07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 20, 2011

வியாழன் ஸ்வரம் 'க'

புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. புல் அங்க குழல், இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதி இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம்  இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி

குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.


3. காந்தாரம்: காந்தர்வ கான  சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் ஸ்வரம் காந்தாரம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "'

காந்தாரம் தரும் சுகம் போல், எழுத்தில் கதைகள் பலவித உணர்வுகள் கலந்து சுவாரசியம் தருகின்றன.இன்றைய கதை காந்தர்வர்கள் யாரென்று பார்க்கலாம்.

தோல்வி என்பது தடையேயன்றி முடிவல்ல என்பதை தெளிவாக உணர்ச்சிகள் கலந்து மனம் உருகும் வண்ணம் அன்புடன் அருணா சொல்லியிருக்காங்க.

மத்தவங்க அனுபவங்கள், பிறர் படற கஷ்டங்கள் பார்த்தாவது நாம் நம்ம
தவறுகளை திருத்திக்கணும்கறதை தன் பூ வனத்துல ஜீவி வெளிப்படுத்தி இருக்கார்

ஒரு குழந்தையோட வெள்ளை மனதை ஒரு சின்ன விஷயத்தை வச்சு அப்படியே படம் பிடிச்சு காமிச்சுருக்கார், எதுவுமே தப்பில்லைன்னு நினைக்கற சுனில்

குழந்தைக்கு ஏங்கற மனைவியும் அதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி  நடந்துக்கற கணவனையும் தெளிவா தன் கதையில் படம் பிடிச்சுக் காட்டி இருக்கார் நாறும்பூ

இவர் எழுதி இருக்கற முகம் சிறுகதையில் தசராவையும் சரஸ்வதி பூஜையையும் நேரில் கொண்டு வந்துருக்கார்

சொல்லாமல் சுமக்கும் காதல் பற்றி கதை பாத்திரங்களோட நினைவலைகளை மீட்டிப் பார்க்கிறார் ஷைலஜா

பிச்சைக்காரனாக இருந்தால் என்ன பைத்தியக்காரனாக இருந்தால் என்ன?
அவர்களுக்கும் மனதைப் பிசையும் நிகழ்வுகள் வாழ்வில் உண்டு.அவர்களுக்கும் உணர்வுகள் உண்டுனு தன் கதையில தந்தி மீட்டி இருக்கிறார் கிருஷ்ணகுமார் ஆதவன்.பைத்தியக்காரனின் ஸ்வெட்டர் மனதைப் பிசையும் படைப்பு

எப்போம்மா வருவீங்கன்னு கேக்கற ஒரு குழந்தையோட ஏக்கத்தையும் தாயின் தவிப்பையும் தன் படைப்பில் முழுமையா கொண்டு வந்து நிறுத்தி இருக்கார் புதுமையான ரங்கா.

இவர்கள் மேல் பரிதாபம் தேவையில்லை.இவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தன் பதிவின் மூலம் நாதம் எழுப்பியுள்ளார் எக்ஸ்பர்ட்சத்யா.

இனிய உளவாக இன்னாத கூறல் என்பதை நினைவுபடுத்தும் வண்ணம் இவர் கதை உள்ளது. சொல்லும் கொல்லும் என்பதை தன் படைப்பின் மூலம் உணர்த்துகிறார் இந்த மழை மேகம்.

மெல்லிய சோகம் இழையோடும் ஒரு காதல் கதை எழுதணும்னா அதுவும் மனதைப் பாதிக்கறாப்புல எழுதணும்னா அதுக்கு ஒரு திறமை வேணும்.
சோகமா வாசிச்சாலும் சில ராகங்கள் சுகமானதும் கூட.அப்படித்தான் இந்த வானவில் மனிதர் தன் பொன் வீதியை வாசிச்சுருக்கார்.

விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு ஆசிரியரின் தூங்க இயலாத சூழ்நிலையை
கதையா படைச்சு அதில் இயலாமை உணர்வைக் கலந்து தந்திருக்கிறார்
பாலமுருகன்

நம்மைச் சுற்றி நடப்பவைகள் நம் மனதை பாதித்தும் நாம் அதை எப்படி அலட்சியம் செய்து சுயநலமிகளாக செல்கிறோம்னும் அதுக்கப்பறம் குற்ற உணர்வு தலை தூக்கறதையும் தன் படைப்புல நல்லா கொண்டு வந்திருக்கார் இந்த நிசப்த பதிவாளர்.

இப்பிடிக் கூட ஒரு கதையை எழுத முடியுமா? பிரமிப்பா இருந்தது.எந்த அளவு கற்பனைத் திறன்  இருந்தா இப்பிடி யோசிக்கத் தோணும்?எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தோணலை.அதனால நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க இந்த 'தந்தை சொல்' கதையைப் பத்தி.

வாழ்க்கைல நடந்த நிகழ்வுகள் சில படைப்புகளுக்கு காரணமாகின்றன.ஆனால் அதை சுவை பட எழுதும்போதுதான் அது நல்ல படைப்பாகிறது.அப்படி ஒரு படைப்பை இங்க கொடுத்திருக்கார் ஒளியுடையோன்

இந்த கதை காந்தர்வர்களோட படைப்புகளை எல்லாம் படிச்சுட்டு காந்தார கான சுகம் கிடைக்குதான்னு சொல்லுங்க.

தேவகாந்தாரி :  29 ம் மேளகர்த்தா ராகமான சங்கராபரணத்தின் ஜன்ய ராகம்
தேவகாந்தாரி.நவரசங்களுள் வீரம் சம்பந்தப் பட்ட ராகம்.தேவ கந்தர்வ கானமாக அமைந்த ராகமானதால் தேவ காந்தாரி ஆனது.

க்ஷீர சாகர சயனா பாடல:   download
Artists: NRamani

35 comments:

 1. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 2. Wonderful! Congrats to all introduced!

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள்.புல்லாங்குழல் இசையை கேட்டுக்கொண்டே பின்னூட்டம் எழுதுகிறேன்.அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. புல்லாங்குழல் இசை அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. அருமையான அறிமுகங்களை புல்லாங்குழல் கேட்டுக்கிட்டே ரசிச்சேன்.. கச்சேரி களை கட்டுது :-)

  அடுத்தாப்ல வீணையிசை கேட்குமா ???? :-)

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ”தந்தை சொல்” இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. சற்று சீர் செய்யவும். மற்ற இணைப்புகளுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. @வேங்கட சீனிவாசன்

  'தந்தை சொல்' இணைப்பை சரி செய்து விட்டேன்.குறிப்பிட்டமைக்கு நன்றி.

  பதிவுகளை உடனே சென்று பார்த்து பதிவர்களை ஊக்கப் படுத்துவதற்கும் எனது நன்றிகள்

  ReplyDelete
 9. அருமை; மாலை அனைவரையும் சந்திக்கிறேன்..

  ReplyDelete
 10. நல்ல தகவல்கள் நல்ல அறி முகங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. புல்லாங்குழல் இசையுடன் கூடிய மிக அருமையான அறிமுகங்கள்.

  கற்றலும் ”கே ட் ட் லு ம்” என்பதை வெகு அழகாக நிரூபித்து விட்டீர்கள்.

  பில்லாங்குழல் இசையை எல்லோரும் கேட்டு மகிழ்ந்தோம். எங்கிருந்து வருகிறது என்று ஆச்சர்யப்பட்டோம்.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 12. ஆஹா, என்ன அருமையான இசை. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சப்த ஸ்வரங்கள் நன்னா தான் போயிண்டு இருக்கு!! புல்லாங்குழல் பத்தின தகவல்கள் அருமை! அறிமுக பதிவுகளையும் போய் படிக்கனும்!! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. இசையோடு அறிமுகம் அருமை சகோதரி, தொடரட்டும் வாழ்த்துகள். இங்கும் வாங்கோ! நல் வரவு!
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 15. நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள்
  புல்லாங்குழல் இசையுடன் பதிவினைத் தொடர
  இதமாக இருந்தது
  தங்கள் கடின உழைப்பும் தெரிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. புல்லாங்குழல் இசையின் பின்னோடிய
  அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நன்றிகள் ராஜி!

  அருமையான இசையுடன் சிறப்பான புதிய அறிமுகங்களும் கிடைத்திருக்கிறது.

  ReplyDelete
 18. அருமையாக சொல்கிறீர்கள்.. இசைபட வலைச்சரம் வருவது இதுவே முதல்முறையாக இருக்கவேண்டும்.. புல்லாங்குழல்பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்..

  ReplyDelete
 19. 'க்ஷீர சாகர' என் பாட்டி பாடுவார். மென்மையான அவர் குரலை பொம்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஞாபகம் வருகிறது.

  எத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்ட குழலிசை. வலை திறந்ததும் அசரீரி போல வந்த இசை ஒரு கணம் அச்சுறுத்தி தொடர்ந்து ஆச்சரியப்படுத்தியது. எங்கிருந்து வருகிறது என்று புரியாமல் விழித்த அதிகாலை அதிசயம். ரொம்ப நன்றி ராஜி.

  நிறைய புதுப்பதிவுகள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் - படிக்க வேண்டும்.
  என்னை அறிமுகம் செய்ததற்கும் நன்றி.

  ReplyDelete
 20. புல்லாங்குழல் பற்றிய விளக்கம் அருமை.அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. மனதை லேசாக்கிய குழல் இசையுடன் அனைவரையும் ரசித்தேன்!அணைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. புல்லாங்குழல் ரமணியின் தேவகாந்தாரி மனதை மயக்கியது! வலைச்சர ஆசிரியரின் பணி தெய்வீக இசையில் கலந்து மிகச் சிறப்பாக இருக்கிறது. இனிய பாராட்டுக்கள்! வலைத்தள அறிமுகங்களும் அருமை! அடுத்து வரும் ராகங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

  ReplyDelete
 24. ஆஹா தேவகானம் தேவகாந்தரி ராகம் புல்லாங்குழல்மூலமாக. ஒவ்வெரு நாளும் மெருகு ஏறுகிறது.புல்லாங்குழல் மாலியைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். க ஸ்வரத்துக்கு ஏற்ற ராகம் காம்போதிதான்.சங்கீதத்திலிருந்து அப்படியே சுவை மாறாமால் அடுத்த விஷ்யத்துக்கு இயல்பாக போகிறீர்கள். கற்றுக்கொள்ளவேண்டியபாணி.

  ReplyDelete
 25. எனது சிறுகதை முயற்சியை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ராஜி மேடம்

  ReplyDelete
 26. உங்கள் புல்லாங்குழலின் ஒலி நெஞ்சமெல்லாம் நிறைந்து வழிகிறது. என் "பொன் வீதி " கதையை நீங்கள் ரசித்து ,நினைவில் வைத்திருந்து அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றியும் அன்பும். ஒரு ரம்யமான இசைக் கச்சேரியாய் அல்லவா இந்த வார வலைச்சரத்தில் பந்தலிட்டு விட்டீர்கள் ராஜி! வாழ்த்துக்கள். வானவில்லுக்கு அடிக்கடி வாருங்கள்.

  ReplyDelete
 27. @அருள்

  வருகைக்கு நன்றி.கட்டாயம் தங்கள் லிங்க் சென்று பார்க்கிறேன்

  @மாதவி

  நன்றி மாதவி

  @திருமதி பி எஸ் ஸ்ரீதர்
  ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி ஆச்சி.

  @இராஜராஜேஸ்வரி

  ரசித்தமைக்கும் பாராட்டிற்கும் நன்றி

  @அமைதிச் சாரல்

  ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி.
  வீணை முடிவில் மங்கலத்தின் போது மங்களகரமாக உண்டு.
  நாளை வேறு ஒரு விஷயம் உள்ளது.கண்டிப்பாக கச்சேரிக்கு வந்து விடவும்.

  @சே குமார்
  @suryajeeva
  @லக்ஷ்மிமா

  நன்றி

  @வை கோபலகிருஷ்ணன் சார்

  புல்லாங்குழல் இசை எங்கிருந்து வருகிறது என்று நினைத்தது போல் ராஜி எங்கிருந்து உற்சாகமாக எழுதுகிறாள் என்று பார்த்தீர்களானால் விடையில் தங்கள் பெயரும் இருக்கும்.பாராடுக்களுக்கு நன்றி.

  @காந்தி பனங்கூர்

  நன்றி

  @தக்குடு

  கல்யாணக் கனவுகளுக்கு நடுவில் ஸப்த ஸ்வரங்களை ரசிக்க வந்தமைக்கு நன்றி.

  @kavithai

  வருகைக்கு நன்றி.கட்டாயம் வருகிறேன்.

  @ரமணி சார்

  கருத்திற்கு நன்றி.உழைப்பின் பின்னால் ஊக்கியாக இருப்பவர்களும் எனக்குத் தெரிகிறார்கள்.

  @மகேந்திரன்
  @சுந்தரா

  நன்றி

  @ஷைலஜா

  கருத்திற்கு நன்றி.தாங்கள் கூறிய விவரம் பற்றி நான் அறியவில்லை.இதற்கு முன் வந்துள்ளதா என்பது தெரியவில்லை.

  @அப்பாதுரை

  இந்த பாட்டை செம்பை பாகவதரும் அவரது சிஷ்யர் காந்தர்வக் குரலோன் யேசுதாஸ் அவர்கள் பாடிக் கேட்பதும் கதரியின் வாத்யத்தில் கேட்பதுவும் இனிமையாக இருக்கும்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @RAMVI
  @shanmugavel
  @கோகுல்

  நன்றி

  @மனோ மேடம்

  பாராட்டுக்களுக்கு நன்றி.முடியும் நாள் வரை கச்சேரிக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  @தி ரா ச

  பாராட்டுக்களுக்கு நன்றி.பதிவின் நீளம் கருதி சிலவற்றை விடும்படியாக உள்ளது.எனது பதிவில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்குகிறேன் கட்டாயமாக.

  @dr suneel krishnan

  வருகைக்கு நன்றி.மேலும் பல பதிவுகள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 28. @மோகன்ஜி

  கட்டாயம் வருகிறேன் ஜி.இசையை ரசித்தமைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 29. இசையுடன் இனிக்கிறது இடுகை

  வாழ்த்துகள்

  ReplyDelete
 30. புல்லாங்குழல் பற்றிய விவரங்கள் ஜோர். மூங்கிற்காட்டில் காற்றின் வாசிப்பைக் கேட்டிருக்கிறீர்களா?.. காது கொடுத்துக் கேட்டால் அத்தனை சுகமாக இருக்கும்.

  என் வலைத்தளத்தை ஒரு குறிப்புடன் இதுவரைத் தெரியாதோ- ருக்கு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தங்கள் தளமும் எனக்கு அறிமுகமானதில் மிக்க மகிழ்ச்சி.
  இனி வாசிக்க ஆரம்பிப்பேன்.

  ReplyDelete
 31. @திகழ்
  நன்றி

  @ஜீவி

  மூங்கில் காட்டில் காற்றின் ஒலி கேட்க கொடுத்து வைக்கவில்லை.கருத்திற்கு நன்றி

  ReplyDelete
 32. எனது கதையை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 33. @Prasanna Rajan

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 34. தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆசிரியப்பணியை இசை நயத்துடன் செய்துள்ளீர்கள் ராஜி..
  வலைச்சரத்தில் இந்த பூவையும் ஒரு பூவாய் இணைத்து சரமாய் தொடுத்து உலகத்துக்கு அறிமுகம் செய்தமைக்கு மனபூர்வமான நன்றி ..
  நாறும்பூ

  ReplyDelete
 35. @ நாறும்பூ நாதன்

  மேலும் பல வாசனையான பூக்களை படைப்பதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது