07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 30, 2011

மிக்சர் எக்ஸ்ப்ரஸ்


ஏன் இவ்வளவு லேட்டு???

ரியாஸ் வச்சுருந்த பேனா காணாமாம்…. அதான் தேடி கொடுக்கலாம்னு போனேன்

ஏன் எப்படி தொலஞ்சது??

பின்ன? திருடன் ஜாக்ரதைன்னு எழுதுனா? இந்த புரட்சி வெடிச்சுடும்னு பயந்து ஒரு நல்ல திருடன் தூக்கிட்டு போயிட்டான் போல!!!

ஹா….ஹாஹாநல்லா வேணும்!!! 

ஆமாநீ ஏன் கழுத்த அப்படி இப்படின்னு ஆட்டிட்டு கெடக்க??

சுளுக்கு பொண்ணு!!! அதான் வலிக்குது

ரொம்ப நேரமா அந்த கம்யூட்டர் பொட்டிக்கு முன்னாடி உக்காந்தா அப்படிதேன் ஆகும்!சரி ஹாஜாஸ்ரின் சொன்னாப்ள செய்யி!!

அப்படி செஞ்சா சுளுக்கு போய்டுமா ??

சுளுக்கு போச்சுன்னா உன் அதிஷ்ட்டம்இல்லைனா தலைவிதியேன்னு உன்னையும் நம்பி உன் எழுத்து படிக்கிறவங்களுக்கு துரதிஷ்ட்டம்!!!!

என்ன நக்கலா??

நக்கல்லாம் இல்ல..கிண்டல் தான் பண்ணேன்னு சொன்னா விட்டுடுவீயா??

என்னையும் கொஞ்சம் பேரு பாலோ பண்றாங்க தெரியுமா??

வெளிய சொல்லாத வெட்கக்கேடுஅதுல ஒன்னு உன் பாலோஇன்னொன்னு என் பாலோ…. ஆக மொத்தத்துல டுபாக்கூர் ப்ளாக்கு அது!!! ஏதோ பாலோவர்ஸ் எண்ணிக்கைய கூட்டி காமிக்கணுங்குறதுக்காக கெஞ்சி கேட்டதுனால பாவம் பாத்து எனக்கொரு கணக்கு, என் 2 வயசு பையனுக்கு ஒரு கணக்கு, எங்க வீட்டு நாய்க்கு ஒரு கணக்கு தொறந்து எல்லார் பேரையும் சேத்துக்க சொல்லியிருக்கேன்!!!

இரு இரு,… இப்படி சொல்லிட்டீல? மாய உலகம் ராஜேஷ் கிட்ட பிடிக்காத பாலோவர்ஸ நீக்குவது எப்படி?ன்னு கத்துகிட்டு உன்னைய என் ப்ளாக்க படிக்க விடாம பண்ணுறேன்!!!

இப்படி பண்ணுனா அதுக்கு தண்டனையா உன் ப்ளாக்கையும் ஒரு நாள் திருடதான் போறாங்க பாரு!!!

கொழுப்பு கூடிபோச்சு,,,, எப்படி ஒடம்ப கொறைக்கலாம்னு அப்துல் காதர் கிட்ட கேளு!!! ப்ளாக் திருடுனாலும் கவல இல்லவைரை சதீஷ் சொன்ன முறைல செஞ்சு வச்சுக்குவேன். நிகழ்வுகள் சொன்னாப்ல வலைபதிவுகளை எப்படி சேமிக்குறதுன்னு கத்துகிட்டேன்……

இப்பதேன் பூட்டு ஒடச்சு வீட்டுக்கு வர்ர மாதிரி கம்யூட்டர் பொட்டிக்குள்ளையும் வர்ராகளாம்ல?

ஆமா பொண்ணுஆனா ப்ளாக்கர் நண்பன் இணைய பாதுகாப்பு பத்தி சொல்லி கொடுத்துருக்காக. ஆனா திருடங்க அப்படி செய்றது  கஷ்ட்டப்படுத்துற விஷயம்தேன்L

ஆமாமாகஷ்ட்டமான விஷயந்தேன்அம்மாம்பெரிய உருவம் தம்மாதுண்டு கம்யூட்டர்க்குள்ள நொழஞ்சு பூட்டு ஒடைக்கிறதுனா கஷ்ட்டமான விஷயம் இல்லாமலா?

அடிங்……….. இதுக்கு மேல என்னால முடியாது!! ஐத்ரூஸ் மாதிரி என் பிரண்டுகளும் இப்படி அரவேக்காடுகளாதேன் இருக்கணுமா

இப்ப இருக்குற பசங்களாம் அம்மா அப்பா பிரண்ட்டு கிட்ட விஷயத்த பகிராம  சக்தி மாதிரி ப்ளாக்கர் கிட்ட தானே கடிதம் போட்டு பேசுதுங்க!!! அந்த கோபத்துலதேன் அப்படி பேசுனேன் கோச்சுக்காத!!!

ம்ம்

சரி அங்கே என்ன ஒரே கூட்டம்?? அதுவும் அமைதியா?


சொன்னாக சொன்னாக….!!!  நேத்து படம் பாக்க போனேன்புள்ள….

போனீயா? சொல்லவே இல்ல?


கூட்டம்மா இருந்தா அப்படிதான். ரஜின் அண்ணாத்தே சொன்ன மாதிரி சூப்பர் பஸ் இங்கேயும் வந்துட்டா கவலையே இல்ல!!!

ஆனா சில நல்ல மனுஷங்களும் இருக்காங்க. கொழந்தையோட வர்ரத பார்த்து அவங்க எடத்த குடுத்தாங்க.

பெண்கள மதிக்க தெரிஞ்சவங்களும் இருக்காங்க பொண்ணு. இந்தா ராஜ் இருக்காகளே.... அவுக கூட எனக்கு பிடித்த பெண்கள் நெறைய பேருன்னு பட்டியல் போட்டு காமிச்சாங்கள?!!சரி என்ன படத்துக்கு போன? யாரு ஹீரோ?

ஒரு நடிக்க தெரியாத பய….


ம்ம் அதேதேன்

இப்படிபட்டவங்க படத்துல சந்தானம் நடிச்சா அதுக்காகவாவது படம் ஓடும்…!!!! அவுகளுக்கு பின்னாடி இப்ப  ரியல் சந்தானம் பேன்ஸ் கூட்டமே இருக்குல!!!!

எங்க வீட்லலாம் உஷாபேன் தான் இருக்கு…. நீ சொல்ற பேன் நல்லா ஸ்பீடா ஓடுமா???

ம்….ஓடாது…. குதிக்கும்!!!!

சரி கோச்சுக்காத…. கேட்டா ஒழுங்காபதில் சொல்லு

ஐ ஆம் ரொம்ப பாவம் ஹும்ஹும்!!!!

சிரிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் சொல்றத உங்கிட்ட சொன்னா சிரிச்சுட போற….

ஏய் சொல்லாதசொன்னாலே சிரிப்பா வருது எனக்கு…!!!!

ம் அப்படிராஜபாட்டை ராஜா சொன்னாப்ள மனசுவிட்டு சிரிபுள்ளகோபம்லாம் போயிடும்!!!

கோபம்லாம் இல்ல பொண்ணுஅதுவும் உன் மேலயா??

அப்ப இந்தியா பிச்சைக்கார நாடுன்னு சொன்ன ரெவரி மேல கோபப்படுவீயா?

அப்படியா சொன்னாக?? ஜெயில்ல தூக்கிபோடு பொண்ணு அவுகள!!!!

சீ…சீ… நல்ல பையன்.. அவுக சொல்றத முழுசா கேளு பொறவு புரியும்

நீ சொன்னா எல்லாம் சரியாதேன் இருக்கும்!!! ஆமா மதிசுதாவ எங்கே ஆளே காணாம்?

பின்ன? அழிச்ச பதிவுகள எப்படி மறுபடியும் படிக்கிறதுன்னு குறுக்கு வழி சொன்னாக! எல்லாரும் கொலவெறியோட தேடுறதுனால குறும்படம் எடுக்க போயிட்டாக!!!

ஓ அப்படியா? அப்ப கமெண்ட் எப்படி போடணும்னு சொல்லி கொடுத்தவுகள இன்னுமா விட்டு வச்சுருக்காங்க??

லண்டன்ல வேலாயுதம் பார்த்து நொந்து போனதே போதும்னு எல்லாரும் விட்டுட்டாங்க போல!!!

ஓவர் வாய்யி.... உன்னையெல்லாம் பர்கான் சொன்ன ஸ்டைலில் கொல்லணும்அவுகதேன் மொதலாளிய எப்படி கொல்லணும்னு ஐடியா கொடுத்தாக!!

ஆத்தாடிகொஞ்சம் பாத்து பழகணும் போல!!!
ஆங் சொல்ல மறந்துட்டேன்இந்தா இந்த செல்போன பிடி. என்னமோ மெசேஜாம்…. என்னான்னு படிக்க தெரியல…. நீ படிச்சு காமி!!!!

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? சரி கொண்டா…. ம்ம்ம்ம்ம்……… 100 ரூபாய்க்கு நீ கார்டு போட்டா உனக்கு ஒரு சோப்புடப்பா ப்ரீயா குடுப்பாய்ங்களாம்!!!


ம்ம்

அதுக்குள்ள ஒரு சோப்பையும் வச்சு குடுத்துட்டா வாங்கிடலாம். வெறும் டப்பாவ வச்சு என்ன செய்ய?

குடுத்துட்டாலும்…..

இந்த சேவையை பெற நம்பர் ஒன்றை அழுத்துங்கள்ன்னு சொல்லுவாய்ங்க பாரு… செமையா தலைக்கேறும்…. காசு கொடுக்குறது நாம்ம… ஆனா அதுக்கு பேரு சேவையாம்?!!! கொடுமை

ஹா….ஹாஹாஇப்பதேன் எல்லாமே வியாபாரமாகி போச்சே…. ரத்னவேல் ஐய்யா கூட சொன்னாக…. மருத்துவமனை வியாபாரமா சேவையான்னு?!!! அப்பறம் மத்ததெல்லாம் எம்மாத்திரம்?!!!

காசு இருந்துட்டா நா ஏன் கேள்வி கேக்க போறேன்… எல்லா கம்பெனி சிம்கார்டையும் வாங்கி நோக்கியால எல்லா போனையும் வாங்கில சுத்திட்டிருப்பேன்.....கைலதேன் சிக்க மாட்டேங்குதே!!!!

ஏன் கவலபடுற? சகோ அபு  பணம் பண்ணலாம் வாங்கன்னு கூப்டிருந்தாங்க…. அவுக கிட்ட போயி கத்துக்க!!!

பணத்த பண்ண கத்து குடுக்குறாகளா? அப்பறம் என்னைய போலீஸ் பிடிச்சுட்டு போயிடாது? சம்பாதிக்க வழி சொல்லுபுள்ள…. பண்ணுறதுக்கு சொல்லி குடுக்குற?!! உன்கிட்ட போயி கேட்டேனே!!!!

அடக்கொடுமையே,.... நல்லதுக்கு ஏது காலம்??
சரி சரி போய் கத்துக்குறேன்.... ஜீ 20 வருஷத்துக்கு பிறகு ஊர்க்கு போயிட்டு வந்த அனுபவத்த சொல்லுறதா சொன்னாகபோயி கேட்க போறேன்…. அப்படியே விக்கி சொல்லி கொடுத்தாப்ள எல்லா வீட்டுக்கும் உள்ளேன் அம்மான்னு பிரசண்ட் போட்டுட்டு வர்ரேன்…. அப்பதேன் என் கடை சரக்கும் காலியாகும்!!!

மதியமாச்சேசாப்பாடு செஞ்சீயா? என்ன சாப்டூவ? நா வேணும்னா கொழம்பு தரவா??

உன் கைய்யால சாப்டுறதா? ஏன் நா நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா??? வேண்டவே வேண்டாம்… அதுக்கு பதிலா நேரா ரோட்ட பிடிச்சு சுடுகாட்டுல குழிவெட்டி நானே போயி படுத்துக்கலாம்.... போற வழிலதேன் மெட்ராஸ் பவன் இருக்கு…. ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பரா இருக்கும். அங்கேயே சாப்டுக்குறே!!!! வரட்டுமா???!!!!

போய்த்தொல..  எதுக்கும் எங்க அண்ணா ஹைதர் அலி சொன்ன ஆபத்தான உணவு முறை பத்தி தெரிஞ்சுட்டு போ........ ருசியா சாப்பிடுற நம்மள மாதிரி ஆளுக்கு தேவைப்படும்!!! 

ம்ம்...... கண்டிப்பா கண்டிப்பா............ சரி வார்ரேன்...........

******************
அடுத்த பதிவு- ரசித்தவை பல.... கொடுத்தவை சில......... :-)

32 comments:

 1. ஒரு வார காலம் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 2. அவசியமான மற்றும் வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.
  நன்றி.

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 5. வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.
  சகோதரி. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 6. அழகான உரைநடை ஸ்டைலில் இன்றைய பதிவர்களை அறிமுகபடுத்தி அசத்திவிட்டீகள்... இதில் எனது பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மனம் கனிந்த நன்றிகள்....


  இன்று அறிமுகமாகிருக்கும் அனைத்து பதிவர்களின் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. போறபோக்கில் கதைசொல்வதுபோல
  கடந்த ஏழு நாட்களும் தங்களின்
  வலைச்சரப்பணி இனிதே சுவைத்திருந்தது.
  அறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும்,
  அறிமுகம் செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நன்றி சகோ நம்மளையும் அறிமுகம் செய்ததற்கு ....அறிமுகம் செய்யப்பட்ட அணைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  எதையும் வித்யாசாமாக செய்யும் ஆமினா பதிவர் அறிமுகத்தினையும் வித்யாசமாக செய்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்

  ReplyDelete
 9. நல்ல பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. நன்றி சகோ! புதிய பல பதிவர்களின் அறிமுகத்திருக்கு...அப்படியே நம்மளோட அறிமுகத்திற்கும்!

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அருமையான நடையில் அருமையாக இதுவரை அறிமுகங்கள்... சூப்பர்

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ...
  வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
  எழுத்து அருமை...,எல்லாத்தையும் அழகா கோர்வையா எழுதிருகிங்க...
  வலைசர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள்....
  ஆமா எத்துனாங்கிளாசுக்கு பாடம் எடுக்குரிகன்னு சொல்லலியே?:))

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 15. என்னை அறிமுக படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 16. வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. நகைச்சுவையுடன் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் சகோ.! என்னையும் சேர்த்ததற்கு நன்றி!

  ReplyDelete
 18. சூப்பர் அறிமுகங்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள், உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 19. என்னை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சகோ....எல்லோறுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அப்படியே பேசிக்கிட்டே அறிமுகப்படுத்துவது நல்லாருக்கு.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. தங்கை ஆமினா
  பேச்சு வாக்குல கொர்த்து விடுறது இதுதானா?

  எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும்மா

  அன்பு செலுத்துவதில் என் தங்கை மாதிரி யாரும் யாரும் வரவேமுடியாது

  ReplyDelete
 22. வலைத்தளத்தில் இன்று அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும்
  வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரி உங்கள் அறிமுகப் பகிர்வுக்கு. .
  வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் கைகூட .

  ReplyDelete
 23. அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 24. நன்றி சகோ என்னை அறிமுகப்படுத்தியதுக்கு.....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. அறிமுகபடுத்தலுக்கு நன்றி சகோ.. ரொம்ப நல்லா இருக்கு இந்த மிக்சர் எக்ஸ்ப்ரஸ்

  ReplyDelete
 26. @ரமேஷ்

  மிக்க நன்றி சகோ

  @சிவகுமார்
  மிக்க நன்றி சகோ

  @அமைதிஅப்பா
  மிக்க நன்றி சகோ

  @கருண்
  வருகைக்கு நன்றி சகோ

  @அபுநிஹான்
  வருகைக்கு நன்றி சகோ

  @வேதா
  வருகைக்கு நன்றி தோழி

  @மாய உலகம்
  வருகைக்கு நன்றி ராஜேஷ்

  @மகேந்திரன்
  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 27. @பர்கான்
  உங்களால் தான் எல்லாவற்றையும் எளிதாய் செய்ய என்னால் முடிகிறது

  உற்சாகமூட்டியமைக்கு நன்றி சகோ


  @சே.குமார்
  வருகைக்கு நன்றி சகோ

  @ஜீ
  :-)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  @மாமி
  வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி மாமி

  @சூர்யஜீவா
  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  @சாதிகா அக்கா
  மிக்க நன்றி அக்கா

  @ரஜின்
  வ அலைக்கும் சலாம் வரஹ்....
  வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ
  //ஆமா எத்துனாங்கிளாசுக்கு பாடம் எடுக்குரிகன்னு சொல்லலியே?:))//
  அதெல்லாம் நமக்கெதுக்கு? படிக்காத மேதை தானே சகோ நீங்க :-)

  @ராஜா
  வருகைக்கு நன்றி சகோ

  @அப்துல்காதர்
  மிக்க நன்றி சகோ

  @பாசித் சகோ
  வருகைக்கு நன்றி சகோ

  @நாஞ்சில் மனோ
  வருகைக்கு நன்றி சகோ

  @ராஜ்
  வருகைக்கு நன்றி சகோ

  @கோகுல்
  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 28. @ஹைதர் அண்ணா
  :-)
  வருகைக்கு நன்றி அண்ணா

  @அம்பாளடியாள்
  வருகைக்கு நன்றி தோழி

  @வெங்கட்
  ஆரம்பம் முதல் என்னை உற்சாகபப்டுத்திவர்களில் நீங்களும் ஒருவர். மிக்க நன்றி சகோ

  @விக்கி
  வருகைக்கு நன்றி சகோ

  @மொக்கராசு மாமா
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 29. அறிமுகங்க்ாள் அருமை, அறிமுகப்படுத்திய விதமும் சூப்பர்.

  ReplyDelete
 30. இன்று அறிமுகமாகிருக்கும் அனைத்து பதிவர்களின் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

  எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி சகோதரி...


  வாழ்த்துகள்...உங்கள் பணி தொடர...தொடர்ந்து கலக்க...

  ReplyDelete
 31. அருமை சகோ............இன்று தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது............அருமையான எழுத்து நடை, தொகுத்தளித்த விதம் சூப்பர்......நன்றி

  ReplyDelete
 32. i have changed my address into http://rafeequlisalmspoem.blogspot.com

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது