமின்மை காரணமாக யாருக்கும் தனிதனியா பதில் போட முடியாமைக்கு வருந்துகிறேன் சகோ

  வாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!

  உங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்

  அனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்

  ReplyDelete
 43. பகிர்வுக்கு நன்றிகள் பல

  ReplyDelete
 44. என்னையும் சிலாகித்தற்கு மிகவும் நன்றி ஆமீனா. நீங்கள் பதிவுகளை அறிமுகப் படுத்தும் யுக்தி மிக்வும் நகைச்சுவையுடனும் அருமையாகவும் இருக்கிறது. நன்றியும் வாழ்த்துகளும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது